Tuesday, May 12, 2009

வெற்றி யாருக்கு?; என்ன சொல்கிறது ஜூவி-?


திருவள்ளூர், தென்சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, ஆரணி, விழுப்புரம், சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், தேனி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம். திமுகவுக்கு மத்திய சென்னை, நாமக்கல், கரூர், பெரம்பலூர், நாகை, மதுரை, கன்னியாகுமரி, நீலகிரியில் வெற்றி வாய்ப்பாம். காங்கிரஸ§க்கு காஞ்சிபுரம், திருச்சி, மயிலாடுதுரை, சிவகங்கை, நெல்லை, பாண்டிச்சேரி ஆகிய தொகுகளிலும், ஸ்ரீபெரும்புத்தூர், அரக்கோணம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பட்டாளி மக்கள் கட்சியும் வெற்றி பெறுமாம்.மதிமுகவைப் பொறுத்தவரையில் ஈரோடு, தஞ்சை, விருதுநகர் என நான்கில் மூன்றைக் கைப்பற்றுகிறதாம். பிஜேபி ராமநாதபுரத்திலும், கம்யூனிஸ்ட்கள் வடசென்னை, கோயமுத்தூர், தென்காசியிலும் வெற்றி பெறலாம்; விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரத்தில் கொடி நாட்டுவதும் உறுதியாகிவிட்டதாம். இதுதான் ஜூவியின் கணிப்பாக உள்ளது.இது ஏறத்தாழ சரியாக இருக்கிறது என்கின்றது, என் நண்பர்கள் வட்டாரம். அதே சமயத்தில் மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் மண்ணைக் கவ்வுவாராம். நீலகிரியிலும் மதிமுக வெல்லும் என்கின்றனர் பெரும்பாலான நண்பர்கள். மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெறுவார் என்று உறுதியாகக் கூறுவது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் ராஜீவ்காந்தியை நேற்றும் கூட மூன்று மணிநேரம் காவல் நிலையத்தில் உட்கார வைத்து மனஉளைச்சல் கொடுத்திருக்கிறது, காவல்துறை. கருத்துரிமைக்காக கருத்து டாட் காம் நடத்திய கார்த்திக் சிதம்பரமும், கனிமொழியும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.ஜூவி கருத்துக் கணிப்பில் சாரம்சம் இதுதான்;
திமுக- 8, காங்கிரஸ் 6, விசி ஒன்று; மொத்தம் 15.அதிமுக 13, பாமக 5, மதிமுக 3, கம்யூனிஸ்ட்கள் மூன்று; மொத்தம் 24.பிஜேபி ஒன்று.
இது எப்படி இருக்கு-?

Friday, May 8, 2009

ஆபரேஷன் பூமாலையா-? மலர்வளையமா?


