மூச்சடங்குகின்ற இறுதித் தருணங்களில் உயிர்க்காற்றுக்காக ஏங்கும் ஒரு உயிரின்தவிப்புப் போல, வெம்மை தாளாமல், நீர்வற்றிப்போன உடலில் அசுரதாகத்தால் தவிக்கின்றநா துளி நீருக்குப் போராடுவதுபோல்... ஈழத் தமிழரின் நிலை... இன்று இக்கணத்தில் வன்னிமண்ணில்...துன்பமும் துயரமும் வாட்டிவதைக்க.. சிங்கள இனவெறிப் பெரும் பூதத்தின் கொலைக்கரங்களில் இருந்து தப்ப, காடு கரம்பை, வெள்ளம், தண்ணி என குஞ்சுகளும், குழந்தைகளும்,ஆணும், பெண்ணும், முதிசும் இளசும் தவிப்போடு ஓட்டமும் நடையுமாக விழுந்தும் எழுந்தும்அலையும் கொடுமை வன்னி மண்ணில்.
ஓடியாடித் திரிந்த சின்னஞ்சிறுசுகள், கையின்றியும் காலின்றியும் சிங்களஇனவெறியின் அடையாள சாட்சியங்களால், எங்கள் மண்ணில், மலிந்துபோய்விட்டனர்.இந்தக் கொடுமையை யாரிடம் சொல்வோம்? இதனைக் தடுக்க முனைவோர் யாருமிலையா?
வெறிகொண்டு ஏகும் சிங்கள ராணுவ சிப்பாயின் கனத்த சப்பாத்து மிதிப்பில்சிக்கி எங்கள் குழந்தைகள் எழுப்பும் அவலக்குரல் கேட்கிறதா? இதயமுள்ளோருக்கு நிட்சயம்கேட்கும். உணவில்லை. மருந்தில்லை. குந்தியிருக்கக் கூடாரம் இல்லை. எல்லாவற்றிலும் மேலாய்அடுத்த கணம் உயிரோடு இருப்பதற்கான உத்தரவாதம் இல்லை.இறுதிக் கணங்கள் எண்ணப்படுவதாக நம்பிக்கைப் பிடிதளர்ந்த ஈழத்தமிழ் மக்களுக்குஒரு நம்பிக்கை ஒளியைக் காட்ட வேண்டியது, கைபிடித்து அவர்களைத் தூக்கி நிறுத்த வேண்டியது,அணைத்து ஆசுவாசப்படுத்த வேண்டியது உலகத் தமிழினத்தின் குறிப்பாய் தாய் உறவெனநம்பிக்கை வைத்திருக்கும் தமிழகத்தின் வரலாற்றுக் கடமையாகும். அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால்தமிழினம் என்ற ஒரு உணர்வின் தளத்தில் இருந்து அவர்களுக்கு காப்பரணாய் நிமிரவேண்டியது தமிழகத்தின்இன்றைய தலையாய கடமையாகும். உலகெங்கும் எட்டுக்கோடி தமிழர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஆறரைக் கோடிதமிழர்கள். தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர், தமிழினத்தின் தலைமகன் தமிழர் தலைவர் கலைஞர்கருணாநிதி. இந்திய மத்திய அரசோ தமிழகத்தின் மடிப்பிச்சையில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால்மத்திய அரசு, ஈழத்தமிழர் விடயத்தில் அசையவில்லை அல்லது தமிழக அரசால் அசைக்க முடியவில்லை.தமிழகம் குறித்தும் தமிழக மக்களின் பேரெழுச்சி குறித்தும் அலட்சிய மனோபாவத்துடன் நாட்கள்கடத்தப்படுகின்றன. சிங்களத்தின் போர்வெறிக்கு தமிழின அழிப்பிற்கு மௌன சாட்சியாய் கலைஞர் இருக்கின்றார்என்பது பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் எமக்கெல்லாம் கவலையளிக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில்பற்றி எரிந்த பேரெழுச்சி, தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் எழுந்த இன உணர்ச்சி அலை, ஈழத்தமிழர்கள் மத்தியில்ஒருவிதமான நம்பிக்கையை பெருமிதமான எண்ணங்களைத் தோற்றுவித்திருந்தது. மனித சங்கிலிப் போராட்டம்,வீதிமறியல் போராட்டம், உண்ணாவிரதப்போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சட்டமன்றத் தீர்மானங்கள், சர்வக்கட்சி மாநாடுகள், சந்திப்புகள், வாக்குறுதிகள், போராட்டங்கள்! இப்பெரும் மனித ஆற்றலுக்கும் உணர்விற்கும் எதுவிதமான