Sunday, March 22, 2009
தொல்.திருமாவளவனுக்கு மனம் திறந்த மடல்
அன்புள்ள தொல். திருமாவளவனுக்கு
வணக்கம்
அத்துமீறு... அடங்கு மறு... திமிரி எழு..திருப்பி அடி....
உங்களுடைய இந்த வீர வசனத்தால்தமிழகத்தின் எத்தனை, எத்தனை சேரிஇளைஞர்கள் வீறு கொண்டு எழுந்திருக்கிறார்கள்என்று உங்களைப் போலவே எனக்கும் தெரியும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவர்நீங்கள் என்று உங்கள் பின்னால் நிற்கும்ஒரு படை நம்பிக்கொண்டிருக்கிறது.
சினிமா கதாநாயகர்களைப் போன்றதல்லஉங்களுடைய அரசியல் பிரவேசம்.
பதின் வயதுகளிலேயே சமூக போராளியாககளம் இறங்கியவர் நீங்கள்...
சாதாரண விவசாயக் கூலி தொழிலாளியின்குடும்பத்தில் இருந்து நீங்கள்வந்தவர்... உங்களுக்குப் பதவிகளையும்மரியாதைகளையும் அள்ளித்தர உங்கள்தந்தையோ, தாத்தாவோ பெரும் புள்ளியாகஇங்கு வீற்றிருக்கவில்லை.
சொந்த முயற்சியில் சமூகத்தின் பால்கொண்டிருந்த அக்கறையில் உங்கள் தளத்தை பலமாக ஆக்கிக்கொண்டவர்நீங்கள்...
சட்டக்கல்லூரி மாணவராக நீங்கள் இருந்தபோது சென்னையில் தொலைத்தொடர்புசாதனங்களைத் திருப்பித் தரச்சொல்லி, உண்ணாவிரதம்இருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைபோராட்டத்தைக் கைவிடக் கோரி மாணவர்களைத்திரட்டி போராட்டம் நடத்திய போராளி நீங்கள்.
அதன்பின்பு இலங்கைத்தமிழன் கொல்லப்படும்சம்பவத்தில் குற்றவாளிக் கூண்டில் இந்தியா என்கிற தலைப்பில்அப்போது திமுகவில் இருந்த வைகோவை அழைத்துசட்டக்கல்லூரியில் பேசவைத்தீர்களேமறக்க முடியுமா அதை?
உங்கள் கருத்துகளையும், இயக்கத்தின் செயல்பாடுகளையும்ஊராகச் சென்று பேசியும், நீங்களே சுவர் விளம்பரங்கள் செய்தும்,நோட்டீஸ் ஒட்டியும் செய்த பணிகளை யாரும் மறந்திருக்கமுடியாது.
தமிழகத்தில் உங்கள் காலடி படாத சேரிகளே இல்லைஎன்று சொல்லாம். அதனால் தான் உங்களுக்கு முன்னும், பின்னும்வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் யாரும் உங்கள் அளவுக்குமுக்கியத்துவம் பெறாமல் காணாமல் போனார்கள்; போய்கொண்டுமிருக்கிறார்கள் என்பதேஎன்னுடைய திடமான நம்பிக்கை...
ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான உங்களது கவனம்சிதறிவிட்டதாக எனக்கும் சில விமர்சனங்கள்உண்டு. அதையும், மீறி ஒடுக்கப்பட்ட மக்களுக்குஉங்களைப் போன்றவர்கள் அளித்திருக்கும் நம்பிக்கைஇந்த சமூகத்துக்கு அதிமுக்கியம்.
தந்தைக்கே பெயரிட்ட தமையன் நீங்கள்...தமிழில் பெயரிடுங்கள் என்று உங்கள்சிறுத்தைகளுக்கு நீங்கள் இட்ட உத்தரவைசரித்திரம் என்றைக்குமே மறக்காது...
இலங்கைத் தமிழனுக்கு புலிகள் தான் ஒரே ஆதரவுஎன்று நீங்கள் அடுக்கிய ஆதாரங்கள் வரவேற்கப்பட்டன...
