Sunday, March 22, 2009

தொல்.திருமாவளவனுக்கு மனம் திறந்த மடல்


அன்புள்ள தொல். திருமாவளவனுக்கு
வணக்கம்
அத்துமீறு... அடங்கு மறு... திமிரி எழு..திருப்பி அடி....
உங்களுடைய இந்த வீர வசனத்தால்தமிழகத்தின் எத்தனை, எத்தனை சேரிஇளைஞர்கள் வீறு கொண்டு எழுந்திருக்கிறார்கள்என்று உங்களைப் போலவே எனக்கும் தெரியும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவர்நீங்கள் என்று உங்கள் பின்னால் நிற்கும்ஒரு படை நம்பிக்கொண்டிருக்கிறது.
சினிமா கதாநாயகர்களைப் போன்றதல்லஉங்களுடைய அரசியல் பிரவேசம்.
பதின் வயதுகளிலேயே சமூக போராளியாககளம் இறங்கியவர் நீங்கள்...
சாதாரண விவசாயக் கூலி தொழிலாளியின்குடும்பத்தில் இருந்து நீங்கள்வந்தவர்... உங்களுக்குப் பதவிகளையும்மரியாதைகளையும் அள்ளித்தர உங்கள்தந்தையோ, தாத்தாவோ பெரும் புள்ளியாகஇங்கு வீற்றிருக்கவில்லை.
சொந்த முயற்சியில் சமூகத்தின் பால்கொண்டிருந்த அக்கறையில் உங்கள் தளத்தை பலமாக ஆக்கிக்கொண்டவர்நீங்கள்...
சட்டக்கல்லூரி மாணவராக நீங்கள் இருந்தபோது சென்னையில் தொலைத்தொடர்புசாதனங்களைத் திருப்பித் தரச்சொல்லி, உண்ணாவிரதம்இருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைபோராட்டத்தைக் கைவிடக் கோரி மாணவர்களைத்திரட்டி போராட்டம் நடத்திய போராளி நீங்கள்.
அதன்பின்பு இலங்கைத்தமிழன் கொல்லப்படும்சம்பவத்தில் குற்றவாளிக் கூண்டில் இந்தியா என்கிற தலைப்பில்அப்போது திமுகவில் இருந்த வைகோவை அழைத்துசட்டக்கல்லூரியில் பேசவைத்தீர்களேமறக்க முடியுமா அதை?
உங்கள் கருத்துகளையும், இயக்கத்தின் செயல்பாடுகளையும்ஊராகச் சென்று பேசியும், நீங்களே சுவர் விளம்பரங்கள் செய்தும்,நோட்டீஸ் ஒட்டியும் செய்த பணிகளை யாரும் மறந்திருக்கமுடியாது.
தமிழகத்தில் உங்கள் காலடி படாத சேரிகளே இல்லைஎன்று சொல்லாம். அதனால் தான் உங்களுக்கு முன்னும், பின்னும்வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் யாரும் உங்கள் அளவுக்குமுக்கியத்துவம் பெறாமல் காணாமல் போனார்கள்; போய்கொண்டுமிருக்கிறார்கள் என்பதேஎன்னுடைய திடமான நம்பிக்கை...
ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான உங்களது கவனம்சிதறிவிட்டதாக எனக்கும் சில விமர்சனங்கள்உண்டு. அதையும், மீறி ஒடுக்கப்பட்ட மக்களுக்குஉங்களைப் போன்றவர்கள் அளித்திருக்கும் நம்பிக்கைஇந்த சமூகத்துக்கு அதிமுக்கியம்.
தந்தைக்கே பெயரிட்ட தமையன் நீங்கள்...தமிழில் பெயரிடுங்கள் என்று உங்கள்சிறுத்தைகளுக்கு நீங்கள் இட்ட உத்தரவைசரித்திரம் என்றைக்குமே மறக்காது...
இலங்கைத் தமிழனுக்கு புலிகள் தான் ஒரே ஆதரவுஎன்று நீங்கள் அடுக்கிய ஆதாரங்கள் வரவேற்கப்பட்டன...
இளஞ்சிறுத்தைகளுடன் தமிழீன அங்கீகார மாநாடு நடத்தினீர்கள்...
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவானதில்முக்கியப் பங்கு வகித்தீர்கள்...
ராஜீவ் படுகொலையில் இருக்கும் நியாயங்களைநீங்கள் அடுக்கிய பாங்கு பலரையும் புருவம் உயரச்செய்தது.
இத்தனைக்கும் மேலாக காங்கிஸ் கட்சி தமிழர்களுக்குசெய்துவரும் துரோகங்களை பட்டியலிட்ட நீங்கள் தான்வைகோவிற்கு அடுத்தபடியாக இலங்கைத்தமிழர்களுக்கு எதிரானபோரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய அரசுஎன்பதை அம்பலப்படுத்தினீர்கள்.
ஞானசேகரனை ஞானசூனியம் என்றீர்கள்...
இலங்கை அரசின் கைக்கூலிகளாக காங்கிரஸ்கட்சியினர் மாறிவருவதாக பகிரங்கமாகக் குற்றச்சாட்டுசுமத்தினீர்கள்.
வட்டியில்லாத கடனாக இலங்கைக்கு இந்திய அரசுநானூறு கோடி ரூபாய் வழங்கியதை மேடையில் போட்டுடைத்தீர்கள்.
ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை ஈழத்தமிழர்கள் மீதுகாங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான்திணித்தது என்றும், வேறு வழியில்லாமல் அதை பிரபாகரன்ஏற்றுக் கொண்டதாக பத்திரிகை செய்திகளைஆதாரமாகக் காட்டி, அண்ணாநகரில் நீங்கள்பேசியதை மெளனமே சாட்சியாக ஒரு கூட்டம்கேட்டுக்கொண்டிருந்தது, ஞாபகம் இருக்கிறதாஉங்களுக்கு?
