Friday, May 8, 2009

ஆபரேஷன் பூமாலையா-? மலர்வளையமா?


நான்காயிரம் பச்சிளம் குழந்தைகள் பாலின்றி தவிப்பு!பாதுகாப்பு வலையப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஒருலு வயதிற்குட்பட்ட குழந்தைகள் குடிக்கப் பாலும் தண்ணீருமின்றி இறந்திருக்கிறார்கள். வற்றிய மார்ப்பும் ஒட்டிய வயிறுமாகத் திரியும் தமிழச்சிகளால் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவது எப்படி சாத்தியமாகும்?குடிக்கத் தண்ணீர் இல்லாமல் ஏராளமானோர் கொஞ்சம் கொஞ்சமாக செத்துமடிகிறார்கள். இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் எத்தனை பேர் தங்கள் இறுதி மூச்சை முடித்துக் கொண்டார்களோ தெரியவில்லை. இதற்கு மேலும் நாமெல்லாம் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது?ஆபரேஷன் பூமாலை என்று ராஜிவ்காந்தி விமானத்தில் உணவுப் பொட்டலங்களைப் போட்டாரே. ஐய்யோ! காங்கிரஸ்காரர்களே அவர்களுக்கு கொடி பிடிக்கும் கூட்டணி கட்சிகளே! நீங்கள் பூமாலையிட வேண்டாம்; ஒரு வாய் தண்ணீராவது அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யக்கூடாதா?இலங்கைப் பிரச்னை தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிற உண்மை உங்களுக்கு தெரிந்துவிட்டது. இனியும் ஏன் மௌனம்? தேர்தல் வெற்றிக்காகவாது, ஈழத் தமிழனுக்கு விமானம் மூலம் உணவளிக்க ஏற்பாடு செய்தால், நன்றி மறவாமல் உங்களுக்கே ஓட்டளிக்க என்னைப் போல் பலரும் தயாராக இருக்கிறோம். இந்த நான்காயிரம் கைக்குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். பூமாலை இல்லை, மலர்வளையம் தான் வைப்போம் என்று நீங்கள் இதுவரை செய்த துரோகம் போதும். நூறு கோடி, ஆயிரம் கோடி என்று நிவாரணம் அனுப்பியதும் போதும். அது எதுவுமே ஈழத்தமிழன் கைக்கும், வாய்க்கும் எட்டவில்லை என்பது எங்களைப் போலவே உங்களுக்கும் தெரியும்.விமானம் மூலம் நீங்கள் அனுப்பும் உணவுதான் இனி அவர்களின் உயிரைக்காக்கப் போகிறது. ஏதாவது செய்யுங்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் சொல்லி, விமானத்தில் உணவளிக்கும் கோரிக்கையை எழுப்பச் சொல்லுங்கள். வைகோ அவர்களே நீங்களும் பேசுங்கள். ராமதாஸ் அவர்களே நீங்களும் கோரிக்கை விடுங்கள். நம்வீட்டுக் குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளர்க்கிறோம். இங்கே கண்முன்னே பச்சிளம் குழந்தைகள் உணவின்றி செத்துமடிவதை கண்டும் தேர்தல் திருவிழாவில் மூழ்கினால் நம் மனம் நம்மை மன்னிக்குமா? சிந்தியுங்கள். விமானம் மூலம் உணவிட மத்திய அரசுக்கு உத்தரவிடுங்கள் தோழரே!

2 comments:

Anonymous said...

மூன்று பொண்டாட்டி கட்டி பல பெண்களுடன் சல்லாபம் செய்தும் அடுத்தடுத்து பிள்ளை பெற்றுக் கொண்ட கலைஞருக்கு அழகிரி முக்கியம், கனிமொழி முக்கியம், ஸ்டாலின் முக்கியம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? கலைஞர் ஒரு பொம்பளை பொறுக்கி, அதன் மறுவடிவம் தான் மு.க.முத்து. கலைஞர் ஒரு பொறுக்கி அதன் மறுவடிவம் மு.க.அழகிரி. கலைஞர் ஒரு சோப்பனாங்கி அதன் மறுவடிவம் தான் ஸ்டாலின். கலைஞரை கவிஞர் என்று சொல்வதும் உண்டென்றால் அவரின் மற்றொரு வடிவம் தான் கனிமொழி. பொம்பளை பொறுக்கி, பொறுக்கி, பக்கிரி, சோப்பானாங்கி, கவிதை பேசி கவிழ்க்கும் கண்டா... அவர்களின் மொத்த உருவமே கலைஞர்

vasu balaji said...

யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இப்போதைக்கு யார் உணவுக்கும், மருந்துக்கும், தண்ணீருக்கும் வழி செய்கிறார்களோ அவர்கள் கடவுள். கடவுளை நம்பாதோற்கு மனிதராக இருக்கட்டும். சத்தியமாக எந்த பரதேசி இதற்கு வழி செய்தாலும் ஓட்டுப் பிச்சை எடுக்க நாம் தயார்.

Post a Comment