Friday, February 27, 2009

ஈழம்: எங்கள் தமிழுணர்வை சந்தேகிக்காதீர்.....என்னுடைய மறுப்பும் விளக்கமும்



என்னுடைய இந்தத் தேவடியா பசங்களுக்குத் தேவைதான் என்றபதிவுக்கு பலரும் பின்னூட்டம் செய்திருந்தார்கள். அதில், இலங்கைத் தமிழரிடம் நான் கலந்துரையாடிய விவரங்களைஅதில் பதிவு செய்திருந்தேன். இதுவரை எந்த பின்னூட்டத்திற்கும்நான் பதிலளித்தது கிடையாது. இந்த முறை 'யாரோ' எனக்களித்திருந்த பின்னூட்டம்என்னை பதிலளிக்கத் தூண்டியிருக்கிறது.
அதில், நடுநிலையாளர்கள் என்று என்னைப் பற்றி விளம்பியிருக்கிறார், அந்த தோழர். உண்மை என்றொரு நிலை இருக்க நடுநிலைஎன்பதே கெட்ட வார்த்தை என்பது என்னுடைய நிலை. ஆக, ஈழ விவகாரம்என்றில்லை, எதிலும் நான் நடுநிலைவாதியல்ல என்பதை அந்த யாரோவுக்குத்தெரிவிக்க விரும்புகிறேன். தமிழர்கள் செத்துமடிகிறார்கள். இதில், பல்கலைக்கழகத்துக்குப் படிக்கப் போவது முக்கியமா? என்று கேட்டிருக்கிறார். என்னுடைய அந்தப் பதிவின் நோக்கமேஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு எந்தவிதமான அடிப்படை உரிமையும்சுந்திரமும், நியாயமும் கிடைக்காது என்பதுதான். கல்வியிலேயே வாய்ப்பு மறுக்கப்படும்தேசத்தின் இறையாண்மையை இந்திய அரசு காப்பாற்ற முயல்வது நியாயமா?என்று கேட்டிருந்தேன்.
மேலும் அந்த யாரோ, உங்கள் இந்தியா ராடார்களைத்தருகிறது. தமிழர்களைக் கொல்கிறது என்று எழுதியிருந்தார். அந்த யாரோ நினைப்பது போல் இந்திய தேசியத்தை கட்டிக் கொண்டு தமிழர்கள் சாவதைநா(ன்)ங்கள் வேடிக்கைப் பார்க்கவில்லை. நம்மால் முடிந்ததை எதையாவது செய்வோம் என்கிறநிலையில் தான் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம் (றேன்). அதில் ஒன்றுதான்இந்த வலைப்பூ. அதில் எங்களுடைய தமிழுணர்வை அவர் சந்தேகிக்க வேண்டியதில்லை.
தமிழின அழிப்பு என்றில்லை உலகில் வேறு எந்த இனத்திற்கும்இப்படியொரு நிலை வரக்கூடாது என்பதுதான என் (ங்கள்) நிலை. உங்கள் பின்னூட்டத்தைஎன்னிடம் கலந்துரையாடிய இலங்கைத்தமிழரும் படித்தார். அவரும் நானும் சேர்ந்துதான்உங்களுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் நடைபெறும் தமிழின அழிப்பை எதிர்த்து எங்கள் தேசியத்தைக் கூட கைவிட்டுவிட்டு நம்மினத்துக்காகநிற்கிறோம். எங்களை சந்தேகிக்காதீர்.
மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், அந்தப் பதிவில் ஒரு தவறானதகவல் இடம் பெற்றிருக்கிறது. அதில் சில மாதங்களுக்கு முன்சீனாவில் பிடிபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சிங்களவனும்இருந்தான் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறானது. சில ஆண்டுகளுக்கு முன் (அநேகமாக 2001) செஷன்யாவில் ரஷ்யப் படையினரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மை. தவறுக்கு வருந்துகிறேன்.
என்னுடைய பதிவுகள் தொடரும்.... விரைவில் சந்திப்போம்...

Thursday, February 26, 2009

”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” கையெழுத்து இயக்கம்



தமிழீழ மக்கள் படும் இன்னல்களை மக்களுக்கு விளக்கவும், அதற்குக் காரணமான சிங்கள இனவெறி அரசிற்கு துணை போகும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசைக் கண்டித்தும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ”தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்” நேற்று(25-02-09) தொடங்கியது.


தஞ்சை சாந்தி கமலா திரையருங்கு அருகில் நடந்த தொடக்க விழாவில், திரை இயக்குநர் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி, தஞ்சை வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் நல்லதுரை உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ”இளந்தமிழர் இயக்கம்” தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயர்நீத்த மாவீரன் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சியை பற்றியும் விளக்க இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி பேசினார். ”இனத் துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” என்று 1 இலட்சம் பேரிடம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்தியக்கம் குறித்தும் காங்கிரசின் இனத் துரோக நடவடிக்கைகள் குறித்தும் இளந்தமிழ இயக்கத்தின் பயணத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.செந்தமிழன் பேசினார்.


மேலும், தோ்தல் அரசியல் சாராத மாணவர்கள் இளைஞர்களை தமிழ் உணர்வை மட்டும் கொண்டு ஒன்றிணைக்கும் இவ்வியக்கத்தை மாணவர்களிடமும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து மாற்று அரசியலுக்கான பாதையை ஏற்படுத்துவோம் என்றும் அவர் கூறினார். பின்னர் வழக்கறிஞர் நல்லதுலை, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மணிவண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துரை வழங்கினர். ”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” கையெழுத்து இயக்கத்திற்கு முதல் கையெழுத்தை இயக்குநர் மணிவண்ணன் போட பின்னர் பலரும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். புதுக்கோட்டை நோக்கி ஒரு அணியும், வேதாரண்யம் நோக்கி ஒரு அணியும் என பரப்புரைப் பயணக்குழுவினர் இரண்டு அணிகளாக பிரிந்து தஞ்சையிலிருந்து கிளம்பி சென்றனர். வழிநெடுகில் பல்வேறு கிராம மக்களிடம் பரப்புரையின் நோக்கம் குறித்தும் தமிழீழ மக்களின் இன்னல்கள் குறித்தும் குழுவினர் விளக்கி வருகின்றனர். ”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” கையெழுத்து இயக்கப் படிவத்தில் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு வருகின்றனர். வட தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு ம.செந்தமிழனும், தென் தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேசுபாலன்ராஜாவும் வழிநடத்திச் செல்கின்றனர். இப்பயணக்குழுவினர் வருகிற மார்ச் 6 ஆம் திகதி சேலத்தில் நடக்கும் ”இன எழுச்சி மாநாட்டில்” .சந்திக்கின்றனர்

Wednesday, February 25, 2009

ஈழம்:இந்தத் தேவடியா பசங்களுக்கு இதுதேவைதான்'



