Thursday, February 19, 2009

வழக்குரைஞர்களே உஷார்: மாவீரன் முத்துக்குமார் உங்களை நம்பித்தான்உயிராயுதம் ஏந்தினார்

உயர்நீதிமன்ற அராஜகம்:இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான வழக்குரைஞர்களைதிசை திருப்பும் அரசின் தந்திரம்
இது பற்றி ஒரு பதிவை sajayravee.blogspot.com -ல் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்,தோழர் ரவீ. என் பங்கிற்கு நானும். மாவீரன் முத்துக்குமார் எழுதிய மரண சாசனத்தில் 'ஈழத்தமிழர் பிரச்னை என்றில்லை தமிழ்நாட்டிற்காதரவான போராட்டம்எதுவாக இருந்தாலும் சரி முதலில் களம் இறங்கியவர்கள் இந்த வழக்கறிஞர்கள் தான். இந்தமுறையும் (இலங்கைப் பிரச்னையில்) நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில்இறங்கியவர்கள் இந்த வழக்குரைஞர்கள்' என்று சொல்லியிருந்தார்.அத்துடன் அண்மையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இடையே நடந்தசாதி மோதல் கூட உளவுத் துறையின் தூண்டுதல் காரணமாக இருக்கலாம்என்று தான் சந்தேகப்படுவதாகக் கூறியிருந்தார்.

உயர்நீதி மன்ற கலவரப் பிரச்னை தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமிமீதான தாக்குதலில். சுப்பிரமணிய சுவாமியின் ஜனதா கட்சியில் இருக்கும்தொண்டர்களின் எண்ணிக்கையைவிட அவருக்குப் பாதுகாப்புக்கு இருக்கும்போலீஸாரின் எண்ணிக்கை அதிகம். அதுவும் துப்பாக்கி ஏந்திய நிலையில்.இருந்தும் அவரை வழக்குரைஞர்கள் தாக்கியிருக்கிறார்கள் என்றால் அதைபோலீஸார் மறைமுகமாக ஊக்குவித்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.இதையடுத்து வழக்குரைஞர்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. அதுவும்வரலாறு காணாத அளவுக்கு. அதிலும் சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட நாளிதழ்வாரயிதழ் நிருபர்கள் இருக்கும் போது மக்கள் தொலைக்காட்சி நிருபர்களையும்தமிழ் ஓசை நிருபரையும் மட்டும் தாக்கியிருப்பதும் சந்தேகத்தைக்கிளப்புகிறது. வழக்குரைஞர்களின் வாகனங்களையும் ஆளில்லாத அலுவலகங்களையும்தாக்கியிருக்கிறார்கள். இப்போதே போலீஸாரின் வன்முறையை எதிர்த்து நாடு முழுவதும்வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று வழக்குரைஞர்கள்சங்கங்கள் அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆக, உளவுத் துறையின் வேலை பலிக்கத் தொடங்கிவிட்டது.இனி ஒரு வேளை வழக்குரைஞர்கள் இலங்கைப் பிரச்னையை விடுத்துபோலீசுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தலாம்.பத்திரிகைகளும் இதற்கே முக்கியத்துவம் கொடுக்கலாம்.தினமலரும் சீமானை விட்டுவிட்டு இதில் அதிகம் கவனம்செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம். நமது றா உள்ளிட்டஉளவுத் துறையினர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்துமக்களைப் பாதுகாக்கும் பணியை ஒரு தடவையும் ஒழுங்காகசெய்தது கிடையாது. கோவை. பெங்களூரூ, மும்பை, ஹைதராபாத்நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் இதற்குதாரணம்.ஆனால் இதுபோன்ற 'மாமா' வேலையை அவர்கள் நன்றாக செய்துபுண்ணியம் கட்டிக் கொள்வார்கள். வழக்குரைஞர்களே உஷார்.முத்துக்குமார் சொன்ன சொல்லை மறந்துவிடாதீர்கள். உங்களைத் தான் முத்துக்குமார் மலைபோல் நம்பியிருந்தார்.ஒரு சுய தம்பட்டம்: இலங்கை தூதரகம் முன்பு சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள்(மக்கள் மற்றும் தமிழன் தொலைக்காட்சியினர்) நடத்திய முற்றுகைப் போராட்டத்தின் போது சந்து முனை சிந்தாக இலங்கைத்தேசிய கொடியை எரித்து எதிர்ப்புக் காட்டிய குழுவில் நானும்பங்கெடுத்திருந்தேன் என்பதை பெருமையாகக் கூறிக் கொள்கிறேன்.நன்றி...

No comments:

Post a Comment