Friday, May 1, 2009

ஈழவிடுதலைக்கு எதிரான ஊடக சக்திகளை களையெடுப்போம்!







ஈழப்போர் முடிவுக்கு வராமல் போனதற்கு காரணம் என்ன என்று தீவிரமாக யோசிக்க வேண்டும். சோனியாவைப் போரை நிறுத்து என்று ஒற்றை வரி கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் போனதற்கு என்ன காரணம்?- கொஞ்சம் தீவிரமாக சிந்தித்தபோதும் விளங்குகிறது ஓர் உண்மை. தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் சென்று சேர்ந்திருப்பது சன் டிவி. திமுக தலைமையுடன் சன் டிவி குடும்பத்தாருக்கு மோதல் ஏற்பட்டபோது ஸ்பெக்டர் ஊழலும், மின்தடை பிரச்னையும் தமிழகத்தில் அதிகளவு பேசவைத்தது சன்டிவி தான். ஆனால் அவர்கள் கைகோர்த்தபின் தன்னுடைய தினகரன் அலுவலகத்தில் அழகிரியால் செத்து மடிந்த மூன்று பேருக்கு கிடைக்க வேண்டிய சட்ட நியாயமும் கிடைக்காமல் செய்யும் வகையில் தமிழக அரசு மீதான வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது சன் நிர்வாகம். அதுபோன்ற ஒரு சூழலில் ஈழப்போர் மூண்டது. ஈழப்போரை மத்திய அரசு முன்னெடுத்து நடத்துகிறது என்பதை தமிழுணர்வாளர்கள் மட்டுமின்றி அதே மத்திய அரசை தலைமையேற்றிருக்கும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாமக ஆகிய கட்சிகள் உரக்கச் சொல்லின. ஆனால் அவர்களின் குரலை சன்டிவி ஏனோ பதிவு செய்யவில்லை. ஸபெக்டரம் ஊழலை வெளிக்கொண்டு வரவும் மின்தடையை திமுகவுக்கு எதிராக கிளப்பவும் தலைவர்கள் வீடுகளில் காத்திருந்து திமுகவுக்கு எதிராக பேட்டிகளை அவர்களிடம் வாங்கி ஒளிபரப்பிய சன்டிவிக்கு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தவுடன் ஜால்ரா அடிக்க ஆரம்பித்தது.கிராமங்களில் புதிதாக டிவி வாங்குவோர், புது வீட்டிற்கு குடிபுகுவோர் அனைவரும் கேபிள் டிவி இணைப்பு வேண்டும் என்று கூட கேட்கத் தெரியாமல் சன்டிவி கனெக்ஷன் கொடுங்கள் என்று தான் கேட்பார்கள். அப்படியென்றால் சன்டிவியில் காண்பிக்கப்படாத உண்மை கடைக்கோடி தமிழனுக்குச் சென்று சேர்வதில் சில சிக்கல்கள் இங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. சன்டிவி இப்படியென்றால் தினகரன் நாளிதழும் தமிழனுக்கு எதிரான கருத்துகளை கட்டவிழ்த்து விடுவதொன்றும் ஆச்சரியமானதாகத் தெரியவில்லை. அடுத்ததாக, நாம் பார்க்க வேண்டியது, கலைஞரை. அதாவது முதல்வர் கருணாநிதி சன்டிவி நிர்வாகத்துடன் சண்டையிட்டதும் அதை மிகவும் சாதுர்யமாக அணுகி கடைந்தெடுத்த சுயநலத்துடன் தனக்கும் தன் கட்சிக்கும் (உண்மையில் எதிர்காலத்தில் தன் வாரிசுகளுக்கு) ஆதரவாக பல சேனல்களை உருவாக்கிக் கொண்டார். சண்டை முடிந்து சேர்ந்ததில் கலைஞருக்கு இப்போது நிகர லாபம் கலைஞர், செய்திகள், சிரிப்பொலி உள்ளிட்ட சேனல்கள்!