நான்காயிரம் பச்சிளம் குழந்தைகள் பாலின்றி தவிப்பு!பாதுகாப்பு வலையப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஒருலு வயதிற்குட்பட்ட குழந்தைகள் குடிக்கப் பாலும் தண்ணீருமின்றி இறந்திருக்கிறார்கள். வற்றிய மார்ப்பும் ஒட்டிய வயிறுமாகத் திரியும் தமிழச்சிகளால் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவது எப்படி சாத்தியமாகும்?குடிக்கத் தண்ணீர் இல்லாமல் ஏராளமானோர் கொஞ்சம் கொஞ்சமாக செத்துமடிகிறார்கள். இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் எத்தனை பேர் தங்கள் இறுதி மூச்சை முடித்துக் கொண்டார்களோ தெரியவில்லை. இதற்கு மேலும் நாமெல்லாம் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது?ஆபரேஷன் பூமாலை என்று ராஜிவ்காந்தி விமானத்தில் உணவுப் பொட்டலங்களைப் போட்டாரே. ஐய்யோ! காங்கிரஸ்காரர்களே அவர்களுக்கு கொடி பிடிக்கும் கூட்டணி கட்சிகளே! நீங்கள் பூமாலையிட வேண்டாம்; ஒரு வாய் தண்ணீராவது அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யக்கூடாதா?இலங்கைப் பிரச்னை தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிற உண்மை உங்களுக்கு தெரிந்துவிட்டது. இனியும் ஏன் மௌனம்? தேர்தல் வெற்றிக்காகவாது, ஈழத் தமிழனுக்கு விமானம் மூலம் உணவளிக்க ஏற்பாடு செய்தால், நன்றி மறவாமல் உங்களுக்கே ஓட்டளிக்க என்னைப் போல் பலரும் தயாராக இருக்கிறோம். இந்த நான்காயிரம் கைக்குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். பூமாலை இல்லை, மலர்வளையம் தான் வைப்போம் என்று நீங்கள் இதுவரை செய்த துரோகம் போதும். நூறு கோடி, ஆயிரம் கோடி என்று நிவாரணம் அனுப்பியதும் போதும். அது எதுவுமே ஈழத்தமிழன் கைக்கும், வாய்க்கும் எட்டவில்லை என்பது எங்களைப் போலவே உங்களுக்கும் தெரியும்.விமானம் மூலம் நீங்கள் அனுப்பும் உணவுதான் இனி அவர்களின் உயிரைக்காக்கப் போகிறது. ஏதாவது செய்யுங்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் சொல்லி, விமானத்தில் உணவளிக்கும் கோரிக்கையை எழுப்பச் சொல்லுங்கள். வைகோ அவர்களே நீங்களும் பேசுங்கள். ராமதாஸ் அவர்களே நீங்களும் கோரிக்கை விடுங்கள். நம்வீட்டுக் குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளர்க்கிறோம். இங்கே கண்முன்னே பச்சிளம் குழந்தைகள் உணவின்றி செத்துமடிவதை கண்டும் தேர்தல் திருவிழாவில் மூழ்கினால் நம் மனம் நம்மை மன்னிக்குமா? சிந்தியுங்கள். விமானம் மூலம் உணவிட மத்திய அரசுக்கு உத்தரவிடுங்கள் தோழரே!

இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்




இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள். பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம். இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நண்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை. புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது.

வவுனியா முகாம்களின் மறைக்கப் பட்ட உண்மைகள்


இராணுவத்தின் கண்களில்மண்ணை தூவி உள்நுளைந்த Channel 4 செய்தியாளரினால் அம்பலம்!


அரசு சாரா ஊடகவியளார்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படாத நிலையில்,ஒளிப்படக் கருவியை மறைத்துவைத்து முகாமிற்குள் நுளைந்த Channel - 4செய்தியாளர் ஒருவர் முதல் தடவையாக சுதந்திரமாக சில செய்திகளைஆவணப்படுத்தியுள்ளார்.இச்செய்தி ஒளிப்பதிவானது முதல் தடவையாக சுதந்திரமாகப் பதிவுசெய்யப்பட்டசெய்தியென Channel - 4 கூறுகிறது.நிக் பட்டனின் இச் செய்தி அறிக்கையின் படி இளம் பெண்கள்தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவது தவிர,இறந்த உடல்கள் முகாம்களுள் வெளியான இடங்கள் நாட்கணக்கில் கவனிப்பாரற்றுக்கிடப்பதாகவும் மேலும் கூறும் சனல் 4 செய்திகள் இம்முகாம்களில் எந்தஅடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கிறது.தன்னை அடையாளம் காட்டவிரும்பாத உதவி அமைப்பாளர் ஒருவர், தனது முகாமில்நான்கு இறந்த உடல்கள் மூன்று நான்கு நாட்களாக கவனிப்பரற்றுக் கிடந்ததாகக்குறிப்பிடுகிறார்.பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாத தாய்மாரைப் காண்பதாகக் கூறும் இவர், ஒருதாய் இரண்டு கரண்டி பாலுக்காக தன்னிடம் கெஞ்சி மன்றாடியதாகவும்குறிப்பிடுகிறார்.பல குழந்தைகள் தாய் தந்தையர் இல்லாமல் தவிக்கவிடப்பட்டுள்ளதாக முகாம்வாசி ஒருவர் குறிப்பிடுகிறார்.இங்கு எமக்கு வாழ்க்கையில்லை இது ஒரு சிறைச்சாலை என மேலும்குறிப்பிடுகிறார்.உணவிற்காக நெரிசலில் சிக்குண்டு இறந்து போன இரு
சிறார்களைப் பார்த்ததாக மேலும் சாட்சியமளிக்கும் இவர், புலிகளின்கட்டுப்பாட்டிலிருந்து வந்த தமிழர்களை மிரட்டுவதே அரசின் நோக்கம் எனவும்குறிப்பிடுகிறார்.ஒரு பெண் உதவிப் பணியாளர் சாட்சியமளிக்கையில் இளம் பெண்கள் இராணுவத்தால்பிரித்தெடுக்கப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதாகவும்கூறுகிறார்.முகாம்களிலிருந்து தனிமைப்படுத்தப்படும் பெரும்பாலனவர்க மீண்டும்திரும்புவதில்லை எனக் குறிப்பிடுகின்றார்.பெண்கள் எல்லோர் முன்னிலையிலும்குளிக்கவேண்டிய நிலையிலிருப்பதாகவும் இது அவர்களின் மிகப் பெரும்பாதுகாப்புப் பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவிக்கும் இச்செய்தி நேற்றுகுளியற் பகுதியில் மூன்று பெண்களின் இறந்த உடல்கள் காணப்பட்டதாகவும்கூறுகிறது.

