Wednesday, February 4, 2009
கலைஞரால் கலங்கும் தமிழன்!
அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு
வணக்கம் ஒரு பூகோளமே பலி பீடம்என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதிஇருக்கிறேன்!
இந்த நூலை நீங்கள்தான்வெளியிட வேண்டும் என்றுவிரும்பினேன்!எல்லா விருப்பமுமாநிறைவேறிவிடும்!உங்களைப் பார்க்கவும்ஒப்புதல் கேட்கவும் ஆனஅளவுக்கு நான் உங்கள் அருகிலா இருக்கிறேன்!எட்டாத தூரத்தில் அல்லவா நீங்கள் இருக்கிறீர்கள்ஏன் எட்டாத உயரத்திலும் தான்!பால் கொடுத்து வளர்த்ததாய் பாடையில் போகும்போதுபித்தான் பிள்ளை வீதியிலேபலூன் விட்டுவிளையாடிக் கொண்டிருந்ததாம்?அப்படித் தான் தமிழ்நாட்டுத்தமிழர்கள் இருக்கிறார்கள்நான் மட்டும் விதிவிலக்கல்ல;நானும் அப்படித்தான் இருக்கிறேன்?உங்கள் அறிவையும்ஆற்றலையும்நான் யாரைக் காட்டிலும்அதிகம் அறிந்தவன்!நீங்கள்இந்தத் திராவிட இயக்கதத்திற்குசிந்திய வேர்வையும் ரத்தமும்எனக்குத் தெரியாதவை அல்ல!நீங்கள் ஓயாமல்உழைத்திருக்கிறீர்கள்!என்பதும் தெரியும்ஆனால்,அய்ந்து முறை முதல்வராகவந்ததை அளப்பரிய சாதனைஎன்று கருதிக் கொண்டுஉங்களின் உண்மையான அடையாளத்தை இழந்துநிற்கிறீர்கள்!நண்பர்கள் ஒ.பன்னீர்ச்செல்வமே கூடஒருமுறை தமிழக முதல்வராகக் கோட்டைநாற்காலியில் அமர்ந்திவிட்டுப் போய்விட்டார்!நீங்கள் அய்ந்து முறை அந்த நாற்காலியில்இடம் பிடித்தது ஒன்றும் பெரிய சாதனையும்அல்ல;சரித்திரமும் அல்ல!தங்கத்தை விற்றுத்தவிடு வாங்கியதைப் போல்வைரத்துக்கு எடைக்கு எடைவைக்கோல் வாங்கிக் கொண்டதைப் போல;உங்கள் அற்புதமான அறிவையும் ஆற்றலையும்ஓயாத உழைப்பையும்கேவலம் ஒரு நாற்காலிக்காக!விரயமாக்கி விட்டீர்கள்.,உங்களை நான் எந்தஇடத்தில் எந்த உயரத்தில் பார்க்க நினைத்தேனோஅந்த இடத்தை அந்தஉயரத்தை நீங்கள் அடையாமலேபோயிருக்கிறீர்கள்!நீங்கள் நினைத்திருந்தால்உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்தத்தமிழ்ச் சமுதாயத்துக்குஒரு பெரும் தலைவராக உயர்ந்திருக்க முடியும்!அதற்கான தகுதி இருந்தும்திறமை இருந்தும்தவறவிட்டு விட்டீர்கள்!முதலமைச்சர் பதவி என்பது என்ன?அண்ணா சொன்னாரேஅப்படி, சூழ்நிலைக் கைதியாக இருப்பதுதான்!நீங்கள் இப்போது சூழ்நிலை என்றசிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற கைதியாகஇருக்கிறீர்கள்!நீங்கள் சுதந்திரமாகவா இருக்கிறீர்கள்!நீங்கள் உளமார நினைப்பதைஎழுத முடியுமா?பேச முடியுமா?செய்ய முடியுமா?முடியாது கலைஞரே முடியாது!தம்பி சுப. தமிழ்ச்செல்வன்சுட்டுக் கொல்லப்பட்டான்!தானாடாவிட்டாலும்உங்கள் தசை ஆடியது!கண்களில் கண்ணீர்புரண்டு ஓடியது! மனம்இரங்கற்பா பாடியதுஇரண்டு வரிகள் இரண்டே இரண்டு வரிகள்இரங்கற்பா!அதற்கு எத்தனை!எச்சரிக்கைகள்!எத்தனை கண்டனக் கணைகள்!ஆட்சியையே கலைக்கவேண்டும் என்றுஅவசரக்காரர்களின் ஆர்ப்பாட்டங்கள்!எனக்கு எதுவுமே விளங்கவில்லை;அண்ணன் தம்பிகள்செத்துப் போனால் அழக் கூடாதா?அழுவதற்குக் கூட உரிமை இழந்துவிட்டஉங்களை எண்ணி நான்அழுகிறேன்வேறென்ன செய்வது!
கோவை சிதம்பரம் பூங்காத் திடலிலேநீங்கள் அந்த நாளில் நின்று முழங்கிய முழக்கம்இதோ என் செவிப்பறைகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!
அவையெல்லாம் பொய்யாய், பழங்கதையாய்கனவாய் மெல்லப் போயினவேஎன் அண்ணனே·பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா, மண்டேலா பற்றிபக்கம் பக்கமாக எழுதுகிறீர்கள்
ஆனால் நித்தம் நித்தம் ரத்தத்தில் செத்துக் கொண்டிருக்கும்தமிழீழ விடுதலை பற்றிப் பேச மறுக்கிறீர்களே!எழுத மறுக்கிறீர்களேஎன்ன காரணம்?உலகம் எங்கும் இருக்கின்றஒன்பது கோடி தமிழர்களுக்குஉரிமைப்பட்ட நிலமாகஒற்றைச் சாண் நிலம் கூடஇருக்கக் கூடாதா?ஈழத்தை மயானக் காடாகமாற்றத் துடிக்கின்ற இலங்கைராணுவத்துக்கு ஆயுத உதவிஇந்தியா வழங்குகிறதேஎன்ன நியாயம்?இங்கேதமிழர்களைக் கொன்றொழிக்கும்இலங்கை ராணுவத்திற்குஇந்திய மண்ணில் பயிற்சிஅளிக்கப்படுகிறதேஇது என்ன நியாயம்?என்று கேட்கத் தோன்ற வில்லையா?கொஞ்சம்உங்கள் கவனம்தமிழீழ விடுதலைப் பக்கம்திரும்பாதா?மலராதா?ஈழத் தமிழ் மக்களின்புலராத பொழுதுஒருநாள் புலராதா?அருள் கூர்ந்துஇந்தப் புத்தகத்தைப் படிக்க நேரம் இருந்தால்நினைப்பிருந்தால்ஒருமுறை படியுங்கள்!நீங்கள் கண்டிப்பாகபடிக்க வேண்டும்!அதனால் தான்இந்த நூலை உங்களுக்கு அக்கறையோடு அனுப்பி வைக்கிறேன்.
இப்படி முடிகிறது புலவர் புலமைப்பித்தன் எழுதிய கடிதம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment