Thursday, February 12, 2009

இந்தியை எதிர்த்ததால் சாகிறான் தமிழன்


இந்தியையும், சமஸ்கிருதத்தையும் எதிர்த்த ஒரே மாநிலம் தமிழகம் என்பதோடு பெரியாரால் மிகப் பெரிய அளவில் ஆரியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த மாநிலம் என்றதால் இந்திய பார்ப்பன ஏகாதிபத்தியம் தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. அதில் சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணனன் போன்ற பார்ப்பன அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையால் இந்தியத் தமிழன் மட்டுமல்ல இலங்கைத் தமிழன் கூட அழிந்து கொண்டிருக்கிறான்.இத்தாலியில் இருந்து வந்து சேர்ந்த சோனியா தன் கணவனின் சாவுக்குக் காரணமான புலிகளை ஒழித்துக் கட்டத் தீர்மானித்துவிட அதற்கு பார்ப்பன அதிகாரிகள் தூபம் போட்டுக் கொடுத்தனர். ராஜீவ் கொலையாளிகளாக குற்றம் சாட்டப்பட்ட நளினியை ப்ரியங்கா சந்தித்தபோதும், ராஜீவ் கொலையாளிகளுக்கு தங்க வீடு கொடுத்ததாக கைதாகி விடுதலையான பெங்களூரூ ரங்கநாத்தை சோனியா சந்தித்த போதும் தனக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஏதாவது ஆபத்து இருக்கிறதா? அதுபற்றி சிவராசன் போன்றோர் ஏதாவது பேசிக்கொண்டார்களா? என்பதையும் கேட்டிருக்கிறார்கள். இந்த சந்திப்புகளின் நோக்கமே இதுபோன்ற ஓர் அநியாயத்தை தமிழர்களுக்குச் செய்யத்தான்.ஆனால் சோ, ஹிந்து ராம், தினமலர் போன்ற பார்ப்பனர்களும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செய்து வரும் பிரசாரத்தால் தாய்த்தமிழன் கூட தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்கள் பற்றி தவறான கருத்துகளை கொண்டிருக்கிறான். அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிர்மாணிக்கத் திட்டமிட்டிருக்கிறது. எனவே, அதற்காகவே புலிகளை ஒழித்துக் கட்டும் இந்தியாவின் சதி வேலைக்குத் துணைப் போகிறார்கள் என்கிற தகவலும் வந்துள்ளது. இதனால் தான் இந்த இதழ் வீக் பத்திரிகையில், கவிதா முரளிதரன் எழுதியுள்ள கட்டுரையில் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பிடுங்கி அவர்களை ஒழித்துக்கட்ட இந்திய அளித்து வரும் ஆதரவு திருப்தி அளிப்பதாக ராஜபட்ஷ தெரிவித்திருக்கிறான்.அம்பானியின் வாரிசுகள் இலங்கையில் தங்களுடைய வியபார சாம்ராஜ்ஜியத்தை நிறுவிவிட்டார்கள். அவர்களுக்கு எந்த வகையிலும் நஷ்டம் ஏற்பட இந்திய அரசியல்வாதிகள் விட்டுவிடுவார்களா? இந்தியாவை யார் ஆள்வது என்பதை தீர்மானிப்பதே அம்பானி போன்ற இந்தியத் தொழிலதிபர்கள்தான். சரி என்னச் சொல்லி என்ன ஆகப்போகிறது? இங்கே, தினமலரும் ஜெயலலிதாவும் கருணாநிதியின் சுயநலமும் தமிழனுக்கு எதிராக இருக்கும்போது ஆயிரம் முத்துக்குமார்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். சாவதற்கு இல்லை. இவர்களை எதிர்த்து போராடுவதற்கு?

1 comment:

Anonymous said...

அம்பானியின் வாரிசுகள் இலங்கையில் தங்களுடைய வியபார சாம்ராஜ்ஜியத்தை நிறுவிவிட்டார்கள். அவர்களுக்கு எந்த வகையிலும் நஷ்டம் ஏற்பட இந்திய அரசியல்வாதிகள் விட்டுவிடுவார்களா? இந்தியாவை யார் ஆள்வது என்பதை தீர்மானிப்பதே அம்பானி போன்ற இந்தியத் தொழிலதிபர்கள்தான். சரி என்னச் சொல்லி என்ன ஆகப்போகிறது? இங்கே, தினமலரும் ஜெயலலிதாவும் கருணாநிதியின் சுயநலமும் தமிழனுக்கு எதிராக இருக்கும்போது ஆயிரம் முத்துக்குமார்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். சாவதற்கு இல்லை. இவர்களை எதிர்த்து போராடுவதற்கு?

Post a Comment