இந்திய ரடார்கள் சிங்கள ராணுவத்தில்உலாவுவதை உரக்கச் சொன்னீர்கள்...இந்திய செயற்கைக் கோள், பிரபாகரனைத் தேடும் பணியில் சிங்கள பேரினவாதராணுவத்துக்கு உதவுவதாக முழக்கமிட்டீர்கள்...
போரை நிறுத்து என்று மத்திய அரசை வலியுறுத்தகிளம்பிய அனைத்துக் கட்சிக் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள்இருக்கக் கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னபோதுகொதித்துப்போனது நீங்கள் மட்டுமல்ல என்னைப்போலபலரும்...
ஈரோடு ரயில் நிலையம் வழியாக சென்ற இந்தியடாங்கிகள் ஈழத்தமிழனைக் கொல்ல இலங்கைப் போகிறதுஎன்று எச்சரித்தீர்கள். போரை நிறுத்த இலங்கை அரசைவலியுறுத்தாத காங்கிரஸை தமிழகத்தில் இருந்துஅப்புறப்படுத்துவதாக அறிவித்தீர்கள்..
சத்திய மூர்த்தி பவனில் சிறுத்தைகளுக்கும் கதர் வேட்டிகளுக்கும்மோதலேற்பட்டு எத்தனை நாட்களாகியிருக்கும் தோழரே? இன்று காங்கிரஸ் கூட்டணியில் நீங்களும் உங்கள்தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகளும் இருக்கிறார்கள்.
தினமலரும், காங்கிரஸ் கட்சியினரும் உங்களை கூட்டணியில்இருந்து வெளியேற்ற பலவாறு முயன்று கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழனை அழிப்பதில் காங்கிரஸ் அரசுக்கு பங்கில்லை என்று இப்போது நீங்கள் மறுக்கிறீர்களா?
காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு ராணுவ உதவிசெய்யவில்லையா? கடனுதவி செய்யவில்லையா?ராணுவ தொழில்நுட்ப நிபுணர்களை அனுப்பவில்லையா?ஈழத் தமிழர்களைக் கொன்றுகுவிக்கவில்லையா? ராஜீவ்-ன் அமைதிப்படை தமிழச்சிகளை பலாத்காரம் செய்யவில்லையா?இதையெல்லாம் செய்த காங்கிரஸை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா?
சிறுத்தைகள் இருப்பது காங்கிரஸ் கூட்டணியில்அல்ல... திமுக கூட்டணியில் தான்என்று சமாளிக்காதீர். இனஉணர்வோடு காங்கிரஸைஎதிர்த்த நீங்கள் அவர்களோடுஇணைந்து கிடக்க. வெறும் ராஜீவ் என்கிறஒரே காரணத்துக்காக தலைமையில் தங்களுடைய விசுவாசத்தைக் காட்ட உங்களை எதிர்த்தவர்கள்இன்னும் உங்களை பழித்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.ஆக... உங்களுடைய இனஉணர்வு என்னாகிவிட்டது?
ராஜீவ் படுகொலையை ஆதரித்தவர் என்பதையும்மீறி நீங்கள் ஓர் ஒடுக்கப்பட்டவர் என்பதால்தான்உங்களுடன் காங்கிரஸ் ஒத்துப்போக மறுக்கிறதுஎன்பதை அறியாதவரா நீங்கள்?
ஏன் சொல்கிறேன் என்றால் வாய்கிழிய காமராஜர் ஆட்சியைப் பற்றிப் பேசும் காங்கிரஸ்காரர்களில்எத்தனை பேர் கக்கனை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?கக்கனின் நினைவு நாள் சத்தியமூர்த்தி பவனில் அனுஷ்டிக்கப்படுகிறதா?அந்த மனிதரின் பிறந்த நாள் அவர்களால் கொண்டாடப்படுகிறதா?
திமுகவுடன் இணக்கம் என்கிறீர்கள். ஈழத்தமிழர்களைகொன்று குவிப்பதில் காங்கிரஸ¤டன் திமுகவுக்குஉள்ள பங்கு என்னவென்று உங்கள் மனசாட்சிக்கேதெரியுமே?
ஒவ்வொரு ஈழத்தமிழனும், புலம்பெயர்ந்த தமிழனும்உங்களது மேடைப் பேச்சில் சொக்கி உங்களால்பெரிய மாற்றம் வந்து விடும் என்று நினைத்திருந்தார்கள். ஆனால், உங்களது இந்த பச்சைத் துரோகத்தால்,அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறான்...
உங்களைப் போன்றவர்களால் தாய்மண்ணில்கால் பதிக்கப் போகிறோம் என்று புலம்பெயர்ந்தவர்கள்நம்பிக்கொண்டிருந்தார்களே! ஈழத்தமிழன் பிரச்னையில்நீங்களும் உங்களைச் சுற்றி உள்ளவர்களும் அடைந்தசிலபல ஆதாயங்களை நினைத்துப் பாருங்கள்...அதற்காகவாவது நீங்கள் கொஞ்சம் யோசித்திருக்கலாம்..
சிதம்பரம் தொகுதி என்பது எங்கிருந்தாலும் உங்களுக்குக்கிடைத்திருக்கும். அதற்காகவா ஈழத்தமிழனை அடமானம் வைத்தீர்கள்?மனதில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரே ஒரு காங்கிரஸ்காரன்கூட சிதம்பரத்தில் உங்களுக்காக ஓட்டுக் கேட்க மாட்டான்.
தொல் நண்பா....சொல் நண்பா...
என் கருத்தில் ஏதாவது தவறிருந்தால் மன்னித்துவிடு...
உங்கள் இதயத்தில் ஈரம் கொஞ்சம் இருந்தால் ஈழத்தமிழனைகொஞ்சம் நினைத்துப்பாருங்கள்...
நன்றி...


