Sunday, March 15, 2009
இந்திய இறையாண்மை விளக்கம் ப்ளீஸ்?
எதிர்பார்த்தது போலவே மதிமுக கொள்கைப் பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்திய இறையாண்மைக்குஎதிராகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிந்திருக்கிறதுபோலீஸ். திருப்பூரில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகஅவர் கைது செய்யப்பட்ட வழக்கில் பிணை கிடைத்துவிட்டதால் கையைப்பிசைந்து கொண்டிருந்த தமிழக அரசு தே.பா.ச.,வில் அவரைக் கைதுசெய்திருக்கிறது.
வேண்டாதவரை எல்லாம் வழக்குப் பதிவு செய்துஅவர் மீது அடக்குமுறையை ஏவிவிடுவதுதான் இந்த அரசின்இறையாண்மை என்றால் அந்த இறையாண்மையை நாம்ஏன் கட்டிக் கொண்டு அழவேண்டும்? (என்னையும் கைது செய்யுங்க ப்ளீஸ்) இந்திய இறையாண்மைக்கு எதிராக ஒருவர் பேசுவதால் பொது அமைதிக்குப் பங்கம்வரும் என்கிற குற்றச்சாட்டை உண்மை என்றே வைத்துக் கொண்டால்இதுவரை சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரின்பேச்சுகளால் தமிழகத்திலும், இந்த நாட்டிலும் ஏற்பட்ட சட்ட ஒழுங்குப்பிரச்னைகள் தான் என்ன?
இதுவரை இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவரையாவதுஇந்த அரசு தண்டித்திருக்கிறதா? அநேகமாக இல்லை என்றேநினைக்கிறேன். ஆம் என்றால் அதுபற்றி யாராவது பதிவிடலாம்.குறைந்தபட்சம் எனக்குப் பின்னூட்டம் இடலாம்.
நாஞ்சில் சம்பத் விவகாரத்துக்கு வருவோம். கடந்த ஒரு வாரத்துக்குமேலாக அவர் மீது தே.பா.சட்டத்தை ஏவிவிட, திருப்பூர் காவல்துறை பலவாறுமுயன்றும் அதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திடவில்லையாம். (சபாஷ்கலெக்டர்) அதற்குள் அவருக்கு பிணையும் கிடைத்துவிட, உடனேவேகமாக செயல்பட்ட மேலிடம் அவர் மீது தே.பா.வை ஏவிவிட்டிருக்கிறது.இந்திய நாடு ஜனநாயக நாடு என்று பாடப் புத்தகத்தில் படித்ததைநினைத்துப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. நாம் சிங்கள அரசின் அடக்குமுறையை எதிர்க்கிறோம்..இந்தியாவிலும் அதுதானே நடக்கிறது? நமக்கே இந்த நிலைஎன்றால் இலங்கைத்தமிழர்கள் படும்பாட்டை நினைத்துப் பாருங்கள்.
நாஞ்சில் சம்பத்தாவது ஒரு கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் சீமான்,கொளத்தூர் மணி போன்றவர்கள் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்றபட்டவர்கள்.சமூகப் போராளிகள் இந்த அடக்குமுறை எதிர்த்து குரல் கொடுக்காமல்என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்கிற சொல்லாடலில் உள்ள உண்மையைப் பற்றி பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். சுப.வீரபாண்டியன் ஐயா போன்றவர்கள் எங்கே போய்ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்? என்று தெரியவில்லை. பாரதிராஜா குறைந்தபட்சம்சீமானுக்காக குரல் கொடுக்கலாம். அவரது துறையைச் சேர்ந்தவர் என்பதையும்மீறி தன்னுடைய சீடர் சீமான் என்பதற்காக. கலைஞர் டிவியில் தெற்கத்தி பொண்ணுசீரியல் மூலமாக வரும் வருமானத்தை இழக்க பாரதிராஜா விரும்புவாரா?
திரையுலகத்தினர் சார்பில் இலங்கைத்தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்தினார்களே,சீமானுக்காக என்ன செய்யப் போகிறார்கள்? சிரிப்புதான் வருகிறது. சினிமாவில்அநீதியைக் கண்டு கொந்தளிக்கும் நாளைய முதல்வர் நடிகர்களும், சமூக அக்கறை இருப்பதாககாட்டிக்கொள்ளும் இயக்குநர்களும் (கற்றது தமிழ் ராம், மணிவண்ணன், ஆர். சுந்தர்ராஜன் போன்றஉண்மையான ஒருசில உணர்வாளர்கள் தவிர்த்து) என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்.. இவர்களைஅட மானங்கெட்டவர்களே! என்று நான் திட்டினால் பதிவுகளில் நாகரீகமாக எழுதுஎன்று என்னுடைய நலம் விரும்பி நண்பர்கள் கடிந்து கொள்கிறார்கள்.
என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், இந்திய இறையாண்மை பற்றிவெளிப்படையான விவாதம் ஒன்றை நடத்தினால் என்ன? தோழர் தியாகு இதுபற்றிசரியான சாதக பாதகங்களை விளக்குகிறார் என்று கேள்விப்பட்டேன்.தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பதை இப்படியெல்லாம் பயன்படுத்த முடிகிற போது, இந்த பொடா, தடா எல்லாம் இந்த ஏகாதிபத்திய அரசு எப்படியெல்லாம் பயன்படுத்தும்என்று நினைத்துப் பாருங்கள். இது நமக்கெல்லாம் ஒரு பாடம் இல்லை?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment