Friday, February 27, 2009
ஈழம்: எங்கள் தமிழுணர்வை சந்தேகிக்காதீர்.....என்னுடைய மறுப்பும் விளக்கமும்
என்னுடைய இந்தத் தேவடியா பசங்களுக்குத் தேவைதான் என்றபதிவுக்கு பலரும் பின்னூட்டம் செய்திருந்தார்கள். அதில், இலங்கைத் தமிழரிடம் நான் கலந்துரையாடிய விவரங்களைஅதில் பதிவு செய்திருந்தேன். இதுவரை எந்த பின்னூட்டத்திற்கும்நான் பதிலளித்தது கிடையாது. இந்த முறை 'யாரோ' எனக்களித்திருந்த பின்னூட்டம்என்னை பதிலளிக்கத் தூண்டியிருக்கிறது.
அதில், நடுநிலையாளர்கள் என்று என்னைப் பற்றி விளம்பியிருக்கிறார், அந்த தோழர். உண்மை என்றொரு நிலை இருக்க நடுநிலைஎன்பதே கெட்ட வார்த்தை என்பது என்னுடைய நிலை. ஆக, ஈழ விவகாரம்என்றில்லை, எதிலும் நான் நடுநிலைவாதியல்ல என்பதை அந்த யாரோவுக்குத்தெரிவிக்க விரும்புகிறேன். தமிழர்கள் செத்துமடிகிறார்கள். இதில், பல்கலைக்கழகத்துக்குப் படிக்கப் போவது முக்கியமா? என்று கேட்டிருக்கிறார். என்னுடைய அந்தப் பதிவின் நோக்கமேஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு எந்தவிதமான அடிப்படை உரிமையும்சுந்திரமும், நியாயமும் கிடைக்காது என்பதுதான். கல்வியிலேயே வாய்ப்பு மறுக்கப்படும்தேசத்தின் இறையாண்மையை இந்திய அரசு காப்பாற்ற முயல்வது நியாயமா?என்று கேட்டிருந்தேன்.
மேலும் அந்த யாரோ, உங்கள் இந்தியா ராடார்களைத்தருகிறது. தமிழர்களைக் கொல்கிறது என்று எழுதியிருந்தார். அந்த யாரோ நினைப்பது போல் இந்திய தேசியத்தை கட்டிக் கொண்டு தமிழர்கள் சாவதைநா(ன்)ங்கள் வேடிக்கைப் பார்க்கவில்லை. நம்மால் முடிந்ததை எதையாவது செய்வோம் என்கிறநிலையில் தான் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம் (றேன்). அதில் ஒன்றுதான்இந்த வலைப்பூ. அதில் எங்களுடைய தமிழுணர்வை அவர் சந்தேகிக்க வேண்டியதில்லை.
தமிழின அழிப்பு என்றில்லை உலகில் வேறு எந்த இனத்திற்கும்இப்படியொரு நிலை வரக்கூடாது என்பதுதான என் (ங்கள்) நிலை. உங்கள் பின்னூட்டத்தைஎன்னிடம் கலந்துரையாடிய இலங்கைத்தமிழரும் படித்தார். அவரும் நானும் சேர்ந்துதான்உங்களுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் நடைபெறும் தமிழின அழிப்பை எதிர்த்து எங்கள் தேசியத்தைக் கூட கைவிட்டுவிட்டு நம்மினத்துக்காகநிற்கிறோம். எங்களை சந்தேகிக்காதீர்.
மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், அந்தப் பதிவில் ஒரு தவறானதகவல் இடம் பெற்றிருக்கிறது. அதில் சில மாதங்களுக்கு முன்சீனாவில் பிடிபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சிங்களவனும்இருந்தான் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறானது. சில ஆண்டுகளுக்கு முன் (அநேகமாக 2001) செஷன்யாவில் ரஷ்யப் படையினரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மை. தவறுக்கு வருந்துகிறேன்.
என்னுடைய பதிவுகள் தொடரும்.... விரைவில் சந்திப்போம்...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழக உறவுகளை சந்தேகிக்கும் நிலையில் நாங்களோ(ஈழ தமிழர்) அல்லது சந்தேகிக்க கூடிய வகையில் நீங்களோ (தமிழக தமிழர்) இல்லை.. (அரசியல் வாதிகள் தவிர்த்து). சில கொடரிக்கொம்புகள் தாங்கும் விழுதுகளை வெட்ட பல காரியங்கக்ளில் ஈடுபடுவார்கள்...அதற்கெல்லாம் அஞ்சவேண்டாம், சஞ்சலபட வேண்டாம்... செத்துமடியும் உறவுகளுக்கு தேவை உங்கள் ஆதரவு .
Post a Comment