Tuesday, March 3, 2009
யாருக்குத்தான் ஓட்டுப் போடுவது? பதில் தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்!பெதிகாவின் டிவிடி பரப்புரை சபாஷ்!!
சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததுதொடர்பாக பதிவிட முடிவெடுத்திருந்தேன். ஆனால் நேரம் போதாமல்அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. வீரத் தமிழன் மகன் முத்துக்குமாரின்தங்கை வீட்டிற்குச் சென்று சில விவரங்கள் பேச வேண்டும் என்கிற என்னுடைய திட்டமும் நேரமின்மை காரணமாக தள்ளிப்போய் கொண்டேஇருக்கிறது (ஏதோ பெரிசா கிழிக்கிற மாதிரி ஒரு பில்டப் கொடுக்காதடா என்றுநீங்கள் சொல்வது என் காதில் விழாமல் இல்லை).
சீமானை அடுத்து வைகோவும் கைதானார். கொளத்தூர் மணியும்கைதானார். வைகோ பிணையில் வெளிவந்து விட்டார். கொளத்தூர்மணியின் நிலை தெரியவில்லை. தேர்தல் பயத்தினால் தான் சீமானைசிறையில் அடைத்திருக்கிறார்கள். சீமான் என்கிற ஒரு தனிமனிதனின்பேச்சு, தங்களுடைய வெற்றியைப் பாதிக்கும் என்று அவர்கள் நினைப்பதுசீமானுக்குக் கிடைத்த வெற்றி அல்லவா? நாமும் தேர்தலை எதிர்பார்க்கலாம்..ஆட்சி மாற்றம், மிச்சம் உள்ள தமிழர்களின் உயிரையாவது காப்பாற்றும் என்கிறநப்பாசைதான் தோழர்களே....
நேற்று (2.3.09) இயக்குநர் மணிவண்ணனைச் சந்தித்தேன்.ஆள் ரொம்பவும் தளர்ந்து போய் இருக்கிறார். அதிலும், ஈழப்பிரச்னை குறித்துபேசும்போது அவர் முகத்தில் நெளியும் கவலை ரேகைகளைப் பார்க்கும்போதுஎன் மனது என்னவோ போலாகிவிட்டது. முதுகுத் தண்வடுவடப் பாதிப்பால்கால்கள் இரண்டும் வீங்கி நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அதிலும், ஷோபாவில்அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, அடிக்கடி இரண்டு கைகளாலும் தனது வலது காலைநகர்த்தி வைத்துக் கொண்டதை பார்க்க கஷ்டமாக இருந்தது.
இந்த நிலையிலும் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.கடவுள் மறுப்பாளரான அவரது உடல்நலம் தேற அதே நிலைப்பாட்டில் உள்ள நான் யாரிடம்வேண்டுவது....? ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவது அதிலும் கொடூரமாகக் கொல்லப்படுவதைஎப்படி சகித்துக் கொள்வது? என்று கேட்கிறார், மணிவண்ணன். முதல்வர் கருணாநிதி பற்றி பேசினால் நிதானமாக கவனமாக முதல்வருக்கான மரியாதைக்கு எந்த இழுக்கும் ஏற்படாமல் கருணாநிதியைகடிந்து கொள்கிறார். இந்தியாவில் தேர்தல் திருவிழா தொடங்கி விட்டால், ஈழத்தில்தமிழர்களைக் கொல்வது சிங்களப் பேரினவாத அரசுக்கு வசதியாகிவிடும். தட்டிக் கேட்கவேண்டியவர்கள் எல்லோரும் தேர்தல் பணியில் பிஸியாகி விடுவார்கள் என்று நியாயமானவருத்தத்தை வெளிப்படுத்துகிறார். கிளம்பத் தயாரானதும், சிரமப்பட்டு நடந்தாலும்வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். சினிமாவில் நக்கலும், நையாண்டியாகவும்பார்த்துப் பழக்கப்பட்ட இயக்குநர் மணிவண்ணனை ஈழமக்களின் சாவுகள் சஞ்சலப்படுத்திக்கொண்டே இருப்பதால் அவரது முகத்தில் வேதனை ரேகைகள் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டதோ என்றுநினைக்கத் தோன்றியது.....
லீனா மணிமேகலையின் தேவதைகள் ஆவணப்பட வெளியீட்டு விழா சில மாதங்களுக்குமுன் நடந்தது (ஓராண்டு கூட ஆகியிருக்கலாம்). அப்போதுதான் முதல் முதலாக சந்தனக் காடுஇயக்குநர் கெளதனை சந்தித்தேன்..... அப்போது அவருடன் பேச வாய்ப்புக் கிடக்கிவில்லை. சந்தனக்காடு வெற்றிவிழாவில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு அவருடன் பேசவாய்ப்புக் கிடைக்கவில்லை.
