
‘‘தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டரை லட்சம் அப்பாவி தமிழ் மக்களை மனிதக் கேடயமாக பிடித்து வைத்திருக்கிறார்கள்’’ என்று புலிகள் மீது இலங்கை அரசு குற்றஞ்சாட்டுகிறது. இதற்கு இந்தியாவும் ஒத்து ஊதுகிறது. உண்மையில் புலிகள் பாதுகாப்பில் உள்ள தமிழர்களின் கதி என்ன? என்பதை அறிய முயன்றேன். இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் இந்தக் கேள்வியை வைத்ததும், அவர், நீண்ட விளக்கத்துடன் என் கேள்விக்கான பதிலை தந்தார். அவர் கூறியதில் இருந்து.......‘‘ஓர் இனக்குழுமத்தில் இருந்து சில நியாயங்களுக் காக கிளம்புகின்ற குழுவினரை மக்கள் கூட்டத்தில் இடையே அடையாளம் காண்பது என்பது கடின மானது என்பதால், இன உணர்வுள்ள இளைஞர் களை எல்லாம் ஒன்று திரட்டி அப்படியே அழித்தல் என்பதுதான் உலக நாடுகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் பாலிசி. இதை நாகலாந்து, மணிப் பூர் போன்ற மாநிலங்களில் உங்கள் இந்தியா செய்கின்றது. ஈழப்பிரச்னை எப்படி ஊடகங்களில் வரமுடியாமல் சிங்கள அரசு தன்னுடைய அதி காரத்தை பிரயோகிக்கின்றதோ, அப்படி இந்தியாவும் நாகலாந்தில், மணிப்பூரில் செய்கிறது; ஈழப்பிரச்னை யிலும் செய்கின்றது-. ஈராக்கில் அமெரிக்காவால் ஏற் பட்ட மனித பேரவலம் இன்று ஈழத்தில் நடக் கின்றது. ஈழத் தமிழர்கள் யூதர்களைப் போலவே உல கெங்கும் பரந்திருப்பதால் உலகக் கதவுகளை எல்லாம் அவர்களது உரிமைக்குரல் இடிக்கிறது.இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாடுகளுமே இந்தியாவுக்குப் பகையான அல்லது பதற்றமான நாடு களாகவே இருக்கின்றன. இலங்கையில், இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தும் பொருட்டு தமிழ் போராளிகளை அவர்களின் பிரச்னையை சாதகமாகப் பயன்படுத்த நினைத்தது. ‘றொ’ தமிழ் போராளிகளைப் பல குழுக்களாகப் பிரித்து போர் பயிற்சியையும், கொடுத்து அவர்கள் இடையே பகைமையை ஊட்டி ஈழத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.இந்தியா சொன்ன போதெல்லாம் வாலை ஆட்டவும், கையை உயர்த்தவும் அந்தத் தமிழ் குழுக்கள் நிர்பந்திக்கப்பட்டன. தோற்றிவிக்கப்பட்ட ஏனைய குழுக்கள் எல்லாம் இந்தியாவின், சுய நல அரசியலை செவிமடித்த போதும், பிரபாகரன் தன்னுடைய கொள்கையில் மிக நிதானமாக கொள்கை நோக்கியதான பயணத்தை தெளிவாக அமைத்தார். கடந்த முப்பதாண்டு போர்க்கால வரலாற்றில் அவர்கள் தம் கொள்கையில் இருந்து இன்று வரை மாறவே இல்லை. இந்த ஆட்டுவித்தப் பாட்டுக்கு ஆடாத கொள்கை இந்தியாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதன் பரிணாம வளர்ச்சிதான் இன்றைய வன்னி யுத்தமும் மோசமான மனித அவலமும்.இன்று வன்னியில் நிகழும் மனிதப் பேரவலத்தைப் பொறுத்த வரையில் உலகெங்கிலுமே நடந்திராத அளவிற்கு வன்னி மக்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகின்றார்கள். இப்போது எஞ்சியுள்ள மூன்று மீன்பிடி கிராமங்களில் ஆடு, மாடுகளைப் போல் இரண்டரை லட்சம் மக்கள் தினம், தினம் மிகக்கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே!