Friday, January 30, 2009

பரவட்டும் இந்தத் தீ


முத்துக்குமாரின் மரண சாசனத்தைசோகத்துடன் வாசிக்கும் வைகோஇடம்:கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

Thursday, January 29, 2009

முத்துக்குமாரின் மரண சாசனம்

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...வணக்கம். வேலைக்குப் போகும் அவரசத்திலிருக்கும் உங்களை சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருத்தப்படுகிறேன். ஆனால் வேறு வழியில்லை. நானொரு பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். உங்களைப்போலவே நானும் தினமும் செய்தித் தாளையும், இணையத்தையும் பார்த்துப் பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல் யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன் நான். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ்நாட்டில் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால் மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் நியாயமென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ராஜீவ்காந்தியைக் கொன்றால் என்ற சொத்தை வாதத்தை வைத்துக் கொண்டு சில தனி நபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது, இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ்காந்தி கொலையில் தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது, ஜெயின் கமிஷன். அப்படியென்றால் நீங்களும் ராஜீவ்காந்தியை கொலை செய்த கொலைகாரர்கள்தானே?ஜாலியன் லாலாபாக்கில் வெள்ளையன் செய்தான். இவர்கள் வன்னியிலும், முல்லைத்தீவிலும் செய்வதென்ன? கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகளின் நினைவு வரவில்லையா? ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட போது, கூட்டணித் தலைவியான ஜெயலலிதா, அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையே ஏன்? இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாலும் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. பணம், அடியாள் பலம் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படிப் பாய்ந்தால் யார் நம் பக்கம்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றார். பிறகு மத்திய அரசைப் புரிந்து கொள்வார்?! பிறகு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார்-_ தமிழ்நாட்டில் உள்ள பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்க விரும்புகிற தேர்தல்காலத் தலைவர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்.பட்டினிப்போராட்டம் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கு வருந்துகிறேன். உண்ணாவிரதத்தை தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில் சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக் கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள். சிங்கள வன்முறை நுணுக்கங்களை வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள். இந்திய _ இலங்கை ராணுவக் கூட்டு இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானது. மாணவர்களையும், ஜனநாயக அமைப்புகளையும் திரட்டுங்கள். அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். நம் சகோதர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியவர்களல்லவா நீங்கள்! எனக்குச் செய்வதெல்லாம் இருக்கட்டும். ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள். தமிழீழம் என்பது தமிழீழத்தின் தேவை மட்டுமல்ல. அது தமிழகத்தின் தேவையும்கூட. காரணம். ராமேஸ்வரம் மீனவர்கள். தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, கேவலமானவர்களா? பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து தைவான் மீனவர்கள் வழிதவறி சென்னை கடற்கரைகளில் கைது செய்யப்படுவதில்லையா? ராமேஸ்வரத் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?வெளிநாட்டில் வாழ்ந்து வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே... உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடு வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடுதான். போராடிக் கொண்டிருக்கும் எங்கள் சகோதர்களுக்கு உங்கள் ஆதரவும் இருக்கிறது என்பதை மத்திய அரசிற்குத் தெரியப்படுத்துங்கள்.தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்ளே ... அலுவலர்களை ஐயா என நீங்கள் அழைப்பது போன்ற நடைமுறையால் தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எந்த மக்களுக்காகப் பாடுபட விரும்பி இந்தத் துறைக்கு வந்தீர்களோ...அந்த மக்களுக்கெதிராகவே பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக இந்த அரசு உங்களை மாற்றுகிறது. நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கொந்தளிக்கப்போகும் தமிழகத்தில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதுதான்.களத்தில் இருக்கும் தமிழீழ மக்களே விடுதலைப் புலிகளே... உங்களுக்கு அமைந்தது போன்ற ஓர் உன்னதத் தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். தமிழகத்திலிருந்தும் அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். அதுவரை புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். நம்பிக்கைக்குரிய ஒபாமாவே... உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானோ, என் சருமத்திலிருக்கும் கொஞ்சம் வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும¢ வரை இந்தியா வாயே திறக்காது. இலங்கையில் அரசு சொன்னப் பகுதிக்கு வந்த மக்களையும் கொன்றார்களே. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும் செய்யும் கொலையை உங்கள் மௌத்தின் மூலமாகவும் செய்து கொண்டிருக்கிறீர்கள். புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா_ என்னவோ பிரச்னையே புலிகள் ஆயுதம் எடுத்ததால் தான் வந்தது என்பதைப்போல... புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர். மும்பை வெடிகுண்டுகள் உள்ளிட்ட பலவாறாக இந்திய மக்களைக் கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது, இந்திய அரசு. ராஜீவ்காந்தியின் கொலை மறுபடியும் இண்டர்போல் மூலமாக விசாரிக்கப்பட வேண்டும். ராஜீவ்கொலையினால் பயனடைந்தவர்கள், இலங்கை உளவுத்துறை, அவரை ஏற்கெனவே கொலை செய்யமுயன்ற சிங்களச் சிப்பாய் ஆகியோரையும் அதில் சேர்க்க வேண்டும். புலிகளுக்கு ராஜீவ் மீது வருத்தம் இருக்கலாமே தவிர. கோபம் இருந்திக்க வாய்ப்பில்லை. ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களின் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர். புலிகள் ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? எனது பதினான்கு அம்சக் கோரிக்கை1.இந்தியா உடடினாயாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதோடு, மேற்கொண்டு உதவிகள் செய்யக் கூடாது. 2. ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி மூன் தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருப்பதால் ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரத்தை அவருக்கு வழங்கக் கூடாது. 3.புலிகள் மீதான தடை உலகம் முழுவதிலிருந்தும் நீக்கவேண்டும். 4. புலிகள் மீதான குற்றங்களை மன்னிக்க வேண்டும். 5.புலிகளோடு தொடர்புடையது என்ற காரணத்துக்காக தடை செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமத்தை மீட்டுத் தரவேண்டும். 6.ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும். 7.பிரணாப் முகர்ஜி, கோத்தபய ராஜபக்ஷ, சந்திரிகா, பசில் ராஜபக்ஷ, மகிந்த, பொன்சேகா ஆகியோரை நார்கோ அனிலிசிஸ் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். 8.தமிழீழம் யார் தலைமையில் உருவாக வேண்டும் என்பதை தமிழீழ மக்கள் தான் முடிவெடுக்கவேண்டும்.9.மலையக மக்கள் புலிகளோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலமே அறியவேண்டும்.10.சென்னையில் குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த டக்ளஸ் தேவானந்தம் தமிழக போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். 11.பத்திரிகையாளர் லசந்தாவின் கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 12. தமிழகத்தில் உள்ள சிங்களப் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு வந்த சிங்களத் தம்பதியினரின் குற்றச்சாட்டு நீக்கப்பட வேண்டும். 14. சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பவங்களுக்கான வாழ்வாதாரங்கள் உறுதி செய்யப்படவேண்டும். அநீதிக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்கள் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள்.. ஆம் உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்த துண்டறிக்கையை நகலெடுத்துப் பரப்புங்கள். என்றும் அன்புடன் அநீதிக்கெதிரான உங்கள் சகோதரன் கு.முத்துக்குமார்.