Tuesday, March 17, 2009

குறுஞ்செய்தி(SMS) தகவல் மையம் அமைப்பு

இளந்தமிழர் இயக்கம் முடிவு

இக்குறுஞ்செய்தி தகவல் மையத்தில் சந்தாதாரர்கள் ஆக ரூ.100 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும். கட்டியவர்களின் கைபேசி எண்ணுக்கு காங்கிரசுக்கு எதிரான தகவல்கள், காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் காங்கரசைப் பற்றிக் குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்கள், ஈழத்தமிழர் ஆதரவு போராட்டச் செய்திகள், ஈழப்போர் குறித்த இணையதள செய்திகள் என பல செய்திகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். இதில் திரட்டப்படும் நிதி பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் என்பதால் இதனை நன்கொடை என்ற பெயரில் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் இணைய விரும்பும் தமிழ் உணர்வாளர்கள், 9841949462 மற்றும் 9894310997 ஆகிய எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பித் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Sunday, March 15, 2009

இந்திய அரசு அனுப்பிய மருந்துப் பொருட்கள்என்ன ஆனது?

இலங்கையில் போர்முனைகளில் சிங்கள ஆர்மியின்தாக்குதலில் சிக்கி அப்பாவித் தமிழர்கள் உயிரையும்அவயங்களையும் இழந்து வருகிறார்கள். போதிய மருத்துவ வசதிஇன்றி படுகாயம் அடைந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாகஉயிரை விடும் கொடூரம் அங்கே அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இதற்காக இருபது டன் மருத்துவப் பொருட்கள்விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறதுஎன்று இந்திய மைய அரசும், அறிவித்தது. அதை சொல்லி,சொல்லியே டாக்டர் கலைஞர் சந்தோஷத்தில் திளைத்தார்.மருத்துவப் பொருட்களுடன் இந்திய டாக்டர்கள் குழுவும் சென்றது ஆனால் இன்றைக்கு வந்திருக்கிற செய்தி என்னவென்று தெரிந்திருக்கும்உங்களுக்கு... கட்டுப்போடக் கூட துணியில்லாமலும், அறுவைச் சிகிச்சைக்குமயக்க மருந்தில்லாமலும் சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள்திணறி வருகிறார்களாம். அப்படியென்றால் காயம் பட்டவர்களின்நிலையை நினைத்துப் பாருங்கள் நண்பர்களே...எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு குச்சிகளை வைத்துகட்டுப் போடுகிறார்களாம். காயங்களுக்கு பெட்சீட் துணியைவெட்டி கட்டுகிறார்களாம்.
தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கும்படிடாக்டர்கள் கோரியிருக்கிறார்கள். அப்படியென்றால் இந்திய அரசுஅனுப்பிய மருந்துப் பொருட்கள் எங்கே போயின? அவை சிங்களராணுவத்தினருக்கு போய் சேர்ந்திருக்கும் என்பதே பலருடையஅனுமானம். அப்பாவித் தமிழன் செத்தால் சாகட்டும் என்கிறமனநிலை தான் ப்ரணாப் முகர்ஜிக்கும் கலைஞருக்கும்...
இலங்கையில் இந்திய டாக்டர்கள் என்ன செய்கிறார்கள்? என்றும் தெரியவில்லைஇதுபற்றியெல்லாம் யாரும் கேட்க முடியாது. கேட்டால் தயாராக இருக்கிறதுதே.பா.சட்டம்.

இந்திய இறையாண்மை விளக்கம் ப்ளீஸ்?


எதிர்பார்த்தது போலவே மதிமுக கொள்கைப் பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்திய இறையாண்மைக்குஎதிராகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிந்திருக்கிறதுபோலீஸ். திருப்பூரில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகஅவர் கைது செய்யப்பட்ட வழக்கில் பிணை கிடைத்துவிட்டதால் கையைப்பிசைந்து கொண்டிருந்த தமிழக அரசு தே.பா.ச.,வில் அவரைக் கைதுசெய்திருக்கிறது.