பிரயோசனமும் இல்லாமல் போனதுவருத்தத்திற்குரியதே. ஏன் தாமதிக்கின்றார்கள். சிங்களத்தின் திட்டம் தடங்கல் இல்லாமல் முன்னேறி குறித்த இலக்கைஅடைவதற்கான கால அவகாசம் வழங்கப்படுகின்றதா? தமிழ் மக்களைத் தாக்க அவர்களின் விடுதலைப் போராட்டத்தைஅழிக்க சிங்கள அரசின் கோரிக்கைக்கு இசைவாகச் செயற்பட்ட இந்திய அரசு, தமிழர்களைக் காக்க¢, தமிழகத்தின் கோரிக்கைக்கு,இசைய மறுப்பது ஏன்? இந்தியாவின் ஒரு அங்கமான தமிழகத்தின் பாத்திரம் என்ன? அதன் பெறுமதி என்ன? ஆறரைக்கோடி தமிழர்களின் சனநாயகக் குரலின் வலிமையின் தாக்கம் எவ்வளவு?யுத்தத்தை நிறுத்து! சமாதானம் பேசு! என்ற யாருக்கும் கெடுதல் இல்லாத மனிதநேயம் தோய்ந்தகோரிக்கைக்கு ஏன் இந்த அவமானம்? அலட்சியம்? சிங்களம் ஏவும் ஒவ்வொரு¢ம் குண்டும், தமிழர்களை நாளும் பலிவாங்கிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், விமானப் பேரிரைச்சலுடன், பீரங்கிவெடிப்புச் சத்தத்துடன், தமிழர்களின் மரண ஓலங்களும் கலந்தே வன்னியில் எதிரொலிக்கிறது....
தமிழக முதலமைச்சர் அவர்களே உங்கள் அரசியல் வாழ்வில் பல போராட்டங்கள நடத்தியவர்.போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தி, பல வரலாறுகளைப் படைத்தவர் நீங்கள், இன்று நிகழ்கலாம் உங்கள்அழைக்கிறது. உங்கள் இறுதி காலத்தில், உலகத் தமிழினத்தின் மனங்களில் நீங்கா இடம் வீற்றிருக்கச் செய்யும்ஒரு போராட்டக்களம் உங்களின் முன்னால் விரிந்து கிடக்கிறது. போராட்டத்திற்குத் தலைமையேற்று வெற்றிவாகை சூடுங்கள். தமிழினத்தைக் காப்பாற்றுங்கள். ஒரு சந்தர்ப்பத்தில் நா தள தளக்க நீங்கள் கூறிய வார்த்தை.... ஈழத்தமிழனைக் காப்பாற்றமுடியாவிட்டால் இந்த ஆட்சி எதற்கு என்று? பின்பு உங்கள் நிலைப்பாட்டில் இருந்துப்பின் வாங்கி மத்திய அரசின்மீது நம்பிக்கை வைத்தீர்கள். ஆட்சியிலிருந்து உங்கள் கட்சி இல்லாமல் போனால் எந்த நம்பிக்கையும் ஏற்படப்போவதில்லை எனவும் காரணம் தெரிவித்தீர்கள். உங்கள் ஆட்சி தமிழகத்தில் இருக்கின்றபோது உங்கள் ஆதரவுடன்மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கையில் இலங்கை அரசின் இன அழிப்பிற்கு உதவியதோடு அல்லாமல்இன அழிப்பை வேடிக்கை பார்த்த பெரும்பாவமும் அவமானமும் உங்களைச் சூழும். இந்தப் பலம் பொருந்திய ஆட்சியால்என்ன பலம் ஏற்பட்டது என்ற கேள்விக்குமிடம் உண்டல்லவா? ஆட்சியை வைத்து ஏதும் செய்யமுடியாத பட்சத்தில்ஆட்சியைப் பிணைவைத்து ஒரு வரலாற்றைப் படைக்க ஏன் முயலக்கூடாது? ஒரு குடும்பத்தின் நலனுக்கான ஒருவரைஇழக்கலாம். ஒரு ஊரின் நலனுக்காக ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டின் நலனுக்கான ஒரு ஊரையே இழக்கலாம்என்பது பொதுக்கருத்தாக முன்வைக்கப்படுகின்றபோது தமிழினத்தின் வாழ்வுக்காக, சுயகௌரவத்திற்காக இனமானத்திற்காகஒரு ஆட்சியை கேடயமாக ஏன் முன்வைக்கக் கூடாது? இனநலன் கருதி இந்த ஆட்சி வீழ்ந்தால் அடுத்து வரும்தேர்தலில் இனத்தின் தலைவனாய் எழுவீர்கள் உறுதி. உலகத் தமிழினம் நன்றியுடன் உங்களைத் தலைமேல்வைத்துப் போற்றும். உலகத் தமிழரின் உள்ளத்து உணர்வு,
இப்படிக்குபிரான்ஸ் வாழ் தமிழின உறவுகள்
Saturday, January 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment