
விடுதலைப்புலிகளின் இரண்டு தலைவர்கள் சரண்டர் என்கிற செய்தியை தேசிய சேனல்கள் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தனை நாள் இலங்கைத் தமிழர்கள் படும் பாட்டை கண்டுகொள்ளாமல் இருந்த இந்தச் சேனல்கள் இப்போது தூங்கி விழித்திருப்பது போர் நிறுத்தத்திற்கு எதிரான செய்தியைப் பரப்புவதற்கே.தமிழீழ விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பாளர் தயா மாஸ்டர், சுப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜார்ஜ் ஆகிய இரண்டு பேர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ புலிகள் சரணடையத் தயாராகிவிட்டதாக செய்தி வெளியாவதன் மூலம் உலக நாடுகளும் சமாதான அமைப்புகளும் போர் நிறுத்தக் கோரிக்கையை கைவிட்டுவிடும் என்று சிங்களவன் நினைக்கலாம். இது அங்கு தினமும் தினமும் செத்துமடியும் தமிழ் மக்களுக்கு எந்தவகையில் பயனளிக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.சரணடைந்ததாக சொல்லப்படும் தயா மாஸ்டருக்கு வயது ஐம்பதுக்கு மேலாகிறது. 2005ல் கொழும்பு மருத்துவமனையில் இவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. (அப்போது ஏன் கைது செய்யவில்லை?) இப்போதும் கூட மூன்று சக்கர வண்டியில் தான் தயா மாஸ்டர் கொண்டு வரப்பட்டார். அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற பின் மொழிப்பெயர்ப்பாளர் பணியை மேற்கொண்டு வந்த ஜார்ஜூம் இப்படியான ஒரு வயதானவர் தான். மேலும் இருவருமே படையில் பொதுவானவர்கள் தான். புலிகள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சரணடைந்தவர்கள் புலிகளின் முக்கியத் தலைவர்கள் என்று செய்தி வெளியிட்டு வருவதுதான் வேதனையிலும் வேதனை. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலான புலிகளின் வரலாற்றில் எந்த தளபதியும் சரணடைந்ததாக வரலாறு கிடையாது என்று இன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.மொத்தத்தில் புலித் தலைவர்கள் யாரும் சரணடைய வில்லை. போலித் தலைவர்கள் தான் சரணடைந்திருக்கிறார்கள்.
3 comments:
s we should agree with this i also many times wonder these channels are running only to give true news but the situation is not that now. i dont know y they are doing like this, did they get any amount for this form somebody.
மருத்துவமனையில் இருந்தவர்களைப் பிடித்துக் கொண்டு இப்படி ஒரு புளுகாம். ஒரே ஒரு நாளும் உண்மை சொல்லுவதில்லைன்னே பிறந்தானுவ போல சிங்கள நாய்ங்க.
சிங்கள இனவாதிகளின் குரல்களாக ஒலிக்கும் இந்த
பிறப்புக்கள் யாருக்குப் பிறந்ததுகள் என்றுதான்
கேட்க வேண்டும்.
Post a Comment