அந்தப் படத்தொகுப்பு ஸ்டூடியோவில் அவரைச் சந்தித்தேன்.இளவயது அவருக்கு.. சில நாட்களுக்கு முன்பே அதே இடத்தில்சந்தித்திருந்தாலும், இப்போது தான் பேச வாய்ப்புக் கிடைத்தது.
அவரது பேச்சில் அவர் ஓர் இலங்கைத் தமிழர் என்பதுஎனக்குத் தெரிந்துவிட்டது. உரிமையுடன் தேனீர் அருந்தலாமா?என்று கேட்டு, அவருடன் தேனீர் கடைக்குச் சென்றபோது ஈழத்தில் நடந்து வரும் போர்ச் சூழல் பற்றி பேசினேன்.மூன்று மாதங்களுக்கு முன்பு வரை கொழும்புவில் தங்கியிருந்த அவர்,பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் பணியாற்றியிருப்பதாக தெரிந்தது.
இலங்கையில் உண்மையில் என்னதான் நடக்கிறது? என்பதை அவர்அனுபவத்தில் கேட்க விரும்பினேன். என் மீது அவருக்கு நம்பிக்கைஏற்பட்டிருக்க வேண்டும். மனதிறந்து சில விடயங்களை என்னுடன்பகிர்ந்து கொண்டார்.
கே: கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தமிழர்களுக்கும் சிங்களவர்களும் இடையே பாகுபாடு உள்ளதாக, இங்குள்ளவர்கள் சொல்வது எந்தளவுக்கு உண்மை? என்றேன்.
''இங்குள்ளதைப் போல் கல்வி முறை அங்கில்லை. பல்கலைக் கழகங்களில்சேர அதற்கு முந்தைய நிலையில் குறைந்தது 280 புள்ளிகள் யாழ்ப்பாணத்தில்உள்ளவர்கள் அதாவது தமிழர்கள் பெற்றிருக்க வேண்டும். இதே கொழும்பில் உள்ளவர்கள்,வெறும் 190 புள்ளிகள் பெற்றிருந்தால் போதும். (இந்த இறையாண்மையை பாதுகாக்கத்தான் இலங்கைக்கு ராணுவஉதவி செய்வதாக, மன்மோகன் சிங் நியாயம் கற்பிக்கிறார்.)அதில் கொழும்பில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் படிக்கவோ,விரும்பிய இடத்தில் கல்வி கற்கவோ முடியாத நிலை உள்ளது''. கே: கொழும்பு உள்ளிட்ட சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும், வன்னிப் பகுதியிலும் வாழும் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம்?
''சிங்களவர்களுடன் வாழும் தமிழர்கள் எந்நேரமும் அச்சத்துடன் தான் காலம் தள்ள வேண்டும்.நள்ளிரவில் ராணுவத்தினர் கதவைத் தட்டுவார்கள். திடீரென தமிழர்கள் காணாமல்போவார்கள். யார் மீதாவது சந்தேகம் வந்துவிட்டால் அது உண்மையா? என்றுவிசாரித்து நேரம் செலவளிக்க ராணுவத்தினர் தயாரில்லை. எனவே அடுத்தவிநாடியே அந்த சந்தேகத்துக்கு இடமான நபர் கடத்தப்படுவார்.அதன்பின்பு எப்போதும் அவரைப் பார்க்கவே முடியாது.
வன்னியில் எப்போது குண்டு விழுமோ? என்ற உயிர் அச்சத்தில் வாழ்வதைவிடஇதுமேல் என்று நினைத்துக் கொண்டு, பலரும் தினம் தினம் செத்துக் கொண்டுகொழும்பிலும் பிற சிங்கள ஆதிக்கப் பகுதிகளில் வசித்துவருகிறார்கள்''
கே: தமிழர்களை எல்லாம் அழித்துவிட்ட பிறகு, வெறும் சிங்களவர்கள் மட்டும் வாழும் இலங்கையால் இந்தியாவுக்கு நன்மையா?

சிரித்தார். ''இங்கு வருவதற்கு முன் ஒரு சாப்டவேர் நிறுவனத்தில்இருந்தேன். சமீபத்திய மும்பை தாக்குதல் நடந்தன்று Bar - ல் அமர்ந்துஎன் மேலதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் ஒரு தமிழர். அப்போதுஎங்களுக்கு எதிரே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த எங்களது சக ஊழியர்,'இந்தத் தேவடியா பசங்களுக்கு இதுதேவைதான்' என்று திருவாய் மலர்ந்தார்.அவர் ஒரு சிங்களவர். நாங்கள் இருவரும் தமிழர்கள் என்று ஞாபகம்வந்தவராக அமைதியாகிவிட்டார். சிங்களவர்களைப் பொறுத்தவரையில்தமிழர்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கிறது. அதனால் இந்தியாவை எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் உண்டு. பாகிஸ்தான், சீனா உடனான இந்தியப் போரில் இந்த எண்ணத்தைத்தான்சிங்கள அரசு பிரதிபலித்தது.
பாகிஸ்தான் ஆயுதம் கொடுக்கிறது என்று இந்தியாவும் கொடுக்கிறது. ஆனால் இதனால் இங்குள்ள தமிழர்கள் இந்திய அரசை எதிர்க்கத் தொடங்கியிருப்பதாக அறிகிறேன். தமிழர்களையும், எதிர்த்துக் கொண்டு சிங்களவனுக்கு உதவுவது சரியில்லை.ஏனென்றால் எதிர்காலத்தில் இந்தியப் பாதுகாப்புக்கு சிங்களவனால்நிறைய ஆபத்து இருக்கிறது. இதை இங்குள்ளவர்கள் உணர்வார்களா? என்றுதெரியவில்லை. சில மாதங்களுக்கு முன் சீனாவில் கைதான பாகிஸ்தான்பயங்கரவாதிகளுடன் ஒரு சிங்களவனும் இருந்தான் '' என்றார் அந்த நண்பர்...

இதுதெல்லாம் பேசிவிட்டு ரொம்ப நேரம் கழித்து எடிட்டிங் அறையில் இருந்துகிளம்பிய அவர் என்னிடம் விடைபெறும் போதுதான் அவரது பெயரை இன்னும்நான் கேட்கவே இல்லை என்று தெரிந்தது... அதன்பின்பு எங்கள் செல் எண்கள்பரிமாறப்பட்டன. என் விசிட்டிங் (சரியான தமிழ் வார்த்தை என்ன?) கார்டை அவருக்குக்கொடுத்தேன். அவர் சென்ற பிறகு இறுதிக்கட்ட படத்தொகுப்பில் இருந்தஎன் ஆவணப் படத்திற்கு பதிவு செய்து வைத்திருந்த அவரதுகுரலைச் சேர்த்தோம்...
எனக்கு மனநிறைவாக இருந்தது.....

Monday, February 23, 2009

செத்தொழியட்டும் தமிழன்; காமெடி சேனலைப் போடு; கொஞ்சம் சிரிக்கலாம்!


