Wednesday, July 8, 2009

இந்த வார ஆனந்த விகடன் பக்கம் எண் 99



இந்த வார ஆனந்த விகடன் பக்கம் எண் 99 உடனே படிக்கவும்.
கருணாநிதிக்கு சொரணை இருந்தால்குற்றஉணர்ச்சியில் எங்காவது ஓடிப் போகத்தான் வேண்டும். நேரம் இல்லாத காரணத்தால் இப்போதைக்கு இவ்வளவே.
அந்தக் கட்டுரை பற்றி பின் விரிவான பதிவை எழுதலாம்.

Sunday, June 28, 2009

நண்பர் லக்கிலுக்கிற்கு வணக்கம்....

எனது முந்திய வணங்கா மண் பதிவுக்கு நண்பர் லக்கி லுக்கின் பின்னூட்டம் எனக்கு வருத்தம் அளிக்கிறது.சுங்கத் துறை ஆணையாளரின் அறிக்கையில் மனிதாபிமானஅடிப்படையில் 200 டன் தண்ணீர் வந்ததாக கூறியிருக்கிறார்.ஆனால் அந்தத் தண்ணீரும் விதிகளின் படி உரிய தொகைபெற்றுக் கொண்ட பின்புதான் வழங்கப்பட்டிருக்கிறது.காசு வாங்கிட்டு கொடுப்பதுதான் மனிதாபிமான உதவியா? கப்பல் சென்னை அருகேவருவது குறித்து உரிய முறையில் தகவல் சொல்லவில்லை என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.திருமணத்துக்குத்தான் அழைப்பிதழ் கொடுப்பார்கள்.சாவுக்கு நாமேதான் போக வேண்டும். அதுவும்சகோதரன் வீட்டு சாவுக்குப் போகஅழைப்பு எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.
அடுத்ததாக ஜோசி அவர்களின் பின்னூட்டத்தில்'யாரையும் குறை சொல்லாதீர்கள். ஆக வேண்டியதைப்பாருங்கள்' என்கிறார். ஆக வேண்டியதை செய்ய வேண்டியவர்கள்சும்மா இருந்தால் எந்த அதிகாரமும் இல்லாத நம்மைப் போன்றவர்கள் கொதிக்காமல் என்ன செய்வது?ஜக்கி வாசுதேவ் போல் நல்லா தப்புக்கும்மக்கள் மீது பழியைப் போட்டு அவர்களுக்குக் குற்றஉணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால் போதுமா?கருணாநிதியால் தான் காவிரி நீரில்நமக்கிருந்த உரிமை பறிபோனது. இந்திராகாந்தியுடன்கூட்டு வைத்ததும் கர்நாடகத்துக்கு எதிரானஉச்சநீதிமன்ற வழக்கை வாபஸ் பெறச்செய்தவர் கருணாதான்.காவிரி பிரச்னையின் ஆரம்பப் புள்ளியே இதுதான். காவிரிக்குகுறுக்கே புதிய அணைகளை கர்நாடக அரசு எழுப்பியது அதன்பிறகுதான்.
1924-ல் வெள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்டஒப்பந்தம் மூலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீர்காவிரியில் இருந்து தரப்பட்டது. கருணாநிதி செய்ததவறை சரி செய்ய, எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதும் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருந்தது.அதில் 1924 ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டஅளவை விட தண்ணீர் பங்கீட்டு அளவு சற்று குறைவாக இருந்தது. ஒரு மலையாளிதமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டான்என்று கருணாநிதி அவதூறு செய்வார்என்று பயந்தே அப் புதிய ஒப்பந்தத்தைத் தவிர்த்துவிட்டார்,எம்.ஜி.ஆர். இப்போது சொல்லுங்கள் கருணாநிதியால்எப்போதும் தமிழனுக்கு நல்லதே நடந்தது கிடையாது.

Saturday, June 27, 2009

வணங்கா மண்ணும் கருணாவும்


இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித்தமிழர்களுக்கு வழங்குவதற்காக உலகத் தமிழர்கள்வழங்கிய சுமா¡ 800 டன் உணவுப் பொருட்களுடன்கிளம்பிய வணங்கா மண் கப்பலை இலங்கைக்குள் நுழையவிடாமல் இலங்கை அரசு தடுத்து விட்டதை உலக நாடுகள்யாரும் தட்டிக் கேட்கவே இல்லை.
நாளொன்றுக்கு 3,720 பவுண்ட் வாடகை கொடுக்கப்பட்டு வரும்அந்தக் கப்பல் (இந்திய மதிப்பில் ஒரு பவுண்ட் என்பது 76 ரூபாய்)கிளம்பி ஐம்பது நாட்களுக்கு மேலாகிறது. (வாடகை மட்டும்பல கோடிகளைத் தாண்டிவிட்டது).
உணவுப் பொருட்கள் வீணாகிவிடக் கூடாது என்பதில் ஏன்யாருக்கும் எந்த அக்கறையும் இல்லாமல் போனது. விடுதலைச்சிறுத்தைகள்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்ஜூவியில் அண்மையில் எழுதியிருக்கும் கட்டுரையில் தமிழக முதல்வர்கருணாநிதி தன்னால் இயன்ற வரை முயன்று இந்தியா வந்திருந்த ராஜபக்சே சகோதர்கள் பசில் மற்றும் கோத்தபயஆகியோரிடம் பேசி, அந்தக் கப்பலை இலங்கைக்குக் கொண்டுசெல்ல அனுமதி வாங்கியிருக்கிறாராம்.
சில நாட்களுக்கு முன்பு கலைஞர், சன், தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட ஊடகச்செய்திகளும் கருணாநிதியின் நடவடிக்கையால் இலங்கைத்தமிழர்களுக்காக புறப்பட்டு சென்னை துறைமுகம் அருகேநிற்கும் அந்தக் கப்பல் இலங்கைக்குச் செல்கிறது என்பதைதிரும்பத் திரும்பச் சொல்லியும், கொட்டை எழுத்துகளில்செய்தி வெளியிட்டும் ராஜவிசுவாசத்தைக் காட்டின. அப்படியான சூழ்நிலையில் அந்த அறிவிப்பு வந்துவெகு நாட்களாகியும் அந்தக் கப்பல் இலங்கைக்குசெல்லவில்லையே ஏன்? அந்தக் கப்பலுக்குள் சென்ற இந்திய கடற்படை அதிகாரிகள்அதில் இருந்தவர்களை கண்டபடி ஏசிவிட்டு வந்ததும் நடந்திருக்கிறது. ஆக, கருணாநிதியின் முயற்சி என்ன ஆனது?மனிதநேயம் பேசும் கனிமொழி என்ன செய்து கொண்டிருக்கிறார்?
இதற்கிடையே கப்பலின் உரிமையாளர், ஏற்பாட்டாளர்களுக்குகுடைச்சல் கொடுக்கத் தொடங்கிவிட்டார். கடல் வர்த்தக நியதிபடிஅதன் வர்த்தகப் பயணம் வெற்றி பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்டகப்பலை அதன் உரிமையாளரே உடைத்து கடலில் மூழ்கடித்து விடுவாராம்.நம்ம ஊரில் பன்றி மீது மோதிய வாகனத்தை விற்று விடுகிறோமே அதுபோல்.தீர்ப்பு எழுதியதும் பேனா முனையை உடைக்கிறார்களே அதுபோல்.
இப்பயணம் தோல்வி அடைந்து அதுபோன்றொரு அசம்பாவிதத்தைகப்பல் உரிமையாளர் செய்தால் அதில் உள்ள உணவுப் பொருட்களின் நிலைஎன்ன ஆகும்? இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லாமல் தான் கதை வசனம்எழுதும் படத் துவக்குவிழாவுக்குச் சென்றிருக்கிறார், முதல்வர்.
இதையெல்லாம் ஜெ., யிடம் உங்களால் கேட்க முடியுமா என்று கேட்பவரா நீங்கள்?அடப் பாவிகளா பதவியில் இருப்பது கருணா(நிதி) தானே? பொண்டாட்டி,வைப்பாட்டிகளின் வாரிசுகளுக்குப் பதவியும் பணமும் சேர்க்கும் கருணாநிதிக்குஈழத்தமிழன் பற்றி அக்கறை இருக்க வாய்ப்பில்லாமலேயே போகட்டும்.அதற்காக இனப்பற்றுடன் ஒன்று சேருங்கள் என்று வீண் பேச்சுகளைபேசவேண்டாம் என்று கருணாவிடம் கேட்டுக் கொள்கிறேன்.
பின் குறிப்பு:இலங்கையில் ராஜபக்சேவுக்கு நேரம்சரியில்லை என்று சொன்ன ஜோதிடரை அந்நாட்டுகாவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது.(கேணப் பையன் இவன் நேரத்தையே இவனுக்குகணிக்கத் தெரியில. எனக்கு ஜோசியம் சொல்லவந்துட்டான் என்று சத்யராஜ் பாணியில் ராஜபக்சேபேசிக் கொண்டிருக்கலாம்.) ஆக, தனக்கு எதிராகசிங்கள ஜோதிடன் கூட பேசக் கூடாது என்கிறநிலையில் ஜனநாயகம் பேசும் ராஜபக்சேவின்தூதர்கள் பசில், கோத்தபயவுக்கு காந்தி தேசத்தில்கிடைத்த வரவேற்பு எப்பூடி?

Tuesday, June 16, 2009

பெரியாரை சாதி சங்கத் தலைவராக்கிய குமுதம்!


குமுதம் அலுவலகம் முன்பு நாளை பெரியார் திராவிட கழகத்தினர் குமுதம் இதழை எரிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். காரணம் குமுதம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும், நான் தமிழன் தொடர்!
அப்படியென்ன அதில் எழுதி விட்டார்கள் என்கிறீர்களா? அந்தத் தொடர் எதைப் பற்றி தெரியுமா? தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சாதிகளைப் பற்றிய வரலாறு. இன்றைய தேதிக்கு நம் நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று இதுதான். வெட்கமாகவே இருக்கிறது-. எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்கிறார்கள்.
அதிலும் கடந்த இரண்டு வாரங்களாக நாயக்கர்_நாயுடு சமூகத்தைப் பற்றி வந்துகொண்டிருக்கிறது. இதில் ‘பெரியாரைப் போன்ற ஒரு தலைவரைத் தந்ததற்காக நாயக்கர் சமூகத்திற்கு இந்த நாடு கடமைப்பட்டிருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார், இரா.மணிகண்டன்.ஆகவே தோழர்களே உங்களுக்குத் தெரிந்த நாயக்கர்கள் யாராவது இருந்தால் அவர்களின் கால்களில் உடனே விழுந்து பெரியாரைத் தந்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். முடிந்தால், ஒவ்வொருமுறையும் அவர்களைப் பார்க்கும் போதும் அவர்கள் கால்களில் விழுங்கள்.
அதுமட்டுமே எழுதியிருக்கிறார். ‘சாதி சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும் ....... போராடியவர்’ என்று என்கிறார் கட்டுரை ஆசிரியர். எனக்குத் தெரிந்து பெரியார் சாதியை சாடினார்; சாதியை அகற்றத்தானே போராடினார். சாதியில் என்ன சீர்திருத்தம் செய்யவேண்டியிருக்கிறது (வெங்காயம்!).
இதற்கெல்லாம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்! பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுகிறோம் என்று ஒருசிலர் என்னைப் போன்றவர்களை எதிர்க்கலாம். பி.எஸ்.ஜி. நாயுடு மூலமாக இப்போது நடந்து கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.
அதே நிறுவனத்தில் இப்போது நடக்கும் தில்லு முல்லுகள் பற்றி ஆசிரியருக்கு எதுமே தெரியாதா? பலமுறை அந்தக் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். (அந்தக் கல்லூரி முதல்வராக நாயுடுவைத் தவிர வேறு சமூகத்தினர் யாரும் வரமுடியாது) எந்த அனுமதியும் இல்லாமல் கல்லூரிக்கு வெளியே அவிநாசி சாலையில் நகரும் படிக்கட்டுகளுடன் பாலம் அமைக்க (அவர்களின் கல்லூரியை இணைக்கிறார்களாம்) கட்டும் போது அது நடு இரவில் இடிந்து விழுந்து , நல்லவேளை யாரும் சாகவில்லை. அந்தப் பணக்கார ர்களை விட்டுத்தள்ளுங்கள். பெரியாரை சாதிக்குள் அடைக்கப் பார்த்த குமுதம், பெதிகவின் குற்றச்சாட்டுக்கு சொல்லும் பதில் என்ன?
அறிஞர் அண்ணா இடத்திற்கு வந்திருக்க வேண்டிய மிகப்பெரிய சமூக சீர்திருத்த வாதியான எம்.ஆர்.ராதாவையும் இந்த சாதி சங்கத்தில் சேர்த்திருக்கிறார், இரா.மணிகண்டன்.அதிலும், நாயக்கர்_நாயுடு இனத்திற்குப் பெருமை சேர்த்ததாக ஈவிகேஎஸ் இளங்கோவனையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். (அடி செருப்பால!) அதுமட்டுமா? மின் வெட்டுத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சாப்பாட்டு அமைச்சர் ஏ.வ.வேலு, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் (அடக் கடவுளே) இவர்களையும் பெரியார் லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறார்கள்.
இந்தத் தொடர் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ தெரியாது. ஆனால் சமூகத்திற்கு பாடுபட்ட தலைவர்கள் எந்த சாதியில் பிறந்தவர்கள் என்பதை மட்டுமே பட்டியலிட்டுக் காட்டும் அட்டவணை யாகவே இத் தொடர் இருக்கிறது. இது தேவையா? இவரு எங்க சாதி சனம் என்று மார்தட்டிக் கொள்ளும் நம் சமூக அமைப்பில் இது தேவையா? அதிலும் சாதி அடையாளம் இல்லாத சில தலைவர்களையும் இப்படி அடையாளம் காட்டுவது சமூகத்திற்கு நல்லதா? சிந்திக்கட்டும் குமுதம்.

Thursday, June 11, 2009

கொடி எரிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய பிணை நிபந்தனைகள் சட்டநீதிக்கு புறம்பானவை


இலங்கை அரசு ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுத உதவி, நிதி உதவி மற்றும் பன்னாட்டு அரசியல் உதவி ஆகியவற்றை வழங்கி அந்த இனப்படுகொலையில் பங்கு வகித்தது. இதற்கு சனநாயக வழியில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை கடந்த 25.04.09 அன்று தமிழகமெங்கும் இந்திய அரசுக் கொடியையும் இலங்கை அரசுக் கொடியையும் எரிக்கும் போராட்டம் அறிவித்தது. கோயம்புத்தூரில் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு இயக்கங்களையும் சேர்ந்த 8 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றுடன் 48 நாட்களாக அவர்கள் கோவை நடுவண் சிறையில் உள்ளனர். அவர்களுக்கு பிணை விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. கடந்த 9.06.09 அன்று அப்பிணை மனு மீது ஆணை வழங்கிய நீதிபதி திரு. ஆர். இரகுபதி அவர்கள் மேற்கண்ட 8 பேரும் இந்திய அரசுக் கொடியை எரிக்கவில்லைஇ அதற்கு முன்பாக அவர்களைத் தடுத்துக் காவல்துறையினர் கைது செய்து விட்டார்கள் என்ற போதிலும் அவர்களின் நோக்கம் குறித்து கடுமையாகக் கருத வேண்டியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் ஒரு வாரத்திற்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்திய அரசுக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும், ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் ஒரு வாரத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார். இந்த இரு நிபந்தனைகளும் நீதிநெறிக்கும் சட்டத்திற்கும் புறம்பானவை. பிணை வழங்கும் போது நிபந்தனை விதிப்பதற்கு ஒரு சட்டக் கோட்பாடு உள்ளது. அது அக்குறிப்பிட்ட வழக்கில் புலனாய்வுக்கு உதவியாக அந்நிபந்தனைகள் அமைய வேண்டும் என்பதாகும். இந்தக் கோட்பாட்டிற்கும் மேற்படி நிபந்தனைகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. மாறாக, ஒரு கொள்கைக்கு எதிராக பழிவாங்கும் தன்மையே மேலோங்கியுள்ளது. பிணை வழங்கும் நிலையில் ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது போல் கருதித் தண்டனை வழங்கக் கூடாது என்பது சட்டநெறி. ஆனால், இவ்வழக்கில் பிணை வழங்குவதற்கு இந்திய அரசுக் கொடியை அவரவர் வீட்டு வாசலில் ஒரு வாரம் ஏற்ற வேண்டும் என்பதும், அநாதை இல்லத்தில் சேவை புரிய வேண்டும் என்பதும் தண்டனை வழங்கும் செயலாகும். தேசியச் சின்னங்களை இழிவு படுத்துவதைத் தடுக்கும் சட்டம் - 1971 பிரிவு (2) - இந்திய அரசுக் கொடியை அவமதிக்கக் கூடாது என்பதற்கான விதியாகும். இந்திய அரசுக் கொடியை ஒருவர் மதிக்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்த அந்தச் சட்டத்தில் எந்த விதியும் கிடையாது. எனவே, இந்த ஆணையில் உள்ள நிபந்தனைகள் ஏற்க இயலாதவைகளாக உள்ளன. முறைப்படி உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுச் செய்ய உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் தியாகு ஆகியோர் 11.06.09 அன்று சென்னையில் விடுத்துள்ள கூட்டறிக்கை



Tuesday, June 9, 2009

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது என்கிற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர், கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை. ‘கண்கள் இரண்டால்’ என்று காதல் பேசி இவரது பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஆனால் அவர் எழுதிய இந்தக் கவிதையை பிரசுரிக்க பலரும் தயங்கி நின்றார்கள். இந்த வாரம் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. இப்படியொரு அறம் பாடும் தைரியம் கவிஞருக்கு இருந்த போதும் அதை வெளியிடும் தைரியம் நம் பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டிருக்கிறது. குமுதம் டாட் காமிலும் கவிஞர் தாமரை இந்தக் கவிதையை வாசிக்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. விரையில் அந்த வீடியோவையும் இதில் இணைக்கிறேன்.