அந்த மண்ணில் பிறந்து அந்த மண்ணில் வளர்ந்த எங்களை அங்கே இருந்து அப்புறப்படுத்து வதற்குப் பெயரா மக்கள் மீட்பு! ராணுவத்தின் மிக மோசமான பீரங்கி தாக்குதலால் எங்கே ஓடுகிறோம்? என்று தெரியாமல் சிதறி ஓடுகின்ற மக்களை ராணுவம் மிக மோசமாகக் கையாள்கிறது. கடந்த திங்கள்கிழமை (20.04.09) கூட முப்பதாயிரம் தமிழ் மக்களை மீட்டதாக, இலங்கை ராணுவம் சேட்லைட் படங்களை வெளியிட்டது. வவுனியா மாவட்ட கலெக்டரோ, வெறும் 13,500 பேர்தான் வந்ததாகக் கூறியிருக்கின்றார். அதில் இப்போது எட்டாயிரத்து ஐநூறு பேர்தான் உயிருடன் இருக்கின்றார்கள். அப்படியென்றால், ஐயாயிரம் தமிழ் மக்கள் கதி என்ன ஆனது? இதை எல்லாம் விட கொடுமையாக அப்படி அங்கிருது வருகின்ற பெண்கள் எல்லோருமே தற்கொலைப் படை போராளிகளாக இருக்கலாம் என்கிற குரூர புத்தியில் நிர்வாணமாக வருவதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். பீரங்கிக் குண்டுகளுக்குப் பயந்து ஓடுபவர்கள், ஒரு கட்டத்திற்கு மேல் ராணுவத்திடம் நிர்வாணமாகவே தான் வரமுடியும். அது அரச உத்தரவு. கற்பனை செய்து பாரு, என் தாய்த் தமிழகமே! சிங்கள ராணுவ காமுகர்களின் கழுகுக் கண்கனின் முன்னால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், நிர்வாணமாக அரை கிலோமீட்டர் நடந்து வரவேண்டும் என்பது சகிக்கக் கூடியதா? பெண்ணுரிமை பேசும் தமிழினத் தலைவர் கலைஞரின் வாரிசான கனிமொழி போன்றோர் இதற்குப் பதில் சொல்லட்டும்!ஏற்கெனவே, சண்டை களத்தில் இருந்து நிறைந்த மது, மாது தாகத்தோடு வரும் ராணுவத்தினரின் சாந்தி க்காக அனுராதபுரம் என்கிற புனித நகரில் (இலங்கை அரசாங்கம் அப்படித்தான் சொல்கிறது!) அமைக் கப்பட்டுள்ள விபசார விடுதிகளின் நேரடியாகக் கொணர்ந்து இறக்கப்படுகின்றனர். விபசார பெண் களுக்கான பணத்தை மாதாந்தம் இலங்கை அரசே பொறுப்பேற்றுக் கொள்கிறது. இப்போது, அந்த இடத்திற்கு வன்னியில் இருந்து கொணரப்படும் தமிழ்ப் பெண்களும் பலவந்தமாகக் கொண்டு செல்கிறார்கள். இதை சகித்துக் கொள்ள முடியாத எம் தமிழ்ப் பெண்கள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். பலர் சித்தப் பிரமை பிடித்துத் திரிகிறார்கள். கோத்தபய ராஜபக்சே மேடை ஒன்றில் கூறியது போல ‘முல்லைத் தீவு பெண்கள் உங்களுக்கு விருந்தாகட்டும்! ஆண்களின் ரத்தத்தால் கடல் சிகப்பாகட்டும்’ என்பது மிகச் சரியாக நடக்கிறது. வன்னியில் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள காவல் அரண்களில் எல்லாம் நாலைந்து ராணுவத்தினரோடு ஓர் அப்பாவி வன்னித் தமிழ் பெண்ணும் பலவந்தமாக தங்க வைக்கப்படுகின்றாள்; வன்புணரப்படுகின்றாள். இதையெல்லாம் விட நான் உள்பட சில தமிழர்களோடு நண்பர்களாக இருக்கும் ஒரு ராணுவ அதிகாரி, ‘எங்கள் ராணுவ அதிகாரிகள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் உங்கள் தமிழ்ப் பெண்கள் நிர்வாணமாகவே பணிவிடைகளைப் புரியும்படி பணிக்கப்படுகிறார்கள்’ என்று கூறியதும் இனி இந்தக் கொடுமையை கண்டும், கேட்டும் இங்கு வாழவே கூடாது என்றுதான் பலர் படகேறி ராமேஸ்வரம் வந்து சேர்கிறார்கள். பாதுகாப்பு வளையத்துக்கு வந்த ஆண்கள் எல்லோரும¢ கொல்லப்படுகின்றார்கள்; பலர் காணாமல் போய்கின்றார்கள்.