Saturday, June 27, 2009

வணங்கா மண்ணும் கருணாவும்


இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித்தமிழர்களுக்கு வழங்குவதற்காக உலகத் தமிழர்கள்வழங்கிய சுமா¡ 800 டன் உணவுப் பொருட்களுடன்கிளம்பிய வணங்கா மண் கப்பலை இலங்கைக்குள் நுழையவிடாமல் இலங்கை அரசு தடுத்து விட்டதை உலக நாடுகள்யாரும் தட்டிக் கேட்கவே இல்லை.
நாளொன்றுக்கு 3,720 பவுண்ட் வாடகை கொடுக்கப்பட்டு வரும்அந்தக் கப்பல் (இந்திய மதிப்பில் ஒரு பவுண்ட் என்பது 76 ரூபாய்)கிளம்பி ஐம்பது நாட்களுக்கு மேலாகிறது. (வாடகை மட்டும்பல கோடிகளைத் தாண்டிவிட்டது).
உணவுப் பொருட்கள் வீணாகிவிடக் கூடாது என்பதில் ஏன்யாருக்கும் எந்த அக்கறையும் இல்லாமல் போனது. விடுதலைச்சிறுத்தைகள்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்ஜூவியில் அண்மையில் எழுதியிருக்கும் கட்டுரையில் தமிழக முதல்வர்கருணாநிதி தன்னால் இயன்ற வரை முயன்று இந்தியா வந்திருந்த ராஜபக்சே சகோதர்கள் பசில் மற்றும் கோத்தபயஆகியோரிடம் பேசி, அந்தக் கப்பலை இலங்கைக்குக் கொண்டுசெல்ல அனுமதி வாங்கியிருக்கிறாராம்.
சில நாட்களுக்கு முன்பு கலைஞர், சன், தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட ஊடகச்செய்திகளும் கருணாநிதியின் நடவடிக்கையால் இலங்கைத்தமிழர்களுக்காக புறப்பட்டு சென்னை துறைமுகம் அருகேநிற்கும் அந்தக் கப்பல் இலங்கைக்குச் செல்கிறது என்பதைதிரும்பத் திரும்பச் சொல்லியும், கொட்டை எழுத்துகளில்செய்தி வெளியிட்டும் ராஜவிசுவாசத்தைக் காட்டின. அப்படியான சூழ்நிலையில் அந்த அறிவிப்பு வந்துவெகு நாட்களாகியும் அந்தக் கப்பல் இலங்கைக்குசெல்லவில்லையே ஏன்? அந்தக் கப்பலுக்குள் சென்ற இந்திய கடற்படை அதிகாரிகள்அதில் இருந்தவர்களை கண்டபடி ஏசிவிட்டு வந்ததும் நடந்திருக்கிறது. ஆக, கருணாநிதியின் முயற்சி என்ன ஆனது?மனிதநேயம் பேசும் கனிமொழி என்ன செய்து கொண்டிருக்கிறார்?
இதற்கிடையே கப்பலின் உரிமையாளர், ஏற்பாட்டாளர்களுக்குகுடைச்சல் கொடுக்கத் தொடங்கிவிட்டார். கடல் வர்த்தக நியதிபடிஅதன் வர்த்தகப் பயணம் வெற்றி பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்டகப்பலை அதன் உரிமையாளரே உடைத்து கடலில் மூழ்கடித்து விடுவாராம்.நம்ம ஊரில் பன்றி மீது மோதிய வாகனத்தை விற்று விடுகிறோமே அதுபோல்.தீர்ப்பு எழுதியதும் பேனா முனையை உடைக்கிறார்களே அதுபோல்.
இப்பயணம் தோல்வி அடைந்து அதுபோன்றொரு அசம்பாவிதத்தைகப்பல் உரிமையாளர் செய்தால் அதில் உள்ள உணவுப் பொருட்களின் நிலைஎன்ன ஆகும்? இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லாமல் தான் கதை வசனம்எழுதும் படத் துவக்குவிழாவுக்குச் சென்றிருக்கிறார், முதல்வர்.
இதையெல்லாம் ஜெ., யிடம் உங்களால் கேட்க முடியுமா என்று கேட்பவரா நீங்கள்?அடப் பாவிகளா பதவியில் இருப்பது கருணா(நிதி) தானே? பொண்டாட்டி,வைப்பாட்டிகளின் வாரிசுகளுக்குப் பதவியும் பணமும் சேர்க்கும் கருணாநிதிக்குஈழத்தமிழன் பற்றி அக்கறை இருக்க வாய்ப்பில்லாமலேயே போகட்டும்.அதற்காக இனப்பற்றுடன் ஒன்று சேருங்கள் என்று வீண் பேச்சுகளைபேசவேண்டாம் என்று கருணாவிடம் கேட்டுக் கொள்கிறேன்.
பின் குறிப்பு:இலங்கையில் ராஜபக்சேவுக்கு நேரம்சரியில்லை என்று சொன்ன ஜோதிடரை அந்நாட்டுகாவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது.(கேணப் பையன் இவன் நேரத்தையே இவனுக்குகணிக்கத் தெரியில. எனக்கு ஜோசியம் சொல்லவந்துட்டான் என்று சத்யராஜ் பாணியில் ராஜபக்சேபேசிக் கொண்டிருக்கலாம்.) ஆக, தனக்கு எதிராகசிங்கள ஜோதிடன் கூட பேசக் கூடாது என்கிறநிலையில் ஜனநாயகம் பேசும் ராஜபக்சேவின்தூதர்கள் பசில், கோத்தபயவுக்கு காந்தி தேசத்தில்கிடைத்த வரவேற்பு எப்பூடி?