இந்தியத் தேர்தல் நேரத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதை அப்போதே பிரசுரமாயிருக்க வேண்டியது. ஆனால் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. பாப்புலர் மீடியாக்களில் வெளிவரட்டும் என்றுதான் நானும் இதை பதிவிடாமல் காத்திருந்தேன். தமிழினத்திற்கு நேர்ந்த கொடுமை கண்டு கொதிக்கும¢ ஒவ்வொவரின் இதயமும் பேசுவதாகவே இந்தக் கவிதையை நான் பார்க்கிறேன். அறம் பாடினால் பாடப்பெற்றவர்கள் என்ன ஆவார்கள் என்பதை நாடறியும். நானும் அறிவேன்.


‘உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்க மாட்டேன்’ என்று வசனம் பேசிவிட்டு தமிழன் தலையில் குண்டுவிழுவதை கண்டும் காணாமல் இருக்கும் திரைப்படத் துறையினருக்கு மத்தியில் இப்படியொருவர் இருக்கிறார் என்பதை உண்மையான தமிழர்கள் என்றென்றைக்கும் நினைத்துப்பார்க்க வேண்டியது அவசியம். சரி பீடிகை போதும் கவிதையை வாசியுங்கள்.




தாமரை


கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்

செய்துவிட்டாய்

எங்கள் தமிழினத்திற்கு...


எத்தனை

வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்

காலில் விழுந்தும் கதறியும்

கொளுத்திக் கொண்டு செத்தும்

தீர்ந்தாயிற்று...


எதுவுமே காதில் விழாத உங்களுக்கு

இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...


பட்டினியால் சுருண்டு மடிந்த

பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து

அழுது வீங்கிய கண்களோடும்

அரற்றிய துக்கத்தோடும்

களைந்த கூந்தலோடும்

வயிரெரிந்து இதோ விடுகிறேன்..


கண்ணகி மண்ணில் இருந்து

ஒரு கருஞ்சாபம்!


குறள் நெறியில் வளர்ந்து

அறநெறியில் வாழ்ந்தவள்

அறம் பாடுகிறேன்!


தாயே என்றழைத்த வாயால்

பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்

இனி நீ வேறு, நான் வேறு!


ஏ இந்தியாவே!

ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி

குண்டுகளைக் குறிபார்த்துத்

தலையில் போடவைத்த உன்தலை

சுக்குநூறாய் சிதறட்டும்!


ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த

எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய

இனி ஒரு நூற்றாண்டுக்கு

உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!


மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு

மளமளவென்று கலையட்டும்!


ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்

இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!


தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்

அறுவடையாகட்டும்!


மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்

உங்கள் மலைகள் எல்லாம்

எரிமலைக் குழம்புகளைக்

கக்கி சாம்பல் மேடாகட்டும்!


இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...

உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!


உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!

எதிரிகள் சூழ்ந்து

உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!


தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து

சிதறிய உடல்களோடு

சுடுகாடு மேடாகட்டும்!


போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று

கூசாமல் பொய் சொன்ன வாய்களில்

புற்றுவைக்கட்டும்!


வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!

எங்கள் எலும்புக் கூடுகள் மீது

ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...


உங்கள் சிம்மாசனம் வெடித்துத்

தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......


பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!


நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...

உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து

ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!


எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி

சித்திரவதையில் சாகடித்தீர்களே...

உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!


எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த

சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...

உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!


உங்கள் பெண்களெல்லாம்

படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!


நரமாமிசம் புசித்தவர்களே...

உங்கள் நாடி நரம்பெல்லாம்

நசுங்கி வெளிவரட்டும்!


இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு

புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...


ஆழிப்பேரலை

பொங்கியெழுந்து

அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!


நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!


நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!

நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!

..........

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!


குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே...

அவர்கள் நீடுழி வாழட்டும்!


எம் குழந்தைகள் அழுதாலும்

உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!






Tuesday, May 12, 2009

வெற்றி யாருக்கு?; என்ன சொல்கிறது ஜூவி-?


திருவள்ளூர், தென்சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, ஆரணி, விழுப்புரம், சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், தேனி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம். திமுகவுக்கு மத்திய சென்னை, நாமக்கல், கரூர், பெரம்பலூர், நாகை, மதுரை, கன்னியாகுமரி, நீலகிரியில் வெற்றி வாய்ப்பாம். காங்கிரஸ§க்கு காஞ்சிபுரம், திருச்சி, மயிலாடுதுரை, சிவகங்கை, நெல்லை, பாண்டிச்சேரி ஆகிய தொகுகளிலும், ஸ்ரீபெரும்புத்தூர், அரக்கோணம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பட்டாளி மக்கள் கட்சியும் வெற்றி பெறுமாம்.மதிமுகவைப் பொறுத்தவரையில் ஈரோடு, தஞ்சை, விருதுநகர் என நான்கில் மூன்றைக் கைப்பற்றுகிறதாம். பிஜேபி ராமநாதபுரத்திலும், கம்யூனிஸ்ட்கள் வடசென்னை, கோயமுத்தூர், தென்காசியிலும் வெற்றி பெறலாம்; விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரத்தில் கொடி நாட்டுவதும் உறுதியாகிவிட்டதாம். இதுதான் ஜூவியின் கணிப்பாக உள்ளது.இது ஏறத்தாழ சரியாக இருக்கிறது என்கின்றது, என் நண்பர்கள் வட்டாரம். அதே சமயத்தில் மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் மண்ணைக் கவ்வுவாராம். நீலகிரியிலும் மதிமுக வெல்லும் என்கின்றனர் பெரும்பாலான நண்பர்கள். மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெறுவார் என்று உறுதியாகக் கூறுவது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் ராஜீவ்காந்தியை நேற்றும் கூட மூன்று மணிநேரம் காவல் நிலையத்தில் உட்கார வைத்து மனஉளைச்சல் கொடுத்திருக்கிறது, காவல்துறை. கருத்துரிமைக்காக கருத்து டாட் காம் நடத்திய கார்த்திக் சிதம்பரமும், கனிமொழியும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.ஜூவி கருத்துக் கணிப்பில் சாரம்சம் இதுதான்;
திமுக- 8, காங்கிரஸ் 6, விசி ஒன்று; மொத்தம் 15.அதிமுக 13, பாமக 5, மதிமுக 3, கம்யூனிஸ்ட்கள் மூன்று; மொத்தம் 24.பிஜேபி ஒன்று.
இது எப்படி இருக்கு-?

Friday, May 8, 2009

ஆபரேஷன் பூமாலையா-? மலர்வளையமா?


நான்காயிரம் பச்சிளம் குழந்தைகள் பாலின்றி தவிப்பு!பாதுகாப்பு வலையப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஒருலு வயதிற்குட்பட்ட குழந்தைகள் குடிக்கப் பாலும் தண்ணீருமின்றி இறந்திருக்கிறார்கள். வற்றிய மார்ப்பும் ஒட்டிய வயிறுமாகத் திரியும் தமிழச்சிகளால் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவது எப்படி சாத்தியமாகும்?குடிக்கத் தண்ணீர் இல்லாமல் ஏராளமானோர் கொஞ்சம் கொஞ்சமாக செத்துமடிகிறார்கள். இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் எத்தனை பேர் தங்கள் இறுதி மூச்சை முடித்துக் கொண்டார்களோ தெரியவில்லை. இதற்கு மேலும் நாமெல்லாம் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது?ஆபரேஷன் பூமாலை என்று ராஜிவ்காந்தி விமானத்தில் உணவுப் பொட்டலங்களைப் போட்டாரே. ஐய்யோ! காங்கிரஸ்காரர்களே அவர்களுக்கு கொடி பிடிக்கும் கூட்டணி கட்சிகளே! நீங்கள் பூமாலையிட வேண்டாம்; ஒரு வாய் தண்ணீராவது அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யக்கூடாதா?இலங்கைப் பிரச்னை தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிற உண்மை உங்களுக்கு தெரிந்துவிட்டது. இனியும் ஏன் மௌனம்? தேர்தல் வெற்றிக்காகவாது, ஈழத் தமிழனுக்கு விமானம் மூலம் உணவளிக்க ஏற்பாடு செய்தால், நன்றி மறவாமல் உங்களுக்கே ஓட்டளிக்க என்னைப் போல் பலரும் தயாராக இருக்கிறோம். இந்த நான்காயிரம் கைக்குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். பூமாலை இல்லை, மலர்வளையம் தான் வைப்போம் என்று நீங்கள் இதுவரை செய்த துரோகம் போதும். நூறு கோடி, ஆயிரம் கோடி என்று நிவாரணம் அனுப்பியதும் போதும். அது எதுவுமே ஈழத்தமிழன் கைக்கும், வாய்க்கும் எட்டவில்லை என்பது எங்களைப் போலவே உங்களுக்கும் தெரியும்.விமானம் மூலம் நீங்கள் அனுப்பும் உணவுதான் இனி அவர்களின் உயிரைக்காக்கப் போகிறது. ஏதாவது செய்யுங்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் சொல்லி, விமானத்தில் உணவளிக்கும் கோரிக்கையை எழுப்பச் சொல்லுங்கள். வைகோ அவர்களே நீங்களும் பேசுங்கள். ராமதாஸ் அவர்களே நீங்களும் கோரிக்கை விடுங்கள். நம்வீட்டுக் குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளர்க்கிறோம். இங்கே கண்முன்னே பச்சிளம் குழந்தைகள் உணவின்றி செத்துமடிவதை கண்டும் தேர்தல் திருவிழாவில் மூழ்கினால் நம் மனம் நம்மை மன்னிக்குமா? சிந்தியுங்கள். விமானம் மூலம் உணவிட மத்திய அரசுக்கு உத்தரவிடுங்கள் தோழரே!

இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்




இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள். பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம். இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நண்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை. புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது.

வவுனியா முகாம்களின் மறைக்கப் பட்ட உண்மைகள்


இராணுவத்தின் கண்களில்மண்ணை தூவி உள்நுளைந்த Channel 4 செய்தியாளரினால் அம்பலம்!


அரசு சாரா ஊடகவியளார்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படாத நிலையில்,ஒளிப்படக் கருவியை மறைத்துவைத்து முகாமிற்குள் நுளைந்த Channel - 4செய்தியாளர் ஒருவர் முதல் தடவையாக சுதந்திரமாக சில செய்திகளைஆவணப்படுத்தியுள்ளார்.இச்செய்தி ஒளிப்பதிவானது முதல் தடவையாக சுதந்திரமாகப் பதிவுசெய்யப்பட்டசெய்தியென Channel - 4 கூறுகிறது.நிக் பட்டனின் இச் செய்தி அறிக்கையின் படி இளம் பெண்கள்தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவது தவிர,இறந்த உடல்கள் முகாம்களுள் வெளியான இடங்கள் நாட்கணக்கில் கவனிப்பாரற்றுக்கிடப்பதாகவும் மேலும் கூறும் சனல் 4 செய்திகள் இம்முகாம்களில் எந்தஅடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கிறது.தன்னை அடையாளம் காட்டவிரும்பாத உதவி அமைப்பாளர் ஒருவர், தனது முகாமில்நான்கு இறந்த உடல்கள் மூன்று நான்கு நாட்களாக கவனிப்பரற்றுக் கிடந்ததாகக்குறிப்பிடுகிறார்.பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாத தாய்மாரைப் காண்பதாகக் கூறும் இவர், ஒருதாய் இரண்டு கரண்டி பாலுக்காக தன்னிடம் கெஞ்சி மன்றாடியதாகவும்குறிப்பிடுகிறார்.பல குழந்தைகள் தாய் தந்தையர் இல்லாமல் தவிக்கவிடப்பட்டுள்ளதாக முகாம்வாசி ஒருவர் குறிப்பிடுகிறார்.இங்கு எமக்கு வாழ்க்கையில்லை இது ஒரு சிறைச்சாலை என மேலும்குறிப்பிடுகிறார்.உணவிற்காக நெரிசலில் சிக்குண்டு இறந்து போன இரு
சிறார்களைப் பார்த்ததாக மேலும் சாட்சியமளிக்கும் இவர், புலிகளின்கட்டுப்பாட்டிலிருந்து வந்த தமிழர்களை மிரட்டுவதே அரசின் நோக்கம் எனவும்குறிப்பிடுகிறார்.ஒரு பெண் உதவிப் பணியாளர் சாட்சியமளிக்கையில் இளம் பெண்கள் இராணுவத்தால்பிரித்தெடுக்கப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதாகவும்கூறுகிறார்.முகாம்களிலிருந்து தனிமைப்படுத்தப்படும் பெரும்பாலனவர்க மீண்டும்திரும்புவதில்லை எனக் குறிப்பிடுகின்றார்.பெண்கள் எல்லோர் முன்னிலையிலும்குளிக்கவேண்டிய நிலையிலிருப்பதாகவும் இது அவர்களின் மிகப் பெரும்பாதுகாப்புப் பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவிக்கும் இச்செய்தி நேற்றுகுளியற் பகுதியில் மூன்று பெண்களின் இறந்த உடல்கள் காணப்பட்டதாகவும்கூறுகிறது.

-Muthamizh Chennai

Thursday, May 7, 2009

வீரமணியும் கருணாநிதியும் பதில் சொல்லட்டும்



இந்தமுறை கடுமையான முதுகு வலி காரணமாக கடந்த சில நாட்களாக என்னால் எதுவும் எழுத முடியவில்லை. முதுகெழும்பு இல்லாதவன் என்று யாரும் இனி என்னைத் திட்ட முடியாது! வழக்கமாக வலியும் வேதனைகளும் வரும்போது இந்தக் கஷ்டம் என் எதிரிக்குக் கூட வரக்கூடாது என்று நினைக்கத் தோன்றும். ஒவ்வொரு முறையும் படுத்தியெடுக்கும் முதுகு வலியால் நானும் இப்படி நினைத்துக்கொள்கிறேன். எத்தனையோ வேலைகள் என் முதுகு வலியால் முதுகைப் போலவே பின்தங்கிக் கிடக்கின்றன.நண்பர் ஆனந்த் செல்லையா தான் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்கிறார் (இரு சக்கர வாகனம் ஓட்டக்கூடாதாம்) பில்ரத் மருத்துவமனையில் பிசியோதெரபி (தமிழ் வார்த்தை மறந்துவிட்டது) சிகிச்சை எடுத்து வருகிறேன். ஒருமுறை கடற்கரை புதை மணலில் நடக்க முடியால் நடந்து சென்று என் நண்பனைத் தேடிக் கொண்டிருந்தபோது செல்போனில் என்னை அழைத்த பாடலாசிரியர், கவிஞர் தாமரையிடம் ‘மணலில் நடக்க முடியாமல் நடக்கிறேன்’ என்றேன். ‘உங்களால் இங்கே கடற்கரையில் சுதந்திரமாக நடக்க முடிகிறது. ஆனால் அங்கே (ஈழத்தில்) மக்கள் ஒவ்வொரு விநாடியும் செத்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்றபோது அந்த இரவு வேளையிலும் அந்த மணல் எனக்குச் சுட்டது. என் மடிக்கணினியும் பழுதேற்பட்டதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்தப் பதிவைப் போட்டுக்கொண்டிருக்கிறேன். (ஆனந்த் செல்லையா அழைத்துவிட்டால் இதுவும் பாதியில் நின்றுவிட வாய்ப்பிருக்கிறதுதமிழகத் தேர்தல் சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருவதைப் பற்றி ஏதாவது கதைக்கலாம் என்று இருக்கிறேன். கருணாநிதியின் மருத்துவமனை அனுமதி அவருக்கு முளைத்திருக்கும் தேர்தல் வெற்றி குறித்து எழுந்திருக்கும் அவநம்பிக்கையைத் தான் காட்டுகிறது. அதிலும், தமிழீழம் பிறக்க முயல்வோம் என்று திருவாய் மலர்ந்து அரசியல் சாணக்கியன் என்கிற நிலையில் இருந்து சறுக்கிக் கொண்டிருக்கிறார். திரைப்பட தமி ழீழ ஆதரவு இயக்கத்தின் பிரசாரம் நன்றாக போய் கொண்டிருக்கிறது. மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் இளங்கோவன், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நடந்த கூட்டத்தில், ‘‘சீமான் தன்னை பெரியாரின் பேரன் என்கிறார். ஒருவேளை பெரியார் சின்ன வயதில் செய்த தவறினால் இப்படியரு தகுதி அவருக்குக் கிடைத்திருக்கலாம்’’ என்கிற ரீதியில் பேசியிருக்கிறார். செருப்பால் அடித்தால் என்ன? இதற்கு கி.வீரமணியும், தமிழினத் தலைவர் கருணாநிதியும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். முரசொலியில் சீமானின் பேச்சு ஆபாசமாக இருக்கிறது என்று எழுதிய கலைஞர், இளங்கோவனின் பேச்சுக்கு என்ன சொல்லப் போகிறார்?இப்படி நேரு ‘மாமா’, காந்தி ‘தாத்தா’, ‘அன்னை’ இந்திரா, ‘அன்னை’ சோனியா போன்ற அடைமொழிகளுக்கெல்லாம் அர்த்தம் சொல்லத் தொடங்கினால் அருவறுப்பாக இருக்காதா? இளங்கோவன் போன்றவர்கள் தோல்வி பயத்தால் உளறுகிறார்கள் என்று மட்டும் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது. நம் உணர்வை கொச்சைப்படுத்தும் விதமாக இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள். நம்மை சோர்வடையச் செய்கிறார்கள்.இளந்தமிழர் இயக்கத்தினர், மத்திய ஜவுளித்துறை இணையமைச்சராக இருந்த இளங்கோவன் அந்தத் துறைக்கு என்ன செய்தார்? கொன்றொழிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசும் தமிழக காங்கிரஸ் அரசும் செய்தது என்ன? என்கிற ரீதியில் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். அதிலும், நெசவாளர்கள் படும் பாட்டையும் அத்துறையில் குழந்தைத் தொழிலாளர் முறை தலைவிரித்தாடுவதையும் உரிய ஆவணங்களுடன் ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கியிருக்கிறார்கள். இப்போது அந்தத் தோழர்களைக் கைது செய்ய நமது தமிழகக் காவல் துறை வலை வீசிக்கொண்டிருக்கிறது. ஈழ விடுதலையைப் பேசினால் அது வெளிநாட்டுப் பிரச்னை, நம்மூர் பிரச்னையைப் பேசினாலும் காவல் துறை தேடும் என்றால் இது நாடா? இல்லை சுடுகாடா? மருத்துவமனையில் இருந்தாலும் ஒரு மடையனுக்கு புத்தி வரவில்லை.காங்கிரஸ§க்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரசாரம் செய்து கொண்டிருந்த அமைப்புகளும், தோழர்களும் கருணாநிதியின் தொடர் துரோகத்தால், ஜெயலலிதாவுக்கு வாக்களியுங்கள் என்று கோஷமிடத் தொடங்கிவிட்டார்கள். தவளை தன் வாயால் கெடும்! தொடர்ந்து எழுதமுடியாமல் முதுகு வலிக்கிறது. இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.நன்றி தோழர்களே!

Friday, May 1, 2009

ஈழவிடுதலைக்கு எதிரான ஊடக சக்திகளை களையெடுப்போம்!







ஈழப்போர் முடிவுக்கு வராமல் போனதற்கு காரணம் என்ன என்று தீவிரமாக யோசிக்க வேண்டும். சோனியாவைப் போரை நிறுத்து என்று ஒற்றை வரி கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் போனதற்கு என்ன காரணம்?- கொஞ்சம் தீவிரமாக சிந்தித்தபோதும் விளங்குகிறது ஓர் உண்மை. தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் சென்று சேர்ந்திருப்பது சன் டிவி. திமுக தலைமையுடன் சன் டிவி குடும்பத்தாருக்கு மோதல் ஏற்பட்டபோது ஸ்பெக்டர் ஊழலும், மின்தடை பிரச்னையும் தமிழகத்தில் அதிகளவு பேசவைத்தது சன்டிவி தான். ஆனால் அவர்கள் கைகோர்த்தபின் தன்னுடைய தினகரன் அலுவலகத்தில் அழகிரியால் செத்து மடிந்த மூன்று பேருக்கு கிடைக்க வேண்டிய சட்ட நியாயமும் கிடைக்காமல் செய்யும் வகையில் தமிழக அரசு மீதான வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது சன் நிர்வாகம். அதுபோன்ற ஒரு சூழலில் ஈழப்போர் மூண்டது. ஈழப்போரை மத்திய அரசு முன்னெடுத்து நடத்துகிறது என்பதை தமிழுணர்வாளர்கள் மட்டுமின்றி அதே மத்திய அரசை தலைமையேற்றிருக்கும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாமக ஆகிய கட்சிகள் உரக்கச் சொல்லின. ஆனால் அவர்களின் குரலை சன்டிவி ஏனோ பதிவு செய்யவில்லை. ஸபெக்டரம் ஊழலை வெளிக்கொண்டு வரவும் மின்தடையை திமுகவுக்கு எதிராக கிளப்பவும் தலைவர்கள் வீடுகளில் காத்திருந்து திமுகவுக்கு எதிராக பேட்டிகளை அவர்களிடம் வாங்கி ஒளிபரப்பிய சன்டிவிக்கு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தவுடன் ஜால்ரா அடிக்க ஆரம்பித்தது.கிராமங்களில் புதிதாக டிவி வாங்குவோர், புது வீட்டிற்கு குடிபுகுவோர் அனைவரும் கேபிள் டிவி இணைப்பு வேண்டும் என்று கூட கேட்கத் தெரியாமல் சன்டிவி கனெக்ஷன் கொடுங்கள் என்று தான் கேட்பார்கள். அப்படியென்றால் சன்டிவியில் காண்பிக்கப்படாத உண்மை கடைக்கோடி தமிழனுக்குச் சென்று சேர்வதில் சில சிக்கல்கள் இங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. சன்டிவி இப்படியென்றால் தினகரன் நாளிதழும் தமிழனுக்கு எதிரான கருத்துகளை கட்டவிழ்த்து விடுவதொன்றும் ஆச்சரியமானதாகத் தெரியவில்லை. அடுத்ததாக, நாம் பார்க்க வேண்டியது, கலைஞரை. அதாவது முதல்வர் கருணாநிதி சன்டிவி நிர்வாகத்துடன் சண்டையிட்டதும் அதை மிகவும் சாதுர்யமாக அணுகி கடைந்தெடுத்த சுயநலத்துடன் தனக்கும் தன் கட்சிக்கும் (உண்மையில் எதிர்காலத்தில் தன் வாரிசுகளுக்கு) ஆதரவாக பல சேனல்களை உருவாக்கிக் கொண்டார். சண்டை முடிந்து சேர்ந்ததில் கலைஞருக்கு இப்போது நிகர லாபம் கலைஞர், செய்திகள், சிரிப்பொலி உள்ளிட்ட சேனல்கள்!
ஈழ விடுதலைக்காகப் போராடுவதாகவும் அதற்காக வேலை நிறுத்தம், மனித சங்கிலி, பேரவைத் தீர்மானம், உண்ணாநிலை (சாகும்வரை!) என போராட்டங்கள் நடத்திய கலைஞர், தன்னுடைய அதிகாரப்பூர்வமான சேனல்களில் ஈழ விடுதலைக்காக இல்லாவிட்டாலும் ஈழ நிலைமையை எடுத்துச் சொல்லும் எந்தச் செய்திகளையும் ஒளிப்பரப்பவில்லையே ஏன்? தன் உண்ணாநிலையை நேரடி ஒளிபரப்புச் செய்யும் கலைஞர் ஈழத்தில் மக்கள் படும் பாட்டை காட்டத்தவறிவிட்டாரே ஏன்? (இந்த வாதத்தை கலைஞருக்கு எதிரணியில் உள்ளவர்களும் தமிழுணர்வாளர்களும் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்று என் நண்பன் என்னிடம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறான்).தினமலரின் விஷமத்தனம்சன்டிவிக்கு அடுத்தபடியாக தமிழர்கள் அதிகளவில் (கெட்கக் கேடு) பார்ப்பது படிப்பது தினமலரைத்தான். காலையில் மலம் கழிக்கும் முன்னால் தினமலரைப் பார்த்துவிடுவது என்பது கொங்கு வட்டாரத்தில் இன்றைக்கும் இருக்கும் ரொம்ப நல்ல பழக்கம்! வழக்கம் போல் தினமலரும் -ஈழவிடுதலையை விரும்பியதும் இல்லை. அது இந்தமுறையும் செய்திகளில் வெளிப்பட்டது என்பதை விட அதற்கு முரணான துணைத் து£தர் அம்சா வாங்கிக் கொடுக்கும் சாராயத்துக்கு (தினமலர் பாஷையில் உ.பா.) நன்றிக்கடனாக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு தமிழகமக்கள் மனதில் பிழைக்கப் போனவனுக்கு எதற்கு தனிநாடு-? என்று கேட்க வைத்திருக்கிறது. ஆரிய ஆதிக்கத்தால் ஹிந்தி பத்திரிகையும். தேசிய சேனல்களும் ஈழவிடுதலையை எதிர்க்க தமிழனின் உணர்வுகள் பிரதிபலிக்கவில்லை என்பதைவிட தமிழனின் உணர்வையே கொச்சைபடுத்தும் வேலைகளையும் சன்டிவி, கலைஞர் டிவி, தினமலர், ஹிந்தி மற்றும் தேசிய சேனல்கள் செய்து வருகின்றன. இதில் தினத்தந்தியின் சேவை ஆரம்பத்தில் ஈழவிடுதலைக்கு பக்கபலமாக இருக்க, அண்மைகாலமாக அதுவும் மாவீரன் முத்துக்குமார் மரணத்துக்குப் பின் தினத்தந்தியும் மிரட்டப்பட்டிருக்கிறது.ஜூனியர்விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகியன ஆரம்பத்தில் காட்டிய உணர்வை கூண்டோடு தமிழனை வேரறுக்கும் வேலையில் கைவிட்டுவிட்டன. அதிலும் குடுதம் ரிப்போர்ட்டர் கேட்கவே வேண்டியதில்லை. ஆனால் கடந்த சில இதழ்களில் பழைய படி உணர்வை பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டரு ஜூவி., குமுதம் ரிப்போர்ட்டரில் பெரிதாக இனி எதையும் எதிபார்க்கமுடியாது. ஆனந்த விகடனில் திருமாவேலன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நிருபர்கள் ஈழவிடுதலைக்காகச் செய்யும் மகத்தான பணியை ஈழமும் சரி தமிழகமும் சரி என்றைக்கும் மறக்கக் கூடாது!ஆக இப்போதைக்குக் களத்தில்¢ நம்மினத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் எத்தனை ஊடகங்கள் உள்ளன என்று விரல் விட்டு எண்ணிப்பாருங்கள். இதே கர்நாடகத்தில், மேற்கு வங்கத்தில், மஹாராஷ்ட்ராவில், கேரளத்தில் அம்மாநில மக்களின் உணர்வை மதிக்காமல் ஒரு பத்திரிகையாவது செயல்படமுடியுமா? என்பதையும் சந்தித்துப் பாருங்கள். பஞ்சாப்க்குள் சென்று அவ்வின மக்களுக்கு எதிராக சுப்பிரமணிசுவாமியால் பேசிவிட்டு வெளியே வரமுடியுமா? ஆக உலக வரைபடத்தில் தமிழன் மட்டுமே ஈ வாயன்.,,, இன்னொரு பெரியார் வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் வெறும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இல்லாமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து தமிழினத்துக்கு எதிரான இந்த ஊடக சக்திகளை களையயெடுக்க வேண்டும் என்பதே உங்களுக்கு இந்தச் சிறியவன் வைக்கும் வேண்டுகோள். கைகோர்ப்போம் தமிழினத்தைக் காக்க.......

Monday, April 27, 2009

இலங்கைப் போருக்கு இந்தியா எப்படி உதவலாம்?




இந்தச் செய்தி மூலம் சில உண்மைகள் உங்களுக்குத்தெரிய வரலாம்....
நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

Friday, April 24, 2009

அம்மா கனிமொழி! நீயும் ஒரு பொம்பளை தானே!!


‘‘தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டரை லட்சம் அப்பாவி தமிழ் மக்களை மனிதக் கேடயமாக பிடித்து வைத்திருக்கிறார்கள்’’ என்று புலிகள் மீது இலங்கை அரசு குற்றஞ்சாட்டுகிறது. இதற்கு இந்தியாவும் ஒத்து ஊதுகிறது. உண்மையில் புலிகள் பாதுகாப்பில் உள்ள தமிழர்களின் கதி என்ன? என்பதை அறிய முயன்றேன். இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் இந்தக் கேள்வியை வைத்ததும், அவர், நீண்ட விளக்கத்துடன் என் கேள்விக்கான பதிலை தந்தார். அவர் கூறியதில் இருந்து.......‘‘ஓர் இனக்குழுமத்தில் இருந்து சில நியாயங்களுக் காக கிளம்புகின்ற குழுவினரை மக்கள் கூட்டத்தில் இடையே அடையாளம் காண்பது என்பது கடின மானது என்பதால், இன உணர்வுள்ள இளைஞர் களை எல்லாம் ஒன்று திரட்டி அப்படியே அழித்தல் என்பதுதான் உலக நாடுகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் பாலிசி. இதை நாகலாந்து, மணிப் பூர் போன்ற மாநிலங்களில் உங்கள் இந்தியா செய்கின்றது. ஈழப்பிரச்னை எப்படி ஊடகங்களில் வரமுடியாமல் சிங்கள அரசு தன்னுடைய அதி காரத்தை பிரயோகிக்கின்றதோ, அப்படி இந்தியாவும் நாகலாந்தில், மணிப்பூரில் செய்கிறது; ஈழப்பிரச்னை யிலும் செய்கின்றது-. ஈராக்கில் அமெரிக்காவால் ஏற் பட்ட மனித பேரவலம் இன்று ஈழத்தில் நடக் கின்றது. ஈழத் தமிழர்கள் யூதர்களைப் போலவே உல கெங்கும் பரந்திருப்பதால் உலகக் கதவுகளை எல்லாம் அவர்களது உரிமைக்குரல் இடிக்கிறது.இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாடுகளுமே இந்தியாவுக்குப் பகையான அல்லது பதற்றமான நாடு களாகவே இருக்கின்றன. இலங்கையில், இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தும் பொருட்டு தமிழ் போராளிகளை அவர்களின் பிரச்னையை சாதகமாகப் பயன்படுத்த நினைத்தது. ‘றொ’ தமிழ் போராளிகளைப் பல குழுக்களாகப் பிரித்து போர் பயிற்சியையும், கொடுத்து அவர்கள் இடையே பகைமையை ஊட்டி ஈழத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.இந்தியா சொன்ன போதெல்லாம் வாலை ஆட்டவும், கையை உயர்த்தவும் அந்தத் தமிழ் குழுக்கள் நிர்பந்திக்கப்பட்டன. தோற்றிவிக்கப்பட்ட ஏனைய குழுக்கள் எல்லாம் இந்தியாவின், சுய நல அரசியலை செவிமடித்த போதும், பிரபாகரன் தன்னுடைய கொள்கையில் மிக நிதானமாக கொள்கை நோக்கியதான பயணத்தை தெளிவாக அமைத்தார். கடந்த முப்பதாண்டு போர்க்கால வரலாற்றில் அவர்கள் தம் கொள்கையில் இருந்து இன்று வரை மாறவே இல்லை. இந்த ஆட்டுவித்தப் பாட்டுக்கு ஆடாத கொள்கை இந்தியாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதன் பரிணாம வளர்ச்சிதான் இன்றைய வன்னி யுத்தமும் மோசமான மனித அவலமும்.இன்று வன்னியில் நிகழும் மனிதப் பேரவலத்தைப் பொறுத்த வரையில் உலகெங்கிலுமே நடந்திராத அளவிற்கு வன்னி மக்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகின்றார்கள். இப்போது எஞ்சியுள்ள மூன்று மீன்பிடி கிராமங்களில் ஆடு, மாடுகளைப் போல் இரண்டரை லட்சம் மக்கள் தினம், தினம் மிகக்கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே!அந்த மண்ணில் பிறந்து அந்த மண்ணில் வளர்ந்த எங்களை அங்கே இருந்து அப்புறப்படுத்து வதற்குப் பெயரா மக்கள் மீட்பு! ராணுவத்தின் மிக மோசமான பீரங்கி தாக்குதலால் எங்கே ஓடுகிறோம்? என்று தெரியாமல் சிதறி ஓடுகின்ற மக்களை ராணுவம் மிக மோசமாகக் கையாள்கிறது. கடந்த திங்கள்கிழமை (20.04.09) கூட முப்பதாயிரம் தமிழ் மக்களை மீட்டதாக, இலங்கை ராணுவம் சேட்லைட் படங்களை வெளியிட்டது. வவுனியா மாவட்ட கலெக்டரோ, வெறும் 13,500 பேர்தான் வந்ததாகக் கூறியிருக்கின்றார். அதில் இப்போது எட்டாயிரத்து ஐநூறு பேர்தான் உயிருடன் இருக்கின்றார்கள். அப்படியென்றால், ஐயாயிரம் தமிழ் மக்கள் கதி என்ன ஆனது? இதை எல்லாம் விட கொடுமையாக அப்படி அங்கிருது வருகின்ற பெண்கள் எல்லோருமே தற்கொலைப் படை போராளிகளாக இருக்கலாம் என்கிற குரூர புத்தியில் நிர்வாணமாக வருவதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். பீரங்கிக் குண்டுகளுக்குப் பயந்து ஓடுபவர்கள், ஒரு கட்டத்திற்கு மேல் ராணுவத்திடம் நிர்வாணமாகவே தான் வரமுடியும். அது அரச உத்தரவு. கற்பனை செய்து பாரு, என் தாய்த் தமிழகமே! சிங்கள ராணுவ காமுகர்களின் கழுகுக் கண்கனின் முன்னால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், நிர்வாணமாக அரை கிலோமீட்டர் நடந்து வரவேண்டும் என்பது சகிக்கக் கூடியதா? பெண்ணுரிமை பேசும் தமிழினத் தலைவர் கலைஞரின் வாரிசான கனிமொழி போன்றோர் இதற்குப் பதில் சொல்லட்டும்!ஏற்கெனவே, சண்டை களத்தில் இருந்து நிறைந்த மது, மாது தாகத்தோடு வரும் ராணுவத்தினரின் சாந்தி க்காக அனுராதபுரம் என்கிற புனித நகரில் (இலங்கை அரசாங்கம் அப்படித்தான் சொல்கிறது!) அமைக் கப்பட்டுள்ள விபசார விடுதிகளின் நேரடியாகக் கொணர்ந்து இறக்கப்படுகின்றனர். விபசார பெண் களுக்கான பணத்தை மாதாந்தம் இலங்கை அரசே பொறுப்பேற்றுக் கொள்கிறது. இப்போது, அந்த இடத்திற்கு வன்னியில் இருந்து கொணரப்படும் தமிழ்ப் பெண்களும் பலவந்தமாகக் கொண்டு செல்கிறார்கள். இதை சகித்துக் கொள்ள முடியாத எம் தமிழ்ப் பெண்கள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். பலர் சித்தப் பிரமை பிடித்துத் திரிகிறார்கள். கோத்தபய ராஜபக்சே மேடை ஒன்றில் கூறியது போல ‘முல்லைத் தீவு பெண்கள் உங்களுக்கு விருந்தாகட்டும்! ஆண்களின் ரத்தத்தால் கடல் சிகப்பாகட்டும்’ என்பது மிகச் சரியாக நடக்கிறது. வன்னியில் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள காவல் அரண்களில் எல்லாம் நாலைந்து ராணுவத்தினரோடு ஓர் அப்பாவி வன்னித் தமிழ் பெண்ணும் பலவந்தமாக தங்க வைக்கப்படுகின்றாள்; வன்புணரப்படுகின்றாள். இதையெல்லாம் விட நான் உள்பட சில தமிழர்களோடு நண்பர்களாக இருக்கும் ஒரு ராணுவ அதிகாரி, ‘எங்கள் ராணுவ அதிகாரிகள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் உங்கள் தமிழ்ப் பெண்கள் நிர்வாணமாகவே பணிவிடைகளைப் புரியும்படி பணிக்கப்படுகிறார்கள்’ என்று கூறியதும் இனி இந்தக் கொடுமையை கண்டும், கேட்டும் இங்கு வாழவே கூடாது என்றுதான் பலர் படகேறி ராமேஸ்வரம் வந்து சேர்கிறார்கள். பாதுகாப்பு வளையத்துக்கு வந்த ஆண்கள் எல்லோரும¢ கொல்லப்படுகின்றார்கள்; பலர் காணாமல் போய்கின்றார்கள்.மவுனியா வைத்திய சாலைக்கு நான் சென்றிருந்தபோது, இருபதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் அங்கு அனுமதிக்கப் பட்டிருந்தனர். அவர்களில் எல்லோருக்கும் இரண்டு கால்களும், இரண்டு கைகளும் துண்டாடப்பட்டு விட்டன. ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள் முடமாக்கப் பட்டு கிடக்கின்ற அவள், குழந்தை பிறந்தால் எந்தக் கைகளால் தூக்கி தன் குழந்தைக்குப் பால் கொடுப்பால்? எவ்வாறு கால்களை சமன்படுத்திக் குழந்தைகளைத்தான் பெற்றெடுப்பாள்? மலைகளைப் பிளக்க பயன்படும் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் (கிளிஸ்டர்) விமானம் மூலம் வீசுகிறார்கள். அது, தரை மட்டத்துக்கு மேலே இருபதடியில் வெடித்து முந்நூறு குண்டுகளாக தரையில் விழுந்து வெடிக்கின்றது. அதில் உடல்கள் பிளந்து, தீப்பற்றி எரிந்து கறிக்கட்டைகளாகி மடிகின்றனர். நச்சுக்குண்டுகளால் (tலீஷீக்ஷீஷீனீவீநீ தீஷீனீதீ) உடலெங்கும் கொப்பளங்கள் ஏற்பட்டும், மூச்சுத் திணறியும் செத்து மடிகிறது, எம்மினம். அழுவதற்கு இனி கண்களில் கண்ணீர் இல்லை. யுத்த நிறுத்தம் கேட்பது எல்லாம், இறந்து கிடக்கும் பிணங்களை புதைப்பதற்காகவும் ஷெல் வீசலில் பறந்து சிதறிய தன் அங்கங்களில் கட்டுப் போடுவதற்காகவே. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஓரினத்தையே மிகக் கச்சி தமாக இலங்கை அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் சேர்ந்து அழித்துக் கொண்டிருக் கின்றது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங் களில் முடியப்போகும் இந்த முற்றுகையும் மாபெரும் மனித அவலமும் தேர்தல் பரபரப்புகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் கூட எவர் செவியிலும் விழப் போவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கே இதற்கான போராட்டங்களை முன்னெடுக்க முடியாதபோது ஈழத்தமிழர்களை இந்தியாவில் கதறியழுவது என்பது சாத்தியமற்றது தான். அவ்வாறு செய்ய முனைந்தால் தமிழ்நாடு, இந்தியா அதை எவ்வாறு கையாண்டு பூந்தமல்லி சிறைச்சாலையை நிறைக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். வன்னியில் சண்டை ஆரம்பிக்கப்பட்ட சில நாட் களில் மாங்கொல்லையில் இந்த ஆட்சி இனி எதற்கு?- என்று கலைஞர் கண் கலங்கியதும், திடீரென வன்னியில் போர் நின்று போகிறது. ஐந்து நாட்களில் ஒரு குண்டுளேனும் அங்கு வெடிக்கக் காணோம்! ப்ரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். கலைஞரை சந்திக்கிறார். ‘மத்திய அரசு கொள்கைதான் தன் கொள்கை’ என்கிறார், கலைஞர். அதன்பின், கண் முன்னே கொலைகள் குவிகின்றன. ஆக, எஞ்சியுள்ள இரண்டு லட்சம் தமிழர்களின் ஊனமும், உயிரும் கலைஞர் கைகளில் இருக்கிறது. கலைஞரே, நீங்கள் உண்மையான மனசோடு எமக்காக பேச வீதிக்கு வாருங்கள்! இல்லை, வயது முதிர்ந்த காலத்தில் தன்னுடைய வாழ்வை இப்படியான அவப் பேரோடுதான் முடித்துக் கொள்ளப் போகிறாரோ?’’ என்றவர், மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் அமைதியாகிப் போனார்.பி.கு: உங்களில் யாருக்காவது கனிமொழியின் மின்னஞ்சல் தெரிந்தால் இந்தப் பதிவை அனுப்பி வைக்கவும்.....