தமிழனத் தலைவரின் தியாகம் வாழ்க....
ஈழத்தில் கொத்துக் குண்டுகள் போட்டு குழந்தைகளையும், பெண்களையும்கொன்று குவித்து வருகிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு கட்டாயகருக்கலைப்பு செய்து அப்பட்டமான, இதுவரை இல்லாத இனஅழிப்பைஅரங்கேற்றி வருகிறது, சிங்களப் பேரினவாதம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்ஈழத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை மகிழ்ச்சியாகவைத்திருக்க கருணாநிதி அண்ட் குடும்பத்தினர்செய்து வரும் தியாகத்தை நினைத்தாலே மனசு பூரிக்கிறது.
போர் நிறுத்தம் கோரி, மத்திய அரசிற்கு சட்டமன்றத் தீர்மானங்களைஅனுப்பிவிட்டு போர் முடிவுக்கு வரவில்லையென்றால் ஈழத்துக்குப்ப போய்சாகவும் தயார் என்று கலங்கியவர், கருணாநிதி. ஈழத்தமிழர்கள் சாவதைஇன்டர்நெட் படங்களில் பார்த்துவிட்டு தாங்க முடியாத துயரம்கொண்டதாக மாங்ககொல்லை மீட்டிங்கில் கண்களை குளமாக்கிக் கொண்டார், கருணாநிதி. கருணாநிதியின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்துஇலங்கைத் தமிழர் நலப் பேரவை மூலம் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடித்து வருகிறார்கள்.அதே கருணாநிதியின் வாரிசுகள் அண்மையில் ஆதித்யா என்கிறசிரிப்புச் சேனலைத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்குப் போட்டியாகதமிழனை சிரிக்க வைக்க சிரிப்பொலி என்கிற மற்றொரு சிரிப்புச் சேனலை கருணாநிதியே தொடங்கி வைத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். கருணாநிதி தான் உண்மையிலேயே தமிழனத் தலைவன்.மாவீரன் முத்துக்குமார் சவஊர்வலத்தில் உன் மகனுக்கு பிறந்தநாள் விழாக் கொண்டாடியவர் ஆயிற்றே. மாவீரன் முத்துக்குமாருக்குதீவிரவாதி முத்திரை குத்தியவர், அவரது மகன் ஸ்டாலின்.(அவர்கள் கட்சியிலேயே ஒருவர் இதே காரணத்துக்காகதிமுக மனித சங்கிலியில் தீக்குளித்து இறந்தவரை தீவிரவாதி என்று சொல்ல தைரியம் உண்டா ஸ்டாலினுக்கு?).கனிமொழி, எத்தனை கூட்டங்களில் ஈழத்தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர்வடித்திருப்பாய்... இப்போது தமிழன் செத்துக்கொண்டிருக்கும் போதுஅவர் மகன் ஆதித்யா பெயரில் காமெடி சேனல்.இந்திய டூடேவில் விருந்தினர் பக்கத்தில் எத்தனை முறை நியாயம் பேசியிருப்பார்,கனிமொழி (அதில் சிலதை படித்துவிட்டு உங்களை புதுமைப்பெண் என்று நண்பர்களிடம் சொன்ன என் புத்தியை செருப்பால் அடிக்கவேண்டும்) இன்றைக்கு போரை நிறுத்தச் சொல்லாத யாரையும் எதிர்க்கும்திராணி கனிமொழிக்கில்லை.. ஒரே ஒரு எம்.பி., பதவிக்கும், டெல்லியின் கதகதப்பானசீதோஷ்ண நிலைக்கும் உங்களை அடமானம் வைத்து விட்டீரீங்களே! கனிமொழிக்கும் பார்ப்பன பாப்பாத்தி ஜெயலலிதாவுக்கும் என்ன வித்தியாசம்இருக்கிறது. போர் நடந்தால் தமிழன் சாவான் என்று வியாக்கானம் பேசுகிறார், ஜெ.,அந்த சாவை வேடிக்கைப் பார்ப்பதோடு காமெடிச் சேனல் தொடங்கிய கனமொழிகைகொட்டி சிரிக்கிறார்.... இனியும் கருணாநிதியை யாராவது தமிழினத்தலைவன் என்றால் செருப்பு பிய்ந்து போகும்... ஜெயலலிதா என்கிற நாய்...சந்தடி சாக்கில் காங்கிரஸை துணைக்குக் கூப்பிடுகிறாள்... தமிழனுக்குச்சேவை செய்யும் காங்கிரஸ் எங்கே தன் கையை விட்டுப் போய்விடுமோஎன்று கருணாநிதி கொய்யோ முய்யோ என்று கத்துகிறார்....தமிழனைக் கொல்வதில் காங்கிரஸ், திமுக, அதிமுக எல்லோரும்ஒரே அணியில் இணைந்திருக்கிறார்கள் ...
இவர்களுக்கும் நம் தமிழன் வரும் தேர்தலில் தோரணம்கட்டுவான்; கோஷம் போடுவான்; ஓட்டும் போடுவான்; உண்மையில்இதுபோன்ற ஒரு காமெடி உலக தொலைக்காட்சிவரலாற்றில் வரவே வராது!

Saturday, February 21, 2009

ப்ரணாப் முகர்ஜி சொன்னதுதான் சரி



நாடாளுமன்றத்தில் பேசிய அயலுறவுத்துறை அமைச்சர்ப்ரணாப் முகர்ஜி, 'போரை நிறுத்தச் சொல்லி இலங்கையைஓரளவுக்கு மேல் நம்மால் வற்புறுத்த முடியாது. காரணம், பிறநாட்டுப் பிரச்னையில் ஓரளவுக்கு மேல் தலையிடமுடியாது' என்று திருவாய் மலர்ந்தார்.
இவருடைய இந்தக் கருத்தையும், அப்போது பேசியஒருசில கருத்துகளையும் திரும்பப் பெறச் சொல்லித்தான்பா.ம.க., ம.தி.மு.க., போன்ற கட்சி எம்.பி.,கள் கடும்எதிர்ப்புத் தெரிவித்தனர். இதில், எதிர்ப்புத் தெரிவிக்கஎன்ன இருக்கிறது? உண்மையைத்தானே அவர் சொல்லியிருக்கிறார்.இதே கருத்தைத் தான் கடந்த காலத்திலும். நிகழ்காலத்திலும் பலரும்வற்புறுத்தி வருகிறார்கள். இலங்கை இன்னொரு தேசம்.அந்த தேசத்துடன் ஒப்பந்தம் போட ராஜீவ் காந்தி யார்?அயல் தேசத்தை ஓரளவுக்கு மேல் வற்புறுத்த முடியாது என்று அன்றைக்கு இந்த காங்கிரஸ் ஜமீன்தார்களுக்குத் தெரியவில்லையா?
அதுமட்டுமா? தங்களுடைய ஏகாதிபத்தியத்தை நிரூபிக்கஅமைதிப்படையை வேவொரு தேசமான இலங்கைக்கு அனுப்பியபோது இந்த உண்மை இந்த காங்கிரஸ் கபோதிகளுக்குத்தெரியவில்லையா? அத்துடன், இலங்கை அரசை மிரட்டுவதற்காகபுலிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்து உங்கள் இந்தியாவுக்கு அழைத்துவந்துபயிற்சி கொடுத்தது எந்த நாட்டின் இறையாண்மையைக் காப்பாத்துவதற்காக?
அட ஞானசேரன்களா? இதற்கெல்லாம் உங்களிடம் எந்தப் பதிலும்இல்லை என்று எங்களுக்குத் தெரியுமே. சரி, கடந்த காலத்தில் காங்கிரஸ்மேதாவிகள் செய்த அந்தத் தவறை திருத்திக் கொள்ளும்விதமாகவேஅயல் நாட்டுப் பிரச்னையில் தலையிட மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்,ப்ரணாப் முகர்ஜி என்று வைத்துக் கொண்டாலும்; நான் கேட்கிறேன்,ராடார் அனுப்பியது, ஆயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன்வழங்கியது, படையினரை அனுப்பியது, இப்போதும்கூட, ராணுவ வீரர்களின்காயங்களுக்கு மருந்து அனுப்ப ஆயத்தமாகி வருவதெல்லாம்அயல் தேசப் பிரச்னையில் தலையிடுவது ஆகாதா?
இதேபோரில் காயம் பட்ட புலிகளுக்கு அனுப்ப வேண்டாம்; அப்பாவித்தமிழர்களின் காயங்களுக்கு மருந்து அனுப்ப வக்கில்லாத மனித நேயம் அல்லவா உங்களிடம் இருக்கிறது? அட, மானங்கெட்ட தங்கபாலுகளா?இளங்கோவன்களா? கொஞ்சமாவது உணர்ச்சி என்பது இருந்தால்தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளுங்கள். எதிர்வரும்நாடாளுமன்றத் தேர்தலுக்குள் புலிகளையும், தமிழர்களையும் அழித்துவிடுவதுதானே உங்கள் விருப்பம். சிஙகளவன் தாக்குதலில் ஐம்பது பேர் பலியாவார்கள்;ஐநூறு பேர் புலியாவார்கள் ஜாக்கிரதை

