Friday, April 17, 2009
ஈழத் தமிழினப் படுகொலையை எதிர்க்கும் பெண்களைகண்டுகொள்ள யாரும் இல்லை......
ஈழத்தமிழினப் படுகொலையை எதிர்க்கும் பெண்கள் என்ற அமைப்பைத்தொடங்கி, சாகும் வரை உண்ணாநிலை அறப்போராட்டத்தைத் தொடங்கிய25 பெண்கள், மாவீரன் முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்தகொளத்தூரில் கடந்த 13ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். 'சோனியாவே ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்துங்கள்' என்ற ஒன்றை வரி கோரிக்கையை வலியுறுத்தி,பேராசிரியர் சரசுவதி தலைமையில், இந்த உண்ணாநிலைபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும்எழுபதுக்கும் மேற்பட்ட பெண்கள்இப் போராட்டத்திற்கு ஆதரவளித்து உண்ணாநிலையில்பங்கெடுத்து வருகின்றனர்.
போலீஸாரின் தொந்தரவு அதிகரிக்க, கிழக்குத் தெரு,கொளத்தூரில் உண்ணாநிலையைத் தொடர்ந்தார்கள். அங்கேயும் பிரச்னை வர, இப்போது எழும்பூரில் நடக்கிறது, இந்த உண்ணாநிலை போராட்டம். எழும்பூரில் ம.தி.மு.க. அலுவலகம்தாயகத்தில் தான் அந்தப் பெண்கள் சாகும்வரை உண்ணாநிலையைத்தொடர்கிறார்கள். திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, சத்தியராஜ், அமீர் போன்றவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்துச் சென்றார்கள்.
அண்மையில், போரை நிறுத்த வலியுறுத்தும், படைப்பாளிகளின் ஒப்பாரிப் போராட்டம் மெரினா கடற்கரையில் நடந்தது.அந்தப் போராட்டத்திற்குப் போன எனக்கு அங்கிருந்தபோராட்டக் குழுவினர் அதில் கலந்து கொள்ளும் படைப்பாளிகளின்பட்டியலை அளித்தனர். உண்மையில் அதைப் பார்த்துகொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின்பெயர்கள் அதில் இருந்தன. அவ்வளவாக இலக்கிய அறிமுகம் இல்லாதஎனக்கு தமிழகத்தில் இத்தனைப் பெண் படைப்பாளிகளா-? என்றுஆச்சரியப்பட்டுப் போனேன். இந்தப் போராட்டத்திற்கு வந்திருந்தகனிமொழி எம்.பி., (நீயும் அவரை அவரை கவிஞர் என்று அழைப்பதுவீண் என்று நினைக்கிறேன்) ஈழத் தமிழனுக்கு ஒப்பாரி பாட்டைப் பாடிச்சென்றார். (அவங்க அப்பா ஏற்கெனவே பாடிவிட்டார்)
அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தில்லியில் இதேகாரணத்துக்காக நடந்த நடந்த ஆர்ப்பாட்டத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள், பெண் படைப்பாளிகள் (அதென்ன பெண் படைப்பாளிகள்? படைப்பாளிகள் என்றுசொல்லுங்கள் என்று பெண்ணியவாதிகள் என்னைக் கோபித்துக் கொள்வார்கள்)ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.அதே போல் இப்போது 25 பெண்கள் சாகும் வரைஉண்ணாவிரதமிருந்து சோனியாவிடம் தமிழன் உயிரைக் காக்கக்கெ(¡)ஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒப்பாரியிலும்டெல்லியிலும் திரளாகக் கலந்துகொண்ட பெண்கள்இவர்களுக்கு ஏன் ஆதரவு தர மறுக்கிறார்கள் என்றுதெரியவில்லை?
ஒரு மரியாதைக்காக மனிதநேயத்துக்காக எத்தனை (பெண்)படைப்பாளிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்? கனிமொழி எம்.பி.,தமிழச்சி தங்கபாண்டின், சல்மா போன்றவர்கள் இந்தப் போராட்டம் நடைபெறும் பக்கமேதலைவைத்துக் கூட படுக்கவில்லை. காரணம் அரசியல்! தமிழன் சாகிறான்;அவனைக் காப்பாற்ற எந்த அரசியல் இவர்களைத் தடுக்கிறது என்று தெரியவில்லை?25 பேரில் ஐந்து பேரில் கவலைக்கிடம் என்கிற தகவல் வந்துள்ளது. அரசு தரப்பில்இருந்தும் இதுவரை யாரும் வரவில்லை. அண்மையில் ராசாத்தி அம்மாள் அப்பல்லோவில்படுத்திருக்க அவரைப் பார்த்து நலம் விசாரிக்கச் சென்றார், முதல்வர் கருணாநிதி..பத்திரிகைகளிலும் அந்தப் போட்டோகள் வந்திருந்தன. மனைவியை நலம் விசாரிக்ககணவன் செல்வதும் அதைப் பத்திரிகையில் செய்தியாகப் போடுவதையும்தமிழகத்தில் மட்டும் தான் அதுவும் கருணாநிதி குடும்பத்தில் மட்டும் தான்பார்க்கமுடியும். தன் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறுஅவருக்கு அவ்வளவு முக்கியம் என்றால், ஈழத்தமிழனுக்காக சாகும்வரைஉண்ணாநிலையில் இருக்கும் பெண்களின் உயிர் என்ன கலைஞருக்கு மயி....?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Friend,
we posted the same content in our website
www.mdmkonline.com
Regards
Tholar
இலங்கையில் போரை நிறுத்தி விட்டுத்தான் தமிழகத்திற்கு சோனியா காந்தி வர வேண்டும். அதை விட்டு விட்டு இழவு வீட்டில் வந்து அவர் வாக்கு கேட்கக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள், சென்னையில், மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட திரையுலகினர் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் பாரதிராஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாரதிராஜாவும், சத்யராஜும் உணர்ச்சிகரமாக பேசினார்.
அப்போது பாரதிராஜா பேசுகையில்,
இங்கே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், 20ஆம் தேதி சென்னைக்கு வரும் சோனியா காந்தியை சந்தித்து இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு வரும் சோனியா காந்தி, இலங்கையில் போரை நிறுத்தி விட்டேன் என்று சொல்லிவிட்டுதான் சென்னையில் காலடி வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இழவு வீட்டிற்கு வந்து வாக்குக் கேட்கக் கூடாது.
போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால், 21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள், திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.
உண்ணாவிரதத்தின் நோக்கம் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ் திரையுலகின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் 21ஆம் தேதி அறிவிப்போம் என்றார்.
சத்யராஜ் கூறுகையில்,
கடந்த 5 நாட்களாக ஈழத்தமிழர்களுக்காக 100 பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. அவர்களை பேட்டி காணுங்கள். அவர்கள் சொல்லுவதை ஊடகங்களில் போடுங்கள்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சியினர், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள். இலங்கை தமிழர் பிரச்சனையில் எல்லோரும் ஓரணியில் நின்று போராடுவோம் என்றார் உருக்கமாக.
Post a Comment