வேண்டாதவரை எல்லாம் வழக்குப் பதிவு செய்துஅவர் மீது அடக்குமுறையை ஏவிவிடுவதுதான் இந்த அரசின்இறையாண்மை என்றால் அந்த இறையாண்மையை நாம்ஏன் கட்டிக் கொண்டு அழவேண்டும்? (என்னையும் கைது செய்யுங்க ப்ளீஸ்) இந்திய இறையாண்மைக்கு எதிராக ஒருவர் பேசுவதால் பொது அமைதிக்குப் பங்கம்வரும் என்கிற குற்றச்சாட்டை உண்மை என்றே வைத்துக் கொண்டால்இதுவரை சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரின்பேச்சுகளால் தமிழகத்திலும், இந்த நாட்டிலும் ஏற்பட்ட சட்ட ஒழுங்குப்பிரச்னைகள் தான் என்ன?
இதுவரை இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவரையாவதுஇந்த அரசு தண்டித்திருக்கிறதா? அநேகமாக இல்லை என்றேநினைக்கிறேன். ஆம் என்றால் அதுபற்றி யாராவது பதிவிடலாம்.குறைந்தபட்சம் எனக்குப் பின்னூட்டம் இடலாம்.
நாஞ்சில் சம்பத் விவகாரத்துக்கு வருவோம். கடந்த ஒரு வாரத்துக்குமேலாக அவர் மீது தே.பா.சட்டத்தை ஏவிவிட, திருப்பூர் காவல்துறை பலவாறுமுயன்றும் அதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திடவில்லையாம். (சபாஷ்கலெக்டர்) அதற்குள் அவருக்கு பிணையும் கிடைத்துவிட, உடனேவேகமாக செயல்பட்ட மேலிடம் அவர் மீது தே.பா.வை ஏவிவிட்டிருக்கிறது.இந்திய நாடு ஜனநாயக நாடு என்று பாடப் புத்தகத்தில் படித்ததைநினைத்துப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. நாம் சிங்கள அரசின் அடக்குமுறையை எதிர்க்கிறோம்..இந்தியாவிலும் அதுதானே நடக்கிறது? நமக்கே இந்த நிலைஎன்றால் இலங்கைத்தமிழர்கள் படும்பாட்டை நினைத்துப் பாருங்கள்.
நாஞ்சில் சம்பத்தாவது ஒரு கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் சீமான்,கொளத்தூர் மணி போன்றவர்கள் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்றபட்டவர்கள்.சமூகப் போராளிகள் இந்த அடக்குமுறை எதிர்த்து குரல் கொடுக்காமல்என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்கிற சொல்லாடலில் உள்ள உண்மையைப் பற்றி பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். சுப.வீரபாண்டியன் ஐயா போன்றவர்கள் எங்கே போய்ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்? என்று தெரியவில்லை. பாரதிராஜா குறைந்தபட்சம்சீமானுக்காக குரல் கொடுக்கலாம். அவரது துறையைச் சேர்ந்தவர் என்பதையும்மீறி தன்னுடைய சீடர் சீமான் என்பதற்காக. கலைஞர் டிவியில் தெற்கத்தி பொண்ணுசீரியல் மூலமாக வரும் வருமானத்தை இழக்க பாரதிராஜா விரும்புவாரா?
திரையுலகத்தினர் சார்பில் இலங்கைத்தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்தினார்களே,சீமானுக்காக என்ன செய்யப் போகிறார்கள்? சிரிப்புதான் வருகிறது. சினிமாவில்அநீதியைக் கண்டு கொந்தளிக்கும் நாளைய முதல்வர் நடிகர்களும், சமூக அக்கறை இருப்பதாககாட்டிக்கொள்ளும் இயக்குநர்களும் (கற்றது தமிழ் ராம், மணிவண்ணன், ஆர். சுந்தர்ராஜன் போன்றஉண்மையான ஒருசில உணர்வாளர்கள் தவிர்த்து) என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்.. இவர்களைஅட மானங்கெட்டவர்களே! என்று நான் திட்டினால் பதிவுகளில் நாகரீகமாக எழுதுஎன்று என்னுடைய நலம் விரும்பி நண்பர்கள் கடிந்து கொள்கிறார்கள்.
என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், இந்திய இறையாண்மை பற்றிவெளிப்படையான விவாதம் ஒன்றை நடத்தினால் என்ன? தோழர் தியாகு இதுபற்றிசரியான சாதக பாதகங்களை விளக்குகிறார் என்று கேள்விப்பட்டேன்.தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பதை இப்படியெல்லாம் பயன்படுத்த முடிகிற போது, இந்த பொடா, தடா எல்லாம் இந்த ஏகாதிபத்திய அரசு எப்படியெல்லாம் பயன்படுத்தும்என்று நினைத்துப் பாருங்கள். இது நமக்கெல்லாம் ஒரு பாடம் இல்லை?

Thursday, March 12, 2009

ஈழம்: ஜெ.,வின் மனமாற்றத்ததை சந்தேகிக்கலாமா?

நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப் பதிவை தட்டிக்கொண்டிருக்கிறேன். சொந்த ஊருக்குப் போய் வந்ததில் ஒரு வாரம் போய்விட்டது. அதுவும் ஒரு நகரம் தான் என்றாலும் பிரிய மனமில்லாமல்பெருநகருக்குத் திரும்பினேன். அண்ணா திமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா உண்ணாவிரதம் அறிவித்து அந்தப் போராட்டத்தை நடத்தியேமுடித்துவிட்டார்.
அப்பாவித் தமிழ் மக்கள் சாகிறார்களே என்று கேட்டதற்கு போரென்றால்அப்பாவிகள் சாவது சகஜம் என்று திருவாய் மலர்ந்தவர் அவர். அப்போது தமிழருக்குத் தனிநாடு தேவைதான். ஈழத்தமிழர்கள் மீதான போரைநிறுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டது என்கிறார்.நாடாளுமன்றத் தேர்தல் இப்படியொரு நிலைப்பாட்டை அவரை எடுக்க வைத்திருக்கிறதுஎன்றால், அதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. மாற்றங்கள் ஒன்று மட்டுமேநிரந்தரமானது என்று கொண்டால், அவரது இந்தமாற்றம் உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதேஎன்னைப் போன்ற பலரது எண்ணமும், விருப்பமும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியனின்மாற்றம் தான் அக்டோபர் இரண்டாம் தேதி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தத் தூண்டியது. அதுதானே இன்றையஇந்த எழுச்சிக்கெல்லாம் ஆரம்பம். ஆரம்பத்தில் ஈழப் பிரச்னையில்அவர் கொண்டிருந்த கருத்து ரொம்பவும் ஆரம்ப நிலையிலானது என்பதையாவரும் அறிவோம்...
ஆக, தா.பாண்டியனைப் போல் ஜெ.,வின் ஈழம் பற்றியகருத்து மாற்றம் ஆக்கப் பூர்வமானதாக இருக்க வேண்டும்என்பதே நமது விரும்பமும் கூட. தமிழகத்தின் நரேந்திர மோடி ஜெ., என்று சொல்லிக்கொண்டு திரிந்த, திரியும் பார்ப்பன எண்ணம் கொண்டோர்முகத்தில் எல்லாம் ஜெ.,வின் உண்ணாவிரதம் கரியைப்பூசிவிட்டது. குறிப்பாக சோவின் முகத்தில், சுப்பிரமணிசுவாமிமுகத்தில் கூட கரிதான்...
என்றும் ஈழத்தமிழர்களின் மறக்க முடியாத ஒரு மாபெரும்இந்தியத் தலைவராக இருப்பவர் எம்.ஜி.ஆர் தான் என்பதை யாரும்மறுக்க முடியாது. மாவீரன் முத்துக்குமாரும் தனது மரண சாசனத்திலும்இதை சொல்லியிருப்பார். விடயத்துக்கு வருவோம். எம்.ஜி.ஆரின் வழியில்வந்த அண்ணா திமுகவினர் இப்போதுதான் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்...ஜெ.,வின் முந்தைய நிலைப்பாட்டால் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தஅதிமுக தொண்டர்கள், இனி நிம்மதியாக ஈழ உரிமைக்குக் குரல் கொடுப்பார்கள்..
ஈழத் தமிழர்களின் மீது போர்த் தொடுத்து வரும் காங்கிரஸ் கட்சிக்குஎதிராக இந்தத் தேர்தலில் விழும் வாக்குகளை தனக்கும் தனது கூட்டணிக்கும்திருப்பும் நோக்கில் இந்த முடிவை ஜெ., எடுத்திருந்தால் அதுபற்றிகாலம் தான் நமக்கு பதில் சொல்லும். தேர்தலில் யாருக்கும்அறுதிப் பெரும்பான்மைக் கிடைக்காமல் போய் காங்கிரஸை அதிமுகஆதரிக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள்?மூன்றாவது அணி தொடக்க விழாவை நடத்தி விட்டார்கள். தேர்தல் முடிந்ததும்,இந்த அணிக்குள் நடக்கப் போகும் கும்முடிப்பிடி சண்டையை நினைத்துப்பாருங்கள்... தேவகவுடா கர்நாடகத்தில் நடத்திய நாடகத்தை யாரும்அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.
இந்தத் தேர்தலில் வீட்டிற்கு வீடு பிரசார டிவிடிக்கள் கொடுக்கப்பட்டுஈழ மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைக் காண்பித்து காங்கிரஸின் பழிவாங்கும் கோரமுகத்தை கிழிக்கப் போகிறார்கள். அதில் பெரியார் திராவிடகழகம் தான்முன்னாடியாக இருந்து டிவிடி தயாரித்திருக்கிறது. இந்தப் புதிய முறையை அரசியல் கட்சிகளும்பின்பற்றத் தொடங்கும் என்று நினைக்கிறேன். (கலைஞர் தமிழினக் கொலைஞர் என்கிறசிடியைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ) அரசியல்வாதிகளே!வாக்குகளை அள்ள ஈழ மக்கள் உங்களுக்கு உதவலாம்.ஆனால், நீங்கள் அவர்களுக்கு உதவுவீர்களா? குறைந்தபட்சம் அகதிகள்முகாம் என்கிற பேரில் சிறைச் சாலைகளில் வாழும் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏதாவதுசெய்ய வேண்டும். வாக்குகளை அள்ளிக் கட்டிக் கொண்டு ஈழத்தமிழனை ஜெ., மறந்துவிட்டால்அவரை காலம் மன்னிக்காது...
நன்றி...

Tuesday, March 3, 2009

தமிழன் செத்தால் தூக்கிப் போடு! கிரிக்கெட் வீரன் காயம் பட்டால் செய்தி போடு


தமிழன் செத்தால் கவலைப் படாததேசியச் சேனல்கள்...(சிங்கள) கிரிக்கெட் வீரர்கள்மீது தாக்குதல் நடந்ததைஅரக்கப்பறக்க செய்திவெளியிட்டு கல்லாக் கட்டுகின்றன...
தினமும் தமிழன் சாகிறான்...ஒருநாள் 40 பேர்... மறுநாள் 50 பேர்...மற்றொரு நாள் 120 பேர் என்று தமிழன் சாகிறான்...மக்கள் தொலைக்காட்சி மட்டும் அதுபற்றி கவலைப்பட்டுசெய்தி வெளியிடுகிறது.....
ஆனார் அதுபற்றி கவலையே படாத இந்த சன், கலைஞர் மற்றும் தேசிய ஆங்கில மற்றும்ஹிந்தி சேனல்கள் பாகிஸ்தானில்கிரிக்கெட் வீரர்கள் மீதுநடந்த தாக்குதலை பரபரப்புச்செய்தி ஆக்கியிருக்கின்றன....
நமது பிரபாகரனுடன் வைகோ எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சிங்களஅரசு வெளியிட்டதாம்.. அதை வைத்துக்கொண்டு கருத்துக்கேட்டு கழுத்தறுத்தார்கள்...
வைகோ தமிழீழம் சென்றதே இந்தத் தேசியசேனல்களுக்கு நேற்றுதான் தெரிந்திருக்கிறது போலும்...
அடக் கேவலமே.....