Wednesday, January 28, 2009

அப்படியென்றால் தினமலருக்கு ஆபத்தில்லை


உண்மையை எழுதினால் உயிர் போகும்

இலங்கையில் அண்மையில் கொல்லப்பட்ட சிங்களமற்றும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் பட்டியல்
1.சிவராம் தாரக்கி _தமிழ்நெட் ஆசிரியர்2.சுப்பிரமணியம் சித்தரஞ்சன் _சுடரொளி நிருபர்3.நிமலராஜன் _தமிழ்நெட்4.சுரேஷ்குமார் _உதயன் இதழ் மார்க்கெட்டிங் மேனேஜர்5.ரஞ்சித்குமார் _உதயன் இதழ் சர்குலேஷன் மேனேஜர்6.சம்பா லக்மல் டி சில்வா _பத்திரிகையாளர்7.மரிதாஸ் மனோஜன் தாஸ் _யாழ்பாணம் பத்திரிகை ஏஜெண்ட்8.சதாசிவம் பாஸ்கரன் _உதயன் இதழ் விற்பனையாளர்9.ருசிகா பிரசாந்தி _பத்திரிகையாளர்10.சுபாஸ் சந்திரபோஸ் _நிலம் ஆசிரியர்11.செல்வராஜ் ராஜவர்மன் _உதயன் க்ரைம் நிருபர்12.நிலக்ஷன் சகாதேவன் _இதழியல் மாணவன்13.இசைவிழி செம்மியன் _விஓடி நிருபர்14.சுரேஷ் லிம்பியோ _விஓடி தொழில்நுட்பப் பணியாளர்15.தர்மலிங்கம் _விஓடி16.குணசிங்க _தினவனா சிங்களப் பத்திரிகை நிருபர்17.பரணி ருபசிங்கம்தேவகுமார் _எம்டிவி நிருபர்18.லசந்த விக்ரமதுங்க _சண்டே லீடர் ஆசிரியர்

Tuesday, January 27, 2009

ஈரோடு ரயில் நிலையம் வழியாகஇலங்கைக்கு இந்தியா அனுப்பும் டாங்கிகள்

ஈரோடு ரயில் நிலையம் வழியாக கேரளம் செல்லும்சரக்கு ரயிலில் டாங்கிகள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.அதனுடன் இருந்த படையினர், நாங்கள் இலங்கைக்குச் சொல்கிறோம்என்று சொல்லியிருக்கிறார். அந்த டாங்கிகள் கொச்சி துறைமுகத்தில் இருந்து என்று எதிர்பார்க்கலாம். தமிழர்களை கொன்று குவிக்கிந்தடாங்கிகள் செல்கின்றன. அதை வழங்கிவிட்டு அத்துடன் சிங்களப் பேரினவாதிகளை வாழ்த்திவிட்டு வர அயலுறவுத் துறைஅமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இலங்கைக்குச் சென்றிருக்கிறார்.வரும் பிப்ரவரி நான்காம் தேதி இலங்கை சுதந்திர தினத்தை இலங்கையும் இந்தியாவும் சேர்ந்தே கொண்டாடப் போகிறதாம்.பாதுகாப்பு வட்டத்துக்குள் தமிழர்களை ஏமாற்றி வரவழைத்து எறிகணைகளை வீசி அவர்களைக் கொல்லும்இலங்கைக்காக மத்திய அரசு மலம் சுமக்கிறது...
பிப்ரவரி நான்காம் தேதி தமிழகத்தில் இலங்கை தேசியக் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஈடுபடுகிறது.தமிழர்கள் உண்மையில் எரிக்க வேண்டிய தேசியக் கொடிஅதுவல்ல... என்பது என் கருத்து...

Monday, January 26, 2009

சுராஜ்_சிங்களப் பெயரா? இந்தியப் பெயரா?







ஈழத்தமிழர்கள் வசமிருந்த தர்மபுரத்தை கைப்பற்றியதைஅடுத்து, சிங்கள ராணுவத்தை தலைமையேற்றுச் செல்லும்இந்த ராணுவ அதிகாரியின் பெயர்ப் பட்டையில் இருக்கும்பெயர் சுராஜ்.

