Tuesday, February 10, 2009

வைகோ கைது-?

செவ்வாயன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுக¢கூட்டம¢ சென்னை அண்ணா நகரில் நடந்தது. அதில் பேசிய வைகோ, ‘‘ஈழத் தமிழர்களை காக்கும் நோக்கில் தமிழகத்தில் இருந்து பதினான்கு வழக்கறிஞர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் முல்லைத் தீவுக்கு கப்பலில் புறப்பட்டார்கள். அவர்களை நடுகடலில் இந்திய அரசு தடுத்து நிறுத்தி கைது செய்திருக்கிறது.இனியும் போரை இந்திய அரசு நிறுத்த நிர்பந்திக்க மறுத்தால் இலங்கைக்கு வெறுங்கையுடன் தமிழர்கள் செல்ல மாட்டார்கள்; ஆயுதங்களுடன் செல்வார்கள். அப்போது நான் ஓடி ஒளிய மாட்டேன். மாணவர்களே! வீதிக்கு வாருங்கள். மாவீரன் முத்துக்குமார் உங்களை நம்பித்தான் உயிரை விட்டிருக்கிறான்’’ என்று உணர்ச்சிப் பொங்க அவர் பேசினார். அப்போது கூட்டம் ஆர்ப்பரித்தது. ஒருவேளை இந்தப் பேச்சு, பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இருந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்படலாம். அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இந்த உத்தரவை கருணாநிதி பிறப்பிப்பார் என்பது என் யூகம்.

No comments:

Post a Comment