Wednesday, April 22, 2009

வேலை நிறுத்தத்திற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ‘நோ’


கலைஞரின் வேலை நிறுத்தம் என்கிற நீலிக் கண்ணீருக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் மீதான போரை நிறுத்த செய்ய வேண்டிய எதையும் செய்யாத கலைஞர், இப்போது வேலை நிறுத்தம் அறிவித்து மக்களின் கவனத்தை திசை திருப்பப் பார்க்கிறார். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று பழ.நெடுமாறன் சொல்லிவிட்டார். ஆனால் 24ம் தேதி நடைபெறும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவை இ.த.பா.இ சார்பில் எழுச்சியுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கிடையே காங்கிரஸ்_திமுக அணிக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாகவும் நெடுமாறன் அறிவித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர்கள் தமிழருவி மணியன், திருச்சி வேலுச்சாமி, பசுபதி பாண்டியன், தி.அழகிரிசாமி, பரந்தாமன், பொன்னிறவன், ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். ஏப்ரல் 22ம் தேதி முத்துக்குமார் நினைவிடத்தில் இருந்து இந்தப் பயணம் தொடங்கப்பட இருக்கின்றது. ஈழப்பிரச்னையில் துரோகம் செய்த காங்கிரஸ், திமுக கட்சிகளை அம்பலப்படுத்தும் வகையில் இந்தப் பிரசாரம் அமையும்.‘அப்படிப் போடு போடு திருப்பிப் போடு

விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள் கைது,,, பின்னணி இதுதான்....



விடுதலைப்புலிகளின் இரண்டு தலைவர்கள் சரண்டர் என்கிற செய்தியை தேசிய சேனல்கள் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தனை நாள் இலங்கைத் தமிழர்கள் படும் பாட்டை கண்டுகொள்ளாமல் இருந்த இந்தச் சேனல்கள் இப்போது தூங்கி விழித்திருப்பது போர் நிறுத்தத்திற்கு எதிரான செய்தியைப் பரப்புவதற்கே.தமிழீழ விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பாளர் தயா மாஸ்டர், சுப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜார்ஜ் ஆகிய இரண்டு பேர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ புலிகள் சரணடையத் தயாராகிவிட்டதாக செய்தி வெளியாவதன் மூலம் உலக நாடுகளும் சமாதான அமைப்புகளும் போர் நிறுத்தக் கோரிக்கையை கைவிட்டுவிடும் என்று சிங்களவன் நினைக்கலாம். இது அங்கு தினமும் தினமும் செத்துமடியும் தமிழ் மக்களுக்கு எந்தவகையில் பயனளிக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.சரணடைந்ததாக சொல்லப்படும் தயா மாஸ்டருக்கு வயது ஐம்பதுக்கு மேலாகிறது. 2005ல் கொழும்பு மருத்துவமனையில் இவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. (அப்போது ஏன் கைது செய்யவில்லை?) இப்போதும் கூட மூன்று சக்கர வண்டியில் தான் தயா மாஸ்டர் கொண்டு வரப்பட்டார். அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற பின் மொழிப்பெயர்ப்பாளர் பணியை மேற்கொண்டு வந்த ஜார்ஜூம் இப்படியான ஒரு வயதானவர் தான். மேலும் இருவருமே படையில் பொதுவானவர்கள் தான். புலிகள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சரணடைந்தவர்கள் புலிகளின் முக்கியத் தலைவர்கள் என்று செய்தி வெளியிட்டு வருவதுதான் வேதனையிலும் வேதனை. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலான புலிகளின் வரலாற்றில் எந்த தளபதியும் சரணடைந்ததாக வரலாறு கிடையாது என்று இன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.மொத்தத்தில் புலித் தலைவர்கள் யாரும் சரணடைய வில்லை. போலித் தலைவர்கள் தான் சரணடைந்திருக்கிறார்கள்.

Tuesday, April 21, 2009

‘ஆத்தா எங்களை மன்னிச்சிடு’ ஜெயலலிதா காலில் விழுந்த தினமலர்!


தி.மு.க.,வுக்கு முதுகு சொறியும் வகையில் கொஞ்ச நாட்களாக தினமலர் செய்தி வெளியிட்டு வந்தது. தினமலரின் நிறுவனர் டி.வி.ஆருக்கு தபால் தலை வெளியீட்டு விழாவில்¢ தந்தை பெரியாருக்கு இணையாளவர் டிவிஆர் என்று கலைஞர் பேசியதே இருதரப்புக்கும் இருந்த நெருக்கத்தைக் காட்டியது. (பெரியார் என்கிற பெயருக்குப் பதில் ஈவெரா என்று தொடர்ந்து எழுதி வரும் தினமலரால், என்றைக்கும் பெரியாரின் தாக்கத்தை இந்த சமூகத்தில் இருந்து விரட்டிவிட முடியாது என்பதை நாம்தான் உணர்த்த வேண்டும்) தினமலர் ரமேஷ் (அந்துமணியாம்!) மீது அந்தப் பத்திரிகையில் வேலை பார்த்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாகவும் ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும் புகார்கள் வெளியானது. ரமேஷ் எந்நேரமும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆளும் கட்சியின் ஆசிர்வாதத்தால் அது தவிர்க்கப்பட்டது.இதற்கு நன்றி காட்டும் விதமாகவும் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து காரியம் சாதித்துக் கொள்ளும் நோக்கிலும் பகுத்தறிவு பேசும் கலைஞருடன் கைகோர்த்துக் கொண்டது தினமலர். அதன்படி அரசு தரப்பில் சலுகைகள், அறிவிப்புகள் வெளியிடும் ஒவ்வொருமுறையும் அதை சிலாகித்து செய்தி வெளியிட்டு தனது அரிப்பைத் தணித்துக் கொண்டது.காலங்காலமாக கலைஞரை திட்டியும் விமர்சித்தும் எழுதிக் கொடுத்து சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தினமலர் ஊழியர்களுக்குக் கூட (அதாம்பா ரிப்போர்ட்டர்ஸ்) இந்தப் போக்கு ஏனோ பிடிக்கவில்லை. ஆனால் கூலிக்கு மாரடிக்கும் இந்தக் கும்பல் வேறு என்ன செய்ய முடியும்-? இதற்கிடையே ஈழப் பிரச்னையும் வந்தது. தி.மு.க.,வும் கலைஞரும் ஈழத் தமிழனுக்கு எதிராக நின்றதில், ஏற்கெனவே தமிழினத்துக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வரும் தினமலருக்கு வசதியாகிப் போனது. அதிலும் தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதரர் அம்சாவின் கைக்கூலிகளாக ஆள்காட்டிகளாக இருந்த தினமலரின் மேலிட ஊழியர்களுக்கும், முதலாளிகளுக்கும் கலைஞரின் நிலைப்பாடு வசதியாகிப் போனது. கிளிநொச்சியை கைப்பற்றியது ராணுவம் என்கிற தலைப்பில் மட்டும் பலதடவை செய்திகளை வெளியிட்டிருப்பார்கள்! எத்தனை தடவைதான் கிளிநொச்சிப்பிடிக்கும் இலங்கை ராணுவம். இதிலும் இயக்குநர் சீமான் மீது அவர்கள் காட்டிய வஞ்சம் இருக்கிறதே? பாரதிராஜா (இன்னொரு இனத் துரோகி), மணிவண்ணன் போன்றோரின் தமிழுணர்வைக் கிண்டல் செய்து சினிமாக்காரர் என்று செய்தி வெளியிட்டு தனது அரிப்பை அடக்கிக் கொண்டது. வைகோ, கண்ணப்பன், கொளத்தூர் மணி, பெ.மணியரசன், சீமான், நாஞ்சில் சம்பத் போன்றோரின் கைதுக்கு முக்கியக் காரணமாக இருந்தது. திருமாவளவனையும் கைது செய்யச் சொல்லி எத்தனை முறை காங்கிரஸ் அள்ளக் கைகளிடம் பேட்டியெடுத்துப் போட்டது. ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. திருமாவைக் கைது செய்து தலித்களின் வெறுப்பைச் சம்பாதிக்க கலைஞர் விரும்பவில்லை.இதற்கிடையே தேர்தல் கூட்டணிகள் முடிவானது. மதிமுகவையும் பாட்டாளி மக்கள் கட்சியையும் ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டி செயல்பட்ட தினமலர், அந்தக் கட்சிகள் தன்னுடைய தாய் வீடான அதிமுகவில் சேர்ந்ததில் கொஞ்சம் சோர்ந்து போய்விட்டது. பிஜேபியை ஆதரிக்கலாம் என்றால் பாவம் அவர்கள் இருக்கிற இடமே தெரியவில்லை. வேறு வழியின்றி கலைஞருக்கே தினமலர் முதுகு சொறியும் என்று நாம் நினைத்திருந்தோம்.அங்குதான் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈழப்பிரச்னையில் கலைஞரின் துரோகத்தை நினைத்து நினைத்து புளங்காகிதம் அடைந்து வந்த தினமலர், திடீரென கலைஞரும் ஓட்டுக்காக ஈழப் பிரச்னையில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக பெயரளவில் கூட குரல் கொடுப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தது. (இலங்கைத்தூதரக உறவை முறிக்கச் சொன்னாரே கலைஞர் அப்போதுதான்) . அண்ணன் பிரபாகரன் என் நண்பர் என்று சொல்லியதாலும் பின்னர் அதை மறுத்துவிட்டதையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு கலைஞரை விமர்சிக்க ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்ததை ‘அதிசயம்’ என்று தலைப்பில் செய்தி வெளியிட்டு ‘நாங்கள் மாறிவிட்டோம்’ என்று அறிக்கை விடாத குறையாக அறிவித்தது. அதுவும் நேற்றும் இன்றும் கலைஞரை விடுதலைப் புலிகளிள் ஏஜெண்ட் போல சித்தரித்து செய்தி வெளியிட்டதைக் கவனிக்கவும். ‘ரத்தஆறு ஓடும்’ என்ற பேச்சை வாபஸ் பெற மாட்டேன் என்ற வைகோவின் அண்ணாநகர் பிரசார கூட்டப் பேச்சை அடக்கி வாசித்தது. ஜெ.,வும் ஈழ ஆதரவு நிலையில் தானே இருக்கிறார் என்று நீங்களும் நானும் நம்பலாம். தினமலர் நம்பத் தயாராக இல்லை. பாம்பின் கால் பாம்பறியும்.கடந்த நான்கைந்து நாட்களாக அதிமுக பக்கம் சாய்ந்து கொண்டு முதுகைச் சொறியும் வேலையைச் செய்கிறது தினமலர். (அதே சமயம் பாட்டாளி மக்கள் கட்சியும் மதிமுகவும் ஜெயித்துவிடக் கூடாது என்பதில் தினமலர் கவனமாக இருக்கும்.) அடுத்தமுறை எவளையாவது சீண்டினால் ஜெயலலிதா பார்த்துக்கொள்வார் என்கிற தைரியம். அதிலும் ஜெயிக்கும் பக்கம் இருப்பது தானே தினமலர் நிர்வாகத்திற்கு பயன். கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் சமயத்தில் தினமலர் ஊழி யர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில் தினமலர் ஊழியர்கள், குடும்பத்தார் அதிமுகவுக்கு ஓட்டுப் போடவும்; உங்களுக்குத் தெரிந்தவர்களையும் அதிமுகவுக்கு ஓட்டுப்போடச் சொல்லவும் என்று அறிவித்திருந்தனர். (இந்த முறை இதுபோன்ற அறிக்கை வந்தால் அதை குறைந்த பட்சம் செல்போனிலாவது படம் பிடித்துத் தருவதாக தினமலர் நிருபர்களாக உள்ள எனது நண்பர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள்).தங்கள் இனத்தைச் சேர்ந்த ஜெவை ஆதரிக்காமல் சூத்திரன் கலைஞரை ஆதரிப்பது எப்படி சரியாகும் என்று இப்போது தினமலர் சொல்லிக் கொண்டிருக்கிறதாம். தினமலரின் நயவஞ்சகத்தை நம் தமிழர்கள் எப்போதும் புரிந்து கொள்வார்களோ-? நமது சீமான் வெளியே வந்து மைக் பிடித்தால் தான் இது சாத்தியமாகும்.பி.கு: மேற்கண்ட கட்டுரையில் தினமலர் என்று தவறுதலாக அச்சாகிவிட்டது. தினமலர் என்று வரும் இடங்களில் ‘தினமலம்’ என்று திருத்தி வாசிக்க வேண்டும் என்று வாசகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். பி.கு: உங்களுக்குத் தெரிந்த தினமலர் நிருபர்களுக்கு இந்தக் கட்டுரையை முடிந்தால் அனுப்பிவைக்கவும் .

