Monday, April 27, 2009

இலங்கைப் போருக்கு இந்தியா எப்படி உதவலாம்?




இந்தச் செய்தி மூலம் சில உண்மைகள் உங்களுக்குத்தெரிய வரலாம்....
நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

Friday, April 24, 2009

அம்மா கனிமொழி! நீயும் ஒரு பொம்பளை தானே!!


‘‘தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டரை லட்சம் அப்பாவி தமிழ் மக்களை மனிதக் கேடயமாக பிடித்து வைத்திருக்கிறார்கள்’’ என்று புலிகள் மீது இலங்கை அரசு குற்றஞ்சாட்டுகிறது. இதற்கு இந்தியாவும் ஒத்து ஊதுகிறது. உண்மையில் புலிகள் பாதுகாப்பில் உள்ள தமிழர்களின் கதி என்ன? என்பதை அறிய முயன்றேன். இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் இந்தக் கேள்வியை வைத்ததும், அவர், நீண்ட விளக்கத்துடன் என் கேள்விக்கான பதிலை தந்தார். அவர் கூறியதில் இருந்து.......‘‘ஓர் இனக்குழுமத்தில் இருந்து சில நியாயங்களுக் காக கிளம்புகின்ற குழுவினரை மக்கள் கூட்டத்தில் இடையே அடையாளம் காண்பது என்பது கடின மானது என்பதால், இன உணர்வுள்ள இளைஞர் களை எல்லாம் ஒன்று திரட்டி அப்படியே அழித்தல் என்பதுதான் உலக நாடுகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் பாலிசி. இதை நாகலாந்து, மணிப் பூர் போன்ற மாநிலங்களில் உங்கள் இந்தியா செய்கின்றது. ஈழப்பிரச்னை எப்படி ஊடகங்களில் வரமுடியாமல் சிங்கள அரசு தன்னுடைய அதி காரத்தை பிரயோகிக்கின்றதோ, அப்படி இந்தியாவும் நாகலாந்தில், மணிப்பூரில் செய்கிறது; ஈழப்பிரச்னை யிலும் செய்கின்றது-. ஈராக்கில் அமெரிக்காவால் ஏற் பட்ட மனித பேரவலம் இன்று ஈழத்தில் நடக் கின்றது. ஈழத் தமிழர்கள் யூதர்களைப் போலவே உல கெங்கும் பரந்திருப்பதால் உலகக் கதவுகளை எல்லாம் அவர்களது உரிமைக்குரல் இடிக்கிறது.இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாடுகளுமே இந்தியாவுக்குப் பகையான அல்லது பதற்றமான நாடு களாகவே இருக்கின்றன. இலங்கையில், இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தும் பொருட்டு தமிழ் போராளிகளை அவர்களின் பிரச்னையை சாதகமாகப் பயன்படுத்த நினைத்தது. ‘றொ’ தமிழ் போராளிகளைப் பல குழுக்களாகப் பிரித்து போர் பயிற்சியையும், கொடுத்து அவர்கள் இடையே பகைமையை ஊட்டி ஈழத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.இந்தியா சொன்ன போதெல்லாம் வாலை ஆட்டவும், கையை உயர்த்தவும் அந்தத் தமிழ் குழுக்கள் நிர்பந்திக்கப்பட்டன. தோற்றிவிக்கப்பட்ட ஏனைய குழுக்கள் எல்லாம் இந்தியாவின், சுய நல அரசியலை செவிமடித்த போதும், பிரபாகரன் தன்னுடைய கொள்கையில் மிக நிதானமாக கொள்கை நோக்கியதான பயணத்தை தெளிவாக அமைத்தார். கடந்த முப்பதாண்டு போர்க்கால வரலாற்றில் அவர்கள் தம் கொள்கையில் இருந்து இன்று வரை மாறவே இல்லை. இந்த ஆட்டுவித்தப் பாட்டுக்கு ஆடாத கொள்கை இந்தியாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதன் பரிணாம வளர்ச்சிதான் இன்றைய வன்னி யுத்தமும் மோசமான மனித அவலமும்.இன்று வன்னியில் நிகழும் மனிதப் பேரவலத்தைப் பொறுத்த வரையில் உலகெங்கிலுமே நடந்திராத அளவிற்கு வன்னி மக்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகின்றார்கள். இப்போது எஞ்சியுள்ள மூன்று மீன்பிடி கிராமங்களில் ஆடு, மாடுகளைப் போல் இரண்டரை லட்சம் மக்கள் தினம், தினம் மிகக்கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே!அந்த மண்ணில் பிறந்து அந்த மண்ணில் வளர்ந்த எங்களை அங்கே இருந்து அப்புறப்படுத்து வதற்குப் பெயரா மக்கள் மீட்பு! ராணுவத்தின் மிக மோசமான பீரங்கி தாக்குதலால் எங்கே ஓடுகிறோம்? என்று தெரியாமல் சிதறி ஓடுகின்ற மக்களை ராணுவம் மிக மோசமாகக் கையாள்கிறது. கடந்த திங்கள்கிழமை (20.04.09) கூட முப்பதாயிரம் தமிழ் மக்களை மீட்டதாக, இலங்கை ராணுவம் சேட்லைட் படங்களை வெளியிட்டது. வவுனியா மாவட்ட கலெக்டரோ, வெறும் 13,500 பேர்தான் வந்ததாகக் கூறியிருக்கின்றார். அதில் இப்போது எட்டாயிரத்து ஐநூறு பேர்தான் உயிருடன் இருக்கின்றார்கள். அப்படியென்றால், ஐயாயிரம் தமிழ் மக்கள் கதி என்ன ஆனது? இதை எல்லாம் விட கொடுமையாக அப்படி அங்கிருது வருகின்ற பெண்கள் எல்லோருமே தற்கொலைப் படை போராளிகளாக இருக்கலாம் என்கிற குரூர புத்தியில் நிர்வாணமாக வருவதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். பீரங்கிக் குண்டுகளுக்குப் பயந்து ஓடுபவர்கள், ஒரு கட்டத்திற்கு மேல் ராணுவத்திடம் நிர்வாணமாகவே தான் வரமுடியும். அது அரச உத்தரவு. கற்பனை செய்து பாரு, என் தாய்த் தமிழகமே! சிங்கள ராணுவ காமுகர்களின் கழுகுக் கண்கனின் முன்னால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், நிர்வாணமாக அரை கிலோமீட்டர் நடந்து வரவேண்டும் என்பது சகிக்கக் கூடியதா? பெண்ணுரிமை பேசும் தமிழினத் தலைவர் கலைஞரின் வாரிசான கனிமொழி போன்றோர் இதற்குப் பதில் சொல்லட்டும்!ஏற்கெனவே, சண்டை களத்தில் இருந்து நிறைந்த மது, மாது தாகத்தோடு வரும் ராணுவத்தினரின் சாந்தி க்காக அனுராதபுரம் என்கிற புனித நகரில் (இலங்கை அரசாங்கம் அப்படித்தான் சொல்கிறது!) அமைக் கப்பட்டுள்ள விபசார விடுதிகளின் நேரடியாகக் கொணர்ந்து இறக்கப்படுகின்றனர். விபசார பெண் களுக்கான பணத்தை மாதாந்தம் இலங்கை அரசே பொறுப்பேற்றுக் கொள்கிறது. இப்போது, அந்த இடத்திற்கு வன்னியில் இருந்து கொணரப்படும் தமிழ்ப் பெண்களும் பலவந்தமாகக் கொண்டு செல்கிறார்கள். இதை சகித்துக் கொள்ள முடியாத எம் தமிழ்ப் பெண்கள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். பலர் சித்தப் பிரமை பிடித்துத் திரிகிறார்கள். கோத்தபய ராஜபக்சே மேடை ஒன்றில் கூறியது போல ‘முல்லைத் தீவு பெண்கள் உங்களுக்கு விருந்தாகட்டும்! ஆண்களின் ரத்தத்தால் கடல் சிகப்பாகட்டும்’ என்பது மிகச் சரியாக நடக்கிறது. வன்னியில் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள காவல் அரண்களில் எல்லாம் நாலைந்து ராணுவத்தினரோடு ஓர் அப்பாவி வன்னித் தமிழ் பெண்ணும் பலவந்தமாக தங்க வைக்கப்படுகின்றாள்; வன்புணரப்படுகின்றாள். இதையெல்லாம் விட நான் உள்பட சில தமிழர்களோடு நண்பர்களாக இருக்கும் ஒரு ராணுவ அதிகாரி, ‘எங்கள் ராணுவ அதிகாரிகள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் உங்கள் தமிழ்ப் பெண்கள் நிர்வாணமாகவே பணிவிடைகளைப் புரியும்படி பணிக்கப்படுகிறார்கள்’ என்று கூறியதும் இனி இந்தக் கொடுமையை கண்டும், கேட்டும் இங்கு வாழவே கூடாது என்றுதான் பலர் படகேறி ராமேஸ்வரம் வந்து சேர்கிறார்கள். பாதுகாப்பு வளையத்துக்கு வந்த ஆண்கள் எல்லோரும¢ கொல்லப்படுகின்றார்கள்; பலர் காணாமல் போய்கின்றார்கள்.