யாருக்குத்தான் ஓட்டுப் போடுவது? பதில் தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்!பெதிகாவின் டிவிடி பரப்புரை சபாஷ்!!



சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததுதொடர்பாக பதிவிட முடிவெடுத்திருந்தேன். ஆனால் நேரம் போதாமல்அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. வீரத் தமிழன் மகன் முத்துக்குமாரின்தங்கை வீட்டிற்குச் சென்று சில விவரங்கள் பேச வேண்டும் என்கிற என்னுடைய திட்டமும் நேரமின்மை காரணமாக தள்ளிப்போய் கொண்டேஇருக்கிறது (ஏதோ பெரிசா கிழிக்கிற மாதிரி ஒரு பில்டப் கொடுக்காதடா என்றுநீங்கள் சொல்வது என் காதில் விழாமல் இல்லை).
சீமானை அடுத்து வைகோவும் கைதானார். கொளத்தூர் மணியும்கைதானார். வைகோ பிணையில் வெளிவந்து விட்டார். கொளத்தூர்மணியின் நிலை தெரியவில்லை. தேர்தல் பயத்தினால் தான் சீமானைசிறையில் அடைத்திருக்கிறார்கள். சீமான் என்கிற ஒரு தனிமனிதனின்பேச்சு, தங்களுடைய வெற்றியைப் பாதிக்கும் என்று அவர்கள் நினைப்பதுசீமானுக்குக் கிடைத்த வெற்றி அல்லவா? நாமும் தேர்தலை எதிர்பார்க்கலாம்..ஆட்சி மாற்றம், மிச்சம் உள்ள தமிழர்களின் உயிரையாவது காப்பாற்றும் என்கிறநப்பாசைதான் தோழர்களே....
நேற்று (2.3.09) இயக்குநர் மணிவண்ணனைச் சந்தித்தேன்.ஆள் ரொம்பவும் தளர்ந்து போய் இருக்கிறார். அதிலும், ஈழப்பிரச்னை குறித்துபேசும்போது அவர் முகத்தில் நெளியும் கவலை ரேகைகளைப் பார்க்கும்போதுஎன் மனது என்னவோ போலாகிவிட்டது. முதுகுத் தண்வடுவடப் பாதிப்பால்கால்கள் இரண்டும் வீங்கி நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அதிலும், ஷோபாவில்அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, அடிக்கடி இரண்டு கைகளாலும் தனது வலது காலைநகர்த்தி வைத்துக் கொண்டதை பார்க்க கஷ்டமாக இருந்தது.
இந்த நிலையிலும் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.கடவுள் மறுப்பாளரான அவரது உடல்நலம் தேற அதே நிலைப்பாட்டில் உள்ள நான் யாரிடம்வேண்டுவது....? ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவது அதிலும் கொடூரமாகக் கொல்லப்படுவதைஎப்படி சகித்துக் கொள்வது? என்று கேட்கிறார், மணிவண்ணன். முதல்வர் கருணாநிதி பற்றி பேசினால் நிதானமாக கவனமாக முதல்வருக்கான மரியாதைக்கு எந்த இழுக்கும் ஏற்படாமல் கருணாநிதியைகடிந்து கொள்கிறார். இந்தியாவில் தேர்தல் திருவிழா தொடங்கி விட்டால், ஈழத்தில்தமிழர்களைக் கொல்வது சிங்களப் பேரினவாத அரசுக்கு வசதியாகிவிடும். தட்டிக் கேட்கவேண்டியவர்கள் எல்லோரும் தேர்தல் பணியில் பிஸியாகி விடுவார்கள் என்று நியாயமானவருத்தத்தை வெளிப்படுத்துகிறார். கிளம்பத் தயாரானதும், சிரமப்பட்டு நடந்தாலும்வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். சினிமாவில் நக்கலும், நையாண்டியாகவும்பார்த்துப் பழக்கப்பட்ட இயக்குநர் மணிவண்ணனை ஈழமக்களின் சாவுகள் சஞ்சலப்படுத்திக்கொண்டே இருப்பதால் அவரது முகத்தில் வேதனை ரேகைகள் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டதோ என்றுநினைக்கத் தோன்றியது.....
லீனா மணிமேகலையின் தேவதைகள் ஆவணப்பட வெளியீட்டு விழா சில மாதங்களுக்குமுன் நடந்தது (ஓராண்டு கூட ஆகியிருக்கலாம்). அப்போதுதான் முதல் முதலாக சந்தனக் காடுஇயக்குநர் கெளதனை சந்தித்தேன்..... அப்போது அவருடன் பேச வாய்ப்புக் கிடக்கிவில்லை. சந்தனக்காடு வெற்றிவிழாவில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு அவருடன் பேசவாய்ப்புக் கிடைக்கவில்லை.
