
தி.மு.க.,வுக்கு முதுகு சொறியும் வகையில் கொஞ்ச நாட்களாக தினமலர் செய்தி வெளியிட்டு வந்தது. தினமலரின் நிறுவனர் டி.வி.ஆருக்கு தபால் தலை வெளியீட்டு விழாவில்¢ தந்தை பெரியாருக்கு இணையாளவர் டிவிஆர் என்று கலைஞர் பேசியதே இருதரப்புக்கும் இருந்த நெருக்கத்தைக் காட்டியது. (பெரியார் என்கிற பெயருக்குப் பதில் ஈவெரா என்று தொடர்ந்து எழுதி வரும் தினமலரால், என்றைக்கும் பெரியாரின் தாக்கத்தை இந்த சமூகத்தில் இருந்து விரட்டிவிட முடியாது என்பதை நாம்தான் உணர்த்த வேண்டும்) தினமலர் ரமேஷ் (அந்துமணியாம்!) மீது அந்தப் பத்திரிகையில் வேலை பார்த்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாகவும் ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும் புகார்கள் வெளியானது. ரமேஷ் எந்நேரமும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆளும் கட்சியின் ஆசிர்வாதத்தால் அது தவிர்க்கப்பட்டது.இதற்கு நன்றி காட்டும் விதமாகவும் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து காரியம் சாதித்துக் கொள்ளும் நோக்கிலும் பகுத்தறிவு பேசும் கலைஞருடன் கைகோர்த்துக் கொண்டது தினமலர். அதன்படி அரசு தரப்பில் சலுகைகள், அறிவிப்புகள் வெளியிடும் ஒவ்வொருமுறையும் அதை சிலாகித்து செய்தி வெளியிட்டு தனது அரிப்பைத் தணித்துக் கொண்டது.காலங்காலமாக கலைஞரை திட்டியும் விமர்சித்தும் எழுதிக் கொடுத்து சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தினமலர் ஊழியர்களுக்குக் கூட (அதாம்பா ரிப்போர்ட்டர்ஸ்) இந்தப் போக்கு ஏனோ பிடிக்கவில்லை. ஆனால் கூலிக்கு மாரடிக்கும் இந்தக் கும்பல் வேறு என்ன செய்ய முடியும்-? இதற்கிடையே ஈழப் பிரச்னையும் வந்தது. தி.மு.க.,வும் கலைஞரும் ஈழத் தமிழனுக்கு எதிராக நின்றதில், ஏற்கெனவே தமிழினத்துக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வரும் தினமலருக்கு வசதியாகிப் போனது. அதிலும் தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதரர் அம்சாவின் கைக்கூலிகளாக ஆள்காட்டிகளாக இருந்த தினமலரின் மேலிட ஊழியர்களுக்கும், முதலாளிகளுக்கும் கலைஞரின் நிலைப்பாடு வசதியாகிப் போனது. கிளிநொச்சியை கைப்பற்றியது ராணுவம் என்கிற தலைப்பில் மட்டும் பலதடவை செய்திகளை வெளியிட்டிருப்பார்கள்! எத்தனை தடவைதான் கிளிநொச்சிப்பிடிக்கும் இலங்கை ராணுவம். இதிலும் இயக்குநர் சீமான் மீது அவர்கள் காட்டிய வஞ்சம் இருக்கிறதே? பாரதிராஜா (இன்னொரு இனத் துரோகி), மணிவண்ணன் போன்றோரின் தமிழுணர்வைக் கிண்டல் செய்து சினிமாக்காரர் என்று செய்தி வெளியிட்டு தனது அரிப்பை அடக்கிக் கொண்டது. வைகோ, கண்ணப்பன், கொளத்தூர் மணி, பெ.மணியரசன், சீமான், நாஞ்சில் சம்பத் போன்றோரின் கைதுக்கு முக்கியக் காரணமாக இருந்தது. திருமாவளவனையும் கைது செய்யச் சொல்லி எத்தனை முறை காங்கிரஸ் அள்ளக் கைகளிடம் பேட்டியெடுத்துப் போட்டது. ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. திருமாவைக் கைது செய்து தலித்களின் வெறுப்பைச் சம்பாதிக்க கலைஞர் விரும்பவில்லை.இதற்கிடையே தேர்தல் கூட்டணிகள் முடிவானது. மதிமுகவையும் பாட்டாளி மக்கள் கட்சியையும் ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டி செயல்பட்ட தினமலர், அந்தக் கட்சிகள் தன்னுடைய தாய் வீடான அதிமுகவில் சேர்ந்ததில் கொஞ்சம் சோர்ந்து போய்விட்டது. பிஜேபியை ஆதரிக்கலாம் என்றால் பாவம் அவர்கள் இருக்கிற இடமே தெரியவில்லை. வேறு வழியின்றி கலைஞருக்கே தினமலர் முதுகு சொறியும் என்று நாம் நினைத்திருந்தோம்.அங்குதான் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈழப்பிரச்னையில் கலைஞரின் துரோகத்தை நினைத்து நினைத்து புளங்காகிதம் அடைந்து வந்த தினமலர், திடீரென கலைஞரும் ஓட்டுக்காக ஈழப் பிரச்னையில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக பெயரளவில் கூட குரல் கொடுப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தது. (இலங்கைத்தூதரக உறவை முறிக்கச் சொன்னாரே கலைஞர் அப்போதுதான்) . அண்ணன் பிரபாகரன் என் நண்பர் என்று சொல்லியதாலும் பின்னர் அதை மறுத்துவிட்டதையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு கலைஞரை விமர்சிக்க ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்ததை ‘அதிசயம்’ என்று தலைப்பில் செய்தி வெளியிட்டு ‘நாங்கள் மாறிவிட்டோம்’ என்று அறிக்கை விடாத குறையாக அறிவித்தது. அதுவும் நேற்றும் இன்றும் கலைஞரை விடுதலைப் புலிகளிள் ஏஜெண்ட் போல சித்தரித்து செய்தி வெளியிட்டதைக் கவனிக்கவும். ‘ரத்தஆறு ஓடும்’ என்ற பேச்சை வாபஸ் பெற மாட்டேன் என்ற வைகோவின் அண்ணாநகர் பிரசார கூட்டப் பேச்சை அடக்கி வாசித்தது. ஜெ.,வும் ஈழ ஆதரவு நிலையில் தானே இருக்கிறார் என்று நீங்களும் நானும் நம்பலாம். தினமலர் நம்பத் தயாராக இல்லை. பாம்பின் கால் பாம்பறியும்.கடந்த நான்கைந்து நாட்களாக அதிமுக பக்கம் சாய்ந்து கொண்டு முதுகைச் சொறியும் வேலையைச் செய்கிறது தினமலர். (அதே சமயம் பாட்டாளி மக்கள் கட்சியும் மதிமுகவும் ஜெயித்துவிடக் கூடாது என்பதில் தினமலர் கவனமாக இருக்கும்.) அடுத்தமுறை எவளையாவது சீண்டினால் ஜெயலலிதா பார்த்துக்கொள்வார் என்கிற தைரியம். அதிலும் ஜெயிக்கும் பக்கம் இருப்பது தானே தினமலர் நிர்வாகத்திற்கு பயன். கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் சமயத்தில் தினமலர் ஊழி யர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில் தினமலர் ஊழியர்கள், குடும்பத்தார் அதிமுகவுக்கு ஓட்டுப் போடவும்; உங்களுக்குத் தெரிந்தவர்களையும் அதிமுகவுக்கு ஓட்டுப்போடச் சொல்லவும் என்று அறிவித்திருந்தனர். (இந்த முறை இதுபோன்ற அறிக்கை வந்தால் அதை குறைந்த பட்சம் செல்போனிலாவது படம் பிடித்துத் தருவதாக தினமலர் நிருபர்களாக உள்ள எனது நண்பர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள்).தங்கள் இனத்தைச் சேர்ந்த ஜெவை ஆதரிக்காமல் சூத்திரன் கலைஞரை ஆதரிப்பது எப்படி சரியாகும் என்று இப்போது தினமலர் சொல்லிக் கொண்டிருக்கிறதாம். தினமலரின் நயவஞ்சகத்தை நம் தமிழர்கள் எப்போதும் புரிந்து கொள்வார்களோ-? நமது சீமான் வெளியே வந்து மைக் பிடித்தால் தான் இது சாத்தியமாகும்.பி.கு: மேற்கண்ட கட்டுரையில் தினமலர் என்று தவறுதலாக அச்சாகிவிட்டது. தினமலர் என்று வரும் இடங்களில் ‘தினமலம்’ என்று திருத்தி வாசிக்க வேண்டும் என்று வாசகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். பி.கு: உங்களுக்குத் தெரிந்த தினமலர் நிருபர்களுக்கு இந்தக் கட்டுரையை முடிந்தால் அனுப்பிவைக்கவும் .
4 comments:
//.இதற்கு நன்றி காட்டும் விதமாகவும் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து காரியம் சாதித்துக் கொள்ளும் நோக்கிலும் பகுத்தறிவு பேசும் கலைஞருடன் கைகோர்த்துக் கொண்டது தினமலர்//
அதுதான் காரணமா என்பது சரியாக தெரியவில்லை, அப்போதைக்கு தினகரன் அலுவலக 3 ஊழியர்கல் படுகொலைக்குப் பிறகு மாறன் மகன்களுடன் ஆன தகறாற்றில் கருணாநிதி தினமலருடன் நெருக்கமானார்.
இதத்தான் டார் டார்னு சொல்றது. அசத்தல்.
வெறி பிடித்த சிங்கள நாய்கள் போடும் எலும்பு துண்டை நக்க இந்து ராம், தினமலம், சண் டி வி அலைகின்றன. அதில் பெரும்பாலான் பத்திரிகைகளும் கொலைஞரும் அடக்கம். காலம் மாறும் காத்திருப்போம் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல?
ரகு
brave report about dinamalar.... no one will write like this.......long live tamil...... not dinamalar.....
Post a Comment