மவுனியா வைத்திய சாலைக்கு நான் சென்றிருந்தபோது, இருபதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் அங்கு அனுமதிக்கப் பட்டிருந்தனர். அவர்களில் எல்லோருக்கும் இரண்டு கால்களும், இரண்டு கைகளும் துண்டாடப்பட்டு விட்டன. ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள் முடமாக்கப் பட்டு கிடக்கின்ற அவள், குழந்தை பிறந்தால் எந்தக் கைகளால் தூக்கி தன் குழந்தைக்குப் பால் கொடுப்பால்? எவ்வாறு கால்களை சமன்படுத்திக் குழந்தைகளைத்தான் பெற்றெடுப்பாள்? மலைகளைப் பிளக்க பயன்படும் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் (கிளிஸ்டர்) விமானம் மூலம் வீசுகிறார்கள். அது, தரை மட்டத்துக்கு மேலே இருபதடியில் வெடித்து முந்நூறு குண்டுகளாக தரையில் விழுந்து வெடிக்கின்றது. அதில் உடல்கள் பிளந்து, தீப்பற்றி எரிந்து கறிக்கட்டைகளாகி மடிகின்றனர். நச்சுக்குண்டுகளால் (tலீஷீக்ஷீஷீனீவீநீ தீஷீனீதீ) உடலெங்கும் கொப்பளங்கள் ஏற்பட்டும், மூச்சுத் திணறியும் செத்து மடிகிறது, எம்மினம். அழுவதற்கு இனி கண்களில் கண்ணீர் இல்லை. யுத்த நிறுத்தம் கேட்பது எல்லாம், இறந்து கிடக்கும் பிணங்களை புதைப்பதற்காகவும் ஷெல் வீசலில் பறந்து சிதறிய தன் அங்கங்களில் கட்டுப் போடுவதற்காகவே. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஓரினத்தையே மிகக் கச்சி தமாக இலங்கை அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் சேர்ந்து அழித்துக் கொண்டிருக் கின்றது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங் களில் முடியப்போகும் இந்த முற்றுகையும் மாபெரும் மனித அவலமும் தேர்தல் பரபரப்புகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் கூட எவர் செவியிலும் விழப் போவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கே இதற்கான போராட்டங்களை முன்னெடுக்க முடியாதபோது ஈழத்தமிழர்களை இந்தியாவில் கதறியழுவது என்பது சாத்தியமற்றது தான். அவ்வாறு செய்ய முனைந்தால் தமிழ்நாடு, இந்தியா அதை எவ்வாறு கையாண்டு பூந்தமல்லி சிறைச்சாலையை நிறைக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். வன்னியில் சண்டை ஆரம்பிக்கப்பட்ட சில நாட் களில் மாங்கொல்லையில் இந்த ஆட்சி இனி எதற்கு?- என்று கலைஞர் கண் கலங்கியதும், திடீரென வன்னியில் போர் நின்று போகிறது. ஐந்து நாட்களில் ஒரு குண்டுளேனும் அங்கு வெடிக்கக் காணோம்! ப்ரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். கலைஞரை சந்திக்கிறார். ‘மத்திய அரசு கொள்கைதான் தன் கொள்கை’ என்கிறார், கலைஞர். அதன்பின், கண் முன்னே கொலைகள் குவிகின்றன. ஆக, எஞ்சியுள்ள இரண்டு லட்சம் தமிழர்களின் ஊனமும், உயிரும் கலைஞர் கைகளில் இருக்கிறது. கலைஞரே, நீங்கள் உண்மையான மனசோடு எமக்காக பேச வீதிக்கு வாருங்கள்! இல்லை, வயது முதிர்ந்த காலத்தில் தன்னுடைய வாழ்வை இப்படியான அவப் பேரோடுதான் முடித்துக் கொள்ளப் போகிறாரோ?’’ என்றவர், மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் அமைதியாகிப் போனார்.பி.கு: உங்களில் யாருக்காவது கனிமொழியின் மின்னஞ்சல் தெரிந்தால் இந்தப் பதிவை அனுப்பி வைக்கவும்.....