இளஞ்சிறுத்தைகளுடன் தமிழீன அங்கீகார மாநாடு நடத்தினீர்கள்...
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவானதில்முக்கியப் பங்கு வகித்தீர்கள்...
ராஜீவ் படுகொலையில் இருக்கும் நியாயங்களைநீங்கள் அடுக்கிய பாங்கு பலரையும் புருவம் உயரச்செய்தது.
இத்தனைக்கும் மேலாக காங்கிஸ் கட்சி தமிழர்களுக்குசெய்துவரும் துரோகங்களை பட்டியலிட்ட நீங்கள் தான்வைகோவிற்கு அடுத்தபடியாக இலங்கைத்தமிழர்களுக்கு எதிரானபோரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய அரசுஎன்பதை அம்பலப்படுத்தினீர்கள்.
ஞானசேகரனை ஞானசூனியம் என்றீர்கள்...
இலங்கை அரசின் கைக்கூலிகளாக காங்கிரஸ்கட்சியினர் மாறிவருவதாக பகிரங்கமாகக் குற்றச்சாட்டுசுமத்தினீர்கள்.
வட்டியில்லாத கடனாக இலங்கைக்கு இந்திய அரசுநானூறு கோடி ரூபாய் வழங்கியதை மேடையில் போட்டுடைத்தீர்கள்.
ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை ஈழத்தமிழர்கள் மீதுகாங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான்திணித்தது என்றும், வேறு வழியில்லாமல் அதை பிரபாகரன்ஏற்றுக் கொண்டதாக பத்திரிகை செய்திகளைஆதாரமாகக் காட்டி, அண்ணாநகரில் நீங்கள்பேசியதை மெளனமே சாட்சியாக ஒரு கூட்டம்கேட்டுக்கொண்டிருந்தது, ஞாபகம் இருக்கிறதாஉங்களுக்கு?
இந்திய ரடார்கள் சிங்கள ராணுவத்தில்உலாவுவதை உரக்கச் சொன்னீர்கள்...இந்திய செயற்கைக் கோள், பிரபாகரனைத் தேடும் பணியில் சிங்கள பேரினவாதராணுவத்துக்கு உதவுவதாக முழக்கமிட்டீர்கள்...
போரை நிறுத்து என்று மத்திய அரசை வலியுறுத்தகிளம்பிய அனைத்துக் கட்சிக் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள்இருக்கக் கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னபோதுகொதித்துப்போனது நீங்கள் மட்டுமல்ல என்னைப்போலபலரும்...
ஈரோடு ரயில் நிலையம் வழியாக சென்ற இந்தியடாங்கிகள் ஈழத்தமிழனைக் கொல்ல இலங்கைப் போகிறதுஎன்று எச்சரித்தீர்கள். போரை நிறுத்த இலங்கை அரசைவலியுறுத்தாத காங்கிரஸை தமிழகத்தில் இருந்துஅப்புறப்படுத்துவதாக அறிவித்தீர்கள்..
சத்திய மூர்த்தி பவனில் சிறுத்தைகளுக்கும் கதர் வேட்டிகளுக்கும்மோதலேற்பட்டு எத்தனை நாட்களாகியிருக்கும் தோழரே? இன்று காங்கிரஸ் கூட்டணியில் நீங்களும் உங்கள்தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகளும் இருக்கிறார்கள்.
தினமலரும், காங்கிரஸ் கட்சியினரும் உங்களை கூட்டணியில்இருந்து வெளியேற்ற பலவாறு முயன்று கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழனை அழிப்பதில் காங்கிரஸ் அரசுக்கு பங்கில்லை என்று இப்போது நீங்கள் மறுக்கிறீர்களா?
காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு ராணுவ உதவிசெய்யவில்லையா? கடனுதவி செய்யவில்லையா?ராணுவ தொழில்நுட்ப நிபுணர்களை அனுப்பவில்லையா?ஈழத் தமிழர்களைக் கொன்றுகுவிக்கவில்லையா? ராஜீவ்-ன் அமைதிப்படை தமிழச்சிகளை பலாத்காரம் செய்யவில்லையா?இதையெல்லாம் செய்த காங்கிரஸை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா?
சிறுத்தைகள் இருப்பது காங்கிரஸ் கூட்டணியில்அல்ல... திமுக கூட்டணியில் தான்என்று சமாளிக்காதீர். இனஉணர்வோடு காங்கிரஸைஎதிர்த்த நீங்கள் அவர்களோடுஇணைந்து கிடக்க. வெறும் ராஜீவ் என்கிறஒரே காரணத்துக்காக தலைமையில் தங்களுடைய விசுவாசத்தைக் காட்ட உங்களை எதிர்த்தவர்கள்இன்னும் உங்களை பழித்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.ஆக... உங்களுடைய இனஉணர்வு என்னாகிவிட்டது?
ராஜீவ் படுகொலையை ஆதரித்தவர் என்பதையும்மீறி நீங்கள் ஓர் ஒடுக்கப்பட்டவர் என்பதால்தான்உங்களுடன் காங்கிரஸ் ஒத்துப்போக மறுக்கிறதுஎன்பதை அறியாதவரா நீங்கள்?
ஏன் சொல்கிறேன் என்றால் வாய்கிழிய காமராஜர் ஆட்சியைப் பற்றிப் பேசும் காங்கிரஸ்காரர்களில்எத்தனை பேர் கக்கனை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?கக்கனின் நினைவு நாள் சத்தியமூர்த்தி பவனில் அனுஷ்டிக்கப்படுகிறதா?அந்த மனிதரின் பிறந்த நாள் அவர்களால் கொண்டாடப்படுகிறதா?
திமுகவுடன் இணக்கம் என்கிறீர்கள். ஈழத்தமிழர்களைகொன்று குவிப்பதில் காங்கிரஸ¤டன் திமுகவுக்குஉள்ள பங்கு என்னவென்று உங்கள் மனசாட்சிக்கேதெரியுமே?
ஒவ்வொரு ஈழத்தமிழனும், புலம்பெயர்ந்த தமிழனும்உங்களது மேடைப் பேச்சில் சொக்கி உங்களால்பெரிய மாற்றம் வந்து விடும் என்று நினைத்திருந்தார்கள். ஆனால், உங்களது இந்த பச்சைத் துரோகத்தால்,அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறான்...
உங்களைப் போன்றவர்களால் தாய்மண்ணில்கால் பதிக்கப் போகிறோம் என்று புலம்பெயர்ந்தவர்கள்நம்பிக்கொண்டிருந்தார்களே! ஈழத்தமிழன் பிரச்னையில்நீங்களும் உங்களைச் சுற்றி உள்ளவர்களும் அடைந்தசிலபல ஆதாயங்களை நினைத்துப் பாருங்கள்...அதற்காகவாவது நீங்கள் கொஞ்சம் யோசித்திருக்கலாம்..
சிதம்பரம் தொகுதி என்பது எங்கிருந்தாலும் உங்களுக்குக்கிடைத்திருக்கும். அதற்காகவா ஈழத்தமிழனை அடமானம் வைத்தீர்கள்?மனதில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரே ஒரு காங்கிரஸ்காரன்கூட சிதம்பரத்தில் உங்களுக்காக ஓட்டுக் கேட்க மாட்டான்.
தொல் நண்பா....சொல் நண்பா...
என் கருத்தில் ஏதாவது தவறிருந்தால் மன்னித்துவிடு...
உங்கள் இதயத்தில் ஈரம் கொஞ்சம் இருந்தால் ஈழத்தமிழனைகொஞ்சம் நினைத்துப்பாருங்கள்...
நன்றி...
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
அருமையான கடிதம்... நான் எதை நினைத்தேனோ அதை தான் நீங்களும் கூறி இருக்கிறீர்கள்...