மாவீரன் முத்துக்குமாருக்கு இயக்குநர்கள் சங்கம் சார்பில் நடந்த இரங்கல் கூட்டத்தில்( பாரதிராஜா, செல்வமணி, சீமான், சத்தியராஜ் உள்பட அந்த இரங்கல்கூட்டத்தில் வெகுசிலரே கலந்துகொண்டனர் என்பது வேறுவிஷயம் ) மீண்டும் கெளதமனைச் சந்தித்தேன்.
அப்போதுதான் கெளதமனுடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. நல்ல உணர்வாளர். ஈழத்தமிழர்கள்மீதான கொலைவெறித் தாக்குதலை கடுமையாக கண்டித்தார். ஈழ நிலவரங்களை சரியாகப்புரிந்திருக்கிறார். இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான சில தலைவர்களைப்பற்றி சரியான விமர்சனங்களை வைத்தார். அந்தத் தலைவர்களின் பெயர்களைவெளியிடாமல் தவிர்க்கிறேன். அவர் நம்மைப்போல அல்ல, கலைத்துறையில்இப்போதுதான் அவருடைய வெற்றிப் பயணம் தொடங்கியிருக்கிறது. விடயத்துக்கு வருகிறேன். திங்களன்று என்னை அழைத்த கெளதமனை அவரது இல்லத்தில்சந்தித்தேன்.... பல போராட்டங்களில் சிறை சென்ற அவரது தந்தைகீரை கிள்ளிக் கொண்டிருந்தார். கெளதமன் தன் மனைவியுடன் வெளியேகிளம்பிக் கொண்டிருந்தார். என்னிடம் ஒரு டிவிடியைக் கொடுத்துப் பார்க்கச்சொன்னார். அலுவலகத்துக்கு வந்ததும் ஓடவிட்டேன்... இனி என்ன செய்யப்போகிறோம்?என்ற கேள்வியுடன் தொடங்கும் அந்த டிவிடியில், இலங்கையில் அண்மையிலும்,சில ஆண்டுகளுக்கு முன்பும் நடந்த தமிழினப் படுகொலைக் காட்சிகள் இருந்தன.
சோகமயமான கவிதையைப் பின்னணியில் ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார்....நம் மக்களின் சாவை தடுத்து நிறுத்தக் கோரிய நமது கோரிக்கைகள் செவிடன்காதில் ஊதிய சங்காக இருக்கிறது. நம் கையில் உள்ள வாக்கு என்கிறதுருப்புச் சீட்டைப் பயன்படுத்தி இதற்கெல்லாம் காரணமான காங்கிரஸ் கட்சிக்கும்,அதனுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்ற ரீதியில் முடிகிறது அந்த டிவிடி. இடையில்ராஜபக்ஷேவுடன் சோனியா காந்தி, ப்ரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங்ஆகியோர் தனித்தனியாக எடுத்துக் கொண்ட புன்னகையுடன் கூடியபுகைப் படங்கள் வந்து போயின. நம் வயித்தெரிச்சலையும்கொட்டிக் கொண்டன.. இதை தயாரித்த பெரியார் திராவிட கழகத்தினர்,முத்துக்குமாரின் கோரிக்கையைப் போல் இதை நகலாயுதம் எடுத்துப்பரப்புங்கள் என்றும் கோரிக்கை¨யும் அந்த டிவிடியில் விடுத்திருந்தனர்.
அந்த டிவிடியை குறள் இணையத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பகொடுத்திருக்கிறேன்.... இன்றுதான அதன் தொடக்கவிழா....நண்பர்கள் மூலம் அதை நகலாயுதம் எடுத்தும் பரப்ப இருக்கிறேன்....அதைவிட, இன்னும் தரமான காங்கிரஸ¤க்கு எதிரான பிரசாரப்படத்தைத் தயாரித்து வெளியிடலாம் என்று தோன்றுகிறது....அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்....
முடிந்தால்.... அந்த டிவிடியை அடுத்த பதிவில்தரவிறக்கம் செய்து தருகிறேன்..... (என்னுடையஇணைப்பில் செய்தால் பழுத்துவிடும் கட்டணம் )வெளியில் ஓசியில் நண்பர்களின் இன்டர்நெட் இணைப்பில்இருந்துதான செய்ய வேண்டும்...
அது சரி, தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாகதமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரஸ் மற்றும்அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டாம் என்றால்.. வேறு யாருக்கு வாக்களிப்பது... பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.....