Wednesday, April 22, 2009

வேலை நிறுத்தத்திற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ‘நோ’


கலைஞரின் வேலை நிறுத்தம் என்கிற நீலிக் கண்ணீருக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் மீதான போரை நிறுத்த செய்ய வேண்டிய எதையும் செய்யாத கலைஞர், இப்போது வேலை நிறுத்தம் அறிவித்து மக்களின் கவனத்தை திசை திருப்பப் பார்க்கிறார். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று பழ.நெடுமாறன் சொல்லிவிட்டார். ஆனால் 24ம் தேதி நடைபெறும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவை இ.த.பா.இ சார்பில் எழுச்சியுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கிடையே காங்கிரஸ்_திமுக அணிக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாகவும் நெடுமாறன் அறிவித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர்கள் தமிழருவி மணியன், திருச்சி வேலுச்சாமி, பசுபதி பாண்டியன், தி.அழகிரிசாமி, பரந்தாமன், பொன்னிறவன், ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். ஏப்ரல் 22ம் தேதி முத்துக்குமார் நினைவிடத்தில் இருந்து இந்தப் பயணம் தொடங்கப்பட இருக்கின்றது. ஈழப்பிரச்னையில் துரோகம் செய்த காங்கிரஸ், திமுக கட்சிகளை அம்பலப்படுத்தும் வகையில் இந்தப் பிரசாரம் அமையும்.‘அப்படிப் போடு போடு திருப்பிப் போடு

விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள் கைது,,, பின்னணி இதுதான்....



விடுதலைப்புலிகளின் இரண்டு தலைவர்கள் சரண்டர் என்கிற செய்தியை தேசிய சேனல்கள் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தனை நாள் இலங்கைத் தமிழர்கள் படும் பாட்டை கண்டுகொள்ளாமல் இருந்த இந்தச் சேனல்கள் இப்போது தூங்கி விழித்திருப்பது போர் நிறுத்தத்திற்கு எதிரான செய்தியைப் பரப்புவதற்கே.தமிழீழ விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பாளர் தயா மாஸ்டர், சுப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜார்ஜ் ஆகிய இரண்டு பேர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ புலிகள் சரணடையத் தயாராகிவிட்டதாக செய்தி வெளியாவதன் மூலம் உலக நாடுகளும் சமாதான அமைப்புகளும் போர் நிறுத்தக் கோரிக்கையை கைவிட்டுவிடும் என்று சிங்களவன் நினைக்கலாம். இது அங்கு தினமும் தினமும் செத்துமடியும் தமிழ் மக்களுக்கு எந்தவகையில் பயனளிக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.சரணடைந்ததாக சொல்லப்படும் தயா மாஸ்டருக்கு வயது ஐம்பதுக்கு மேலாகிறது. 2005ல் கொழும்பு மருத்துவமனையில் இவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. (அப்போது ஏன் கைது செய்யவில்லை?) இப்போதும் கூட மூன்று சக்கர வண்டியில் தான் தயா மாஸ்டர் கொண்டு வரப்பட்டார். அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற பின் மொழிப்பெயர்ப்பாளர் பணியை மேற்கொண்டு வந்த ஜார்ஜூம் இப்படியான ஒரு வயதானவர் தான். மேலும் இருவருமே படையில் பொதுவானவர்கள் தான். புலிகள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சரணடைந்தவர்கள் புலிகளின் முக்கியத் தலைவர்கள் என்று செய்தி வெளியிட்டு வருவதுதான் வேதனையிலும் வேதனை. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலான புலிகளின் வரலாற்றில் எந்த தளபதியும் சரணடைந்ததாக வரலாறு கிடையாது என்று இன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.மொத்தத்தில் புலித் தலைவர்கள் யாரும் சரணடைய வில்லை. போலித் தலைவர்கள் தான் சரணடைந்திருக்கிறார்கள்.

Tuesday, April 21, 2009

‘ஆத்தா எங்களை மன்னிச்சிடு’ ஜெயலலிதா காலில் விழுந்த தினமலர்!