Saturday, January 24, 2009

மரணத்தின் வாசலில்


குண்டு வைக்காமல் இருப்பதே மிகப்பெரிய நாட்டுப் பற்று



ஜனவரி 26 இந்தியக் குடியரசு தினம். யானை வரும் பின்னேமணியோசை வரும் முன்னே. இந்தியத் தொ(ல்)லைக் காட்சி வரலாற்றில்குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகளின் முன்னோட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுவிட்டன போக்குவரத்து சிக்னல்களில் பொம்மை விற்றுக்கொண்டிருந்த சின்னஞ்சிறு சிறுவர்களின் கைகளில் சிலநாட்களாகவாகனங்களில் படபடப் போகும் தேசியக் கொடிகள்.. நல்ல விற்பனைஎன்று நினைக்கிறேன். இந்த நாட்கள் இந்தக் குழந்தைகளுக்காவதுஉதவியாக இருக்கிறதே என்கிற மகிழ்ச்சி எனக்கு... அங்காடிகளில்பெரிய, பெரிய. தேசியக் கொடிகள் விற்பனைக்குப் பறக்கின்றன. நினைத்துப் பார்க்கிறேன். சுதந்திர தினம். குடியரசு தினங்களில்சட்டையில் தேசியக் கொடியை குத்திக் கொண்டு சுற்றித் திரிந்த அந்த நாட்களை.தேசியக் கொடிகளை சட்டைப் பையில் குத்திக் கொள்ளும்பழக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லோரையும் போல எனக்கும்இருந்து. இப்போதெல்லாம், சட்டையில் தேசியக் கொடியை குத்திக் கொண்டுபோக்குவரத்து சிக்னலில் ஒளிரும் சிவப்பு விளக்கை அலட்சியப்படுத்திக் கொண்டு செல்லும்வாகனஓட்டிகளை பார்க்கும்போது என் உதட்டோரம் ஒரு புன்முறுவல் பூக்கும். ‘தேசியக் கொடி கொடுத்தார்கள்... அதைக் குத்திக் கொள்ள மேலாடைதருவது யார்?’ என்ற கவிதையை எப்போதோ படித்த ஞாபகம்.இப்படியெல்லாம் பேசுவதால் இவனுக்கு நாட்டுப் பற்றே இல்லை என்று நீங்கள்நினைத்தாலும் நினைக்கலாம். நானும் நினைத்துப் பார்க்கிறேன்.எனக்கு நாட்டுப் பற்று இருக்கிறதா? இல்லையா? என்று. நிச்சயம் இருக்கும்.காஸாவில் குண்டு போட்டால் கண்டனமும் இலங்கை என்றால் ‘போரில் அப்பாவிகள்சாகத்தான் செய்வார்கள்’ என்கிற மனித நேய அம்மாக்களை நினைத்தும், இந்தத் தேசத்தில் நடக்கும் இன்னபிற அக்கிரமங்களால் தூண்டப்பட்டும் ஆயுமேந்தாமல் உணர்ச்சியற்ற சடலமாக திரிவதேநாட்டுப் பற்று என்று ஒன்று எனக்கு இருப்பதால் தானே....

என் முதல் பதிவை ஈழத்தமிழர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்....

