Tuesday, June 9, 2009

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது என்கிற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர், கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை. ‘கண்கள் இரண்டால்’ என்று காதல் பேசி இவரது பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஆனால் அவர் எழுதிய இந்தக் கவிதையை பிரசுரிக்க பலரும் தயங்கி நின்றார்கள். இந்த வாரம் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. இப்படியொரு அறம் பாடும் தைரியம் கவிஞருக்கு இருந்த போதும் அதை வெளியிடும் தைரியம் நம் பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டிருக்கிறது. குமுதம் டாட் காமிலும் கவிஞர் தாமரை இந்தக் கவிதையை வாசிக்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. விரையில் அந்த வீடியோவையும் இதில் இணைக்கிறேன்.


இந்தியத் தேர்தல் நேரத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதை அப்போதே பிரசுரமாயிருக்க வேண்டியது. ஆனால் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. பாப்புலர் மீடியாக்களில் வெளிவரட்டும் என்றுதான் நானும் இதை பதிவிடாமல் காத்திருந்தேன். தமிழினத்திற்கு நேர்ந்த கொடுமை கண்டு கொதிக்கும¢ ஒவ்வொவரின் இதயமும் பேசுவதாகவே இந்தக் கவிதையை நான் பார்க்கிறேன். அறம் பாடினால் பாடப்பெற்றவர்கள் என்ன ஆவார்கள் என்பதை நாடறியும். நானும் அறிவேன்.


‘உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்க மாட்டேன்’ என்று வசனம் பேசிவிட்டு தமிழன் தலையில் குண்டுவிழுவதை கண்டும் காணாமல் இருக்கும் திரைப்படத் துறையினருக்கு மத்தியில் இப்படியொருவர் இருக்கிறார் என்பதை உண்மையான தமிழர்கள் என்றென்றைக்கும் நினைத்துப்பார்க்க வேண்டியது அவசியம். சரி பீடிகை போதும் கவிதையை வாசியுங்கள்.




தாமரை


கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்

செய்துவிட்டாய்

எங்கள் தமிழினத்திற்கு...


எத்தனை

வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்

காலில் விழுந்தும் கதறியும்

கொளுத்திக் கொண்டு செத்தும்

தீர்ந்தாயிற்று...


எதுவுமே காதில் விழாத உங்களுக்கு

இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...


பட்டினியால் சுருண்டு மடிந்த

பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து

அழுது வீங்கிய கண்களோடும்

அரற்றிய துக்கத்தோடும்

களைந்த கூந்தலோடும்

வயிரெரிந்து இதோ விடுகிறேன்..


கண்ணகி மண்ணில் இருந்து

ஒரு கருஞ்சாபம்!


குறள் நெறியில் வளர்ந்து

அறநெறியில் வாழ்ந்தவள்

அறம் பாடுகிறேன்!


தாயே என்றழைத்த வாயால்

பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்

இனி நீ வேறு, நான் வேறு!


ஏ இந்தியாவே!

ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி

குண்டுகளைக் குறிபார்த்துத்

தலையில் போடவைத்த உன்தலை

சுக்குநூறாய் சிதறட்டும்!


ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த

எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய

இனி ஒரு நூற்றாண்டுக்கு

உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!


மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு

மளமளவென்று கலையட்டும்!


ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்

இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!


தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்

அறுவடையாகட்டும்!


மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்

உங்கள் மலைகள் எல்லாம்

எரிமலைக் குழம்புகளைக்

கக்கி சாம்பல் மேடாகட்டும்!


இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...

உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!


உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!

எதிரிகள் சூழ்ந்து

உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!


தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து

சிதறிய உடல்களோடு

சுடுகாடு மேடாகட்டும்!


போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று

கூசாமல் பொய் சொன்ன வாய்களில்

புற்றுவைக்கட்டும்!


வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!

எங்கள் எலும்புக் கூடுகள் மீது

ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...


உங்கள் சிம்மாசனம் வெடித்துத்

தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......


பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!


நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...

உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து

ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!


எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி

சித்திரவதையில் சாகடித்தீர்களே...

உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!


எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த

சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...

உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!


உங்கள் பெண்களெல்லாம்

படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!


நரமாமிசம் புசித்தவர்களே...