Friday, February 20, 2009

தோழர்களே சீமான் கைதல்ல சரணடைந்தார்

தோழர் சீமான் கைதாகி விட்டார் என்று சொல்லாதீர்கள்.காரணம் அவர் கோர்டில் சரண் அடைந்திருக்கிறார்.தினமலரின் ஆசையும் அரங்கேறிவிட்டது. (முடிந்தால்இதுதொடர்பான என்னுடைய முந்தைய பதிவைப் படிக்கவும்)
சீமானுடைய சினிமா பார்வையிலும் இன்னும் பிறஅணுகுமுறையிலும் எனக்கு சில முரண்பாடுகள் உண்டு. அதுபற்றியெல்லாம் வேறு சமயங்களில் பேசிக்கொள்ளலாம். ஆனால்ஈழத் தமிழர்களுக்காக அவர் எழுப்பும் குரல் குறிப்பிடத்தக்கதாகஇருக்கிறது. வைகோ போன்றவர்கள் பேசிப் பேசியே நம்மையும்சேர்த்து சோர்வடையச் செய்துவிடுகிறார்கள். பிரேதப் பரிசோதனைஅறையில் மாவீரன் முத்துக்குமாரின் உடலை பார்த்துவிட்டுவெளியே வந்த வைகோ. சேனல்களின் மைக் முன்பு தொடங்கிய பேட்டியை எங்கே முடிப்பது என்றுதெரியாமல் பேசிக் கொண்டே இருக்க ஜெயா டிவிநிருபர் அவரது பேச்சை நிறுத்தும் படியாக மத்தியஅரசு பற்றி ஒரு கேள்வியை வீசினார்.
அம்மா டிவியின் நிருபர் என்பதால் கோபத்தைஅவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் கேள்விக்குபதிலளித்துவிட்டு அந்த நீண்ட பேச்சை ஸாரி பேட்டியை முடித்துக் கொண்டார்.ஆனால் வளவளவென பேசாமல் ஈழப் பிரச்னையையும் அதில் உள்ளஇந்திய அரசியல் கட்சிகளின் சுயரூபத்தையும் அம்பலப்படுத்துவது சீமானின்வழக்கம். சீமான் தமிழகம் முழுவதும் பரப்புரை செய்தால் நிச்சயம்ஈழம் தொடர்பான உருப்படியான நிலைப்பாடு மக்கள் மத்தியில் ஏற்படலாம்.ஆனால் இந்தக் கேடுகெட்ட காங்கிரஸ் கபோதிகள் கருணாநிதியை மிரட்டி சீமானை அடிக்கடி சிறைக்குள் தள்ளிவிடுகிறார்கள். ஊரில்குடிசைவீட்டில் வசிக்கும் தாயிக்கு ஒரு சொந்த வீடுகட்டித்தர முடியாத நிலையில் இருப்பதாக அவர் வருத்தப்படுவதுதான்வேதனையிலும் வேதனை.
(தொடர்ந்து பதிவுகள் போட போதிய நேரமின்மையும் இன்டர்நெட்கட்டணமும் என்னை அச்சுறுத்துகிறது. பகுதிநேர வேலைகளைத் தொடங்கிசில நாட்கள் ஆகிறது. அதில் ஏதாவது தேறினால் என் பதிவுகள் அதிகரிக்கவாய்ப்பிருக்கிறது. இதுவரை நான் அளித்த எந்தப் பதிவும் எனக்குமுழுத் திருப்தி அளிக்கவில்லை என்பதால் விரைவில்நான் யார் என்பதையும் அறிவித்துவிட்டு சில உருப்படியானபதிவுகளைப் போடப் போடுகிறேன்)
கொசுறு: யாருக்காவது சீமானின் செல்·போன் எண்தேவைப்பட்டால் எனக்கு பின்னூட்டம்இடவும். அடுத்தப் பதிவில் அந்தஎண்ணை வெளியிடுகிறேன்விரைவில் சிறையில் இருந்துவெளிவந்துவிடும் அவரிடம்உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்....ஆனால் இதற்கான அனுமதியை அவரிடம்நான் பெறவில்லலை என்பது வேறு விஷயம்!!!

Thursday, February 19, 2009

வழக்குரைஞர்களே உஷார்: மாவீரன் முத்துக்குமார் உங்களை நம்பித்தான்உயிராயுதம் ஏந்தினார்

உயர்நீதிமன்ற அராஜகம்:இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான வழக்குரைஞர்களைதிசை திருப்பும் அரசின் தந்திரம்
இது பற்றி ஒரு பதிவை sajayravee.blogspot.com -ல் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்,தோழர் ரவீ. என் பங்கிற்கு நானும். மாவீரன் முத்துக்குமார் எழுதிய மரண சாசனத்தில் 'ஈழத்தமிழர் பிரச்னை என்றில்லை தமிழ்நாட்டிற்காதரவான போராட்டம்எதுவாக இருந்தாலும் சரி முதலில் களம் இறங்கியவர்கள் இந்த வழக்கறிஞர்கள் தான். இந்தமுறையும் (இலங்கைப் பிரச்னையில்) நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில்இறங்கியவர்கள் இந்த வழக்குரைஞர்கள்' என்று சொல்லியிருந்தார்.அத்துடன் அண்மையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இடையே நடந்தசாதி மோதல் கூட உளவுத் துறையின் தூண்டுதல் காரணமாக இருக்கலாம்என்று தான் சந்தேகப்படுவதாகக் கூறியிருந்தார்.

உயர்நீதி மன்ற கலவரப் பிரச்னை தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமிமீதான தாக்குதலில். சுப்பிரமணிய சுவாமியின் ஜனதா கட்சியில் இருக்கும்தொண்டர்களின் எண்ணிக்கையைவிட அவருக்குப் பாதுகாப்புக்கு இருக்கும்போலீஸாரின் எண்ணிக்கை அதிகம். அதுவும் துப்பாக்கி ஏந்திய நிலையில்.இருந்தும் அவரை வழக்குரைஞர்கள் தாக்கியிருக்கிறார்கள் என்றால் அதைபோலீஸார் மறைமுகமாக ஊக்குவித்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.இதையடுத்து வழக்குரைஞர்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. அதுவும்வரலாறு காணாத அளவுக்கு. அதிலும் சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட நாளிதழ்வாரயிதழ் நிருபர்கள் இருக்கும் போது மக்கள் தொலைக்காட்சி நிருபர்களையும்தமிழ் ஓசை நிருபரையும் மட்டும் தாக்கியிருப்பதும் சந்தேகத்தைக்கிளப்புகிறது. வழக்குரைஞர்களின் வாகனங்களையும் ஆளில்லாத அலுவலகங்களையும்தாக்கியிருக்கிறார்கள். இப்போதே போலீஸாரின் வன்முறையை எதிர்த்து நாடு முழுவதும்வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று வழக்குரைஞர்கள்சங்கங்கள் அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆக, உளவுத் துறையின் வேலை பலிக்கத் தொடங்கிவிட்டது.இனி ஒரு வேளை வழக்குரைஞர்கள் இலங்கைப் பிரச்னையை விடுத்துபோலீசுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தலாம்.பத்திரிகைகளும் இதற்கே முக்கியத்துவம் கொடுக்கலாம்.தினமலரும் சீமானை விட்டுவிட்டு இதில் அதிகம் கவனம்செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம். நமது றா உள்ளிட்டஉளவுத் துறையினர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்துமக்களைப் பாதுகாக்கும் பணியை ஒரு தடவையும் ஒழுங்காகசெய்தது கிடையாது. கோவை. பெங்களூரூ, மும்பை, ஹைதராபாத்நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் இதற்குதாரணம்.ஆனால் இதுபோன்ற 'மாமா' வேலையை அவர்கள் நன்றாக செய்துபுண்ணியம் கட்டிக் கொள்வார்கள். வழக்குரைஞர்களே உஷார்.முத்துக்குமார் சொன்ன சொல்லை மறந்துவிடாதீர்கள். உங்களைத் தான் முத்துக்குமார் மலைபோல் நம்பியிருந்தார்.ஒரு சுய தம்பட்டம்: இலங்கை தூதரகம் முன்பு சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள்(மக்கள் மற்றும் தமிழன் தொலைக்காட்சியினர்) நடத்திய முற்றுகைப் போராட்டத்தின் போது சந்து முனை சிந்தாக இலங்கைத்தேசிய கொடியை எரித்து எதிர்ப்புக் காட்டிய குழுவில் நானும்பங்கெடுத்திருந்தேன் என்பதை பெருமையாகக் கூறிக் கொள்கிறேன்.நன்றி...