மூச்சடங்குகின்ற இறுதித் தருணங்களில் உயிர்க்காற்றுக்காக ஏங்கும் ஒரு உயிரின்தவிப்புப் போல, வெம்மை தாளாமல், நீர்வற்றிப்போன உடலில் அசுரதாகத்தால் தவிக்கின்றநா துளி நீருக்குப் போராடுவதுபோல்... ஈழத் தமிழரின் நிலை... இன்று இக்கணத்தில் வன்னிமண்ணில்...துன்பமும் துயரமும் வாட்டிவதைக்க.. சிங்கள இனவெறிப் பெரும் பூதத்தின் கொலைக்கரங்களில் இருந்து தப்ப, காடு கரம்பை, வெள்ளம், தண்ணி என குஞ்சுகளும், குழந்தைகளும்,ஆணும், பெண்ணும், முதிசும் இளசும் தவிப்போடு ஓட்டமும் நடையுமாக விழுந்தும் எழுந்தும்அலையும் கொடுமை வன்னி மண்ணில்.
ஓடியாடித் திரிந்த சின்னஞ்சிறுசுகள், கையின்றியும் காலின்றியும் சிங்களஇனவெறியின் அடையாள சாட்சியங்களால், எங்கள் மண்ணில், மலிந்துபோய்விட்டனர்.இந்தக் கொடுமையை யாரிடம் சொல்வோம்? இதனைக் தடுக்க முனைவோர் யாருமிலையா?
வெறிகொண்டு ஏகும் சிங்கள ராணுவ சிப்பாயின் கனத்த சப்பாத்து மிதிப்பில்சிக்கி எங்கள் குழந்தைகள் எழுப்பும் அவலக்குரல் கேட்கிறதா? இதயமுள்ளோருக்கு நிட்சயம்கேட்கும். உணவில்லை. மருந்தில்லை. குந்தியிருக்கக் கூடாரம் இல்லை. எல்லாவற்றிலும் மேலாய்அடுத்த கணம் உயிரோடு இருப்பதற்கான உத்தரவாதம் இல்லை.இறுதிக் கணங்கள் எண்ணப்படுவதாக நம்பிக்கைப் பிடிதளர்ந்த ஈழத்தமிழ் மக்களுக்குஒரு நம்பிக்கை ஒளியைக் காட்ட வேண்டியது, கைபிடித்து அவர்களைத் தூக்கி நிறுத்த வேண்டியது,அணைத்து ஆசுவாசப்படுத்த வேண்டியது உலகத் தமிழினத்தின் குறிப்பாய் தாய் உறவெனநம்பிக்கை வைத்திருக்கும் தமிழகத்தின் வரலாற்றுக் கடமையாகும். அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால்தமிழினம் என்ற ஒரு உணர்வின் தளத்தில் இருந்து அவர்களுக்கு காப்பரணாய் நிமிரவேண்டியது தமிழகத்தின்இன்றைய தலையாய கடமையாகும். உலகெங்கும் எட்டுக்கோடி தமிழர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஆறரைக் கோடிதமிழர்கள். தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர், தமிழினத்தின் தலைமகன் தமிழர் தலைவர் கலைஞர்கருணாநிதி. இந்திய மத்திய அரசோ தமிழகத்தின் மடிப்பிச்சையில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால்மத்திய அரசு, ஈழத்தமிழர் விடயத்தில் அசையவில்லை அல்லது தமிழக அரசால் அசைக்க முடியவில்லை.தமிழகம் குறித்தும் தமிழக மக்களின் பேரெழுச்சி குறித்தும் அலட்சிய மனோபாவத்துடன் நாட்கள்கடத்தப்படுகின்றன. சிங்களத்தின் போர்வெறிக்கு தமிழின அழிப்பிற்கு மௌன சாட்சியாய் கலைஞர் இருக்கின்றார்என்பது பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் எமக்கெல்லாம் கவலையளிக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில்பற்றி எரிந்த பேரெழுச்சி, தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் எழுந்த இன உணர்ச்சி அலை, ஈழத்தமிழர்கள் மத்தியில்ஒருவிதமான நம்பிக்கையை பெருமிதமான எண்ணங்களைத் தோற்றுவித்திருந்தது. மனித சங்கிலிப் போராட்டம்,வீதிமறியல் போராட்டம், உண்ணாவிரதப்போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சட்டமன்றத் தீர்மானங்கள், சர்வக்கட்சி மாநாடுகள், சந்திப்புகள், வாக்குறுதிகள், போராட்டங்கள்! இப்பெரும் மனித