உங்கள் நாடி நரம்பெல்லாம்

நசுங்கி வெளிவரட்டும்!


இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு

புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...


ஆழிப்பேரலை

பொங்கியெழுந்து

அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!


நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!


நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!

நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!

..........

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!


குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே...

அவர்கள் நீடுழி வாழட்டும்!


எம் குழந்தைகள் அழுதாலும்

உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!






7 comments:

Anonymous said...

கவிஞர் தாமரை கொடுத்திருப்பது சரியான கவிதை செருப்படி. மணல் வாரி தூற்றியிருக்கிறார். இதற்கு அவர்கள் பதிலளிப்பது இருக்கட்டும். முதலில் இந்த சாபத்தில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியுமா என்றே தெரியவில்லையே. கவிஞரின் சோகத்திற்கு நம்மால் மருந்திட முடியாது. காரணம், நாமும் அதே சோகத்தில் அரற்றிக் கொண்டுதானே இருக்கிறோம். தோழர் வேலு.வெற்றிவேலின் நல்ல பதிவிது. நன்றி நண்பா.

Anonymous said...

தமிழீழ ஆதரவு திரைப்பட இயக்கத்தினரின் தொடர் முழக்கப் போராட்டத்தில் எந்த ஆண் மகனுக்கும் இல்லாத தைரியத்துடன் பேசியவர் தானே தாமரை. மிகச் சரியான கவிதை இது. இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல்லட்டும். நிருபனின் முயற்சிக்கு நன்றி

Anonymous said...

போர் நின்று விட்டது என்று சொன்ன கருணாநிதியின் வாயில் புற்று நோய் வரட்டும். அவனது பெண் வாரிசுகள் பக்கத்து வீட்டில் படுக்கையைப் போடட்டும். ஆண் வாரிசுகள் ஆண்மையிழந்து தவிக்கட்டும். தாமரையின் சாபம் பழித்தால் மலேசிய முருகன் கோயிலுக்கு நடந்தே சென்று மொட்டைபோட்டுக்கொள்கிறேன். சாபம் பழிக்கட்டும். கருணாநிதி தேவடியா பையன், சோனியா ஒரு தேவடியா

Anonymous said...

//போர் நின்று விட்டது என்று சொன்ன கருணாநிதியின் வாயில் புற்று நோய் வரட்டும்.//

இப்போ வந்து என்ன ஆக போகுது...

//அவனது பெண் வாரிசுகள் பக்கத்து வீட்டில் படுக்கையைப் போடட்டும்.//

இது ஏற்கனவே நடந்தாச்சு... கனிமொழியின் வாழ்க்கையை படிக்கவும்

//ஆண் வாரிசுகள் ஆண்மையிழந்து தவிக்கட்டும்.//

இது தான் இனி நடக்க வேண்டியது.

//கருணாநிதி தேவடியா பையன், சோனியா ஒரு தேவடியா//

இதில் ஒரு திருத்தம். கருணாநிதியின் தாயாருக்கு பதில் தமக்கையார் என்று சொல்லவும்

இரா.முருகப்பன் said...

முன்பு பாவலரேறு பெருஞ்சித்திரனார் அய்யா எழுதிய 'இட்ட சவம் முட்டியது' பாடலின்படிதான் ராஜீவ் மரணம் நிகழ்ந்தது என்பார்கள்.

அதுபோன்று இவைகள் நடந்துவிட்டால்....நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

ஆனாலும், புரிய முடிகிறது,
இவை எல்லாம் நடக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
மனதில் உள்ள கோபம், வலி எல்லாம் சேர்ந்து வெளியாகும் உணர்ச்சிகளின் வார்த்தைகள்.

ஆனாலு, இந்தியாவே சுக்கு நூறாய் உடைந்து போ நடக்க வேண்டும். நடக்கும்.

நம் காலத்திலேயெ அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

தொடர்புக்கு நன்றி தோழா
தொடர்ந்து பேசும்.

நன்றியுடன்
இரா.முருகப்பன்

Anonymous said...

உங்களை வரவேற்கிறேன் முருகப்பன்
அருமையான பின்னூட்டம் நன்றி

நாமக்கல் சிபி said...

http://manamumninavum.blogspot.com/2009/06/blog-post_23.html

Post a Comment