Saturday, April 18, 2009

ஈழத்தமிழனுக்குப் போராடும் பார்வையற்ற தோழர்களில் எழுச்சி


மதிமுக அலுவலகம் தாயகத்தில் ஈழத் தமிழினப்படுகொலையை கண்டிக்கும் பெண்கள் அமைப்பினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஈழ ஆதரவு பேசும் பல அமைப்புகள் ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்று ஏற்கெனவே நான் பதிவிட்டிருந்தேன். அதே நேரம் இப்போது அவர்களின் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் பல்வேறு கட்டங்களில் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இன்று காலையில் இருந்தே பல்வேறு அமைப்பினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். கூட்டம் கூட்டமாக தோழர்கள் வந்திருந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருந்தனர். நமது காவல் துறையினர் முகத்தில் ஈ ஆடவில்லை. கடந்த ஐந்து நாட்களாக இந்தப் போராட்டத்தை கண்டு கொள்ளாதவர்கள் இன்று காலையில் இருந்து அங்கு குவிந்து கொண்டு நாட்டாமை செய்து கொண்டிருந்தனர். ஏற்கெனவே கடந்த மூன்று நாட்களாக அந்தப் பெண்களின் போராட்டத்திற்கு தார்மிக ஆதரவு அளித்து வந்த ஈழப்போரை எதிர்க்கும் பார்வையற்றோர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள¢ தோழர் வீரப்பன் தலைமையில் பார்வையற்றோர் இன்றும் வந்திருந்து போரை நிறுத்த கோஷம் எழுப்பினர். பின்னர் உண்ணாநிலையில் இருந்த பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்களுடன் அவர்களும் இணைந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனே போலீஸார் பார்வையற்றோர் என்கிற குறைந்தபட்ச மனிதநேயமும் இன்றி அவர்களை தரதரவென இழுத்தும் அடித்தும் கைது செய்து வேனில் ஏற்றினர். போராடும் தோழர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதால் அவர்களின் போராட்ட குணம் மட்டுப்பட்டுவிடும் என்று அதிகார மட்டம் நினைக்கிறது. ஆனால் இப்படியெல்லாம் செய்வதால் போராட்டம் வலுவடைந்தே தீரும்.

Friday, April 17, 2009

ஈழத் தமிழினப் படுகொலையை எதிர்க்கும் பெண்களைகண்டுகொள்ள யாரும் இல்லை......


ஈழத்தமிழினப் படுகொலையை எதிர்க்கும் பெண்கள் என்ற அமைப்பைத்தொடங்கி, சாகும் வரை உண்ணாநிலை அறப்போராட்டத்தைத் தொடங்கிய25 பெண்கள், மாவீரன் முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்தகொளத்தூரில் கடந்த 13ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். 'சோனியாவே ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்துங்கள்' என்ற ஒன்றை வரி கோரிக்கையை வலியுறுத்தி,பேராசிரியர் சரசுவதி தலைமையில், இந்த உண்ணாநிலைபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும்எழுபதுக்கும் மேற்பட்ட பெண்கள்இப் போராட்டத்திற்கு ஆதரவளித்து உண்ணாநிலையில்பங்கெடுத்து வருகின்றனர்.
போலீஸாரின் தொந்தரவு அதிகரிக்க, கிழக்குத் தெரு,கொளத்தூரில் உண்ணாநிலையைத் தொடர்ந்தார்கள். அங்கேயும் பிரச்னை வர, இப்போது எழும்பூரில் நடக்கிறது, இந்த உண்ணாநிலை போராட்டம். எழும்பூரில் ம.தி.மு.க. அலுவலகம்தாயகத்தில் தான் அந்தப் பெண்கள் சாகும்வரை உண்ணாநிலையைத்தொடர்கிறார்கள். திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, சத்தியராஜ், அமீர் போன்றவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்துச் சென்றார்கள்.
அண்மையில், போரை நிறுத்த வலியுறுத்தும், படைப்பாளிகளின் ஒப்பாரிப் போராட்டம் மெரினா கடற்கரையில் நடந்தது.அந்தப் போராட்டத்திற்குப் போன எனக்கு அங்கிருந்தபோராட்டக் குழுவினர் அதில் கலந்து கொள்ளும் படைப்பாளிகளின்பட்டியலை அளித்தனர். உண்மையில் அதைப் பார்த்துகொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின்பெயர்கள் அதில் இருந்தன. அவ்வளவாக இலக்கிய அறிமுகம் இல்லாதஎனக்கு தமிழகத்தில் இத்தனைப் பெண் படைப்பாளிகளா-? என்றுஆச்சரியப்பட்டுப் போனேன். இந்தப் போராட்டத்திற்கு வந்திருந்தகனிமொழி எம்.பி., (நீயும் அவரை அவரை கவிஞர் என்று அழைப்பதுவீண் என்று நினைக்கிறேன்) ஈழத் தமிழனுக்கு ஒப்பாரி பாட்டைப் பாடிச்சென்றார். (அவங்க அப்பா ஏற்கெனவே பாடிவிட்டார்)
அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தில்லியில் இதேகாரணத்துக்காக நடந்த நடந்த ஆர்ப்பாட்டத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள், பெண் படைப்பாளிகள் (அதென்ன பெண் படைப்பாளிகள்? படைப்பாளிகள் என்றுசொல்லுங்கள் என்று பெண்ணியவாதிகள் என்னைக் கோபித்துக் கொள்வார்கள்)ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.அதே போல் இப்போது 25 பெண்கள் சாகும் வரைஉண்ணாவிரதமிருந்து சோனியாவிடம் தமிழன் உயிரைக் காக்கக்கெ(¡)ஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒப்பாரியிலும்டெல்லியிலும் திரளாகக் கலந்துகொண்ட பெண்கள்இவர்களுக்கு ஏன் ஆதரவு தர மறுக்கிறார்கள் என்றுதெரியவில்லை?
ஒரு மரியாதைக்காக மனிதநேயத்துக்காக எத்தனை (பெண்)படைப்பாளிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்? கனிமொழி எம்.பி.,தமிழச்சி தங்கபாண்டின், சல்மா போன்றவர்கள் இந்தப் போராட்டம் நடைபெறும் பக்கமேதலைவைத்துக் கூட படுக்கவில்லை. காரணம் அரசியல்! தமிழன் சாகிறான்;அவனைக் காப்பாற்ற எந்த அரசியல் இவர்களைத் தடுக்கிறது என்று தெரியவில்லை?25 பேரில் ஐந்து பேரில் கவலைக்கிடம் என்கிற தகவல் வந்துள்ளது. அரசு தரப்பில்இருந்தும் இதுவரை யாரும் வரவில்லை. அண்மையில் ராசாத்தி அம்மாள் அப்பல்லோவில்படுத்திருக்க அவரைப் பார்த்து நலம் விசாரிக்கச் சென்றார், முதல்வர் கருணாநிதி..பத்திரிகைகளிலும் அந்தப் போட்டோகள் வந்திருந்தன. மனைவியை நலம் விசாரிக்ககணவன் செல்வதும் அதைப் பத்திரிகையில் செய்தியாகப் போடுவதையும்தமிழகத்தில் மட்டும் தான் அதுவும் கருணாநிதி குடும்பத்தில் மட்டும் தான்பார்க்கமுடியும். தன் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறுஅவருக்கு அவ்வளவு முக்கியம் என்றால், ஈழத்தமிழனுக்காக சாகும்வரைஉண்ணாநிலையில் இருக்கும் பெண்களின் உயிர் என்ன கலைஞருக்கு மயி....?

போரை நிறுத்த வலியுறுத்திசென்னனையில் மேலும் ஒருவர்தற்கொலை முயற்சி முத்துக்குமார்! மன்னிக்கவே மாட்டான்!!

ஈழத்தமிழர்கள் மீதான போரைநிறுத்த வலியுறுத்திமேலும் ஒருவர் சென்னைவடபழனியில் தீக்குளித்துதற்கொலை முயற்சி செய்திருக்கிறார்
இப்போது கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
முத்துக்குமாரின் வீரமரணம்ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது..
அதன்படி நமது உடலை ஆயுதமாக்கி போராடவேண்டுமே ஒழிய இப்படிசெத்து மடிவதால் யாருக்கு என்ன லாபம்?
முத்துக்குமார் இப்படி உயிரை விடும்உங்களை மன்னிக்கவே மாட்டான்!

Wednesday, April 8, 2009

தமிழக நிருபர்கள் யாரை செருப்பில் அடிப்பார்கள்?



சீக்கிய பத்திரிகையாளர் ஜர்னைல் சிங் மத்திய உள்துறைஅமைச்சர் மீது செருப்பை தூக்கிவீசுகிறார்.செருப்பால் அடித்த அந்தக் காட்சி நமதுதேசிய தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பஒளிபரப்பப்பட்டது. நச்சுக்குண்டு வீசிதமிழனை கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கும்கொடூரத்தைக் காண்பிக்க மறுக்கும் அவர்கள்சிதம்பரத்துக்கு விழுந்த செருப்படியைதிரும்பத் திரும்பக் காட்டியது பார்க்கநல்லாத்தான இருந்தது.
விடயத்துக்கு வருகிறேன்.. தன் மீதுசெருப்பால் அடித்த சீக்கியரை அப்போதுமன்னித்துவிட்டார் மத்திய அமைச்சரும் தமிழனுமானசிதம்பரம். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நாட்டின் உள்துறை அமைச்சர் மீதுசெருப்பை தூக்கியெறிந்தவர் மீது எந்த வழக்கும்பதிவாகவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஜர்னைல் சிங்கை சிரோமணி அகாலி தளம்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடஅழைப்புவிடுத்துள்ளது.அதுவும் சீக்கியரின் புனிதநகரமான அமிர்தசரஸில் போட்டியிடவேண்டும் என்கிறது அந்தக்கட்சிடெல்லி மாநில அகாலி தளம் கட்சியின்அவருக்கு இரண்டு லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
இதை இப்படி யோசித்துப் பாருங்கள்...தமிழகத்தில் இது நடந்திருந்து.. ஒரு தமிழினபத்திரிகை நிருபர் யாராவது மத்திய அமைச்சர்மீது செருப்பை எறிந்திருந்தால் என்னாயிருக்கும்?
சம்பவ இடத்திலேயே அமைச்சரின் கைத்தடிகள்அவரை அடித்து காயப்படுத்தியிருக்க மாட்டார்களா? அந்தநிருபர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா? என்று விசாரணைநடக்கிறது என்று தினமலரில் செய்தி போட்டியிருக்கமாட்டார்களா? உடனடியாக அவரை சிறையில் அடைத்துவிட்டுஅவரது வீட்டை அமைச்சரின் கட்சித் குண்டர்கள் ஸாரிதொண்டர்கள் சூறையாடியிருக்க மாட்டார்களா?பக்கத்து வீட்டில் இருக்கும் சக தமிழன் அல்லதுஅவருடன் பணியாற்றும் சக (தமிழக) நிருபர்கள் அவருக்கு .இரண்டு லட்சம்கொடுப்பது இருக்கட்டும்... நாட்டாமை பட பாணியில்ஊரைவிட்டே பத்திரிகை உலகை விட்டே அவரைஒதுக்கிவைத்திருக்க மாட்டார்களா-?
ஆனால் சீக்கியர் மேல் இருக்கும் பயமும் மரியாதையும்தமிழனுக்கு இல்லை என்பது இதன் மூலம் தெள்ளத் தெளியாகத்தெரிந்துவிட்டதா? சீக்கியனைப் பகைத்துக்கொள்ள காங்கிரஸ்தயாராக இல்லை. ஆனால் தமிழனை? தமிழனுக்கு எதிராகப்பேசலாம். ஈழத்தமிழனைக் கொல்லலாம். கேட்க நாதியில்லை.கலைஞரை தலைவரே என்றும் ஜெயலலிதாவை அம்மா என்றும்அழைக்கும் நிருபர்கள் தான் தமிழகத் தலைநகரில் இருக்கிறார்கள்..வாரம் இருமுறை வரும் துணிச்சலுக்கு ஒரு பத்திரிகை முதல்வர்கலைஞர் என்று தான் எழுதுகிறது. கருணாநிதி என்று பெயர்சொல்லக்கூடாதாம். அடக் கடவுளே சன் டிவியில் கூடகருணாநிதி என்றுதான் சொல்கின்றான்.
பத்திரிகை முதலாளிகள் தங்களுக்குச் சொந்தமானஒரு பத்திரிக்கையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், மற்றொன்றில் கருணாநிதிக்கு ஆதரவாகவும் எழுதுகிறார்கள்(பார்க்க : குமுதம் கருத்துக் கணிப்பு; பார்க்க : குமுதம்ரிப்போர்ட்டர் சோலை கட்டுரைகள்) சோலைக்குதமிழக அரசின் விருதுகள் குவிந்து வருகின்றன என்பதைகவனிக்க. இப்படி பத்திரிகை நடத்தினால் தான்யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன்நம்மை நெருக்கமாக்கிக் கொள்ளலாம் ... என்னவொரு பித்தலாட்டம் இது
ஆனந்த விகடனில் விஜயகாந்திற்கு ஆதரவாக தொடர்ந்துகட்டுரைகள். இந்த வார விஜயகாந்த் உடன் ஊர்சுற்றியநிருபரின் கட்டுரையைப் படிக்கவும். பாவம் விஜயகாந்திற்குமுதுகில் புண் வந்திருக்கும்...இந்த இதழ் ஜூனியர் விகடனில்வைகோவை மட்டம் தட்டிவிட்டு அழகிரியையும், ஜே.கே.ரித்திஷையும்தூக்கிப் பிடித்திருப்பதைப் பாருங்கள். அதிலும் மதுரைதொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர், திமுகவை ஜெயிக்க வைப்பார்என்றும் ஒரு கட்டுரை வந்திருக்கிறது... தமிழகத்தில் எந்தப் பத்திரிகை நிருபராவது அரசியல்வாதிகளை செருப்பில்அடிப்பாரா என்று எதிர்பார்க்காதீர்கள்... ஏனென்றால் செருப்படி வாங்க வேண்டிய பத்திரிகை முதலாளிகளும்,நிருபர்களும் இங்கே நிறையப் பேர் இருக்கிறார்கள்..

