Tuesday, May 12, 2009

வெற்றி யாருக்கு?; என்ன சொல்கிறது ஜூவி-?


திருவள்ளூர், தென்சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, ஆரணி, விழுப்புரம், சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், தேனி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம். திமுகவுக்கு மத்திய சென்னை, நாமக்கல், கரூர், பெரம்பலூர், நாகை, மதுரை, கன்னியாகுமரி, நீலகிரியில் வெற்றி வாய்ப்பாம். காங்கிரஸ§க்கு காஞ்சிபுரம், திருச்சி, மயிலாடுதுரை, சிவகங்கை, நெல்லை, பாண்டிச்சேரி ஆகிய தொகுகளிலும், ஸ்ரீபெரும்புத்தூர், அரக்கோணம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பட்டாளி மக்கள் கட்சியும் வெற்றி பெறுமாம்.மதிமுகவைப் பொறுத்தவரையில் ஈரோடு, தஞ்சை, விருதுநகர் என நான்கில் மூன்றைக் கைப்பற்றுகிறதாம். பிஜேபி ராமநாதபுரத்திலும், கம்யூனிஸ்ட்கள் வடசென்னை, கோயமுத்தூர், தென்காசியிலும் வெற்றி பெறலாம்; விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரத்தில் கொடி நாட்டுவதும் உறுதியாகிவிட்டதாம். இதுதான் ஜூவியின் கணிப்பாக உள்ளது.இது ஏறத்தாழ சரியாக இருக்கிறது என்கின்றது, என் நண்பர்கள் வட்டாரம். அதே சமயத்தில் மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் மண்ணைக் கவ்வுவாராம். நீலகிரியிலும் மதிமுக வெல்லும் என்கின்றனர் பெரும்பாலான நண்பர்கள். மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெறுவார் என்று உறுதியாகக் கூறுவது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் ராஜீவ்காந்தியை நேற்றும் கூட மூன்று மணிநேரம் காவல் நிலையத்தில் உட்கார வைத்து மனஉளைச்சல் கொடுத்திருக்கிறது, காவல்துறை. கருத்துரிமைக்காக கருத்து டாட் காம் நடத்திய கார்த்திக் சிதம்பரமும், கனிமொழியும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.ஜூவி கருத்துக் கணிப்பில் சாரம்சம் இதுதான்;
திமுக- 8, காங்கிரஸ் 6, விசி ஒன்று; மொத்தம் 15.அதிமுக 13, பாமக 5, மதிமுக 3, கம்யூனிஸ்ட்கள் மூன்று; மொத்தம் 24.பிஜேபி ஒன்று.
இது எப்படி இருக்கு-?

3 comments:

வால்பையன் said...

//அவரை எதிர்த்துப் போட்டியிடும் ராஜீவ்காந்தியை நேற்றும் கூட மூன்று மணிநேரம் காவல் நிலையத்தில் உட்கார வைத்து மனஉளைச்சல் கொடுத்திருக்கிறது,//

கண்டிக்கதக்க செயல்!

Anonymous said...

நக்கீரன் கணிப்பையும் பதிக்கவும். 96 தேர்தலில் இருந்து நக்கீரன் கணிப்பு தான் தமிழக தேர்தலில் பொருந்துகிறது

Anonymous said...

ellam panam seyym velai....

Post a Comment