
இந்தத் தலைப்பு செருப்பில் அடித்தாலும் திருந்தாத காங்கிரஸ்காரன்களுக்காக...
இலங்கையில் என்ன நடக்கிறது? என்று சீமானும், அமீரும் பேசினால் சிறையில் போடச் சொல்கிறார்கள். தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரும் அதை செவ்வனே முடித்து வைப்பார். அமெரிக்கக்காரன் அதுவும், அந்நாட்டின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் புரூஸ் ஃபெயின் இலங்கையில் என்ன நடக்கிறது? என்பதை புட்டுப் புட்டு வைக்கிறார். வெள்ளைக்காரனுக்குத் தெரிந்த இந்த உண்மை, தங்கபாலுவுக்கும், இளங்கோவனுக்கும், தினமலருக்கும், ஹிந்து ராமுவுக்கும் தெரியாமலா இருக்கும்? இனி, குமுதம் ரிப்போர்ட்டரில் அண்மையில் வந்த புரூஸின் பேட்டியைப் படிக்கலாம். வாருங்கள்.கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்த மனித உரிமை போராளியான புரூஸ் ஃவெயின், ‘‘இலங்கையில் தமிழின அழிப்பு (நிமீஸீஷீநீவீபீமீ) நடக்கிறது. இதைச் செய்யும் அதிபர் ராஜபட்சேவின் சகோதரரும், இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபைய ராஜபக்சே, ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறேன்’’ என்று பலரின் புருவங்களை உயரச் செய்தார். அவரைச் சந்தித்தோம்.இலங்கையில் நடப்பது தமிழினப் படுகொலை என்று எதனடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்?‘‘தமிழருக்கு எதிரான இனவெறியை பல ஆண்டுகளுக்கு முன்பே மகாவம்சா, தர்மபாலா ஆகியோர் சிங்களவர் மனதில் பதிந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். கிறிஸ்துவர்களுக்கு ஏசுநாதர் எப்படியோ அப்படி சிங்களவர்களுக்கு தர்மபாலா. அதற்குப் பின் வந்த புத்தத் துறவிகளும் தமிழினத்துக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மூவாயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், மூவாயிரம் பேரின் கதி என்ன ஆனதென்றே தெரியவில்லை? ஆயிரம் தமிழர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இரண்டாயிரம் பேர் ஊனம் அடைந்திருக்கிறார்கள். ராணுவத்துடன் நடந்த சண்டையில் உயிர்நீத்த புலிகளின் எண்ணிக்கையை இதில் சேர்க்கவில்லை’’அதற்காக கோத்தபைய, சரத் பொன்சேகா ஆகியோர் மீது மட்டும் வழக்குத் தொடர்வது ஏன்?‘‘இவர்கள் இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். இனஅழிப்புக்கெதிரான அமெரிக்கக் குற்றவியல் சட்டப்பிரிவு, 1091_ன்படி இவர்கள் செய்வது தண்டனைக்குரிய குற்றம். அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருக்கும் அவர்கள், அமெரிக்கச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும். அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக பட்சமாக மரண தண்டனை கூட கிடைக்கலாம். இலங்கை ராணுவம் மேற்கொண்ட இனஅழிப்புக்கு ராணுவத்தில் உயர் பதவியில் உள்ள இவர்கள் இருவருமே முக்கியப் பொறுப்பு. இலங்கையின் தமிழின அழிப்பை அம்பலப்படுத்தும் ஆதாரங்களை ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாகத் தொகுத்திருக்கிறேன் (அதைக் காண்பிக்கிறார்). நாடு திரும்பியதும் இலங்கைக்கு ராணுவத்துக்கு எதிரான இந்த வழக்கைப் பதிவு செய்வேன்.இலங்கையில் தமிழினஅழிப்பு எந்தெந்த வழிகளில் நடக்கின்றன?‘‘தீவிரவாத அழிப்பு என்கிற பெயரால் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிறார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவிகளே கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் தடை செய்த பால் பவுடரை வழங்கி, தமிழர்களைக் கொன்று வருகிறது, இலங்கை அரசு. தமிழர் பகுதிகளில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கிடையாது. உயிர்போகும் நிலையிலும், மாட்டு வண்டிப் பயணம் தான். அப்படியென்றால், தமிழர்கள் மீண்டும் கற்கால வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்களா? என்று சந்தேகம் வருகிறது. அங்கு அரங்கேறும் இனஅழிப்பு வெளியே தெரியக் கூடாது என்பதற்காகவே செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை விரட்டி விட்டார்கள்.இதுவரையில் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகளில் ஒருவர்கூட தண்டிக்கப்பட்டதே இல்லை. தமிழக முகாம்களில் உள்ள அகதிகளிடம் பேசினால் இன்னும் பல இனஅழிப்பு அவலங்கள் அம்பலமாகும்’’இலங்கையில் நடப்பது தமிழன அழிப்பு என்கிற உங்கள் வாதம், உலகநாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுமா?‘‘இனஅழிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான முதல் அமெரிக்க குடிமகன்கள் கோத்தபைய ராஜபட்சேவும், சரத்பொன்சேகாவும் தான். இவர்கள் மீது அமெரிக்கா நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்தால் சர்வதேச ஊடகங்களின் கவனம் இந்தச் செய்தியின் மீது படும். அதன்மூலம் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்’’நீங்கள் ஒரு மனித உரிமைப் போராளி என்பதால் இந்தக் கேள்வி. இலங்கையில் மனித உரிமையை மீறுபவர்கள், தமிழீழ புலிகளா? இலங்கை அரசா?‘‘தமிழன அழிப்பு பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். அதே நேரத்தில் தீவிரவாதத்தை அழிக்கிறேன் என்ற போர்வையில் தமிழ்ப் பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவிக்கும் இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய மனித உரிமை மீறல்; கிரிமினல் குற்றம்’’அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமாவின் கவனத்துக்கு இப் பிரச்னையை கொண்டு செல்வீர்களா? அவரிடம் புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்வீர்களா?‘‘எல்லோர் எண்ணங்களும் ஒரே மாதிரி இருக்காது. இன்றைய சூழ்நிலையில் புலிகள் பற்றி பேசுவது, பிரச்னையை திசை திருப்பிவிடும். கவனிப்பதற்கு காஸா, ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தா என்று பிரச்னைகள் இருக்கும்போது இலங்கைப் பிரச்னை என்பது வெள்ளை மாளிகைக்கு இரண்டாம் தரம்’’ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) இலங்கைப் பிரச்னையில் தலையிடுமா?(சிரிக்கிறார்) ‘‘தன்னை அழைப்பவர்களுக்கு மட்டுமே ஐ.நா. உதவி செய்யும். உகாண்டாவில் இனப் படுகொலைகள் நடந்தபோது ஐ.நா என்ன செய்தது? ஐ.நா.வில் அங்கம் வகிப்பதால் எந்த நாடும் தேவதையாகிவிடாது. ஈழப் பிரசனைக்கு தனி நாடு தீர்வாகுமா?‘‘இந்த நேரத்தில் தனிநாடு பற்றி பேசுவது சரியாகாது. இதற்கு முன்பு தமிழர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தகளை இலங்கை அரசு குப்பையில்¢ போட்டு விட்டது. அந்நாட்டின் உச்ச நீதிமன்றமும் தமிழின அழிப்புக்குத் துணை போகிறது. இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு தனியுரிமையும் பாதுகாப்பும் தேவைதான்’’இலங்கையில் அரங்கேறும் தமிழின அழிப்பை இந்தியா கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?‘‘இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் இந்தியா ஈடுபாடு காட்டுவதில்லை என்பது உண்மை. ‘தமிழீழம் உருவானால் காஷ்மீர், அஸ்ஸாம், தமிழ்நாட்டு மக்கள் தனிநாடு கேட்பார்கள்’ என்று இந்தியா காரணம் சொல்லலாம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை இந்தியா பிரித்துக் கொடுத்தது சரியா? ‘தமிழீழம் உருவானால் தனித் தமிழ்நாடு கேட்பார்கள்’ என்று காரணம் சொல்வது, வெறும் கண்துடைப்பு. அதே நேரத்தில் பாகிஸ்தானும், சீனாவும் இலங்கையை ஆதரிக்கிறது’’இந்திய மீனவர்களை இலங்கை கடற் படையினர் சுட்டுக் கொல்கிறார்கள். இலங்கைக்கு எதிராக இந்தத் தகவலையும் அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவு செய்வீர்களா-?‘‘இலங்கை அரசு என்றைக்கும் சட்டத்தை மதிக்காது. எதிரே வருபவர், தமிழனைப் போல் யாராவது தெரிந்தாலே அவனை கொன்றொழித்து விட வேண்டும்; அவ்வளவுதான்! இனஅழிப்புக்கு எதிரான வழக்கில் இந்திய மீனவர் பிரச்னையைச் சேர்க்கப் போவதில்லை’’இலங்கை அரசின் தமிழன அழிப்புக்கு இறுதித் தீர்வுதான் என்ன? ‘‘சிங்களவரான சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டார். சிங்களவர்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்கள் மூலம் அந்நாட்டு அரசுக்கு எதிராக சிங்களவர்களின் ஆதரவையும் திரட்டவேண்டும்.ஒன்றாக இருந்த சிங்கப்பூர்_மலேசியா தனித்தனி நாடுகளாகப் பிரிந்து இன்றைக்கு சிறப்பாகவே இருக்கின்றன. இலங்கையில் எந்த இடம் யாருக்கு என்கிற விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் நாட்டைப் பிரிப்பதைத் தவிர வேறுவழியில்லை. எனக்கு அறுபது வயதாகிறது; 41 நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். இருபத்தி நான்கு மணிநேரமும் மனித உரிமைக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்துப் போராடி வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், சிங்களவர்கள் உடன் தமிழர்களைச் சேர்ந்து வாழச் சொல்வது, மீண்டும் கருப்பினத்தவரை வெள்ளையருக்கு அடிமையாக இருக்கச் செய்வதற்குச் சமம்!’’ என்றார் புரூஸ் ஃவெயின்.
நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்
No comments:
Post a Comment