Wednesday, February 18, 2009

சீமான் பயங்கரவாதியாம் சொல்கிறான் வெக்கங்கெட்ட தினமலர்

புதுவையில் தேச விரோதமாகப் பேசியஇயக்குநர் சீமானைக் கைது செய்ய இருந்தஅம்மாநில போலீஸாரிடம் இருந்து 'தப்பியோடிய சீமான்'என்று பார்ப்பன பரதேசி தினமலர் நேற்று செய்தி வெளியிட்டது.அந்தச் செய்தி வெளியானதும் வேறு வழி இல்லாமல் தமிழக போலீஸார் அவரைக் கைது செய்துவிடுவார்கள் என்றுமலம் தின்னக் காத்திருந்த தினமலருக்கு கிடைத்ததோஏமாற்றம். அந்த ஏமாற்றத்தினால் ஏற்பட்ட ஆத்திரத்தில்இன்றைக்கு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.அதில் புதுவையில் பதிவான வழக்கிற்கு புதுவைபோலீஸ் தான் கைது செய்ய வேண்டுமா?தமிழக போலீஸ் ஏன் சீமானைக் கைது செய்யக் கூடாது?என்று தனது வக்கிர ஆசையை புணர்ந்திருக்கிறது அந்தவெக்கங்கெட்ட பீ தின்னும் நாய் (நாயைவிட எந்த விதத்திலும்உயர்ந்தவர்கள் இல்லை தினமலர் பொறுக்கிகள்) தினமலர்.
அத்துடன் பாக்ஸ் செய்தியில் மற்றொரு அசிங்கத்தையும் தின்றிருக்கிறது.அதில். மும்பையில் குண்டு வைத்த பயங்கரவாதி சென்னைக்கு வந்துபதுங்கினால் மும்பை போலீஸ் வரும் வரை தமிழக போலீஸ் காத்திருக்குமா?என்று சட்ட வல்லுனர்கள் வருத்தப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறது.அந்தச் செய்தியை எழுதிய நிருபர் கசும(¡)லம், உண்மையில் நல்லபிறப்பாக இருந்தால் அந்த சட்டவல்லுனர்கள் யாரென்று சொல்லியிருக்கவேண்டும். அந்த இடத்தில் 'சுப்பிரமணி சுவாமி வருத்தப்படுகிறார்' என்று அந்த முட்டையடிநாயிடம் கேட்காமலேயே அந்த பார்ப்பன ஜெயலலிதா மூத்திரம்தின்னியின் பெயரைப் போட்டிருக்கலாம். அந்த பப்ளிசிட்டி நாயும்அதற்கு ஒன்றும் எதிர்ப்பு தெரிவித்திருக்கப் போவதில்லை.நான் கேட்கிறேன்.... சீமான் என்ன பயங்கரவாதியா? தமிழன் சாகிறான் என்று வேதனைப்படும் அவர் பயங்கரவாதியா? தினமலர் தகவல் பொறுக்கிகள் எவனெவனிடம் கவர்(பத்திரிகைக்காரன் வாங்கும் லஞ்சம்) வாங்குகிறான்?எவ்வளவு வாங்குகிறான்? என்று அடுத்தப் பதிவைப் போடப் போகிறேன். காத்திருங்கள்.அந்த நாய்கள், சீமானைப் பற்றி மட்டுமல்ல வேறு யாரைப்பற்றியும்எழுத அருகதை அற்றவர்கள். முன்னாள் பத்திரிகையாளர் உமா கொடுத்தபாலியல் சீண்டல் வழக்கில் இருந்து தப்பிக்க வைத்தகபோதி கருணாநிதிக்கு வாலாட்டிக் கொண்டு. சலுகை மழை என்றுமுதல் பக்கத்தில் இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.உன் உண்மையான முகம் என்ன என்றுஎங்களுக்குத் தெரியாதா? நீ கருணாநிதியை எப்படியெல்லாம்எதிர்த்தவன் என்று ஊருக்கே தெரியுமே. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்அவள் மூத்திரைத்தை குடிக்க நீ தயார்.சீமான் என்ன உன் சோற்றிலா மண் போட்டான்?உண்மையிலேயே நீ ஓர் அப்பனுக்கு..... ந்தால் இதேபுதுவையில் ராஜீவ் சிலைக்கு செருப்பு மாலை போட்டுகைதான உன் அலுவலக நிருபரின் செய்திப்போட்டிருக்க வேண்டாமா?நீ தான் ஓர் அப்பபனுக்கு.... வில்லையே....சீமானை உன்னால் என்ன செய்ய முடியும்?அந்தச் செய்தியை எழுதிய தகவல் பொறுக்கிக்கு ஒரு வேண்டுகோள்இந்த இதழ் ஜூனியர் விகடனில் வந்தசீமான் பேட்டியைப் படிக்கவும்சீமானை பயங்கரவாதியோடு ஒப்பிட்டு எழுதியவன்பெரும்பாலும் ஒரு தமிழனாகத்தான்இருக்க வேண்டும்... நம் கையைக் கொண்டுநம் கண்ணைக் குத்துகிறான் பார்ப்பன பரதேசி தினமலர்... உமாவிடம் கேட்டால் இன்னும் உன் பூழவாக்கு வெளியே வரும்....

Tuesday, February 17, 2009

சுப்பிரமணிய சுவாமிக்கு முட்டையடி

சந்தோஷம் பொங்குதே.. சந்தோஷம் பொங்குதே...இதைவிட தமிழனுக்கு வேறு என்ன வேண்டும்?என் நண்பர் ஆனந்த் செல்லையா இப்படி சொன்னார்:''முன்னெல்லாம் நான் வழக்குரைஞர்களை மதிக்கவேமாட்டேன். ஆனால் ஈழப்பிரச்னையில் அவர்கள் காட்டும்ஆவேசம் பாராட்டும்படியே இருக்கிறது'' என்றார்.சுப்பிரமணியசுவாமிக்கு விழுந்த அடி; தமிழனுக்குஇதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