Sunday, March 22, 2009

தொல்.திருமாவளவனுக்கு மனம் திறந்த மடல்


அன்புள்ள தொல். திருமாவளவனுக்கு
வணக்கம்
அத்துமீறு... அடங்கு மறு... திமிரி எழு..திருப்பி அடி....
உங்களுடைய இந்த வீர வசனத்தால்தமிழகத்தின் எத்தனை, எத்தனை சேரிஇளைஞர்கள் வீறு கொண்டு எழுந்திருக்கிறார்கள்என்று உங்களைப் போலவே எனக்கும் தெரியும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவர்நீங்கள் என்று உங்கள் பின்னால் நிற்கும்ஒரு படை நம்பிக்கொண்டிருக்கிறது.
சினிமா கதாநாயகர்களைப் போன்றதல்லஉங்களுடைய அரசியல் பிரவேசம்.
பதின் வயதுகளிலேயே சமூக போராளியாககளம் இறங்கியவர் நீங்கள்...
சாதாரண விவசாயக் கூலி தொழிலாளியின்குடும்பத்தில் இருந்து நீங்கள்வந்தவர்... உங்களுக்குப் பதவிகளையும்மரியாதைகளையும் அள்ளித்தர உங்கள்தந்தையோ, தாத்தாவோ பெரும் புள்ளியாகஇங்கு வீற்றிருக்கவில்லை.
சொந்த முயற்சியில் சமூகத்தின் பால்கொண்டிருந்த அக்கறையில் உங்கள் தளத்தை பலமாக ஆக்கிக்கொண்டவர்நீங்கள்...
சட்டக்கல்லூரி மாணவராக நீங்கள் இருந்தபோது சென்னையில் தொலைத்தொடர்புசாதனங்களைத் திருப்பித் தரச்சொல்லி, உண்ணாவிரதம்இருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைபோராட்டத்தைக் கைவிடக் கோரி மாணவர்களைத்திரட்டி போராட்டம் நடத்திய போராளி நீங்கள்.
அதன்பின்பு இலங்கைத்தமிழன் கொல்லப்படும்சம்பவத்தில் குற்றவாளிக் கூண்டில் இந்தியா என்கிற தலைப்பில்அப்போது திமுகவில் இருந்த வைகோவை அழைத்துசட்டக்கல்லூரியில் பேசவைத்தீர்களேமறக்க முடியுமா அதை?
உங்கள் கருத்துகளையும், இயக்கத்தின் செயல்பாடுகளையும்ஊராகச் சென்று பேசியும், நீங்களே சுவர் விளம்பரங்கள் செய்தும்,நோட்டீஸ் ஒட்டியும் செய்த பணிகளை யாரும் மறந்திருக்கமுடியாது.
தமிழகத்தில் உங்கள் காலடி படாத சேரிகளே இல்லைஎன்று சொல்லாம். அதனால் தான் உங்களுக்கு முன்னும், பின்னும்வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் யாரும் உங்கள் அளவுக்குமுக்கியத்துவம் பெறாமல் காணாமல் போனார்கள்; போய்கொண்டுமிருக்கிறார்கள் என்பதேஎன்னுடைய திடமான நம்பிக்கை...
ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான உங்களது கவனம்சிதறிவிட்டதாக எனக்கும் சில விமர்சனங்கள்உண்டு. அதையும், மீறி ஒடுக்கப்பட்ட மக்களுக்குஉங்களைப் போன்றவர்கள் அளித்திருக்கும் நம்பிக்கைஇந்த சமூகத்துக்கு அதிமுக்கியம்.
தந்தைக்கே பெயரிட்ட தமையன் நீங்கள்...தமிழில் பெயரிடுங்கள் என்று உங்கள்சிறுத்தைகளுக்கு நீங்கள் இட்ட உத்தரவைசரித்திரம் என்றைக்குமே மறக்காது...
இலங்கைத் தமிழனுக்கு புலிகள் தான் ஒரே ஆதரவுஎன்று நீங்கள் அடுக்கிய ஆதாரங்கள் வரவேற்கப்பட்டன...
இளஞ்சிறுத்தைகளுடன் தமிழீன அங்கீகார மாநாடு நடத்தினீர்கள்...
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவானதில்முக்கியப் பங்கு வகித்தீர்கள்...
ராஜீவ் படுகொலையில் இருக்கும் நியாயங்களைநீங்கள் அடுக்கிய பாங்கு பலரையும் புருவம் உயரச்செய்தது.
இத்தனைக்கும் மேலாக காங்கிஸ் கட்சி தமிழர்களுக்குசெய்துவரும் துரோகங்களை பட்டியலிட்ட நீங்கள் தான்வைகோவிற்கு அடுத்தபடியாக இலங்கைத்தமிழர்களுக்கு எதிரானபோரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய அரசுஎன்பதை அம்பலப்படுத்தினீர்கள்.
ஞானசேகரனை ஞானசூனியம் என்றீர்கள்...
இலங்கை அரசின் கைக்கூலிகளாக காங்கிரஸ்கட்சியினர் மாறிவருவதாக பகிரங்கமாகக் குற்றச்சாட்டுசுமத்தினீர்கள்.
வட்டியில்லாத கடனாக இலங்கைக்கு இந்திய அரசுநானூறு கோடி ரூபாய் வழங்கியதை மேடையில் போட்டுடைத்தீர்கள்.
ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை ஈழத்தமிழர்கள் மீதுகாங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான்திணித்தது என்றும், வேறு வழியில்லாமல் அதை பிரபாகரன்ஏற்றுக் கொண்டதாக பத்திரிகை செய்திகளைஆதாரமாகக் காட்டி, அண்ணாநகரில் நீங்கள்பேசியதை மெளனமே சாட்சியாக ஒரு கூட்டம்கேட்டுக்கொண்டிருந்தது, ஞாபகம் இருக்கிறதாஉங்களுக்கு?
இந்திய ரடார்கள் சிங்கள ராணுவத்தில்உலாவுவதை உரக்கச் சொன்னீர்கள்...இந்திய செயற்கைக் கோள், பிரபாகரனைத் தேடும் பணியில் சிங்கள பேரினவாதராணுவத்துக்கு உதவுவதாக முழக்கமிட்டீர்கள்...
போரை நிறுத்து என்று மத்திய அரசை வலியுறுத்தகிளம்பிய அனைத்துக் கட்சிக் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள்இருக்கக் கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னபோதுகொதித்துப்போனது நீங்கள் மட்டுமல்ல என்னைப்போலபலரும்...
ஈரோடு ரயில் நிலையம் வழியாக சென்ற இந்தியடாங்கிகள் ஈழத்தமிழனைக் கொல்ல இலங்கைப் போகிறதுஎன்று எச்சரித்தீர்கள். போரை நிறுத்த இலங்கை அரசைவலியுறுத்தாத காங்கிரஸை தமிழகத்தில் இருந்துஅப்புறப்படுத்துவதாக அறிவித்தீர்கள்..
சத்திய மூர்த்தி பவனில் சிறுத்தைகளுக்கும் கதர் வேட்டிகளுக்கும்மோதலேற்பட்டு எத்தனை நாட்களாகியிருக்கும் தோழரே? இன்று காங்கிரஸ் கூட்டணியில் நீங்களும் உங்கள்தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகளும் இருக்கிறார்கள்.
தினமலரும், காங்கிரஸ் கட்சியினரும் உங்களை கூட்டணியில்இருந்து வெளியேற்ற பலவாறு முயன்று கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழனை அழிப்பதில் காங்கிரஸ் அரசுக்கு பங்கில்லை என்று இப்போது நீங்கள் மறுக்கிறீர்களா?
காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு ராணுவ உதவிசெய்யவில்லையா? கடனுதவி செய்யவில்லையா?ராணுவ தொழில்நுட்ப நிபுணர்களை அனுப்பவில்லையா?ஈழத் தமிழர்களைக் கொன்றுகுவிக்கவில்லையா? ராஜீவ்-ன் அமைதிப்படை தமிழச்சிகளை பலாத்காரம் செய்யவில்லையா?இதையெல்லாம் செய்த காங்கிரஸை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா?
சிறுத்தைகள் இருப்பது காங்கிரஸ் கூட்டணியில்அல்ல... திமுக கூட்டணியில் தான்என்று சமாளிக்காதீர். இனஉணர்வோடு காங்கிரஸைஎதிர்த்த நீங்கள் அவர்களோடுஇணைந்து கிடக்க. வெறும் ராஜீவ் என்கிறஒரே காரணத்துக்காக தலைமையில் தங்களுடைய விசுவாசத்தைக் காட்ட உங்களை எதிர்த்தவர்கள்இன்னும் உங்களை பழித்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.ஆக... உங்களுடைய இனஉணர்வு என்னாகிவிட்டது?
ராஜீவ் படுகொலையை ஆதரித்தவர் என்பதையும்மீறி நீங்கள் ஓர் ஒடுக்கப்பட்டவர் என்பதால்தான்உங்களுடன் காங்கிரஸ் ஒத்துப்போக மறுக்கிறதுஎன்பதை அறியாதவரா நீங்கள்?
ஏன் சொல்கிறேன் என்றால் வாய்கிழிய காமராஜர் ஆட்சியைப் பற்றிப் பேசும் காங்கிரஸ்காரர்களில்எத்தனை பேர் கக்கனை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?கக்கனின் நினைவு நாள் சத்தியமூர்த்தி பவனில் அனுஷ்டிக்கப்படுகிறதா?அந்த மனிதரின் பிறந்த நாள் அவர்களால் கொண்டாடப்படுகிறதா?
திமுகவுடன் இணக்கம் என்கிறீர்கள். ஈழத்தமிழர்களைகொன்று குவிப்பதில் காங்கிரஸ¤டன் திமுகவுக்குஉள்ள பங்கு என்னவென்று உங்கள் மனசாட்சிக்கேதெரியுமே?
ஒவ்வொரு ஈழத்தமிழனும், புலம்பெயர்ந்த தமிழனும்உங்களது மேடைப் பேச்சில் சொக்கி உங்களால்பெரிய மாற்றம் வந்து விடும் என்று நினைத்திருந்தார்கள். ஆனால், உங்களது இந்த பச்சைத் துரோகத்தால்,அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறான்...
உங்களைப் போன்றவர்களால் தாய்மண்ணில்கால் பதிக்கப் போகிறோம் என்று புலம்பெயர்ந்தவர்கள்நம்பிக்கொண்டிருந்தார்களே! ஈழத்தமிழன் பிரச்னையில்நீங்களும் உங்களைச் சுற்றி உள்ளவர்களும் அடைந்தசிலபல ஆதாயங்களை நினைத்துப் பாருங்கள்...அதற்காகவாவது நீங்கள் கொஞ்சம் யோசித்திருக்கலாம்..
சிதம்பரம் தொகுதி என்பது எங்கிருந்தாலும் உங்களுக்குக்கிடைத்திருக்கும். அதற்காகவா ஈழத்தமிழனை அடமானம் வைத்தீர்கள்?மனதில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரே ஒரு காங்கிரஸ்காரன்கூட சிதம்பரத்தில் உங்களுக்காக ஓட்டுக் கேட்க மாட்டான்.
தொல் நண்பா....சொல் நண்பா...
என் கருத்தில் ஏதாவது தவறிருந்தால் மன்னித்துவிடு...
உங்கள் இதயத்தில் ஈரம் கொஞ்சம் இருந்தால் ஈழத்தமிழனைகொஞ்சம் நினைத்துப்பாருங்கள்...
நன்றி...


Tuesday, March 17, 2009

குறுஞ்செய்தி(SMS) தகவல் மையம் அமைப்பு

இளந்தமிழர் இயக்கம் முடிவு

இக்குறுஞ்செய்தி தகவல் மையத்தில் சந்தாதாரர்கள் ஆக ரூ.100 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும். கட்டியவர்களின் கைபேசி எண்ணுக்கு காங்கிரசுக்கு எதிரான தகவல்கள், காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் காங்கரசைப் பற்றிக் குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்கள், ஈழத்தமிழர் ஆதரவு போராட்டச் செய்திகள், ஈழப்போர் குறித்த இணையதள செய்திகள் என பல செய்திகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். இதில் திரட்டப்படும் நிதி பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் என்பதால் இதனை நன்கொடை என்ற பெயரில் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் இணைய விரும்பும் தமிழ் உணர்வாளர்கள், 9841949462 மற்றும் 9894310997 ஆகிய எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பித் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Sunday, March 15, 2009

இந்திய அரசு அனுப்பிய மருந்துப் பொருட்கள்என்ன ஆனது?

இலங்கையில் போர்முனைகளில் சிங்கள ஆர்மியின்தாக்குதலில் சிக்கி அப்பாவித் தமிழர்கள் உயிரையும்அவயங்களையும் இழந்து வருகிறார்கள். போதிய மருத்துவ வசதிஇன்றி படுகாயம் அடைந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாகஉயிரை விடும் கொடூரம் அங்கே அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இதற்காக இருபது டன் மருத்துவப் பொருட்கள்விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறதுஎன்று இந்திய மைய அரசும், அறிவித்தது. அதை சொல்லி,சொல்லியே டாக்டர் கலைஞர் சந்தோஷத்தில் திளைத்தார்.மருத்துவப் பொருட்களுடன் இந்திய டாக்டர்கள் குழுவும் சென்றது ஆனால் இன்றைக்கு வந்திருக்கிற செய்தி என்னவென்று தெரிந்திருக்கும்உங்களுக்கு... கட்டுப்போடக் கூட துணியில்லாமலும், அறுவைச் சிகிச்சைக்குமயக்க மருந்தில்லாமலும் சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள்திணறி வருகிறார்களாம். அப்படியென்றால் காயம் பட்டவர்களின்நிலையை நினைத்துப் பாருங்கள் நண்பர்களே...எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு குச்சிகளை வைத்துகட்டுப் போடுகிறார்களாம். காயங்களுக்கு பெட்சீட் துணியைவெட்டி கட்டுகிறார்களாம்.
தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கும்படிடாக்டர்கள் கோரியிருக்கிறார்கள். அப்படியென்றால் இந்திய அரசுஅனுப்பிய மருந்துப் பொருட்கள் எங்கே போயின? அவை சிங்களராணுவத்தினருக்கு போய் சேர்ந்திருக்கும் என்பதே பலருடையஅனுமானம். அப்பாவித் தமிழன் செத்தால் சாகட்டும் என்கிறமனநிலை தான் ப்ரணாப் முகர்ஜிக்கும் கலைஞருக்கும்...
இலங்கையில் இந்திய டாக்டர்கள் என்ன செய்கிறார்கள்? என்றும் தெரியவில்லைஇதுபற்றியெல்லாம் யாரும் கேட்க முடியாது. கேட்டால் தயாராக இருக்கிறதுதே.பா.சட்டம்.

இந்திய இறையாண்மை விளக்கம் ப்ளீஸ்?


எதிர்பார்த்தது போலவே மதிமுக கொள்கைப் பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்திய இறையாண்மைக்குஎதிராகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிந்திருக்கிறதுபோலீஸ். திருப்பூரில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகஅவர் கைது செய்யப்பட்ட வழக்கில் பிணை கிடைத்துவிட்டதால் கையைப்பிசைந்து கொண்டிருந்த தமிழக அரசு தே.பா.ச.,வில் அவரைக் கைதுசெய்திருக்கிறது.
வேண்டாதவரை எல்லாம் வழக்குப் பதிவு செய்துஅவர் மீது அடக்குமுறையை ஏவிவிடுவதுதான் இந்த அரசின்இறையாண்மை என்றால் அந்த இறையாண்மையை நாம்ஏன் கட்டிக் கொண்டு அழவேண்டும்? (என்னையும் கைது செய்யுங்க ப்ளீஸ்) இந்திய இறையாண்மைக்கு எதிராக ஒருவர் பேசுவதால் பொது அமைதிக்குப் பங்கம்வரும் என்கிற குற்றச்சாட்டை உண்மை என்றே வைத்துக் கொண்டால்இதுவரை சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரின்பேச்சுகளால் தமிழகத்திலும், இந்த நாட்டிலும் ஏற்பட்ட சட்ட ஒழுங்குப்பிரச்னைகள் தான் என்ன?
இதுவரை இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவரையாவதுஇந்த அரசு தண்டித்திருக்கிறதா? அநேகமாக இல்லை என்றேநினைக்கிறேன். ஆம் என்றால் அதுபற்றி யாராவது பதிவிடலாம்.குறைந்தபட்சம் எனக்குப் பின்னூட்டம் இடலாம்.
நாஞ்சில் சம்பத் விவகாரத்துக்கு வருவோம். கடந்த ஒரு வாரத்துக்குமேலாக அவர் மீது தே.பா.சட்டத்தை ஏவிவிட, திருப்பூர் காவல்துறை பலவாறுமுயன்றும் அதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திடவில்லையாம். (சபாஷ்கலெக்டர்) அதற்குள் அவருக்கு பிணையும் கிடைத்துவிட, உடனேவேகமாக செயல்பட்ட மேலிடம் அவர் மீது தே.பா.வை ஏவிவிட்டிருக்கிறது.இந்திய நாடு ஜனநாயக நாடு என்று பாடப் புத்தகத்தில் படித்ததைநினைத்துப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. நாம் சிங்கள அரசின் அடக்குமுறையை எதிர்க்கிறோம்..இந்தியாவிலும் அதுதானே நடக்கிறது? நமக்கே இந்த நிலைஎன்றால் இலங்கைத்தமிழர்கள் படும்பாட்டை நினைத்துப் பாருங்கள்.
நாஞ்சில் சம்பத்தாவது ஒரு கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் சீமான்,கொளத்தூர் மணி போன்றவர்கள் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்றபட்டவர்கள்.சமூகப் போராளிகள் இந்த அடக்குமுறை எதிர்த்து குரல் கொடுக்காமல்என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்கிற சொல்லாடலில் உள்ள உண்மையைப் பற்றி பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். சுப.வீரபாண்டியன் ஐயா போன்றவர்கள் எங்கே போய்ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்? என்று தெரியவில்லை. பாரதிராஜா குறைந்தபட்சம்சீமானுக்காக குரல் கொடுக்கலாம். அவரது துறையைச் சேர்ந்தவர் என்பதையும்மீறி தன்னுடைய சீடர் சீமான் என்பதற்காக. கலைஞர் டிவியில் தெற்கத்தி பொண்ணுசீரியல் மூலமாக வரும் வருமானத்தை இழக்க பாரதிராஜா விரும்புவாரா?
திரையுலகத்தினர் சார்பில் இலங்கைத்தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்தினார்களே,சீமானுக்காக என்ன செய்யப் போகிறார்கள்? சிரிப்புதான் வருகிறது. சினிமாவில்அநீதியைக் கண்டு கொந்தளிக்கும் நாளைய முதல்வர் நடிகர்களும், சமூக அக்கறை இருப்பதாககாட்டிக்கொள்ளும் இயக்குநர்களும் (கற்றது தமிழ் ராம், மணிவண்ணன், ஆர். சுந்தர்ராஜன் போன்றஉண்மையான ஒருசில உணர்வாளர்கள் தவிர்த்து) என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்.. இவர்களைஅட மானங்கெட்டவர்களே! என்று நான் திட்டினால் பதிவுகளில் நாகரீகமாக எழுதுஎன்று என்னுடைய நலம் விரும்பி நண்பர்கள் கடிந்து கொள்கிறார்கள்.
என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், இந்திய இறையாண்மை பற்றிவெளிப்படையான விவாதம் ஒன்றை நடத்தினால் என்ன? தோழர் தியாகு இதுபற்றிசரியான சாதக பாதகங்களை விளக்குகிறார் என்று கேள்விப்பட்டேன்.தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பதை இப்படியெல்லாம் பயன்படுத்த முடிகிற போது, இந்த பொடா, தடா எல்லாம் இந்த ஏகாதிபத்திய அரசு எப்படியெல்லாம் பயன்படுத்தும்என்று நினைத்துப் பாருங்கள். இது நமக்கெல்லாம் ஒரு பாடம் இல்லை?