மாவீரன் முத்துக்குமாருக்கு இயக்குநர்கள் சங்கம் சார்பில் நடந்த இரங்கல் கூட்டத்தில்( பாரதிராஜா, செல்வமணி, சீமான், சத்தியராஜ் உள்பட அந்த இரங்கல்கூட்டத்தில் வெகுசிலரே கலந்துகொண்டனர் என்பது வேறுவிஷயம் ) மீண்டும் கெளதமனைச் சந்தித்தேன்.
அப்போதுதான் கெளதமனுடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. நல்ல உணர்வாளர். ஈழத்தமிழர்கள்மீதான கொலைவெறித் தாக்குதலை கடுமையாக கண்டித்தார். ஈழ நிலவரங்களை சரியாகப்புரிந்திருக்கிறார். இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான சில தலைவர்களைப்பற்றி சரியான விமர்சனங்களை வைத்தார். அந்தத் தலைவர்களின் பெயர்களைவெளியிடாமல் தவிர்க்கிறேன். அவர் நம்மைப்போல அல்ல, கலைத்துறையில்இப்போதுதான் அவருடைய வெற்றிப் பயணம் தொடங்கியிருக்கிறது. விடயத்துக்கு வருகிறேன். திங்களன்று என்னை அழைத்த கெளதமனை அவரது இல்லத்தில்சந்தித்தேன்.... பல போராட்டங்களில் சிறை சென்ற அவரது தந்தைகீரை கிள்ளிக் கொண்டிருந்தார். கெளதமன் தன் மனைவியுடன் வெளியேகிளம்பிக் கொண்டிருந்தார். என்னிடம் ஒரு டிவிடியைக் கொடுத்துப் பார்க்கச்சொன்னார். அலுவலகத்துக்கு வந்ததும் ஓடவிட்டேன்... இனி என்ன செய்யப்போகிறோம்?என்ற கேள்வியுடன் தொடங்கும் அந்த டிவிடியில், இலங்கையில் அண்மையிலும்,சில ஆண்டுகளுக்கு முன்பும் நடந்த தமிழினப் படுகொலைக் காட்சிகள் இருந்தன.
சோகமயமான கவிதையைப் பின்னணியில் ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார்....நம் மக்களின் சாவை தடுத்து நிறுத்தக் கோரிய நமது கோரிக்கைகள் செவிடன்காதில் ஊதிய சங்காக இருக்கிறது. நம் கையில் உள்ள வாக்கு என்கிறதுருப்புச் சீட்டைப் பயன்படுத்தி இதற்கெல்லாம் காரணமான காங்கிரஸ் கட்சிக்கும்,அதனுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்ற ரீதியில் முடிகிறது அந்த டிவிடி. இடையில்ராஜபக்ஷேவுடன் சோனியா காந்தி, ப்ரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங்ஆகியோர் தனித்தனியாக எடுத்துக் கொண்ட புன்னகையுடன் கூடியபுகைப் படங்கள் வந்து போயின. நம் வயித்தெரிச்சலையும்கொட்டிக் கொண்டன.. இதை தயாரித்த பெரியார் திராவிட கழகத்தினர்,முத்துக்குமாரின் கோரிக்கையைப் போல் இதை நகலாயுதம் எடுத்துப்பரப்புங்கள் என்றும் கோரிக்கை¨யும் அந்த டிவிடியில் விடுத்திருந்தனர்.
அந்த டிவிடியை குறள் இணையத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பகொடுத்திருக்கிறேன்.... இன்றுதான அதன் தொடக்கவிழா....நண்பர்கள் மூலம் அதை நகலாயுதம் எடுத்தும் பரப்ப இருக்கிறேன்....அதைவிட, இன்னும் தரமான காங்கிரஸ¤க்கு எதிரான பிரசாரப்படத்தைத் தயாரித்து வெளியிடலாம் என்று தோன்றுகிறது....அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்....
முடிந்தால்.... அந்த டிவிடியை அடுத்த பதிவில்தரவிறக்கம் செய்து தருகிறேன்..... (என்னுடையஇணைப்பில் செய்தால் பழுத்துவிடும் கட்டணம் )வெளியில் ஓசியில் நண்பர்களின் இன்டர்நெட் இணைப்பில்இருந்துதான செய்ய வேண்டும்...
அது சரி, தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாகதமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரஸ் மற்றும்அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டாம் என்றால்.. வேறு யாருக்கு வாக்களிப்பது... பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.....
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நீங்கள் எழுப்புவது சரியான வினா. காங்-திமுக கூட்டணி வேண்டாம் என்ற பிரச்சாரத்தைப் பார்த்துவிட்டு அதிமுகவுக்கு வாக்களித்துவிடப் போகிறார்கள். அதனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் டிவிடியில் குறிப்பிடவேண்டும்.
ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்க கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் மிகச்சரியாக இருக்கும். செய்யவார்களா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதுக்கு பதில் யாருக்கும் தெரியலை
நான் சுயேட்சைக்கு என்று இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறேன்..
ஒரு சின்ன ஆலோசனை, உங்கள் பதிவுகளில், ஒவ்வொரு பாராவுக்கும் இடையில் சற்று இடைவெளி விட்டால் படிக்க சற்று சுலபமாக இருக்கும்...
Post a Comment