மவுனியா வைத்திய சாலைக்கு நான் சென்றிருந்தபோது, இருபதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் அங்கு அனுமதிக்கப் பட்டிருந்தனர். அவர்களில் எல்லோருக்கும் இரண்டு கால்களும், இரண்டு கைகளும் துண்டாடப்பட்டு விட்டன. ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள் முடமாக்கப் பட்டு கிடக்கின்ற அவள், குழந்தை பிறந்தால் எந்தக் கைகளால் தூக்கி தன் குழந்தைக்குப் பால் கொடுப்பால்? எவ்வாறு கால்களை சமன்படுத்திக் குழந்தைகளைத்தான் பெற்றெடுப்பாள்? மலைகளைப் பிளக்க பயன்படும் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் (கிளிஸ்டர்) விமானம் மூலம் வீசுகிறார்கள். அது, தரை மட்டத்துக்கு மேலே இருபதடியில் வெடித்து முந்நூறு குண்டுகளாக தரையில் விழுந்து வெடிக்கின்றது. அதில் உடல்கள் பிளந்து, தீப்பற்றி எரிந்து கறிக்கட்டைகளாகி மடிகின்றனர். நச்சுக்குண்டுகளால் (tலீஷீக்ஷீஷீனீவீநீ தீஷீனீதீ) உடலெங்கும் கொப்பளங்கள் ஏற்பட்டும், மூச்சுத் திணறியும் செத்து மடிகிறது, எம்மினம். அழுவதற்கு இனி கண்களில் கண்ணீர் இல்லை. யுத்த நிறுத்தம் கேட்பது எல்லாம், இறந்து கிடக்கும் பிணங்களை புதைப்பதற்காகவும் ஷெல் வீசலில் பறந்து சிதறிய தன் அங்கங்களில் கட்டுப் போடுவதற்காகவே. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஓரினத்தையே மிகக் கச்சி தமாக இலங்கை அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் சேர்ந்து அழித்துக் கொண்டிருக் கின்றது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங் களில் முடியப்போகும் இந்த முற்றுகையும் மாபெரும் மனித அவலமும் தேர்தல் பரபரப்புகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் கூட எவர் செவியிலும் விழப் போவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கே இதற்கான போராட்டங்களை முன்னெடுக்க முடியாதபோது ஈழத்தமிழர்களை இந்தியாவில் கதறியழுவது என்பது சாத்தியமற்றது தான். அவ்வாறு செய்ய முனைந்தால் தமிழ்நாடு, இந்தியா அதை எவ்வாறு கையாண்டு பூந்தமல்லி சிறைச்சாலையை நிறைக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். வன்னியில் சண்டை ஆரம்பிக்கப்பட்ட சில நாட் களில் மாங்கொல்லையில் இந்த ஆட்சி இனி எதற்கு?- என்று கலைஞர் கண் கலங்கியதும், திடீரென வன்னியில் போர் நின்று போகிறது. ஐந்து நாட்களில் ஒரு குண்டுளேனும் அங்கு வெடிக்கக் காணோம்! ப்ரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். கலைஞரை சந்திக்கிறார். ‘மத்திய அரசு கொள்கைதான் தன் கொள்கை’ என்கிறார், கலைஞர். அதன்பின், கண் முன்னே கொலைகள் குவிகின்றன. ஆக, எஞ்சியுள்ள இரண்டு லட்சம் தமிழர்களின் ஊனமும், உயிரும் கலைஞர் கைகளில் இருக்கிறது. கலைஞரே, நீங்கள் உண்மையான மனசோடு எமக்காக பேச வீதிக்கு வாருங்கள்! இல்லை, வயது முதிர்ந்த காலத்தில் தன்னுடைய வாழ்வை இப்படியான அவப் பேரோடுதான் முடித்துக் கொள்ளப் போகிறாரோ?’’ என்றவர், மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் அமைதியாகிப் போனார்.பி.கு: உங்களில் யாருக்காவது கனிமொழியின் மின்னஞ்சல் தெரிந்தால் இந்தப் பதிவை அனுப்பி வைக்கவும்.....
2 comments:
kanimojhi@sansad.nic.in
இதெல்லாம் இவர்களுக்கு தெரியாமல் போகாது. எல்லாம் மீறி ஓட்டுதான் குறி.
Post a Comment