Thursday, February 12, 2009

இந்தியை எதிர்த்ததால் சாகிறான் தமிழன்


இந்தியையும், சமஸ்கிருதத்தையும் எதிர்த்த ஒரே மாநிலம் தமிழகம் என்பதோடு பெரியாரால் மிகப் பெரிய அளவில் ஆரியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த மாநிலம் என்றதால் இந்திய பார்ப்பன ஏகாதிபத்தியம் தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. அதில் சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணனன் போன்ற பார்ப்பன அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையால் இந்தியத் தமிழன் மட்டுமல்ல இலங்கைத் தமிழன் கூட அழிந்து கொண்டிருக்கிறான்.இத்தாலியில் இருந்து வந்து சேர்ந்த சோனியா தன் கணவனின் சாவுக்குக் காரணமான புலிகளை ஒழித்துக் கட்டத் தீர்மானித்துவிட அதற்கு பார்ப்பன அதிகாரிகள் தூபம் போட்டுக் கொடுத்தனர். ராஜீவ் கொலையாளிகளாக குற்றம் சாட்டப்பட்ட நளினியை ப்ரியங்கா சந்தித்தபோதும், ராஜீவ் கொலையாளிகளுக்கு தங்க வீடு கொடுத்ததாக கைதாகி விடுதலையான பெங்களூரூ ரங்கநாத்தை சோனியா சந்தித்த போதும் தனக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஏதாவது ஆபத்து இருக்கிறதா? அதுபற்றி சிவராசன் போன்றோர் ஏதாவது பேசிக்கொண்டார்களா? என்பதையும் கேட்டிருக்கிறார்கள். இந்த சந்திப்புகளின் நோக்கமே இதுபோன்ற ஓர் அநியாயத்தை தமிழர்களுக்குச் செய்யத்தான்.ஆனால் சோ, ஹிந்து ராம், தினமலர் போன்ற பார்ப்பனர்களும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செய்து வரும் பிரசாரத்தால் தாய்த்தமிழன் கூட தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்கள் பற்றி தவறான கருத்துகளை கொண்டிருக்கிறான். அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிர்மாணிக்கத் திட்டமிட்டிருக்கிறது. எனவே, அதற்காகவே புலிகளை ஒழித்துக் கட்டும் இந்தியாவின் சதி வேலைக்குத் துணைப் போகிறார்கள் என்கிற தகவலும் வந்துள்ளது. இதனால் தான் இந்த இதழ் வீக் பத்திரிகையில், கவிதா முரளிதரன் எழுதியுள்ள கட்டுரையில் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பிடுங்கி அவர்களை ஒழித்துக்கட்ட இந்திய அளித்து வரும் ஆதரவு திருப்தி அளிப்பதாக ராஜபட்ஷ தெரிவித்திருக்கிறான்.அம்பானியின் வாரிசுகள் இலங்கையில் தங்களுடைய வியபார சாம்ராஜ்ஜியத்தை நிறுவிவிட்டார்கள். அவர்களுக்கு எந்த வகையிலும் நஷ்டம் ஏற்பட இந்திய அரசியல்வாதிகள் விட்டுவிடுவார்களா? இந்தியாவை யார் ஆள்வது என்பதை தீர்மானிப்பதே அம்பானி போன்ற இந்தியத் தொழிலதிபர்கள்தான். சரி என்னச் சொல்லி என்ன ஆகப்போகிறது? இங்கே, தினமலரும் ஜெயலலிதாவும் கருணாநிதியின் சுயநலமும் தமிழனுக்கு எதிராக இருக்கும்போது ஆயிரம் முத்துக்குமார்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். சாவதற்கு இல்லை. இவர்களை எதிர்த்து போராடுவதற்கு?

Tuesday, February 10, 2009

வைகோ கைது-?

செவ்வாயன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுக¢கூட்டம¢ சென்னை அண்ணா நகரில் நடந்தது. அதில் பேசிய வைகோ, ‘‘ஈழத் தமிழர்களை காக்கும் நோக்கில் தமிழகத்தில் இருந்து பதினான்கு வழக்கறிஞர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் முல்லைத் தீவுக்கு கப்பலில் புறப்பட்டார்கள். அவர்களை நடுகடலில் இந்திய அரசு தடுத்து நிறுத்தி கைது செய்திருக்கிறது.இனியும் போரை இந்திய அரசு நிறுத்த நிர்பந்திக்க மறுத்தால் இலங்கைக்கு வெறுங்கையுடன் தமிழர்கள் செல்ல மாட்டார்கள்; ஆயுதங்களுடன் செல்வார்கள். அப்போது நான் ஓடி ஒளிய மாட்டேன். மாணவர்களே! வீதிக்கு வாருங்கள். மாவீரன் முத்துக்குமார் உங்களை நம்பித்தான் உயிரை விட்டிருக்கிறான்’’ என்று உணர்ச்சிப் பொங்க அவர் பேசினார். அப்போது கூட்டம் ஆர்ப்பரித்தது. ஒருவேளை இந்தப் பேச்சு, பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இருந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்படலாம். அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இந்த உத்தரவை கருணாநிதி பிறப்பிப்பார் என்பது என் யூகம்.

Friday, February 6, 2009

ஈழம்: சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்!


இந்தத் தலைப்பு செருப்பில் அடித்தாலும் திருந்தாத காங்கிரஸ்காரன்களுக்காக...

