Wednesday, April 8, 2009

தமிழக நிருபர்கள் யாரை செருப்பில் அடிப்பார்கள்?



சீக்கிய பத்திரிகையாளர் ஜர்னைல் சிங் மத்திய உள்துறைஅமைச்சர் மீது செருப்பை தூக்கிவீசுகிறார்.செருப்பால் அடித்த அந்தக் காட்சி நமதுதேசிய தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பஒளிபரப்பப்பட்டது. நச்சுக்குண்டு வீசிதமிழனை கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கும்கொடூரத்தைக் காண்பிக்க மறுக்கும் அவர்கள்சிதம்பரத்துக்கு விழுந்த செருப்படியைதிரும்பத் திரும்பக் காட்டியது பார்க்கநல்லாத்தான இருந்தது.
விடயத்துக்கு வருகிறேன்.. தன் மீதுசெருப்பால் அடித்த சீக்கியரை அப்போதுமன்னித்துவிட்டார் மத்திய அமைச்சரும் தமிழனுமானசிதம்பரம். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நாட்டின் உள்துறை அமைச்சர் மீதுசெருப்பை தூக்கியெறிந்தவர் மீது எந்த வழக்கும்பதிவாகவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஜர்னைல் சிங்கை சிரோமணி அகாலி தளம்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடஅழைப்புவிடுத்துள்ளது.அதுவும் சீக்கியரின் புனிதநகரமான அமிர்தசரஸில் போட்டியிடவேண்டும் என்கிறது அந்தக்கட்சிடெல்லி மாநில அகாலி தளம் கட்சியின்அவருக்கு இரண்டு லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
இதை இப்படி யோசித்துப் பாருங்கள்...தமிழகத்தில் இது நடந்திருந்து.. ஒரு தமிழினபத்திரிகை நிருபர் யாராவது மத்திய அமைச்சர்மீது செருப்பை எறிந்திருந்தால் என்னாயிருக்கும்?
சம்பவ இடத்திலேயே அமைச்சரின் கைத்தடிகள்அவரை அடித்து காயப்படுத்தியிருக்க மாட்டார்களா? அந்தநிருபர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா? என்று விசாரணைநடக்கிறது என்று தினமலரில் செய்தி போட்டியிருக்கமாட்டார்களா? உடனடியாக அவரை சிறையில் அடைத்துவிட்டுஅவரது வீட்டை அமைச்சரின் கட்சித் குண்டர்கள் ஸாரிதொண்டர்கள் சூறையாடியிருக்க மாட்டார்களா?பக்கத்து வீட்டில் இருக்கும் சக தமிழன் அல்லதுஅவருடன் பணியாற்றும் சக (தமிழக) நிருபர்கள் அவருக்கு .இரண்டு லட்சம்கொடுப்பது இருக்கட்டும்... நாட்டாமை பட பாணியில்ஊரைவிட்டே பத்திரிகை உலகை விட்டே அவரைஒதுக்கிவைத்திருக்க மாட்டார்களா-?
ஆனால் சீக்கியர் மேல் இருக்கும் பயமும் மரியாதையும்தமிழனுக்கு இல்லை என்பது இதன் மூலம் தெள்ளத் தெளியாகத்தெரிந்துவிட்டதா? சீக்கியனைப் பகைத்துக்கொள்ள காங்கிரஸ்தயாராக இல்லை. ஆனால் தமிழனை? தமிழனுக்கு எதிராகப்பேசலாம். ஈழத்தமிழனைக் கொல்லலாம். கேட்க நாதியில்லை.கலைஞரை தலைவரே என்றும் ஜெயலலிதாவை அம்மா என்றும்அழைக்கும் நிருபர்கள் தான் தமிழகத் தலைநகரில் இருக்கிறார்கள்..வாரம் இருமுறை வரும் துணிச்சலுக்கு ஒரு பத்திரிகை முதல்வர்கலைஞர் என்று தான் எழுதுகிறது. கருணாநிதி என்று பெயர்சொல்லக்கூடாதாம். அடக் கடவுளே சன் டிவியில் கூடகருணாநிதி என்றுதான் சொல்கின்றான்.
பத்திரிகை முதலாளிகள் தங்களுக்குச் சொந்தமானஒரு பத்திரிக்கையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், மற்றொன்றில் கருணாநிதிக்கு ஆதரவாகவும் எழுதுகிறார்கள்(பார்க்க : குமுதம் கருத்துக் கணிப்பு; பார்க்க : குமுதம்ரிப்போர்ட்டர் சோலை கட்டுரைகள்) சோலைக்குதமிழக அரசின் விருதுகள் குவிந்து வருகின்றன என்பதைகவனிக்க. இப்படி பத்திரிகை நடத்தினால் தான்யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன்நம்மை நெருக்கமாக்கிக் கொள்ளலாம் ... என்னவொரு பித்தலாட்டம் இது
ஆனந்த விகடனில் விஜயகாந்திற்கு ஆதரவாக தொடர்ந்துகட்டுரைகள். இந்த வார விஜயகாந்த் உடன் ஊர்சுற்றியநிருபரின் கட்டுரையைப் படிக்கவும். பாவம் விஜயகாந்திற்குமுதுகில் புண் வந்திருக்கும்...இந்த இதழ் ஜூனியர் விகடனில்வைகோவை மட்டம் தட்டிவிட்டு அழகிரியையும், ஜே.கே.ரித்திஷையும்தூக்கிப் பிடித்திருப்பதைப் பாருங்கள். அதிலும் மதுரைதொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர், திமுகவை ஜெயிக்க வைப்பார்என்றும் ஒரு கட்டுரை வந்திருக்கிறது... தமிழகத்தில் எந்தப் பத்திரிகை நிருபராவது அரசியல்வாதிகளை செருப்பில்அடிப்பாரா என்று எதிர்பார்க்காதீர்கள்... ஏனென்றால் செருப்படி வாங்க வேண்டிய பத்திரிகை முதலாளிகளும்,நிருபர்களும் இங்கே நிறையப் பேர் இருக்கிறார்கள்..

7 comments:

Namesake said...

Super saatai adi!

Anonymous said...

Boss. kasukku xxx thinbavargal irukkum varai ondrum seyya mudiyathu.

Venkatesh.

ADAM said...

very good news

vasu balaji said...

வேசிக்காவது நேர்மை இருக்கும். இவனுவளுக்கு எல்லாம் காசுதான்.சை!

சவுக்கடி said...

***செருப்படி வாங்க வேண்டிய பத்திரிகை முதலாளிகளும்,நிருபர்களும் இங்கே நிறையப் பேர் இருக்கிறார்கள்***

அப்பட்டடமான உண்மை.

'சொல் சரிபார்ப்பை'(word verification) எடுத்துவிடவும்.

Saravanan's blogs said...

அந்த நாதாரி கருணாநிதி அடுத்தவனை வாரி விட்டு தான் பழக்கம்

RAGUNATHAN said...

இந்த பொழைப்புக்கு கூட்டி கொடுக்கலாம் அதாவது கொலைஞருக்கு அன்டோனயோ மைநோவ, கூஜா பக்ஷவுக்கு சுய(இன்ப)லலிதாவ...அந்த தொழில் செய்ய பத்திரிகை மொதலை (மொதலாளி) கூட்டத்துக்கு அரசியல் மாமா இந்து ராம் சரியான தலைவனா இருப்பன். என்ன சொல்ற ஓய்.

கொலைஞரும் ஒரு பார்பான் ஆயிட்டன் ஓய். பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.,

Post a Comment