Thursday, March 12, 2009

ஈழம்: ஜெ.,வின் மனமாற்றத்ததை சந்தேகிக்கலாமா?

நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப் பதிவை தட்டிக்கொண்டிருக்கிறேன். சொந்த ஊருக்குப் போய் வந்ததில் ஒரு வாரம் போய்விட்டது. அதுவும் ஒரு நகரம் தான் என்றாலும் பிரிய மனமில்லாமல்பெருநகருக்குத் திரும்பினேன். அண்ணா திமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா உண்ணாவிரதம் அறிவித்து அந்தப் போராட்டத்தை நடத்தியேமுடித்துவிட்டார்.
அப்பாவித் தமிழ் மக்கள் சாகிறார்களே என்று கேட்டதற்கு போரென்றால்அப்பாவிகள் சாவது சகஜம் என்று திருவாய் மலர்ந்தவர் அவர். அப்போது தமிழருக்குத் தனிநாடு தேவைதான். ஈழத்தமிழர்கள் மீதான போரைநிறுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டது என்கிறார்.நாடாளுமன்றத் தேர்தல் இப்படியொரு நிலைப்பாட்டை அவரை எடுக்க வைத்திருக்கிறதுஎன்றால், அதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. மாற்றங்கள் ஒன்று மட்டுமேநிரந்தரமானது என்று கொண்டால், அவரது இந்தமாற்றம் உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதேஎன்னைப் போன்ற பலரது எண்ணமும், விருப்பமும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியனின்மாற்றம் தான் அக்டோபர் இரண்டாம் தேதி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தத் தூண்டியது. அதுதானே இன்றையஇந்த எழுச்சிக்கெல்லாம் ஆரம்பம். ஆரம்பத்தில் ஈழப் பிரச்னையில்அவர் கொண்டிருந்த கருத்து ரொம்பவும் ஆரம்ப நிலையிலானது என்பதையாவரும் அறிவோம்...
ஆக, தா.பாண்டியனைப் போல் ஜெ.,வின் ஈழம் பற்றியகருத்து மாற்றம் ஆக்கப் பூர்வமானதாக இருக்க வேண்டும்என்பதே நமது விரும்பமும் கூட. தமிழகத்தின் நரேந்திர மோடி ஜெ., என்று சொல்லிக்கொண்டு திரிந்த, திரியும் பார்ப்பன எண்ணம் கொண்டோர்முகத்தில் எல்லாம் ஜெ.,வின் உண்ணாவிரதம் கரியைப்பூசிவிட்டது. குறிப்பாக சோவின் முகத்தில், சுப்பிரமணிசுவாமிமுகத்தில் கூட கரிதான்...
என்றும் ஈழத்தமிழர்களின் மறக்க முடியாத ஒரு மாபெரும்இந்தியத் தலைவராக இருப்பவர் எம்.ஜி.ஆர் தான் என்பதை யாரும்மறுக்க முடியாது. மாவீரன் முத்துக்குமாரும் தனது மரண சாசனத்திலும்இதை சொல்லியிருப்பார். விடயத்துக்கு வருவோம். எம்.ஜி.ஆரின் வழியில்வந்த அண்ணா திமுகவினர் இப்போதுதான் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்...ஜெ.,வின் முந்தைய நிலைப்பாட்டால் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தஅதிமுக தொண்டர்கள், இனி நிம்மதியாக ஈழ உரிமைக்குக் குரல் கொடுப்பார்கள்..
ஈழத் தமிழர்களின் மீது போர்த் தொடுத்து வரும் காங்கிரஸ் கட்சிக்குஎதிராக இந்தத் தேர்தலில் விழும் வாக்குகளை தனக்கும் தனது கூட்டணிக்கும்திருப்பும் நோக்கில் இந்த முடிவை ஜெ., எடுத்திருந்தால் அதுபற்றிகாலம் தான் நமக்கு பதில் சொல்லும். தேர்தலில் யாருக்கும்அறுதிப் பெரும்பான்மைக் கிடைக்காமல் போய் காங்கிரஸை அதிமுகஆதரிக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள்?மூன்றாவது அணி தொடக்க விழாவை நடத்தி விட்டார்கள். தேர்தல் முடிந்ததும்,இந்த அணிக்குள் நடக்கப் போகும் கும்முடிப்பிடி சண்டையை நினைத்துப்பாருங்கள்... தேவகவுடா கர்நாடகத்தில் நடத்திய நாடகத்தை யாரும்அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.
இந்தத் தேர்தலில் வீட்டிற்கு வீடு பிரசார டிவிடிக்கள் கொடுக்கப்பட்டுஈழ மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைக் காண்பித்து காங்கிரஸின் பழிவாங்கும் கோரமுகத்தை கிழிக்கப் போகிறார்கள். அதில் பெரியார் திராவிடகழகம் தான்முன்னாடியாக இருந்து டிவிடி தயாரித்திருக்கிறது. இந்தப் புதிய முறையை அரசியல் கட்சிகளும்பின்பற்றத் தொடங்கும் என்று நினைக்கிறேன். (கலைஞர் தமிழினக் கொலைஞர் என்கிறசிடியைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ) அரசியல்வாதிகளே!வாக்குகளை அள்ள ஈழ மக்கள் உங்களுக்கு உதவலாம்.ஆனால், நீங்கள் அவர்களுக்கு உதவுவீர்களா? குறைந்தபட்சம் அகதிகள்முகாம் என்கிற பேரில் சிறைச் சாலைகளில் வாழும் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏதாவதுசெய்ய வேண்டும். வாக்குகளை அள்ளிக் கட்டிக் கொண்டு ஈழத்தமிழனை ஜெ., மறந்துவிட்டால்அவரை காலம் மன்னிக்காது...
நன்றி...

Tuesday, March 3, 2009

தமிழன் செத்தால் தூக்கிப் போடு! கிரிக்கெட் வீரன் காயம் பட்டால் செய்தி போடு


தமிழன் செத்தால் கவலைப் படாததேசியச் சேனல்கள்...(சிங்கள) கிரிக்கெட் வீரர்கள்மீது தாக்குதல் நடந்ததைஅரக்கப்பறக்க செய்திவெளியிட்டு கல்லாக் கட்டுகின்றன...
தினமும் தமிழன் சாகிறான்...ஒருநாள் 40 பேர்... மறுநாள் 50 பேர்...மற்றொரு நாள் 120 பேர் என்று தமிழன் சாகிறான்...மக்கள் தொலைக்காட்சி மட்டும் அதுபற்றி கவலைப்பட்டுசெய்தி வெளியிடுகிறது.....
ஆனார் அதுபற்றி கவலையே படாத இந்த சன், கலைஞர் மற்றும் தேசிய ஆங்கில மற்றும்ஹிந்தி சேனல்கள் பாகிஸ்தானில்கிரிக்கெட் வீரர்கள் மீதுநடந்த தாக்குதலை பரபரப்புச்செய்தி ஆக்கியிருக்கின்றன....
நமது பிரபாகரனுடன் வைகோ எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சிங்களஅரசு வெளியிட்டதாம்.. அதை வைத்துக்கொண்டு கருத்துக்கேட்டு கழுத்தறுத்தார்கள்...
வைகோ தமிழீழம் சென்றதே இந்தத் தேசியசேனல்களுக்கு நேற்றுதான் தெரிந்திருக்கிறது போலும்...
அடக் கேவலமே.....

யாருக்குத்தான் ஓட்டுப் போடுவது? பதில் தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்!பெதிகாவின் டிவிடி பரப்புரை சபாஷ்!!



சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததுதொடர்பாக பதிவிட முடிவெடுத்திருந்தேன். ஆனால் நேரம் போதாமல்அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. வீரத் தமிழன் மகன் முத்துக்குமாரின்தங்கை வீட்டிற்குச் சென்று சில விவரங்கள் பேச வேண்டும் என்கிற என்னுடைய திட்டமும் நேரமின்மை காரணமாக தள்ளிப்போய் கொண்டேஇருக்கிறது (ஏதோ பெரிசா கிழிக்கிற மாதிரி ஒரு பில்டப் கொடுக்காதடா என்றுநீங்கள் சொல்வது என் காதில் விழாமல் இல்லை).
சீமானை அடுத்து வைகோவும் கைதானார். கொளத்தூர் மணியும்கைதானார். வைகோ பிணையில் வெளிவந்து விட்டார். கொளத்தூர்மணியின் நிலை தெரியவில்லை. தேர்தல் பயத்தினால் தான் சீமானைசிறையில் அடைத்திருக்கிறார்கள். சீமான் என்கிற ஒரு தனிமனிதனின்பேச்சு, தங்களுடைய வெற்றியைப் பாதிக்கும் என்று அவர்கள் நினைப்பதுசீமானுக்குக் கிடைத்த வெற்றி அல்லவா? நாமும் தேர்தலை எதிர்பார்க்கலாம்..ஆட்சி மாற்றம், மிச்சம் உள்ள தமிழர்களின் உயிரையாவது காப்பாற்றும் என்கிறநப்பாசைதான் தோழர்களே....
நேற்று (2.3.09) இயக்குநர் மணிவண்ணனைச் சந்தித்தேன்.ஆள் ரொம்பவும் தளர்ந்து போய் இருக்கிறார். அதிலும், ஈழப்பிரச்னை குறித்துபேசும்போது அவர் முகத்தில் நெளியும் கவலை ரேகைகளைப் பார்க்கும்போதுஎன் மனது என்னவோ போலாகிவிட்டது. முதுகுத் தண்வடுவடப் பாதிப்பால்கால்கள் இரண்டும் வீங்கி நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அதிலும், ஷோபாவில்அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, அடிக்கடி இரண்டு கைகளாலும் தனது வலது காலைநகர்த்தி வைத்துக் கொண்டதை பார்க்க கஷ்டமாக இருந்தது.
இந்த நிலையிலும் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.கடவுள் மறுப்பாளரான அவரது உடல்நலம் தேற அதே நிலைப்பாட்டில் உள்ள நான் யாரிடம்வேண்டுவது....? ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவது அதிலும் கொடூரமாகக் கொல்லப்படுவதைஎப்படி சகித்துக் கொள்வது? என்று கேட்கிறார், மணிவண்ணன். முதல்வர் கருணாநிதி பற்றி பேசினால் நிதானமாக கவனமாக முதல்வருக்கான மரியாதைக்கு எந்த இழுக்கும் ஏற்படாமல் கருணாநிதியைகடிந்து கொள்கிறார். இந்தியாவில் தேர்தல் திருவிழா தொடங்கி விட்டால், ஈழத்தில்தமிழர்களைக் கொல்வது சிங்களப் பேரினவாத அரசுக்கு வசதியாகிவிடும். தட்டிக் கேட்கவேண்டியவர்கள் எல்லோரும் தேர்தல் பணியில் பிஸியாகி விடுவார்கள் என்று நியாயமானவருத்தத்தை வெளிப்படுத்துகிறார். கிளம்பத் தயாரானதும், சிரமப்பட்டு நடந்தாலும்வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். சினிமாவில் நக்கலும், நையாண்டியாகவும்பார்த்துப் பழக்கப்பட்ட இயக்குநர் மணிவண்ணனை ஈழமக்களின் சாவுகள் சஞ்சலப்படுத்திக்கொண்டே இருப்பதால் அவரது முகத்தில் வேதனை ரேகைகள் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டதோ என்றுநினைக்கத் தோன்றியது.....
லீனா மணிமேகலையின் தேவதைகள் ஆவணப்பட வெளியீட்டு விழா சில மாதங்களுக்குமுன் நடந்தது (ஓராண்டு கூட ஆகியிருக்கலாம்). அப்போதுதான் முதல் முதலாக சந்தனக் காடுஇயக்குநர் கெளதனை சந்தித்தேன்..... அப்போது அவருடன் பேச வாய்ப்புக் கிடக்கிவில்லை. சந்தனக்காடு வெற்றிவிழாவில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு அவருடன் பேசவாய்ப்புக் கிடைக்கவில்லை.
மாவீரன் முத்துக்குமாருக்கு இயக்குநர்கள் சங்கம் சார்பில் நடந்த இரங்கல் கூட்டத்தில்( பாரதிராஜா, செல்வமணி, சீமான், சத்தியராஜ் உள்பட அந்த இரங்கல்கூட்டத்தில் வெகுசிலரே கலந்துகொண்டனர் என்பது வேறுவிஷயம் ) மீண்டும் கெளதமனைச் சந்தித்தேன்.
அப்போதுதான் கெளதமனுடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. நல்ல உணர்வாளர். ஈழத்தமிழர்கள்மீதான கொலைவெறித் தாக்குதலை கடுமையாக கண்டித்தார். ஈழ நிலவரங்களை சரியாகப்புரிந்திருக்கிறார். இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான சில தலைவர்களைப்பற்றி சரியான விமர்சனங்களை வைத்தார். அந்தத் தலைவர்களின் பெயர்களைவெளியிடாமல் தவிர்க்கிறேன். அவர் நம்மைப்போல அல்ல, கலைத்துறையில்இப்போதுதான் அவருடைய வெற்றிப் பயணம் தொடங்கியிருக்கிறது. விடயத்துக்கு வருகிறேன். திங்களன்று என்னை அழைத்த கெளதமனை அவரது இல்லத்தில்சந்தித்தேன்.... பல போராட்டங்களில் சிறை சென்ற அவரது தந்தைகீரை கிள்ளிக் கொண்டிருந்தார். கெளதமன் தன் மனைவியுடன் வெளியேகிளம்பிக் கொண்டிருந்தார். என்னிடம் ஒரு டிவிடியைக் கொடுத்துப் பார்க்கச்சொன்னார். அலுவலகத்துக்கு வந்ததும் ஓடவிட்டேன்... இனி என்ன செய்யப்போகிறோம்?என்ற கேள்வியுடன் தொடங்கும் அந்த டிவிடியில், இலங்கையில் அண்மையிலும்,சில ஆண்டுகளுக்கு முன்பும் நடந்த தமிழினப் படுகொலைக் காட்சிகள் இருந்தன.
சோகமயமான கவிதையைப் பின்னணியில் ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார்....நம் மக்களின் சாவை தடுத்து நிறுத்தக் கோரிய நமது கோரிக்கைகள் செவிடன்காதில் ஊதிய சங்காக இருக்கிறது. நம் கையில் உள்ள வாக்கு என்கிறதுருப்புச் சீட்டைப் பயன்படுத்தி இதற்கெல்லாம் காரணமான காங்கிரஸ் கட்சிக்கும்,அதனுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்ற ரீதியில் முடிகிறது அந்த டிவிடி. இடையில்ராஜபக்ஷேவுடன் சோனியா காந்தி, ப்ரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங்ஆகியோர் தனித்தனியாக எடுத்துக் கொண்ட புன்னகையுடன் கூடியபுகைப் படங்கள் வந்து போயின. நம் வயித்தெரிச்சலையும்கொட்டிக் கொண்டன.. இதை தயாரித்த பெரியார் திராவிட கழகத்தினர்,முத்துக்குமாரின் கோரிக்கையைப் போல் இதை நகலாயுதம் எடுத்துப்பரப்புங்கள் என்றும் கோரிக்கை¨யும் அந்த டிவிடியில் விடுத்திருந்தனர்.
அந்த டிவிடியை குறள் இணையத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பகொடுத்திருக்கிறேன்.... இன்றுதான அதன் தொடக்கவிழா....நண்பர்கள் மூலம் அதை நகலாயுதம் எடுத்தும் பரப்ப இருக்கிறேன்....அதைவிட, இன்னும் தரமான காங்கிரஸ¤க்கு எதிரான பிரசாரப்படத்தைத் தயாரித்து வெளியிடலாம் என்று தோன்றுகிறது....அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்....
முடிந்தால்.... அந்த டிவிடியை அடுத்த பதிவில்தரவிறக்கம் செய்து தருகிறேன்..... (என்னுடையஇணைப்பில் செய்தால் பழுத்துவிடும் கட்டணம் )வெளியில் ஓசியில் நண்பர்களின் இன்டர்நெட் இணைப்பில்இருந்துதான செய்ய வேண்டும்...
அது சரி, தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாகதமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரஸ் மற்றும்அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டாம் என்றால்.. வேறு யாருக்கு வாக்களிப்பது... பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.....

Friday, February 27, 2009

ஈழம்: எங்கள் தமிழுணர்வை சந்தேகிக்காதீர்.....என்னுடைய மறுப்பும் விளக்கமும்



என்னுடைய இந்தத் தேவடியா பசங்களுக்குத் தேவைதான் என்றபதிவுக்கு பலரும் பின்னூட்டம் செய்திருந்தார்கள். அதில், இலங்கைத் தமிழரிடம் நான் கலந்துரையாடிய விவரங்களைஅதில் பதிவு செய்திருந்தேன். இதுவரை எந்த பின்னூட்டத்திற்கும்நான் பதிலளித்தது கிடையாது. இந்த முறை 'யாரோ' எனக்களித்திருந்த பின்னூட்டம்என்னை பதிலளிக்கத் தூண்டியிருக்கிறது.
அதில், நடுநிலையாளர்கள் என்று என்னைப் பற்றி விளம்பியிருக்கிறார், அந்த தோழர். உண்மை என்றொரு நிலை இருக்க நடுநிலைஎன்பதே கெட்ட வார்த்தை என்பது என்னுடைய நிலை. ஆக, ஈழ விவகாரம்என்றில்லை, எதிலும் நான் நடுநிலைவாதியல்ல என்பதை அந்த யாரோவுக்குத்தெரிவிக்க விரும்புகிறேன். தமிழர்கள் செத்துமடிகிறார்கள். இதில், பல்கலைக்கழகத்துக்குப் படிக்கப் போவது முக்கியமா? என்று கேட்டிருக்கிறார். என்னுடைய அந்தப் பதிவின் நோக்கமேஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு எந்தவிதமான அடிப்படை உரிமையும்சுந்திரமும், நியாயமும் கிடைக்காது என்பதுதான். கல்வியிலேயே வாய்ப்பு மறுக்கப்படும்தேசத்தின் இறையாண்மையை இந்திய அரசு காப்பாற்ற முயல்வது நியாயமா?என்று கேட்டிருந்தேன்.
மேலும் அந்த யாரோ, உங்கள் இந்தியா ராடார்களைத்தருகிறது. தமிழர்களைக் கொல்கிறது என்று எழுதியிருந்தார். அந்த யாரோ நினைப்பது போல் இந்திய தேசியத்தை கட்டிக் கொண்டு தமிழர்கள் சாவதைநா(ன்)ங்கள் வேடிக்கைப் பார்க்கவில்லை. நம்மால் முடிந்ததை எதையாவது செய்வோம் என்கிறநிலையில் தான் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம் (றேன்). அதில் ஒன்றுதான்இந்த வலைப்பூ. அதில் எங்களுடைய தமிழுணர்வை அவர் சந்தேகிக்க வேண்டியதில்லை.
தமிழின அழிப்பு என்றில்லை உலகில் வேறு எந்த இனத்திற்கும்இப்படியொரு நிலை வரக்கூடாது என்பதுதான என் (ங்கள்) நிலை. உங்கள் பின்னூட்டத்தைஎன்னிடம் கலந்துரையாடிய இலங்கைத்தமிழரும் படித்தார். அவரும் நானும் சேர்ந்துதான்உங்களுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் நடைபெறும் தமிழின அழிப்பை எதிர்த்து எங்கள் தேசியத்தைக் கூட கைவிட்டுவிட்டு நம்மினத்துக்காகநிற்கிறோம். எங்களை சந்தேகிக்காதீர்.
மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், அந்தப் பதிவில் ஒரு தவறானதகவல் இடம் பெற்றிருக்கிறது. அதில் சில மாதங்களுக்கு முன்சீனாவில் பிடிபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சிங்களவனும்இருந்தான் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறானது. சில ஆண்டுகளுக்கு முன் (அநேகமாக 2001) செஷன்யாவில் ரஷ்யப் படையினரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மை. தவறுக்கு வருந்துகிறேன்.
என்னுடைய பதிவுகள் தொடரும்.... விரைவில் சந்திப்போம்...

Thursday, February 26, 2009

”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” கையெழுத்து இயக்கம்



தமிழீழ மக்கள் படும் இன்னல்களை மக்களுக்கு விளக்கவும், அதற்குக் காரணமான சிங்கள இனவெறி அரசிற்கு துணை போகும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசைக் கண்டித்தும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ”தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்” நேற்று(25-02-09) தொடங்கியது.


தஞ்சை சாந்தி கமலா திரையருங்கு அருகில் நடந்த தொடக்க விழாவில், திரை இயக்குநர் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி, தஞ்சை வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் நல்லதுரை உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ”இளந்தமிழர் இயக்கம்” தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயர்நீத்த மாவீரன் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சியை பற்றியும் விளக்க இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி பேசினார். ”இனத் துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” என்று 1 இலட்சம் பேரிடம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்தியக்கம் குறித்தும் காங்கிரசின் இனத் துரோக நடவடிக்கைகள் குறித்தும் இளந்தமிழ இயக்கத்தின் பயணத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.செந்தமிழன் பேசினார்.


மேலும், தோ்தல் அரசியல் சாராத மாணவர்கள் இளைஞர்களை தமிழ் உணர்வை மட்டும் கொண்டு ஒன்றிணைக்கும் இவ்வியக்கத்தை மாணவர்களிடமும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து மாற்று அரசியலுக்கான பாதையை ஏற்படுத்துவோம் என்றும் அவர் கூறினார். பின்னர் வழக்கறிஞர் நல்லதுலை, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மணிவண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துரை வழங்கினர். ”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” கையெழுத்து இயக்கத்திற்கு முதல் கையெழுத்தை இயக்குநர் மணிவண்ணன் போட பின்னர் பலரும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். புதுக்கோட்டை நோக்கி ஒரு அணியும், வேதாரண்யம் நோக்கி ஒரு அணியும் என பரப்புரைப் பயணக்குழுவினர் இரண்டு அணிகளாக பிரிந்து தஞ்சையிலிருந்து கிளம்பி சென்றனர். வழிநெடுகில் பல்வேறு கிராம மக்களிடம் பரப்புரையின் நோக்கம் குறித்தும் தமிழீழ மக்களின் இன்னல்கள் குறித்தும் குழுவினர் விளக்கி வருகின்றனர். ”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” கையெழுத்து இயக்கப் படிவத்தில் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு வருகின்றனர். வட தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு ம.செந்தமிழனும், தென் தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேசுபாலன்ராஜாவும் வழிநடத்திச் செல்கின்றனர். இப்பயணக்குழுவினர் வருகிற மார்ச் 6 ஆம் திகதி சேலத்தில் நடக்கும் ”இன எழுச்சி மாநாட்டில்” .சந்திக்கின்றனர்

Wednesday, February 25, 2009

ஈழம்:இந்தத் தேவடியா பசங்களுக்கு இதுதேவைதான்'



அந்தப் படத்தொகுப்பு ஸ்டூடியோவில் அவரைச் சந்தித்தேன்.இளவயது அவருக்கு.. சில நாட்களுக்கு முன்பே அதே இடத்தில்சந்தித்திருந்தாலும், இப்போது தான் பேச வாய்ப்புக் கிடைத்தது.
அவரது பேச்சில் அவர் ஓர் இலங்கைத் தமிழர் என்பதுஎனக்குத் தெரிந்துவிட்டது. உரிமையுடன் தேனீர் அருந்தலாமா?என்று கேட்டு, அவருடன் தேனீர் கடைக்குச் சென்றபோது ஈழத்தில் நடந்து வரும் போர்ச் சூழல் பற்றி பேசினேன்.மூன்று மாதங்களுக்கு முன்பு வரை கொழும்புவில் தங்கியிருந்த அவர்,பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் பணியாற்றியிருப்பதாக தெரிந்தது.
இலங்கையில் உண்மையில் என்னதான் நடக்கிறது? என்பதை அவர்அனுபவத்தில் கேட்க விரும்பினேன். என் மீது அவருக்கு நம்பிக்கைஏற்பட்டிருக்க வேண்டும். மனதிறந்து சில விடயங்களை என்னுடன்பகிர்ந்து கொண்டார்.
கே: கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தமிழர்களுக்கும் சிங்களவர்களும் இடையே பாகுபாடு உள்ளதாக, இங்குள்ளவர்கள் சொல்வது எந்தளவுக்கு உண்மை? என்றேன்.
''இங்குள்ளதைப் போல் கல்வி முறை அங்கில்லை. பல்கலைக் கழகங்களில்சேர அதற்கு முந்தைய நிலையில் குறைந்தது 280 புள்ளிகள் யாழ்ப்பாணத்தில்உள்ளவர்கள் அதாவது தமிழர்கள் பெற்றிருக்க வேண்டும். இதே கொழும்பில் உள்ளவர்கள்,வெறும் 190 புள்ளிகள் பெற்றிருந்தால் போதும். (இந்த இறையாண்மையை பாதுகாக்கத்தான் இலங்கைக்கு ராணுவஉதவி செய்வதாக, மன்மோகன் சிங் நியாயம் கற்பிக்கிறார்.)அதில் கொழும்பில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் படிக்கவோ,விரும்பிய இடத்தில் கல்வி கற்கவோ முடியாத நிலை உள்ளது''. கே: கொழும்பு உள்ளிட்ட சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும், வன்னிப் பகுதியிலும் வாழும் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம்?
''சிங்களவர்களுடன் வாழும் தமிழர்கள் எந்நேரமும் அச்சத்துடன் தான் காலம் தள்ள வேண்டும்.நள்ளிரவில் ராணுவத்தினர் கதவைத் தட்டுவார்கள். திடீரென தமிழர்கள் காணாமல்போவார்கள். யார் மீதாவது சந்தேகம் வந்துவிட்டால் அது உண்மையா? என்றுவிசாரித்து நேரம் செலவளிக்க ராணுவத்தினர் தயாரில்லை. எனவே அடுத்தவிநாடியே அந்த சந்தேகத்துக்கு இடமான நபர் கடத்தப்படுவார்.அதன்பின்பு எப்போதும் அவரைப் பார்க்கவே முடியாது.
வன்னியில் எப்போது குண்டு விழுமோ? என்ற உயிர் அச்சத்தில் வாழ்வதைவிடஇதுமேல் என்று நினைத்துக் கொண்டு, பலரும் தினம் தினம் செத்துக் கொண்டுகொழும்பிலும் பிற சிங்கள ஆதிக்கப் பகுதிகளில் வசித்துவருகிறார்கள்''
கே: தமிழர்களை எல்லாம் அழித்துவிட்ட பிறகு, வெறும் சிங்களவர்கள் மட்டும் வாழும் இலங்கையால் இந்தியாவுக்கு நன்மையா?

சிரித்தார். ''இங்கு வருவதற்கு முன் ஒரு சாப்டவேர் நிறுவனத்தில்இருந்தேன். சமீபத்திய மும்பை தாக்குதல் நடந்தன்று Bar - ல் அமர்ந்துஎன் மேலதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் ஒரு தமிழர். அப்போதுஎங்களுக்கு எதிரே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த எங்களது சக ஊழியர்,'இந்தத் தேவடியா பசங்களுக்கு இதுதேவைதான்' என்று திருவாய் மலர்ந்தார்.அவர் ஒரு சிங்களவர். நாங்கள் இருவரும் தமிழர்கள் என்று ஞாபகம்வந்தவராக அமைதியாகிவிட்டார். சிங்களவர்களைப் பொறுத்தவரையில்தமிழர்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கிறது. அதனால் இந்தியாவை எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் உண்டு. பாகிஸ்தான், சீனா உடனான இந்தியப் போரில் இந்த எண்ணத்தைத்தான்சிங்கள அரசு பிரதிபலித்தது.
பாகிஸ்தான் ஆயுதம் கொடுக்கிறது என்று இந்தியாவும் கொடுக்கிறது. ஆனால் இதனால் இங்குள்ள தமிழர்கள் இந்திய அரசை எதிர்க்கத் தொடங்கியிருப்பதாக அறிகிறேன். தமிழர்களையும், எதிர்த்துக் கொண்டு சிங்களவனுக்கு உதவுவது சரியில்லை.ஏனென்றால் எதிர்காலத்தில் இந்தியப் பாதுகாப்புக்கு சிங்களவனால்நிறைய ஆபத்து இருக்கிறது. இதை இங்குள்ளவர்கள் உணர்வார்களா? என்றுதெரியவில்லை. சில மாதங்களுக்கு முன் சீனாவில் கைதான பாகிஸ்தான்பயங்கரவாதிகளுடன் ஒரு சிங்களவனும் இருந்தான் '' என்றார் அந்த நண்பர்...

இதுதெல்லாம் பேசிவிட்டு ரொம்ப நேரம் கழித்து எடிட்டிங் அறையில் இருந்துகிளம்பிய அவர் என்னிடம் விடைபெறும் போதுதான் அவரது பெயரை இன்னும்நான் கேட்கவே இல்லை என்று தெரிந்தது... அதன்பின்பு எங்கள் செல் எண்கள்பரிமாறப்பட்டன. என் விசிட்டிங் (சரியான தமிழ் வார்த்தை என்ன?) கார்டை அவருக்குக்கொடுத்தேன். அவர் சென்ற பிறகு இறுதிக்கட்ட படத்தொகுப்பில் இருந்தஎன் ஆவணப் படத்திற்கு பதிவு செய்து வைத்திருந்த அவரதுகுரலைச் சேர்த்தோம்...
எனக்கு மனநிறைவாக இருந்தது.....

Monday, February 23, 2009

செத்தொழியட்டும் தமிழன்; காமெடி சேனலைப் போடு; கொஞ்சம் சிரிக்கலாம்!


தமிழனத் தலைவரின் தியாகம் வாழ்க....
ஈழத்தில் கொத்துக் குண்டுகள் போட்டு குழந்தைகளையும், பெண்களையும்கொன்று குவித்து வருகிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு கட்டாயகருக்கலைப்பு செய்து அப்பட்டமான, இதுவரை இல்லாத இனஅழிப்பைஅரங்கேற்றி வருகிறது, சிங்களப் பேரினவாதம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்ஈழத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை மகிழ்ச்சியாகவைத்திருக்க கருணாநிதி அண்ட் குடும்பத்தினர்செய்து வரும் தியாகத்தை நினைத்தாலே மனசு பூரிக்கிறது.
போர் நிறுத்தம் கோரி, மத்திய அரசிற்கு சட்டமன்றத் தீர்மானங்களைஅனுப்பிவிட்டு போர் முடிவுக்கு வரவில்லையென்றால் ஈழத்துக்குப்ப போய்சாகவும் தயார் என்று கலங்கியவர், கருணாநிதி. ஈழத்தமிழர்கள் சாவதைஇன்டர்நெட் படங்களில் பார்த்துவிட்டு தாங்க முடியாத துயரம்கொண்டதாக மாங்ககொல்லை மீட்டிங்கில் கண்களை குளமாக்கிக் கொண்டார், கருணாநிதி. கருணாநிதியின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்துஇலங்கைத் தமிழர் நலப் பேரவை மூலம் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடித்து வருகிறார்கள்.அதே கருணாநிதியின் வாரிசுகள் அண்மையில் ஆதித்யா என்கிறசிரிப்புச் சேனலைத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்குப் போட்டியாகதமிழனை சிரிக்க வைக்க சிரிப்பொலி என்கிற மற்றொரு சிரிப்புச் சேனலை கருணாநிதியே தொடங்கி வைத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். கருணாநிதி தான் உண்மையிலேயே தமிழனத் தலைவன்.மாவீரன் முத்துக்குமார் சவஊர்வலத்தில் உன் மகனுக்கு பிறந்தநாள் விழாக் கொண்டாடியவர் ஆயிற்றே. மாவீரன் முத்துக்குமாருக்குதீவிரவாதி முத்திரை குத்தியவர், அவரது மகன் ஸ்டாலின்.(அவர்கள் கட்சியிலேயே ஒருவர் இதே காரணத்துக்காகதிமுக மனித சங்கிலியில் தீக்குளித்து இறந்தவரை தீவிரவாதி என்று சொல்ல தைரியம் உண்டா ஸ்டாலினுக்கு?).கனிமொழி, எத்தனை கூட்டங்களில் ஈழத்தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர்வடித்திருப்பாய்... இப்போது தமிழன் செத்துக்கொண்டிருக்கும் போதுஅவர் மகன் ஆதித்யா பெயரில் காமெடி சேனல்.இந்திய டூடேவில் விருந்தினர் பக்கத்தில் எத்தனை முறை நியாயம் பேசியிருப்பார்,கனிமொழி (அதில் சிலதை படித்துவிட்டு உங்களை புதுமைப்பெண் என்று நண்பர்களிடம் சொன்ன என் புத்தியை செருப்பால் அடிக்கவேண்டும்) இன்றைக்கு போரை நிறுத்தச் சொல்லாத யாரையும் எதிர்க்கும்திராணி கனிமொழிக்கில்லை.. ஒரே ஒரு எம்.பி., பதவிக்கும், டெல்லியின் கதகதப்பானசீதோஷ்ண நிலைக்கும் உங்களை அடமானம் வைத்து விட்டீரீங்களே! கனிமொழிக்கும் பார்ப்பன பாப்பாத்தி ஜெயலலிதாவுக்கும் என்ன வித்தியாசம்இருக்கிறது. போர் நடந்தால் தமிழன் சாவான் என்று வியாக்கானம் பேசுகிறார், ஜெ.,அந்த சாவை வேடிக்கைப் பார்ப்பதோடு காமெடிச் சேனல் தொடங்கிய கனமொழிகைகொட்டி சிரிக்கிறார்.... இனியும் கருணாநிதியை யாராவது தமிழினத்தலைவன் என்றால் செருப்பு பிய்ந்து போகும்... ஜெயலலிதா என்கிற நாய்...சந்தடி சாக்கில் காங்கிரஸை துணைக்குக் கூப்பிடுகிறாள்... தமிழனுக்குச்சேவை செய்யும் காங்கிரஸ் எங்கே தன் கையை விட்டுப் போய்விடுமோஎன்று கருணாநிதி கொய்யோ முய்யோ என்று கத்துகிறார்....தமிழனைக் கொல்வதில் காங்கிரஸ், திமுக, அதிமுக எல்லோரும்ஒரே அணியில் இணைந்திருக்கிறார்கள் ...
இவர்களுக்கும் நம் தமிழன் வரும் தேர்தலில் தோரணம்கட்டுவான்; கோஷம் போடுவான்; ஓட்டும் போடுவான்; உண்மையில்இதுபோன்ற ஒரு காமெடி உலக தொலைக்காட்சிவரலாற்றில் வரவே வராது!