இலங்கையில் என்ன நடக்கிறது? என்று சீமானும், அமீரும் பேசினால் சிறையில் போடச் சொல்கிறார்கள். தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரும் அதை செவ்வனே முடித்து வைப்பார். அமெரிக்கக்காரன் அதுவும், அந்நாட்டின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் புரூஸ் ஃபெயின் இலங்கையில் என்ன நடக்கிறது? என்பதை புட்டுப் புட்டு வைக்கிறார். வெள்ளைக்காரனுக்குத் தெரிந்த இந்த உண்மை, தங்கபாலுவுக்கும், இளங்கோவனுக்கும், தினமலருக்கும், ஹிந்து ராமுவுக்கும் தெரியாமலா இருக்கும்? இனி, குமுதம் ரிப்போர்ட்டரில் அண்மையில் வந்த புரூஸின் பேட்டியைப் படிக்கலாம். வாருங்கள்.கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்த மனித உரிமை போராளியான புரூஸ் ஃவெயின், ‘‘இலங்கையில் தமிழின அழிப்பு (நிமீஸீஷீநீவீபீமீ) நடக்கிறது. இதைச் செய்யும் அதிபர் ராஜபட்சேவின் சகோதரரும், இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபைய ராஜபக்சே, ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறேன்’’ என்று பலரின் புருவங்களை உயரச் செய்தார். அவரைச் சந்தித்தோம்.இலங்கையில் நடப்பது தமிழினப் படுகொலை என்று எதனடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்?‘‘தமிழருக்கு எதிரான இனவெறியை பல ஆண்டுகளுக்கு முன்பே மகாவம்சா, தர்மபாலா ஆகியோர் சிங்களவர் மனதில் பதிந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். கிறிஸ்துவர்களுக்கு ஏசுநாதர் எப்படியோ அப்படி சிங்களவர்களுக்கு தர்மபாலா. அதற்குப் பின் வந்த புத்தத் துறவிகளும் தமிழினத்துக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மூவாயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், மூவாயிரம் பேரின் கதி என்ன ஆனதென்றே தெரியவில்லை? ஆயிரம் தமிழர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இரண்டாயிரம் பேர் ஊனம் அடைந்திருக்கிறார்கள். ராணுவத்துடன் நடந்த சண்டையில் உயிர்நீத்த புலிகளின் எண்ணிக்கையை இதில் சேர்க்கவில்லை’’அதற்காக கோத்தபைய, சரத் பொன்சேகா ஆகியோர் மீது மட்டும் வழக்குத் தொடர்வது ஏன்?‘‘இவர்கள் இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். இனஅழிப்புக்கெதிரான அமெரிக்கக் குற்றவியல் சட்டப்பிரிவு, 1091_ன்படி இவர்கள் செய்வது தண்டனைக்குரிய குற்றம். அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருக்கும் அவர்கள், அமெரிக்கச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும். அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக பட்சமாக மரண தண்டனை கூட கிடைக்கலாம். இலங்கை ராணுவம் மேற்கொண்ட இனஅழிப்புக்கு ராணுவத்தில் உயர் பதவியில் உள்ள இவர்கள் இருவருமே முக்கியப் பொறுப்பு. இலங்கையின் தமிழின அழிப்பை அம்பலப்படுத்தும் ஆதாரங்களை ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாகத் தொகுத்திருக்கிறேன் (அதைக் காண்பிக்கிறார்). நாடு திரும்பியதும் இலங்கைக்கு ராணுவத்துக்கு எதிரான இந்த வழக்கைப் பதிவு செய்வேன்.இலங்கையில் தமிழினஅழிப்பு எந்தெந்த வழிகளில் நடக்கின்றன?‘‘தீவிரவாத அழிப்பு என்கிற பெயரால் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிறார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவிகளே கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் தடை செய்த பால் பவுடரை வழங்கி, தமிழர்களைக் கொன்று வருகிறது, இலங்கை அரசு. தமிழர் பகுதிகளில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கிடையாது. உயிர்போகும் நிலையிலும், மாட்டு வண்டிப் பயணம் தான். அப்படியென்றால், தமிழர்கள் மீண்டும் கற்கால வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்களா? என்று சந்தேகம் வருகிறது. அங்கு அரங்கேறும் இனஅழிப்பு வெளியே தெரியக் கூடாது என்பதற்காகவே செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை விரட்டி விட்டார்கள்.இதுவரையில் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகளில் ஒருவர்கூட தண்டிக்கப்பட்டதே இல்லை. தமிழக முகாம்களில் உள்ள அகதிகளிடம் பேசினால் இன்னும் பல இனஅழிப்பு அவலங்கள் அம்பலமாகும்’’இலங்கையில் நடப்பது தமிழன அழிப்பு என்கிற உங்கள் வாதம், உலகநாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுமா?‘‘இனஅழிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான முதல் அமெரிக்க குடிமகன்கள் கோத்தபைய ராஜபட்சேவும், சரத்பொன்சேகாவும் தான். இவர்கள் மீது அமெரிக்கா நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்தால் சர்வதேச ஊடகங்களின் கவனம் இந்தச் செய்தியின் மீது படும். அதன்மூலம் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்’’நீங்கள் ஒரு மனித உரிமைப் போராளி என்பதால் இந்தக் கேள்வி. இலங்கையில் மனித உரிமையை மீறுபவர்கள், தமிழீழ புலிகளா? இலங்கை அரசா?‘‘தமிழன அழிப்பு பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். அதே நேரத்தில் தீவிரவாதத்தை அழிக்கிறேன் என்ற போர்வையில் தமிழ்ப் பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவிக்கும் இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய மனித உரிமை மீறல்; கிரிமினல் குற்றம்’’அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமாவின் கவனத்துக்கு இப் பிரச்னையை கொண்டு செல்வீர்களா? அவரிடம் புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்வீர்களா?‘‘எல்லோர் எண்ணங்களும் ஒரே மாதிரி இருக்காது. இன்றைய சூழ்நிலையில் புலிகள் பற்றி பேசுவது, பிரச்னையை திசை திருப்பிவிடும். கவனிப்பதற்கு காஸா, ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தா என்று பிரச்னைகள் இருக்கும்போது இலங்கைப் பிரச்னை என்பது வெள்ளை மாளிகைக்கு இரண்டாம் தரம்’’ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) இலங்கைப் பிரச்னையில் தலையிடுமா?(சிரிக்கிறார்) ‘‘தன்னை அழைப்பவர்களுக்கு மட்டுமே ஐ.நா. உதவி செய்யும். உகாண்டாவில் இனப் படுகொலைகள் நடந்தபோது ஐ.நா என்ன செய்தது? ஐ.நா.வில் அங்கம் வகிப்பதால் எந்த நாடும் தேவதையாகிவிடாது. ஈழப் பிரசனைக்கு தனி நாடு தீர்வாகுமா?‘‘இந்த நேரத்தில் தனிநாடு பற்றி பேசுவது சரியாகாது. இதற்கு முன்பு தமிழர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தகளை இலங்கை அரசு குப்பையில்¢ போட்டு விட்டது. அந்நாட்டின் உச்ச நீதிமன்றமும் தமிழின அழிப்புக்குத் துணை போகிறது. இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு தனியுரிமையும் பாதுகாப்பும் தேவைதான்’’இலங்கையில் அரங்கேறும் தமிழின அழிப்பை இந்தியா கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?‘‘இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் இந்தியா ஈடுபாடு காட்டுவதில்லை என்பது உண்மை. ‘தமிழீழம் உருவானால் காஷ்மீர், அஸ்ஸாம், தமிழ்நாட்டு மக்கள் தனிநாடு கேட்பார்கள்’ என்று இந்தியா காரணம் சொல்லலாம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை இந்தியா பிரித்துக் கொடுத்தது சரியா? ‘தமிழீழம் உருவானால் தனித் தமிழ்நாடு கேட்பார்கள்’ என்று காரணம் சொல்வது, வெறும் கண்துடைப்பு. அதே நேரத்தில் பாகிஸ்தானும், சீனாவும் இலங்கையை ஆதரிக்கிறது’’இந்திய மீனவர்களை இலங்கை கடற் படையினர் சுட்டுக் கொல்கிறார்கள். இலங்கைக்கு எதிராக இந்தத் தகவலையும் அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவு செய்வீர்களா-?‘‘இலங்கை அரசு என்றைக்கும் சட்டத்தை மதிக்காது. எதிரே வருபவர், தமிழனைப் போல் யாராவது தெரிந்தாலே அவனை கொன்றொழித்து விட வேண்டும்; அவ்வளவுதான்! இனஅழிப்புக்கு எதிரான வழக்கில் இந்திய மீனவர் பிரச்னையைச் சேர்க்கப் போவதில்லை’’இலங்கை அரசின் தமிழன அழிப்புக்கு இறுதித் தீர்வுதான் என்ன? ‘‘சிங்களவரான சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டார். சிங்களவர்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்கள் மூலம் அந்நாட்டு அரசுக்கு எதிராக சிங்களவர்களின் ஆதரவையும் திரட்டவேண்டும்.ஒன்றாக இருந்த சிங்கப்பூர்_மலேசியா தனித்தனி நாடுகளாகப் பிரிந்து இன்றைக்கு சிறப்பாகவே இருக்கின்றன. இலங்கையில் எந்த இடம் யாருக்கு என்கிற விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் நாட்டைப் பிரிப்பதைத் தவிர வேறுவழியில்லை. எனக்கு அறுபது வயதாகிறது; 41 நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். இருபத்தி நான்கு மணிநேரமும் மனித உரிமைக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்துப் போராடி வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், சிங்களவர்கள் உடன் தமிழர்களைச் சேர்ந்து வாழச் சொல்வது, மீண்டும் கருப்பினத்தவரை வெள்ளையருக்கு அடிமையாக இருக்கச் செய்வதற்குச் சமம்!’’ என்றார் புரூஸ் ஃவெயின்.

நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

Thursday, February 5, 2009

ராஜபட்சேவுக்கு பெரியார் விருது



மைலாப்பூர் எம்எல்ஏ எஸ்வி சேகர் பார்ப்பனர்களுக்குஇடஒதுக்கீடு கோரியிருக்கிறார். இப்போது இருக்கும் அரசியல்பின்னடைவை சமாளிக்க சேகரின் கோரிக்கையை கருணாநிதி நிறைவேற்றலாம். அதன் மூலம் சமூக நீதி காத்த தலைவர்என்கிற பட்டத்தை அவருக்கு கழக உடன்பிறப்புகள் சூட்டலாம்.இந்த சூழ்நிலையில் கருணாநிதி என்னவெல்லாம் பல்டி அடிப்பார் என்கிற சின்ன கற்பனை1. சிங்கள மொழிக்கு செம்மொழி அங்கீகாரத்தை மத்திய அரசிடம் இருந்து போராடிப் பெறலாம்2. அழகிரி தலைமையில்ல மதுரையில் தமிழினம் காத்த தலைமகன் என்று பாராட்டிமகிந்த ராஜபக்ஷவுக்கு பெரியார் விருது வழங்கலாம்.3.இலங்கையில் போரை நிறுத்துங்கள் என்கிற திமுக அரசின் கோரிக்கையை ஏற்று 48 மணிநேரம்போரை நிறுத்த நடவடிக்கை எடுத்த ப்ரணாப் முகர்ஜிக்கு அண்ணா விருது வழங்கலாம்

Wednesday, February 4, 2009

கலைஞரால் கலங்கும் தமிழன்!



அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு
வணக்கம் ஒரு பூகோளமே பலி பீடம்என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதிஇருக்கிறேன்!
இந்த நூலை நீங்கள்தான்வெளியிட வேண்டும் என்றுவிரும்பினேன்!எல்லா விருப்பமுமாநிறைவேறிவிடும்!உங்களைப் பார்க்கவும்ஒப்புதல் கேட்கவும் ஆனஅளவுக்கு நான் உங்கள் அருகிலா இருக்கிறேன்!எட்டாத தூரத்தில் அல்லவா நீங்கள் இருக்கிறீர்கள்ஏன் எட்டாத உயரத்திலும் தான்!பால் கொடுத்து வளர்த்ததாய் பாடையில் போகும்போதுபித்தான் பிள்ளை வீதியிலேபலூன் விட்டுவிளையாடிக் கொண்டிருந்ததாம்?அப்படித் தான் தமிழ்நாட்டுத்தமிழர்கள் இருக்கிறார்கள்நான் மட்டும் விதிவிலக்கல்ல;நானும் அப்படித்தான் இருக்கிறேன்?உங்கள் அறிவையும்ஆற்றலையும்நான் யாரைக் காட்டிலும்அதிகம் அறிந்தவன்!நீங்கள்இந்தத் திராவிட இயக்கதத்திற்குசிந்திய வேர்வையும் ரத்தமும்எனக்குத் தெரியாதவை அல்ல!நீங்கள் ஓயாமல்உழைத்திருக்கிறீர்கள்!என்பதும் தெரியும்ஆனால்,அய்ந்து முறை முதல்வராகவந்ததை அளப்பரிய சாதனைஎன்று கருதிக் கொண்டுஉங்களின் உண்மையான அடையாளத்தை இழந்துநிற்கிறீர்கள்!நண்பர்கள் ஒ.பன்னீர்ச்செல்வமே கூடஒருமுறை தமிழக முதல்வராகக் கோட்டைநாற்காலியில் அமர்ந்திவிட்டுப் போய்விட்டார்!நீங்கள் அய்ந்து முறை அந்த நாற்காலியில்இடம் பிடித்தது ஒன்றும் பெரிய சாதனையும்அல்ல;சரித்திரமும் அல்ல!தங்கத்தை விற்றுத்தவிடு வாங்கியதைப் போல்வைரத்துக்கு எடைக்கு எடைவைக்கோல் வாங்கிக் கொண்டதைப் போல;உங்கள் அற்புதமான அறிவையும் ஆற்றலையும்ஓயாத உழைப்பையும்கேவலம் ஒரு நாற்காலிக்காக!விரயமாக்கி விட்டீர்கள்.,உங்களை நான் எந்தஇடத்தில் எந்த உயரத்தில் பார்க்க நினைத்தேனோஅந்த இடத்தை அந்தஉயரத்தை நீங்கள் அடையாமலேபோயிருக்கிறீர்கள்!நீங்கள் நினைத்திருந்தால்உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்தத்தமிழ்ச் சமுதாயத்துக்குஒரு பெரும் தலைவராக உயர்ந்திருக்க முடியும்!அதற்கான தகுதி இருந்தும்திறமை இருந்தும்தவறவிட்டு விட்டீர்கள்!முதலமைச்சர் பதவி என்பது என்ன?அண்ணா சொன்னாரேஅப்படி, சூழ்நிலைக் கைதியாக இருப்பதுதான்!நீங்கள் இப்போது சூழ்நிலை என்றசிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற கைதியாகஇருக்கிறீர்கள்!நீங்கள் சுதந்திரமாகவா இருக்கிறீர்கள்!நீங்கள் உளமார நினைப்பதைஎழுத முடியுமா?பேச முடியுமா?செய்ய முடியுமா?முடியாது கலைஞரே முடியாது!தம்பி சுப. தமிழ்ச்செல்வன்சுட்டுக் கொல்லப்பட்டான்!தானாடாவிட்டாலும்உங்கள் தசை ஆடியது!கண்களில் கண்ணீர்புரண்டு ஓடியது! மனம்இரங்கற்பா பாடியதுஇரண்டு வரிகள் இரண்டே இரண்டு வரிகள்இரங்கற்பா!அதற்கு எத்தனை!எச்சரிக்கைகள்!எத்தனை கண்டனக் கணைகள்!ஆட்சியையே கலைக்கவேண்டும் என்றுஅவசரக்காரர்களின் ஆர்ப்பாட்டங்கள்!எனக்கு எதுவுமே விளங்கவில்லை;அண்ணன் தம்பிகள்செத்துப் போனால் அழக் கூடாதா?அழுவதற்குக் கூட உரிமை இழந்துவிட்டஉங்களை எண்ணி நான்அழுகிறேன்வேறென்ன செய்வது!
கோவை சிதம்பரம் பூங்காத் திடலிலேநீங்கள் அந்த நாளில் நின்று முழங்கிய முழக்கம்இதோ என் செவிப்பறைகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!
அவையெல்லாம் பொய்யாய், பழங்கதையாய்கனவாய் மெல்லப் போயினவேஎன் அண்ணனே·பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா, மண்டேலா பற்றிபக்கம் பக்கமாக எழுதுகிறீர்கள்
ஆனால் நித்தம் நித்தம் ரத்தத்தில் செத்துக் கொண்டிருக்கும்தமிழீழ விடுதலை பற்றிப் பேச மறுக்கிறீர்களே!எழுத மறுக்கிறீர்களேஎன்ன காரணம்?உலகம் எங்கும் இருக்கின்றஒன்பது கோடி தமிழர்களுக்குஉரிமைப்பட்ட நிலமாகஒற்றைச் சாண் நிலம் கூடஇருக்கக் கூடாதா?ஈழத்தை மயானக் காடாகமாற்றத் துடிக்கின்ற இலங்கைராணுவத்துக்கு ஆயுத உதவிஇந்தியா வழங்குகிறதேஎன்ன நியாயம்?இங்கேதமிழர்களைக் கொன்றொழிக்கும்இலங்கை ராணுவத்திற்குஇந்திய மண்ணில் பயிற்சிஅளிக்கப்படுகிறதேஇது என்ன நியாயம்?என்று கேட்கத் தோன்ற வில்லையா?கொஞ்சம்உங்கள் கவனம்தமிழீழ விடுதலைப் பக்கம்திரும்பாதா?மலராதா?ஈழத் தமிழ் மக்களின்புலராத பொழுதுஒருநாள் புலராதா?அருள் கூர்ந்துஇந்தப் புத்தகத்தைப் படிக்க நேரம் இருந்தால்நினைப்பிருந்தால்ஒருமுறை படியுங்கள்!நீங்கள் கண்டிப்பாகபடிக்க வேண்டும்!அதனால் தான்இந்த நூலை உங்களுக்கு அக்கறையோடு அனுப்பி வைக்கிறேன்.
இப்படி முடிகிறது புலவர் புலமைப்பித்தன் எழுதிய கடிதம்!

Tuesday, February 3, 2009

இன்னுமா கருணாநிதியை தமிழன் நம்பிக்கிட்டு இருக்கான்?



சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டஇறுதி தீர்மானத்துக்கு இந்திய மத்திய அரசு சரியாக நடவடிக்கை எடுக்காதகாரணத்தால் வருகின்ற 7ம் தேதி சென்னையிலும் 8, 9ம் தேதிகளில் மாவட்டத் தலைநகர்களிலும்பேரணி, பொதுக்கூட்டம் நடத்துகிறதாம், திமுக.இனியாவது, தமிழித் தலைவரின் யோக்கிதை எல்லோருக்கும் தெரியட்டும்.நமது முத்துக்குமார் எழுதிய மரண சாசனத்தில் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும்ஒரே தட்டில் நிறுத்தி வைத்து குற்றம் சாட்டியிருக்கிறார். அவரது இந்த அரசியல் பார்வை மிகச் சரியானதே.உங்கள் நகலாயுதத்தை கையில் ஏந்திவிட்டீர்களா? முடிந்தவரை அந்த ஆயுதத்தைப் பரப்புங்கள்