மிக சரியான கட்டுரை.. செருப்பால் அடித்தது போலிருக்கிறது.. அடிவாங்கியவர் இப்போது எம்.பி கனவில் இருப்பதால் அவருக்கு எதுவும் ஏறாது..
"திருமா" ஒரு "வெருமா" என்று தெரிந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஒன்றும் வந்திருக்காது.
சீட்டுக்கு ஆசைப்படும் சீப்பான திருமாவால் திருப்பங்கள் எதையும் ஏற்படுத்திவிட முடியாது
தன்னைப்பற்றிய பரபரப்புக்கா, தன்னுடைய போஸ்டர்களும், பாராட்டு மடல்களும் எங்கும் நிறைந்திருக்கவேண்டும் என்பதற்காவே போரட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்.
தலித்துகளை விட மோசமான நிலையில் இருந்த நாடார்கள் எப்படி முன்னுக்கு வந்தார்கள்.
எப்படி அவர்கள் மற்றவர்களையும், அரசையும் நம்பாமல் பொருளாதாரத்திலும், சமூகத்திலும் சிறந்த நிலைக்கு வரமுடிந்தது.
எனென்றால் அவர்களுக்கு திருமா போன்ற ஒரு சுயநலத்தலைவர்கள் வந்ததில்லை, தன்னை பெரிதாக காட்டிக்கொள்ள தன் சமூகத்திடமே பெரிய அளவில் வசூல் செய்து பிரமாண்ட மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்துவதில் தான் அக்கரை கொண்டாரேயனறி அதை வைத்து தன் மக்களுக்கு வேறொன்றும் பயனுள்ள வகையில் செய்யவில்லை.
திருமா இல்லை என்றால் தமிழகத்தில் ஈழமக்களின் நிலைகளை எடுத்துச்சொல்ல நாதி கூட இருந்திருக்காது.
அவருக்கும் ஒரு அரசியல் கட்சி இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
ஈழப்பிரச்சினை அவர் உண்ணாவிரதம் தொடங்கி இன்றுமுதல் 300 க்கும் மேற்பட்ட அவரது கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 26 பேருக்கு மேல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இக்கைது குறித்து ‘ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ கூட இதுவரை ஒரு அறிக்கை கூட கொடுக்கவில்லை.
நாஞ்சில் சம்பத், சீமான், கொளத்தூர் மணி கைதை தான் கண்டிக்கிறார்களே தவிர தப்பி தவறிகூட கைது செய்த விடுத்லை சிறுத்தைகளை விடுதலை செய் என கூற எவனும் வாய் திறப்பதில்லை. எந்த ஈழ பிரச்சினையை தனதாக நினைக்கும் பிளாக்கர்ஸ் கூட எழுதவில்லை.
இது எதை காட்டுகிறது.....உங்களிடம் இருக்கும் சாதியை என எடுத்துக்கொள்ளலாமா?
உங்களுக்கெல்லாம் இது ஒரு வாய்ப்பு... ஒரு சேரித் தலைவனை தூற்ற ஒரு காரணம்.
திருமாவிற்கு கடிதம் எழுத தொடங்கி இருக்கும் தோழமைகள் ஏன் போர் நடந்தால் அப்பாவி மக்கள் சாவது சகயம் என கூறிய அதிமுக வையும் அதனோடே ஈழப்பிரச்சினைகளை பற்றி பேசி வேசமாடும் தலைவர்களையும் ஏன் விமர்சிக்க மறுக்கிறார்கள்???
இதுக்கும் அவர் ஒரு சேரிக்காரன், அன்றாடம் காச்சிக்கு பிறந்தவன் என்பதாலா?
கேட்டால் துரோகம், விரோதம் என ஒற்றை வார்த்தை கூறி எஸ்கேப் ஆகிடுராங்க.
தலித் பிரச்சினைகள் எவ்வளவோ இருந்தும் முதலாவது பிரச்சினைக்காக ஈழப்பிரச்சினையை தான் அவரது கட்சி மேற்கொண்டது.