-Muthamizh Chennai

Thursday, May 7, 2009

வீரமணியும் கருணாநிதியும் பதில் சொல்லட்டும்



இந்தமுறை கடுமையான முதுகு வலி காரணமாக கடந்த சில நாட்களாக என்னால் எதுவும் எழுத முடியவில்லை. முதுகெழும்பு இல்லாதவன் என்று யாரும் இனி என்னைத் திட்ட முடியாது! வழக்கமாக வலியும் வேதனைகளும் வரும்போது இந்தக் கஷ்டம் என் எதிரிக்குக் கூட வரக்கூடாது என்று நினைக்கத் தோன்றும். ஒவ்வொரு முறையும் படுத்தியெடுக்கும் முதுகு வலியால் நானும் இப்படி நினைத்துக்கொள்கிறேன். எத்தனையோ வேலைகள் என் முதுகு வலியால் முதுகைப் போலவே பின்தங்கிக் கிடக்கின்றன.நண்பர் ஆனந்த் செல்லையா தான் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்கிறார் (இரு சக்கர வாகனம் ஓட்டக்கூடாதாம்) பில்ரத் மருத்துவமனையில் பிசியோதெரபி (தமிழ் வார்த்தை மறந்துவிட்டது) சிகிச்சை எடுத்து வருகிறேன். ஒருமுறை கடற்கரை புதை மணலில் நடக்க முடியால் நடந்து சென்று என் நண்பனைத் தேடிக் கொண்டிருந்தபோது செல்போனில் என்னை அழைத்த பாடலாசிரியர், கவிஞர் தாமரையிடம் ‘மணலில் நடக்க முடியாமல் நடக்கிறேன்’ என்றேன். ‘உங்களால் இங்கே கடற்கரையில் சுதந்திரமாக நடக்க முடிகிறது. ஆனால் அங்கே (ஈழத்தில்) மக்கள் ஒவ்வொரு விநாடியும் செத்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்றபோது அந்த இரவு வேளையிலும் அந்த மணல் எனக்குச் சுட்டது. என் மடிக்கணினியும் பழுதேற்பட்டதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்தப் பதிவைப் போட்டுக்கொண்டிருக்கிறேன். (ஆனந்த் செல்லையா அழைத்துவிட்டால் இதுவும் பாதியில் நின்றுவிட வாய்ப்பிருக்கிறதுதமிழகத் தேர்தல் சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருவதைப் பற்றி ஏதாவது கதைக்கலாம் என்று இருக்கிறேன். கருணாநிதியின் மருத்துவமனை அனுமதி அவருக்கு முளைத்திருக்கும் தேர்தல் வெற்றி குறித்து எழுந்திருக்கும் அவநம்பிக்கையைத் தான் காட்டுகிறது. அதிலும், தமிழீழம் பிறக்க முயல்வோம் என்று திருவாய் மலர்ந்து அரசியல் சாணக்கியன் என்கிற நிலையில் இருந்து சறுக்கிக் கொண்டிருக்கிறார். திரைப்பட தமி ழீழ ஆதரவு இயக்கத்தின் பிரசாரம் நன்றாக போய் கொண்டிருக்கிறது. மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் இளங்கோவன், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நடந்த கூட்டத்தில், ‘‘சீமான் தன்னை பெரியாரின் பேரன் என்கிறார். ஒருவேளை பெரியார் சின்ன வயதில் செய்த தவறினால் இப்படியரு தகுதி அவருக்குக் கிடைத்திருக்கலாம்’’ என்கிற ரீதியில் பேசியிருக்கிறார். செருப்பால் அடித்தால் என்ன? இதற்கு கி.வீரமணியும், தமிழினத் தலைவர் கருணாநிதியும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். முரசொலியில் சீமானின் பேச்சு ஆபாசமாக இருக்கிறது என்று எழுதிய கலைஞர், இளங்கோவனின் பேச்சுக்கு என்ன சொல்லப் போகிறார்?இப்படி நேரு ‘மாமா’, காந்தி ‘தாத்தா’, ‘அன்னை’ இந்திரா, ‘அன்னை’ சோனியா போன்ற அடைமொழிகளுக்கெல்லாம் அர்த்தம் சொல்லத் தொடங்கினால் அருவறுப்பாக இருக்காதா? இளங்கோவன் போன்றவர்கள் தோல்வி பயத்தால் உளறுகிறார்கள் என்று மட்டும் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது. நம் உணர்வை கொச்சைப்படுத்தும் விதமாக இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள். நம்மை சோர்வடையச் செய்கிறார்கள்.இளந்தமிழர் இயக்கத்தினர், மத்திய ஜவுளித்துறை இணையமைச்சராக இருந்த இளங்கோவன் அந்தத் துறைக்கு என்ன செய்தார்? கொன்றொழிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசும் தமிழக காங்கிரஸ் அரசும் செய்தது என்ன? என்கிற ரீதியில் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். அதிலும், நெசவாளர்கள் படும் பாட்டையும் அத்துறையில் குழந்தைத் தொழிலாளர் முறை தலைவிரித்தாடுவதையும் உரிய ஆவணங்களுடன் ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கியிருக்கிறார்கள். இப்போது அந்தத் தோழர்களைக் கைது செய்ய நமது தமிழகக் காவல் துறை வலை வீசிக்கொண்டிருக்கிறது. ஈழ விடுதலையைப் பேசினால் அது வெளிநாட்டுப் பிரச்னை, நம்மூர் பிரச்னையைப் பேசினாலும் காவல் துறை தேடும் என்றால் இது நாடா? இல்லை சுடுகாடா? மருத்துவமனையில் இருந்தாலும் ஒரு மடையனுக்கு புத்தி வரவில்லை.காங்கிரஸ§க்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரசாரம் செய்து கொண்டிருந்த அமைப்புகளும், தோழர்களும் கருணாநிதியின் தொடர் துரோகத்தால், ஜெயலலிதாவுக்கு வாக்களியுங்கள் என்று கோஷமிடத் தொடங்கிவிட்டார்கள். தவளை தன் வாயால் கெடும்! தொடர்ந்து எழுதமுடியாமல் முதுகு வலிக்கிறது. இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.நன்றி தோழர்களே!

Friday, May 1, 2009

ஈழவிடுதலைக்கு எதிரான ஊடக சக்திகளை களையெடுப்போம்!







