
கலைஞரின் வேலை நிறுத்தம் என்கிற நீலிக் கண்ணீருக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் மீதான போரை நிறுத்த செய்ய வேண்டிய எதையும் செய்யாத கலைஞர், இப்போது வேலை நிறுத்தம் அறிவித்து மக்களின் கவனத்தை திசை திருப்பப் பார்க்கிறார். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று பழ.நெடுமாறன் சொல்லிவிட்டார். ஆனால் 24ம் தேதி நடைபெறும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவை இ.த.பா.இ சார்பில் எழுச்சியுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கிடையே காங்கிரஸ்_திமுக அணிக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாகவும் நெடுமாறன் அறிவித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர்கள் தமிழருவி மணியன், திருச்சி வேலுச்சாமி, பசுபதி பாண்டியன், தி.அழகிரிசாமி, பரந்தாமன், பொன்னிறவன், ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். ஏப்ரல் 22ம் தேதி முத்துக்குமார் நினைவிடத்தில் இருந்து இந்தப் பயணம் தொடங்கப்பட இருக்கின்றது. ஈழப்பிரச்னையில் துரோகம் செய்த காங்கிரஸ், திமுக கட்சிகளை அம்பலப்படுத்தும் வகையில் இந்தப் பிரசாரம் அமையும்.‘அப்படிப் போடு போடு திருப்பிப் போடு
3 comments:
சரியான முடிவு ஐயா
ஈழத் தமிழ்ர் போராட்டத்தையே தமிழகத்தில் கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கியது அய்யா நெடுமாறன் அவர்கள் தான் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உணர வேண்டும்.
கலைஞரைப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தன்னைச் சிறையிலடைத்து அவமானப் படுத்திய பார்ப்பனத்திக்கு மறைமுகத் துணை போய்விட்டார்.
அரசியலில் ஆதாயம் தேடும் வைகோவும்,மருத்துவரும் செய்யும் சூழ்ச்சியிலே விழுந்து தமிழர் ஒற்றுமையைக் குலைத்த பழிக்கு ஆளாகி விட்டார்.
உணர்ச்சியுள்ள திருமா,மற்ற தொண்டர்களையும் குழப்பிக் கெடுத்ததுதான் இவர் செய்த "தொண்டு".
இவரது பிடிவாதம்,இவரது அறிவுறைகள்,வெகுளித்தனமான் உணர்ச்சி இவை அரசியல் சாணக்கியர்களிடம் தோற்றதுதான் ஈழப்புலிகளுக்கு இவர் தந்த படையல்.
உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றதை ஒப்புக்கொண்டு மற்ற உணர்வாளர்கள் சொல்வதைக் கேட்டுத் தொலையுங்கள்.
உங்களை மதிக்கிறோம்,ஆனால் நடை முறை பயனளிக்க வேண்டும்.
நெடுமாறன் ஐயா அவர்களின் உணர்வு நியாயமானது.
Post a Comment