
இந்தமுறை கடுமையான முதுகு வலி காரணமாக கடந்த சில நாட்களாக என்னால் எதுவும் எழுத முடியவில்லை. முதுகெழும்பு இல்லாதவன் என்று யாரும் இனி என்னைத் திட்ட முடியாது! வழக்கமாக வலியும் வேதனைகளும் வரும்போது இந்தக் கஷ்டம் என் எதிரிக்குக் கூட வரக்கூடாது என்று நினைக்கத் தோன்றும். ஒவ்வொரு முறையும் படுத்தியெடுக்கும் முதுகு வலியால் நானும் இப்படி நினைத்துக்கொள்கிறேன். எத்தனையோ வேலைகள் என் முதுகு வலியால் முதுகைப் போலவே பின்தங்கிக் கிடக்கின்றன.நண்பர் ஆனந்த் செல்லையா தான் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்கிறார் (இரு சக்கர வாகனம் ஓட்டக்கூடாதாம்) பில்ரத் மருத்துவமனையில் பிசியோதெரபி (தமிழ் வார்த்தை மறந்துவிட்டது) சிகிச்சை எடுத்து வருகிறேன். ஒருமுறை கடற்கரை புதை மணலில் நடக்க முடியால் நடந்து சென்று என் நண்பனைத் தேடிக் கொண்டிருந்தபோது செல்போனில் என்னை அழைத்த பாடலாசிரியர், கவிஞர் தாமரையிடம் ‘மணலில் நடக்க முடியாமல் நடக்கிறேன்’ என்றேன். ‘உங்களால் இங்கே கடற்கரையில் சுதந்திரமாக நடக்க முடிகிறது. ஆனால் அங்கே (ஈழத்தில்) மக்கள் ஒவ்வொரு விநாடியும் செத்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்றபோது அந்த இரவு வேளையிலும் அந்த மணல் எனக்குச் சுட்டது. என் மடிக்கணினியும் பழுதேற்பட்டதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்தப் பதிவைப் போட்டுக்கொண்டிருக்கிறேன். (ஆனந்த் செல்லையா அழைத்துவிட்டால் இதுவும் பாதியில் நின்றுவிட வாய்ப்பிருக்கிறதுதமிழகத் தேர்தல் சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருவதைப் பற்றி ஏதாவது கதைக்கலாம் என்று இருக்கிறேன். கருணாநிதியின் மருத்துவமனை அனுமதி அவருக்கு முளைத்திருக்கும் தேர்தல் வெற்றி குறித்து எழுந்திருக்கும் அவநம்பிக்கையைத் தான் காட்டுகிறது. அதிலும், தமிழீழம் பிறக்க முயல்வோம் என்று திருவாய் மலர்ந்து அரசியல் சாணக்கியன் என்கிற நிலையில் இருந்து சறுக்கிக் கொண்டிருக்கிறார். திரைப்பட தமி ழீழ ஆதரவு இயக்கத்தின் பிரசாரம் நன்றாக போய் கொண்டிருக்கிறது. மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் இளங்கோவன், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நடந்த கூட்டத்தில், ‘‘சீமான் தன்னை பெரியாரின் பேரன் என்கிறார். ஒருவேளை பெரியார் சின்ன வயதில் செய்த தவறினால் இப்படியரு தகுதி அவருக்குக் கிடைத்திருக்கலாம்’’ என்கிற ரீதியில் பேசியிருக்கிறார். செருப்பால் அடித்தால் என்ன? இதற்கு கி.வீரமணியும், தமிழினத் தலைவர் கருணாநிதியும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். முரசொலியில் சீமானின் பேச்சு ஆபாசமாக இருக்கிறது என்று எழுதிய கலைஞர், இளங்கோவனின் பேச்சுக்கு என்ன சொல்லப் போகிறார்?இப்படி நேரு ‘மாமா’, காந்தி ‘தாத்தா’, ‘அன்னை’ இந்திரா, ‘அன்னை’ சோனியா போன்ற அடைமொழிகளுக்கெல்லாம் அர்த்தம் சொல்லத் தொடங்கினால் அருவறுப்பாக இருக்காதா? இளங்கோவன் போன்றவர்கள் தோல்வி பயத்தால் உளறுகிறார்கள் என்று மட்டும் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது. நம் உணர்வை கொச்சைப்படுத்தும் விதமாக இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள். நம்மை சோர்வடையச் செய்கிறார்கள்.இளந்தமிழர் இயக்கத்தினர், மத்திய ஜவுளித்துறை இணையமைச்சராக இருந்த இளங்கோவன் அந்தத் துறைக்கு என்ன செய்தார்? கொன்றொழிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசும் தமிழக காங்கிரஸ் அரசும் செய்தது என்ன? என்கிற ரீதியில் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். அதிலும், நெசவாளர்கள் படும் பாட்டையும் அத்துறையில் குழந்தைத் தொழிலாளர் முறை தலைவிரித்தாடுவதையும் உரிய ஆவணங்களுடன் ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கியிருக்கிறார்கள். இப்போது அந்தத் தோழர்களைக் கைது செய்ய நமது தமிழகக் காவல் துறை வலை வீசிக்கொண்டிருக்கிறது. ஈழ விடுதலையைப் பேசினால் அது வெளிநாட்டுப் பிரச்னை, நம்மூர் பிரச்னையைப் பேசினாலும் காவல் துறை தேடும் என்றால் இது நாடா? இல்லை சுடுகாடா? மருத்துவமனையில் இருந்தாலும் ஒரு மடையனுக்கு புத்தி வரவில்லை.காங்கிரஸ§க்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரசாரம் செய்து கொண்டிருந்த அமைப்புகளும், தோழர்களும் கருணாநிதியின் தொடர் துரோகத்தால், ஜெயலலிதாவுக்கு வாக்களியுங்கள் என்று கோஷமிடத் தொடங்கிவிட்டார்கள். தவளை தன் வாயால் கெடும்! தொடர்ந்து எழுதமுடியாமல் முதுகு வலிக்கிறது. இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.நன்றி தோழர்களே!
5 comments:
உடல் நிலை கவனம். விரைவில் குணமடைய விழைகிறேன்.
என்னாச்சு வெற்றி...இன்னும் முதுக வலி சரியாகலையா... உடல் நலனில் அக்கறை செலுத்துங்க...அப்போதானே இவர்களது முகத்திரையைக் கிழிக்க முடியும்...நலம் பெற வாழ்த்துக்கள்.
iam one of your fan .sorry for it be well soon .vaalka thamilar
உடல் நிலை கவனம். விரைவில் குணமடைய விழைகிறேன்.
Nantri Nanba...
என்னாச்சு வெற்றி...இன்னும் முதுக வலி சரியாகலையா... உடல் நலனில் அக்கறை செலுத்துங்க...அப்போதானே இவர்களது முகத்திரையைக் கிழிக்க முடியும்...நலம் பெற வாழ்த்துக்கள்
ragu tholare...
vanakkam
ontrum problem ellai...
iam ok
Post a Comment