ஈழப்போர் முடிவுக்கு வராமல் போனதற்கு காரணம் என்ன என்று தீவிரமாக யோசிக்க வேண்டும். சோனியாவைப் போரை நிறுத்து என்று ஒற்றை வரி கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் போனதற்கு என்ன காரணம்?- கொஞ்சம் தீவிரமாக சிந்தித்தபோதும் விளங்குகிறது ஓர் உண்மை. தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் சென்று சேர்ந்திருப்பது சன் டிவி. திமுக தலைமையுடன் சன் டிவி குடும்பத்தாருக்கு மோதல் ஏற்பட்டபோது ஸ்பெக்டர் ஊழலும், மின்தடை பிரச்னையும் தமிழகத்தில் அதிகளவு பேசவைத்தது சன்டிவி தான். ஆனால் அவர்கள் கைகோர்த்தபின் தன்னுடைய தினகரன் அலுவலகத்தில் அழகிரியால் செத்து மடிந்த மூன்று பேருக்கு கிடைக்க வேண்டிய சட்ட நியாயமும் கிடைக்காமல் செய்யும் வகையில் தமிழக அரசு மீதான வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது சன் நிர்வாகம். அதுபோன்ற ஒரு சூழலில் ஈழப்போர் மூண்டது. ஈழப்போரை மத்திய அரசு முன்னெடுத்து நடத்துகிறது என்பதை தமிழுணர்வாளர்கள் மட்டுமின்றி அதே மத்திய அரசை தலைமையேற்றிருக்கும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாமக ஆகிய கட்சிகள் உரக்கச் சொல்லின. ஆனால் அவர்களின் குரலை சன்டிவி ஏனோ பதிவு செய்யவில்லை. ஸபெக்டரம் ஊழலை வெளிக்கொண்டு வரவும் மின்தடையை திமுகவுக்கு எதிராக கிளப்பவும் தலைவர்கள் வீடுகளில் காத்திருந்து திமுகவுக்கு எதிராக பேட்டிகளை அவர்களிடம் வாங்கி ஒளிபரப்பிய சன்டிவிக்கு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தவுடன் ஜால்ரா அடிக்க ஆரம்பித்தது.கிராமங்களில் புதிதாக டிவி வாங்குவோர், புது வீட்டிற்கு குடிபுகுவோர் அனைவரும் கேபிள் டிவி இணைப்பு வேண்டும் என்று கூட கேட்கத் தெரியாமல் சன்டிவி கனெக்ஷன் கொடுங்கள் என்று தான் கேட்பார்கள். அப்படியென்றால் சன்டிவியில் காண்பிக்கப்படாத உண்மை கடைக்கோடி தமிழனுக்குச் சென்று சேர்வதில் சில சிக்கல்கள் இங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. சன்டிவி இப்படியென்றால் தினகரன் நாளிதழும் தமிழனுக்கு எதிரான கருத்துகளை கட்டவிழ்த்து விடுவதொன்றும் ஆச்சரியமானதாகத் தெரியவில்லை. அடுத்ததாக, நாம் பார்க்க வேண்டியது, கலைஞரை. அதாவது முதல்வர் கருணாநிதி சன்டிவி நிர்வாகத்துடன் சண்டையிட்டதும் அதை மிகவும் சாதுர்யமாக அணுகி கடைந்தெடுத்த சுயநலத்துடன் தனக்கும் தன் கட்சிக்கும் (உண்மையில் எதிர்காலத்தில் தன் வாரிசுகளுக்கு) ஆதரவாக பல சேனல்களை உருவாக்கிக் கொண்டார். சண்டை முடிந்து சேர்ந்ததில் கலைஞருக்கு இப்போது நிகர லாபம் கலைஞர், செய்திகள், சிரிப்பொலி உள்ளிட்ட சேனல்கள்!
ஈழ விடுதலைக்காகப் போராடுவதாகவும் அதற்காக வேலை நிறுத்தம், மனித சங்கிலி, பேரவைத் தீர்மானம், உண்ணாநிலை (சாகும்வரை!) என போராட்டங்கள் நடத்திய கலைஞர், தன்னுடைய அதிகாரப்பூர்வமான சேனல்களில் ஈழ விடுதலைக்காக இல்லாவிட்டாலும் ஈழ நிலைமையை எடுத்துச் சொல்லும் எந்தச் செய்திகளையும் ஒளிப்பரப்பவில்லையே ஏன்? தன் உண்ணாநிலையை நேரடி ஒளிபரப்புச் செய்யும் கலைஞர் ஈழத்தில் மக்கள் படும் பாட்டை காட்டத்தவறிவிட்டாரே ஏன்? (இந்த வாதத்தை கலைஞருக்கு எதிரணியில் உள்ளவர்களும் தமிழுணர்வாளர்களும் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்று என் நண்பன் என்னிடம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறான்).