காங்கிரஸ்காரன் ஓட்டுபோட மாட்டான் என்பது உங்களக்கே! தெரியும் போது அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
திருமாவை சுயநல தலைவன் என்று ஒரு அநாநி எழுதிகிருக்கு. அவருடைய சுயநலத்தை நாடறியும். இப்போது கூட அவரது சுயநலத்திற்காக அவர் கூட்டணி முடிவை எடுக்க வில்லை என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
தனித்து போட்டியிட்டால் தோல்விதான் என்ற நிலைமையை ஏற்படுத்தியது யார்? நீங்கள் தானே? உங்களுக்குள் இருக்கும் சாதிதானே?
இன்னும் கூட அவரால் மட்டுமே இப்பிரச்சினையை மேல்நோக்கி கொண்டு செல்ல இயலும்.
இங்கு உட்கார்ந்து கொண்டு எழுத்தித்தள்ளும் எத்துனைபேர் முத்துகுமாரின் மரணத்திற்கு பின் பலர் தன்னை அழித்து கொண்டனரே அந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு அம்மாவீர்களின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்டீர்கள்.
சும்மா உட்கார்ந்துட்டு கடிதம் எழுதறது நல்லாதான் இருக்கும்.
இறங்கி வேலை செய்ய வாங்க, அப்ப தெரியும்.
அப்ப்டியே திருமா தனித்து நின்றால் ஜெயிக்க வைக்க என்ன செய்வீர்கள் நீங்கள்?
உங்களுக்கெல்லாம் ஒரே பிரச்சினை இவன் எங்க ஜெயித்து பாராளுமன்றத்துல போய் ஈழப்பிரச்சினை பற்றி பேசி இந்திய அளவில் பெரிய ஆளாகிவிடுவானோ என்ற எண்ணம்.
எப்படியோ இன்னும் எழுதுங்கள் உங்கள் கடிதங்களை.
சதீஸ்
சுவிஸ்
சுவிஸ் சதிஸ் அவர்களே,
தேர்தலுக்காகவும்,பதவிக்காகவும். கட்சிக்காவும் அவர் கொள்கைகளை, மானத்தை அடுகு வைப்பதில் தப்பு இல்லை என்று கூறுகிறீர்களா?
இந்த தேர்தலில் தனித்து நின்று ஓட்டுகளைப் பிரித்து காங்கிரஸ் சார்ந்துள்ள திமுக அணிக்கு தோல்வியை தந்திருந்தால் திருமாவை பாராட்டியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லையே. துரோகம் செய்யும் கலைஞரை இன்னும் தமினத்தலைவர் என்று புகழ்ந்துகொண்டல்லவா இருக்கிறார். கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலையில்தான் இன்னும் திருமா இருக்கிறார்.
தேர்தல் விசயத்தில் குறைந்த பட்சம் விஜயகாந்திற்கு இருக்கும் தில் கூட இவருக்கு இல்லை.
நீங்கள் கூறலாம் திமுக தோற்றால் அதிமுக வெற்றிபெற்று விடும் என்று. திமுக வென்றால் மட்டும் என்ன கிழித்துவிடப் போகிறது ஈழத்திற்கு. "நாங்கள் பதவி விலகினால் ஈழம் விடிந்து விடுமா?" என்ற கேள்விதான் கருனாநிதி கேட்கப்போகிறார். காங்கிரஸ் "இது உள்நாட்டுப் பிரச்சனை" என்று கைவிரித்து வழக்கம் போல இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கப்போகிறது.
அதற்கு ஈழத்திற்கு ஆதரவளிக்கும் பாஜக-விற்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்கலாமே?
உண்மையை சொன்னால், சேரிக்காரன் என்பதால் அவமானப்படுத்துகிறான் என்று ஆரம்பித்துவிடுவீர்கள்.
Thol Thiruma has still time to turn around his position !! Please say 'NO' to DMK-CONG alliance !! Your whole propaganda of pro eelam is in great danger !! Please make chnanges prudently !!
