Sunday, June 28, 2009

நண்பர் லக்கிலுக்கிற்கு வணக்கம்....

எனது முந்திய வணங்கா மண் பதிவுக்கு நண்பர் லக்கி லுக்கின் பின்னூட்டம் எனக்கு வருத்தம் அளிக்கிறது.சுங்கத் துறை ஆணையாளரின் அறிக்கையில் மனிதாபிமானஅடிப்படையில் 200 டன் தண்ணீர் வந்ததாக கூறியிருக்கிறார்.ஆனால் அந்தத் தண்ணீரும் விதிகளின் படி உரிய தொகைபெற்றுக் கொண்ட பின்புதான் வழங்கப்பட்டிருக்கிறது.காசு வாங்கிட்டு கொடுப்பதுதான் மனிதாபிமான உதவியா? கப்பல் சென்னை அருகேவருவது குறித்து உரிய முறையில் தகவல் சொல்லவில்லை என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.திருமணத்துக்குத்தான் அழைப்பிதழ் கொடுப்பார்கள்.சாவுக்கு நாமேதான் போக வேண்டும். அதுவும்சகோதரன் வீட்டு சாவுக்குப் போகஅழைப்பு எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.
அடுத்ததாக ஜோசி அவர்களின் பின்னூட்டத்தில்'யாரையும் குறை சொல்லாதீர்கள். ஆக வேண்டியதைப்பாருங்கள்' என்கிறார். ஆக வேண்டியதை செய்ய வேண்டியவர்கள்சும்மா இருந்தால் எந்த அதிகாரமும் இல்லாத நம்மைப் போன்றவர்கள் கொதிக்காமல் என்ன செய்வது?ஜக்கி வாசுதேவ் போல் நல்லா தப்புக்கும்மக்கள் மீது பழியைப் போட்டு அவர்களுக்குக் குற்றஉணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால் போதுமா?கருணாநிதியால் தான் காவிரி நீரில்நமக்கிருந்த உரிமை பறிபோனது. இந்திராகாந்தியுடன்கூட்டு வைத்ததும் கர்நாடகத்துக்கு எதிரானஉச்சநீதிமன்ற வழக்கை வாபஸ் பெறச்செய்தவர் கருணாதான்.காவிரி பிரச்னையின் ஆரம்பப் புள்ளியே இதுதான். காவிரிக்குகுறுக்கே புதிய அணைகளை கர்நாடக அரசு எழுப்பியது அதன்பிறகுதான்.
1924-ல் வெள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்டஒப்பந்தம் மூலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீர்காவிரியில் இருந்து தரப்பட்டது. கருணாநிதி செய்ததவறை சரி செய்ய, எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதும் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருந்தது.அதில் 1924 ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டஅளவை விட தண்ணீர் பங்கீட்டு அளவு சற்று குறைவாக இருந்தது. ஒரு மலையாளிதமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டான்என்று கருணாநிதி அவதூறு செய்வார்என்று பயந்தே அப் புதிய ஒப்பந்தத்தைத் தவிர்த்துவிட்டார்,எம்.ஜி.ஆர். இப்போது சொல்லுங்கள் கருணாநிதியால்எப்போதும் தமிழனுக்கு நல்லதே நடந்தது கிடையாது.

6 comments:

பழமைபேசி said...

ஒரு வழக்கு திரும்பப் பெற்றதனால் உரிமை பறி போய் விட்டது என்பது சரியான வாதமா நண்பரே? முன்கூட்டிய முடிவைக் கொண்ட விவாதம்தன்னில் சுவை ஏது?

Anonymous said...

hello

We have just added your blog link in our tamil blog site - www.seidhivalaiyam.in.

Please check your blog post link here and register yourself here......

Sincerely yours
seidhivalaiyam team......

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான - www.seidhivalaiyam.in ல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

மயாதி said...

சாவுக்குப் போனாலும் , நாலு ஓட்டு அதிகம் கிடைக்கும் சாவுக்கே போகும் நபர்களுக்கு இதெல்லாம் சொல்லி விளங்காது நண்பரே!

கண்டும் காணான் said...

தயவு செய்து ஈழப் பிரச்சனையுடன் இந்த தமிழக அரசியல்வாதிகளை விமர்சனத்துக்கு உள்ளாக்காதீர்கள். அதன் பிறகு இவ்வாறான கொடுரமான " உணவு தரக்கூடாது எனபதுதான் நோக்கமோ " என்ற பின்னூடங்களை சந்திக்க வேண்டிவரும். ராஜபக்ச தமிழ் நாட்டு மக்களுக்கு அளித்த பாராட்டை உண்மை என நம்ப வைத்துவிடுவார்கள் இந்த மானிடம் இறந்தவர்கள் .

Joshie said...

I agree to whatever you said, but my point is did we change anything, or they change their behaviour because of this? NOTHING,even when thousands and thousand people were struggling for their survival, karunanidhi faught with congress not for us, just for his sons and daugters(!!!)so just discussing about the source of the issue wont help us to resolve the problem. There are very few people who have fire in their mind as in you, But if you ask the majority their reply to these issues will be, " As long as its not happening to us, why do we need to worry and do something ". If we change this mentality, whatever you are writting here will have significant meaning and impact!!

Post a Comment