ஆற்றலுக்கும் உணர்விற்கும் எதுவிதமான பிரயோசனமும் இல்லாமல் போனதுவருத்தத்திற்குரியதே. ஏன் தாமதிக்கின்றார்கள். சிங்களத்தின் திட்டம் தடங்கல் இல்லாமல் முன்னேறி குறித்த இலக்கைஅடைவதற்கான கால அவகாசம் வழங்கப்படுகின்றதா? தமிழ் மக்களைத் தாக்க அவர்களின் விடுதலைப் போராட்டத்தைஅழிக்க சிங்கள அரசின் கோரிக்கைக்கு இசைவாகச் செயற்பட்ட இந்திய அரசு, தமிழர்களைக் காக்க¢, தமிழகத்தின் கோரிக்கைக்கு,இசைய மறுப்பது ஏன்? இந்தியாவின் ஒரு அங்கமான தமிழகத்தின் பாத்திரம் என்ன? அதன் பெறுமதி என்ன? ஆறரைக்கோடி தமிழர்களின் சனநாயகக் குரலின் வலிமையின் தாக்கம் எவ்வளவு?யுத்தத்தை நிறுத்து! சமாதானம் பேசு! என்ற யாருக்கும் கெடுதல் இல்லாத மனிதநேயம் தோய்ந்தகோரிக்கைக்கு ஏன் இந்த அவமானம்? அலட்சியம்? சிங்களம் ஏவும் ஒவ்வொரு¢ம் குண்டும், தமிழர்களை நாளும் பலிவாங்கிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், விமானப் பேரிரைச்சலுடன், பீரங்கிவெடிப்புச் சத்தத்துடன், தமிழர்களின் மரண ஓலங்களும் கலந்தே வன்னியில் எதிரொலிக்கிறது....
தமிழக முதலமைச்சர் அவர்களே உங்கள் அரசியல் வாழ்வில் பல போராட்டங்கள நடத்தியவர்.போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தி, பல வரலாறுகளைப் படைத்தவர் நீங்கள், இன்று நிகழ்கலாம் உங்கள்அழைக்கிறது. உங்கள் இறுதி காலத்தில், உலகத் தமிழினத்தின் மனங்களில் நீங்கா இடம் வீற்றிருக்கச் செய்யும்ஒரு போராட்டக்களம் உங்களின் முன்னால் விரிந்து கிடக்கிறது. போராட்டத்திற்குத் தலைமையேற்று வெற்றிவாகை சூடுங்கள். தமிழினத்தைக் காப்பாற்றுங்கள். ஒரு சந்தர்ப்பத்தில் நா தள தளக்க நீங்கள் கூறிய வார்த்தை.... ஈழத்தமிழனைக் காப்பாற்றமுடியாவிட்டால் இந்த ஆட்சி எதற்கு என்று? பின்பு உங்கள் நிலைப்பாட்டில் இருந்துப்பின் வாங்கி மத்திய அரசின்மீது நம்பிக்கை வைத்தீர்கள். ஆட்சியிலிருந்து உங்கள் கட்சி இல்லாமல் போனால் எந்த நம்பிக்கையும் ஏற்படப்போவதில்லை எனவும் காரணம் தெரிவித்தீர்கள். உங்கள் ஆட்சி தமிழகத்தில் இருக்கின்றபோது உங்கள் ஆதரவுடன்மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கையில் இலங்கை அரசின் இன அழிப்பிற்கு உதவியதோடு அல்லாமல்இன அழிப்பை வேடிக்கை பார்த்த பெரும்பாவமும் அவமானமும் உங்களைச் சூழும். இந்தப் பலம் பொருந்திய ஆட்சியால்என்ன பலம் ஏற்பட்டது என்ற கேள்விக்குமிடம் உண்டல்லவா? ஆட்சியை வைத்து ஏதும் செய்யமுடியாத பட்சத்தில்ஆட்சியைப் பிணைவைத்து ஒரு வரலாற்றைப் படைக்க ஏன் முயலக்கூடாது? ஒரு குடும்பத்தின் நலனுக்கான ஒருவரைஇழக்கலாம். ஒரு ஊரின் நலனுக்காக ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டின் நலனுக்கான ஒரு ஊரையே இழக்கலாம்என்பது பொதுக்கருத்தாக முன்வைக்கப்படுகின்றபோது தமிழினத்தின் வாழ்வுக்காக, சுயகௌரவத்திற்காக இனமானத்திற்காகஒரு ஆட்சியை கேடயமாக ஏன் முன்வைக்கக் கூடாது? இனநலன் கருதி இந்த ஆட்சி வீழ்ந்தால் அடுத்து வரும்தேர்தலில் இனத்தின் தலைவனாய் எழுவீர்கள் உறுதி. உலகத் தமிழினம் நன்றியுடன் உங்களைத் தலைமேல்வைத்துப் போற்றும். உலகத் தமிழரின் உள்ளத்து உணர்வு,
இப்படிக்குபிரான்ஸ் வாழ் தமிழின உறவுகள்