கேள்விகள் அனைத்தும் ஏற்புடையவைதான்.
இத்தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வி.சி தோற்கும். ஆனால் என்றென்றும் தமிழர் நலன் பேணும் கட்சி என்ற பெயருடன் அதி வேகமாக வளரும். திமுக வுடன் கூட்டணி அமைத்தால் இத்தேர்தலில் ஓரளவு வெற்றி பெறலாம். தொடர்ந்து தமிழர் நலன் காக்கும் கட்சி என அழைத்துக்கொள்ள முடியும். ஆனால் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. சிறையில் இருக்கும் சிறுத்தைகளை விடுவிக்க திமுக எனும் சைத்தானை அனுசரித்து தொலைக்கவும் வேண்டுமே!!!
திருமாவை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் அனானி நல்லாத்தான் பேசினார்.
//இந்த தேர்தலில் தனித்து நின்று ஓட்டுகளைப் பிரித்து காங்கிரஸ் சார்ந்துள்ள திமுக அணிக்கு தோல்வியை தந்திருந்தால் திருமாவை பாராட்டியிருக்கலாம்.///
///தேர்தல் விசயத்தில் குறைந்த பட்சம் விஜயகாந்திற்கு இருக்கும் தில் கூட இவருக்கு இல்லை.////
///அதற்கு ஈழத்திற்கு ஆதரவளிக்கும் பாஜக-விற்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்கலாமே?///
இந்த வரிகளில் அனானியின் எல்லாமே கிழிஞ்சி போச்சி. காங்கிரஸ் தோற்கவேண்டும். ஈழப்பிரச்சினைக்காக தோற்கவேண்டும். பாஜக ஜெயிப்பதற்காக அல்ல.
மக்கள் தான் இதற்கு காரணம் ....விடுதலை சிறுத்தைகள் எத்தனையோ முறை தனித்து போட்டிட்டு தேர்தலை சந்தித்தவர்கள் தான்...மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து எத்தனையோ இழப்புகளை சந்தித்த அரசியல் வழி வேண்டாம் என்று இயங்கிய எல்லா அமைப்பு அப்படி இயங்கும்பட்சதில் முடகத்தான் பாண்டியனை கொலைசெய்தது அரசு எந்திரம் எவர்கள் தேர்தலை வெறுபவர்கள் இவர்களுக்கு கேட்க நாதி இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை தடைசெய்யும் முயற்சிகளும் நடந்தது..அண்ணல் சொல்லியதை போன்று "Catch the Parliment we can get our rights only through Catching the parliment" என்று சொன்னார் அம்பேத்கர் சிலைகள் இன்றும் கைநீட்டி காட்டுவது இதைதான் .. இதன் பொருளில் 1999 -ஆம் ஆண்டு நடந்த தேர்தலை அரசியல் சக்தியாக ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டும் பொருட்டு இனியும் நாங்கள் ஆடுகள் அல்ல இல்லிச்சவாய கூட்டமும் அல்ல சீறிபாயும் சிறுத்தைகள் நாங்கள் என்று வீறுகொண்டு விடுதலை சிறுத்தைகளை எழுச்சி பெற்று இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் பெரும் சக்தியாக உருவாகிவரும் தருணம் இருக்கின்றது ...வெறும் போஸ்டர் ஒட்டவும் தோரணம் கட்டவும். மட்டுமே பயன்படுத்த பட்ட மக்கள் இன்று சிறுத்தைகள் என்று பெருமையோடு தலைவர்களை எழுச்சி பெற்று வரும் காலம் ..... கட்சி ஆரம்பித்து பத்து ஆண்டுகள் ஆகியும் இது வரை பெரும்பாலான தேர்தல்களில் தனித்து போட்டிட்டு மக்கள் ஆதரவோடு கணிசமான வாக்குகளை பெற்றாலும் வெற்றி பெற முடியாத சூழ்நிலை,8% வாக்குகள் பெற்றாலும் வெற்றி பெற முடியாத நிலை என்பதை கடந்த கால தோல்விகள் சொல்லுகின்றன ..