ஈழ விடுதலைக்காகப் போராடுவதாகவும் அதற்காக வேலை நிறுத்தம், மனித சங்கிலி, பேரவைத் தீர்மானம், உண்ணாநிலை (சாகும்வரை!) என போராட்டங்கள் நடத்திய கலைஞர், தன்னுடைய அதிகாரப்பூர்வமான சேனல்களில் ஈழ விடுதலைக்காக இல்லாவிட்டாலும் ஈழ நிலைமையை எடுத்துச் சொல்லும் எந்தச் செய்திகளையும் ஒளிப்பரப்பவில்லையே ஏன்? தன் உண்ணாநிலையை நேரடி ஒளிபரப்புச் செய்யும் கலைஞர் ஈழத்தில் மக்கள் படும் பாட்டை காட்டத்தவறிவிட்டாரே ஏன்? (இந்த வாதத்தை கலைஞருக்கு எதிரணியில் உள்ளவர்களும் தமிழுணர்வாளர்களும் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்று என் நண்பன் என்னிடம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறான்).தினமலரின் விஷமத்தனம்சன்டிவிக்கு அடுத்தபடியாக தமிழர்கள் அதிகளவில் (கெட்கக் கேடு) பார்ப்பது படிப்பது தினமலரைத்தான். காலையில் மலம் கழிக்கும் முன்னால் தினமலரைப் பார்த்துவிடுவது என்பது கொங்கு வட்டாரத்தில் இன்றைக்கும் இருக்கும் ரொம்ப நல்ல பழக்கம்! வழக்கம் போல் தினமலரும் -ஈழவிடுதலையை விரும்பியதும் இல்லை. அது இந்தமுறையும் செய்திகளில் வெளிப்பட்டது என்பதை விட அதற்கு முரணான துணைத் து£தர் அம்சா வாங்கிக் கொடுக்கும் சாராயத்துக்கு (தினமலர் பாஷையில் உ.பா.) நன்றிக்கடனாக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு தமிழகமக்கள் மனதில் பிழைக்கப் போனவனுக்கு எதற்கு தனிநாடு-? என்று கேட்க வைத்திருக்கிறது. ஆரிய ஆதிக்கத்தால் ஹிந்தி பத்திரிகையும். தேசிய சேனல்களும் ஈழவிடுதலையை எதிர்க்க தமிழனின் உணர்வுகள் பிரதிபலிக்கவில்லை என்பதைவிட தமிழனின் உணர்வையே கொச்சைபடுத்தும் வேலைகளையும் சன்டிவி, கலைஞர் டிவி, தினமலர், ஹிந்தி மற்றும் தேசிய சேனல்கள் செய்து வருகின்றன. இதில் தினத்தந்தியின் சேவை ஆரம்பத்தில் ஈழவிடுதலைக்கு பக்கபலமாக இருக்க, அண்மைகாலமாக அதுவும் மாவீரன் முத்துக்குமார் மரணத்துக்குப் பின் தினத்தந்தியும் மிரட்டப்பட்டிருக்கிறது.ஜூனியர்விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகியன ஆரம்பத்தில் காட்டிய உணர்வை கூண்டோடு தமிழனை வேரறுக்கும் வேலையில் கைவிட்டுவிட்டன. அதிலும் குடுதம் ரிப்போர்ட்டர் கேட்கவே வேண்டியதில்லை. ஆனால் கடந்த சில இதழ்களில் பழைய படி உணர்வை பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டரு ஜூவி., குமுதம் ரிப்போர்ட்டரில் பெரிதாக இனி எதையும் எதிபார்க்கமுடியாது. ஆனந்த விகடனில் திருமாவேலன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நிருபர்கள் ஈழவிடுதலைக்காகச் செய்யும் மகத்தான பணியை ஈழமும் சரி தமிழகமும் சரி என்றைக்கும் மறக்கக் கூடாது!ஆக இப்போதைக்குக் களத்தில்¢ நம்மினத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் எத்தனை ஊடகங்கள் உள்ளன என்று விரல் விட்டு எண்ணிப்பாருங்கள். இதே கர்நாடகத்தில், மேற்கு வங்கத்தில், மஹாராஷ்ட்ராவில், கேரளத்தில் அம்மாநில மக்களின் உணர்வை மதிக்காமல் ஒரு பத்திரிகையாவது செயல்படமுடியுமா? என்பதையும் சந்தித்துப் பாருங்கள். பஞ்சாப்க்குள் சென்று அவ்வின மக்களுக்கு எதிராக சுப்பிரமணிசுவாமியால் பேசிவிட்டு வெளியே வரமுடியுமா? ஆக உலக வரைபடத்தில் தமிழன் மட்டுமே ஈ வாயன்.,,, இன்னொரு பெரியார் வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் வெறும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இல்லாமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து தமிழினத்துக்கு எதிரான இந்த ஊடக சக்திகளை களையயெடுக்க வேண்டும் என்பதே உங்களுக்கு இந்தச் சிறியவன் வைக்கும் வேண்டுகோள். கைகோர்ப்போம் தமிழினத்தைக் காக்க.......