தினமலரின் விஷமத்தனம்சன்டிவிக்கு அடுத்தபடியாக தமிழர்கள் அதிகளவில் (கெட்கக் கேடு) பார்ப்பது படிப்பது தினமலரைத்தான். காலையில் மலம் கழிக்கும் முன்னால் தினமலரைப் பார்த்துவிடுவது என்பது கொங்கு வட்டாரத்தில் இன்றைக்கும் இருக்கும் ரொம்ப நல்ல பழக்கம்! வழக்கம் போல் தினமலரும் -ஈழவிடுதலையை விரும்பியதும் இல்லை. அது இந்தமுறையும் செய்திகளில் வெளிப்பட்டது என்பதை விட அதற்கு முரணான துணைத் து£தர் அம்சா வாங்கிக் கொடுக்கும் சாராயத்துக்கு (தினமலர் பாஷையில் உ.பா.) நன்றிக்கடனாக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு தமிழகமக்கள் மனதில் பிழைக்கப் போனவனுக்கு எதற்கு தனிநாடு-? என்று கேட்க வைத்திருக்கிறது. ஆரிய ஆதிக்கத்தால் ஹிந்தி பத்திரிகையும். தேசிய சேனல்களும் ஈழவிடுதலையை எதிர்க்க தமிழனின் உணர்வுகள் பிரதிபலிக்கவில்லை என்பதைவிட தமிழனின் உணர்வையே கொச்சைபடுத்தும் வேலைகளையும் சன்டிவி, கலைஞர் டிவி, தினமலர், ஹிந்தி மற்றும் தேசிய சேனல்கள் செய்து வருகின்றன. இதில் தினத்தந்தியின் சேவை ஆரம்பத்தில் ஈழவிடுதலைக்கு பக்கபலமாக இருக்க, அண்மைகாலமாக அதுவும் மாவீரன் முத்துக்குமார் மரணத்துக்குப் பின் தினத்தந்தியும் மிரட்டப்பட்டிருக்கிறது.ஜூனியர்விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகியன ஆரம்பத்தில் காட்டிய உணர்வை கூண்டோடு தமிழனை வேரறுக்கும் வேலையில் கைவிட்டுவிட்டன. அதிலும் குடுதம் ரிப்போர்ட்டர் கேட்கவே வேண்டியதில்லை. ஆனால் கடந்த சில இதழ்களில் பழைய படி உணர்வை பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டரு ஜூவி., குமுதம் ரிப்போர்ட்டரில் பெரிதாக இனி எதையும் எதிபார்க்கமுடியாது. ஆனந்த விகடனில் திருமாவேலன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நிருபர்கள் ஈழவிடுதலைக்காகச் செய்யும் மகத்தான பணியை ஈழமும் சரி தமிழகமும் சரி என்றைக்கும் மறக்கக் கூடாது!ஆக இப்போதைக்குக் களத்தில்¢ நம்மினத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் எத்தனை ஊடகங்கள் உள்ளன என்று விரல் விட்டு எண்ணிப்பாருங்கள். இதே கர்நாடகத்தில், மேற்கு வங்கத்தில், மஹாராஷ்ட்ராவில், கேரளத்தில் அம்மாநில மக்களின் உணர்வை மதிக்காமல் ஒரு பத்திரிகையாவது செயல்படமுடியுமா? என்பதையும் சந்தித்துப் பாருங்கள். பஞ்சாப்க்குள் சென்று அவ்வின மக்களுக்கு எதிராக சுப்பிரமணிசுவாமியால் பேசிவிட்டு வெளியே வரமுடியுமா? ஆக உலக வரைபடத்தில் தமிழன் மட்டுமே ஈ வாயன்.,,, இன்னொரு பெரியார் வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் வெறும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இல்லாமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து தமிழினத்துக்கு எதிரான இந்த ஊடக சக்திகளை களையயெடுக்க வேண்டும் என்பதே உங்களுக்கு இந்தச் சிறியவன் வைக்கும் வேண்டுகோள். கைகோர்ப்போம் தமிழினத்தைக் காக்க.......