கடந்த தேர்தலில் மட்டும் தனித்து போட்டியட அட்டைக்கத்தி வீரர் என்று கூட்டணி சேர வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு தலைப்பட்டு இருக்கிறார் ....இன்றைய மக்களின் நிலை தான் இதற்கு காரணம் கூட்டணி அமைக்காமல் வெற்றி பெற முடியாது என்பதை அட்டை கத்தி வீரர் உணர்ந்து விட்டார் இடை தேர்தல் முடிவுகளே அதை அவருக்கு காட்டி கொடுத்துவிட்டன. இந்த நிர்பதர்த்திற்கு தான் விடுதலை சிறுத்தைகள் தள்ளபட்டுள்ளனர்...10 ஆண்டுகளில் வந்த எத்தனையோ தேர்தலில் தனித்து போட்டி இட்டாலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்த தேர்தலை விட்டுவிட்டால் கட்சி உடையும் நிலை ஏற்படும் ....இப்படி நாங்க ஆதரிக்கிறோம் என்று மக்கள் சொல்லை ஏற்று தான் இதனை தேர்தல்களை தனித்து சந்தித்தார்கள் மக்கள் சொன்னதை போல ஆதரித்தார்கள் ஆனால் பெரும்பான்மை தானே வெற்றி பெறுகிறது நீங்கள் சொன்னதை போல தனித்து நின்றால் உங்க ஓட்டும் கிடைக்கும் மக்களின் ஓட்டும் கிடைக்கும் ஆனால் வெற்றி தான் கிடைகாது வெற்றியை இழக்கும் பட்சத்தில் நாம் நமது கொள்கைகளை வெறும் கிணற்று தவளையாய் தான் உரைக்க முடியும் ..அதைவிடுத்து கூட்டணி அமைத்து வெற்றி பெரும் நிலையில் நாடாளுமன்றத்தில் நுழையும் சிறுத்தைகள் ....ஒரு அதிர்வை உண்டு பண்ணுவார்கள் என்பதில் சந்தேகமில்லை .....
ஒரு எம்பி சீட்டை விட ஈழம் பெரிதல்ல என்று திருமாவளவன் உணர்த்தி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கால் திமுக சின்னத்தில் ஜெயித்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போனார். இப்போ அதே கருணாநிதியுடன் கூட்டு வைக்கிறார். அன்ரு கசந்த கருணாநிதி இன்று இனிக்கிறார். இவர் இரண்டாம் ராமதாஸ். வழக்கமான பச்சோந்தி அரசியல்வாதி தான். இவரால் ஈழத் தமிழருக்கு ஒன்றுமே ஆகாது. பேசாம பிஜேபி கூட சேர சொல்லுங்க. எதுனா நல்லது நடக்கும்.
கையாலாகத் தனத்துக்கு ஜாதியை கூடவே இழுத்திக்கிறாங்க. ஒரு தலித் இந்திய ஜனாதிபதியாவே இருந்திருக்கிறார். திருமாவளவன் லெவலுக்கு தான் ஆசைபடனும். தென்மாவட்டங்கள்ல இவர் பேர் யாருக்காவது தெரியுமா?. இவரும் ஒரு அரசியல் விளம்பர பிரியர். அரசியல் வியாபாரி. எவ்வளவு பெட்டிகள் வாங்கினாரோ?
Well said Mr. Ramanan
ஈழத் தமிழர்களை அழிக்க நினைக்கும் காங்கிரஸின் வெற்றிக்கு துணைபோகும் திருமா வாழ்க!
தொண்டர்களை பகடைகாயாக்கி சிறையில் தள்ளிவிட்டு தான் மட்டும் எப்படி வெளியே உல்லாசமாக வாழும் வாழ்க்கையை சொல்லிக் கொடுத்த திருமா வாழ்க!.
This bastard from VCK would become a useless wastepaper in the hands of another thug Karunanidhi soon after the election...
Post a Comment