4 comments:

Anonymous said...

// மக்களின் உணர்வை மதிக்காமல் ஒரு பத்திரிகையாவது செயல்படமுடியுமா? என்பதையும் சந்தித்துப் பாருங்கள். பஞ்சாப்க்குள் சென்று அவ்வின மக்களுக்கு எதிராக சுப்பிரமணிசுவாமியால் பேசிவிட்டு வெளியே வரமுடியுமா?//
மக்களின் உணர்வை மதிக்காமல் ஒரு பத்திரிகையாவது செயல்படமுடியுமா? என்பதையும் சந்தித்துப் பாருங்கள். பஞ்சாப்க்குள் சென்று அவ்வின மக்களுக்கு எதிராக சுப்பிரமணிசுவாமியால் பேசிவிட்டு வெளியே வரமுடியுமா?
ஏன் வர முடியாது ? பஞ்சாப் சர்பஜித் சிங்க் தன்னை ஒரு இந்தியன் என்று அடையாளம் கட்டினான் . இந்திய முழுவதும் அவனுக்காக குரல் எழுப்பி வெற்றி பெற்றான் . மலேசிய தமிழர்கள் தங்களை இந்தியர்களாக அடயாளம் காட்டி உரிமைகளை பெற்றனர். ஏன் நீங்கள் உங்களை இந்திய வம்சவளிகளாக அடையாளம் கட்ட முனைவதில்லை ? தமிழ் நாடு பிரிவினைவதிகளுடன் அடையாளம் பெற்று தோல்வி நிலை ஏற்பட்டபின் ஊடகங்களை தாக்குவது LTTE இன் மிரட்டல் அரசியலை தான் காட்டுகிறது . உங்கள் சிறிய வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள்

Anonymous said...

காங்கிரஸ் கிழட்டு நரிகள் மீது செருப்பு வீசும் புனித சேவையை செய்ய விரும்பும் இனமான சிங்கங்கள் கவனத்திற்கு. தனி ஒரு ஆளாக செருப்பு வீசாதீர்கள். அரசு எந்திரத்தின் கைத்தடி காவலர்களும், முட்டாள் அல்லக்கைகளும் உங்களை தாக்கக் கூடும். கைது, வழக்கு என்று போராட்டம் திசை திரும்பி விடும். எனவே செருப்பு வீச முடிவு செய்திருப்போர் 100 பேர், 50 பேர் என்று எண்ணிக்கையில் அதிகம் பேர்கள் செருப்பு வீசினால் அவர்களுக்கு சிக்கல். மொத்தமாக அத்தனை பேரையும் கைது செய்ய மாட்டார்கள். அபஅபடஇ கஐது செய்தாலும் விடுவித்து விடுவார்கள். நாமும் போராட்டத்தை தொடரலாம்.

Anonymous said...

The original problem is..eventhough people know whats happening in srilanka.. they dont want to take the risk by showing theri support...its a fact..whatever we say people never stop watching sun tv, kalaingar tv, jodi no.1, dinamalar, dinakaran etc...

Instead of wasting our time by criticizing these journals, we need to think of a way to create the real awarness among people...real awarness in the sense they should come up to do something... lets try for that..and lets hope for the best

Anonymous said...

பிரபாகரனின் தனிமனிதப் புகழ்பாடாத ஊதுகுழல்களை புறக்கணிக்கச் சொல்கிறீர்கள்.

மிகவும் நல்லது நல்ல ஆரோக்கியமான விடுதலை பெறுவதற்கான வழியைத்தான் காட்டுகிறீர்கள்

Post a Comment