5 comments:

லக்கிலுக் said...

வணங்காமன் கப்பல் சென்னையின் துறைமுக எல்லைக்கு அப்பால் நின்றபோது, துறைமுகத்துக்குள் நுழைய முறைபடி கேட்கவேண்டிய அனுமதியை துறைமுக நிர்வாகத்திடம் இதுவரை கோரவே இல்லை. துறைமுக நிர்வாகமே தன்னார்வத்தோடு சென்று கேட்டபோது ‘குடிநீர் மட்டும் தந்தால் போதும்’ என்று கப்பல் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. துறைமுகம் தரப்பில் வெளியான அறிக்கை தெளிவாகவே இருக்கிறது.

கருணாநிதியை குறை சொல்வதற்காகவே கப்பலை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்களோ? உண்மையில் கப்பலின் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருவதில்லையோ? என்ற சந்தேகம் பலமாகவே எழுகிறது.

Barari said...

VEEN VAMBAI VALARPPATHARKKENDRE INTHA ERPPAATAI SEITHATHU POL THERIHIRATHU.PULAM PEYARTHU SOHUSU VAZKKAI VAAZUM AVARHALUKKU NADRAKA THERIYUM ITHAI RAAJA PAKSHE ANUMATHIKKA MAATTAAN ENDRU.THERINTHUM ANUPPUHIRAARKAL ENDRAAL.NICHCHAYAM UL NOKKATHTHODU SEITHU IRUKKIRAARKAL.

Anonymous said...

lucky luck, neenga sollvathu chinnapillaikaluku nalla irukum. karunanithi poor nirutham endu sonna maathiri irukku. pls tamillarkal uirudu vilayada neengal manihtar kooda illaya?

Joshie said...

Whatever it is, whoever mistake it is, nothing will happen by crticizing others. Just do something to make things happen. Any suggestion???

கண்டும் காணான் said...

தயவு செய்து ஈழப் பிரச்சனையுடன் இந்த தமிழக அரசியல்வாதிகளை விமர்சனத்துக்கு உள்ளாக்காதீர்கள். அதன் பிறகு இவ்வாறான கொடுரமான " உணவு தரக்கூடாது எனபதுதான் நோக்கமோ " என்ற பின்னூடங்களை சந்திக்க வேண்டிவரும். ராஜபக்ச தமிழ் நாட்டு மக்களுக்கு அளித்த பாராட்டை உண்மை என நம்ப வைத்துவிடுவார்கள் இந்த மானிடம் இறந்தவர்கள் .

Post a Comment