தி.மு.க.,வுக்கு முதுகு சொறியும் வகையில் கொஞ்ச நாட்களாக தினமலர் செய்தி வெளியிட்டு வந்தது. தினமலரின் நிறுவனர் டி.வி.ஆருக்கு தபால் தலை வெளியீட்டு விழாவில்¢ தந்தை பெரியாருக்கு இணையாளவர் டிவிஆர் என்று கலைஞர் பேசியதே இருதரப்புக்கும் இருந்த நெருக்கத்தைக் காட்டியது. (பெரியார் என்கிற பெயருக்குப் பதில் ஈவெரா என்று தொடர்ந்து எழுதி வரும் தினமலரால், என்றைக்கும் பெரியாரின் தாக்கத்தை இந்த சமூகத்தில் இருந்து விரட்டிவிட முடியாது என்பதை நாம்தான் உணர்த்த வேண்டும்) தினமலர் ரமேஷ் (அந்துமணியாம்!) மீது அந்தப் பத்திரிகையில் வேலை பார்த்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாகவும் ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும் புகார்கள் வெளியானது. ரமேஷ் எந்நேரமும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆளும் கட்சியின் ஆசிர்வாதத்தால் அது தவிர்க்கப்பட்டது.இதற்கு நன்றி காட்டும் விதமாகவும் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து காரியம் சாதித்துக் கொள்ளும் நோக்கிலும் பகுத்தறிவு பேசும் கலைஞருடன் கைகோர்த்துக் கொண்டது தினமலர். அதன்படி அரசு தரப்பில் சலுகைகள், அறிவிப்புகள் வெளியிடும் ஒவ்வொருமுறையும் அதை சிலாகித்து செய்தி வெளியிட்டு தனது அரிப்பைத் தணித்துக் கொண்டது.காலங்காலமாக கலைஞரை திட்டியும் விமர்சித்தும் எழுதிக் கொடுத்து சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தினமலர் ஊழியர்களுக்குக் கூட (அதாம்பா ரிப்போர்ட்டர்ஸ்) இந்தப் போக்கு ஏனோ பிடிக்கவில்லை. ஆனால் கூலிக்கு மாரடிக்கும் இந்தக் கும்பல் வேறு என்ன செய்ய முடியும்-? இதற்கிடையே ஈழப் பிரச்னையும் வந்தது. தி.மு.க.,வும் கலைஞரும் ஈழத் தமிழனுக்கு எதிராக நின்றதில், ஏற்கெனவே தமிழினத்துக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வரும் தினமலருக்கு வசதியாகிப் போனது. அதிலும் தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதரர் அம்சாவின் கைக்கூலிகளாக ஆள்காட்டிகளாக இருந்த தினமலரின் மேலிட ஊழியர்களுக்கும், முதலாளிகளுக்கும் கலைஞரின் நிலைப்பாடு வசதியாகிப் போனது. கிளிநொச்சியை கைப்பற்றியது ராணுவம் என்கிற தலைப்பில் மட்டும் பலதடவை செய்திகளை வெளியிட்டிருப்பார்கள்! எத்தனை தடவைதான் கிளிநொச்சிப்பிடிக்கும் இலங்கை ராணுவம். இதிலும் இயக்குநர் சீமான் மீது அவர்கள் காட்டிய வஞ்சம் இருக்கிறதே? பாரதிராஜா (இன்னொரு இனத் துரோகி), மணிவண்ணன் போன்றோரின் தமிழுணர்வைக் கிண்டல் செய்து சினிமாக்காரர் என்று செய்தி வெளியிட்டு தனது அரிப்பை அடக்கிக் கொண்டது. வைகோ, கண்ணப்பன், கொளத்தூர் மணி, பெ.மணியரசன், சீமான், நாஞ்சில் சம்பத் போன்றோரின் கைதுக்கு முக்கியக் காரணமாக இருந்தது. திருமாவளவனையும் கைது செய்யச் சொல்லி எத்தனை முறை காங்கிரஸ் அள்ளக் கைகளிடம் பேட்டியெடுத்துப் போட்டது. ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. திருமாவைக் கைது செய்து தலித்களின் வெறுப்பைச் சம்பாதிக்க கலைஞர் விரும்பவில்லை.இதற்கிடையே தேர்தல் கூட்டணிகள் முடிவானது. மதிமுகவையும் பாட்டாளி மக்கள் கட்சியையும் ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டி செயல்பட்ட தினமலர், அந்தக் கட்சிகள் தன்னுடைய தாய் வீடான அதிமுகவில் சேர்ந்ததில் கொஞ்சம் சோர்ந்து போய்விட்டது. பிஜேபியை ஆதரிக்கலாம் என்றால் பாவம் அவர்கள் இருக்கிற இடமே தெரியவில்லை. வேறு வழியின்றி கலைஞருக்கே தினமலர் முதுகு சொறியும் என்று நாம் நினைத்திருந்தோம்.அங்குதான் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈழப்பிரச்னையில் கலைஞரின் துரோகத்தை நினைத்து நினைத்து புளங்காகிதம் அடைந்து வந்த தினமலர், திடீரென கலைஞரும் ஓட்டுக்காக ஈழப் பிரச்னையில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக பெயரளவில் கூட குரல் கொடுப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தது. (இலங்கைத்தூதரக உறவை முறிக்கச் சொன்னாரே கலைஞர் அப்போதுதான்) . அண்ணன் பிரபாகரன் என் நண்பர் என்று சொல்லியதாலும் பின்னர் அதை மறுத்துவிட்டதையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு கலைஞரை விமர்சிக்க ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்ததை ‘அதிசயம்’ என்று தலைப்பில் செய்தி வெளியிட்டு ‘நாங்கள் மாறிவிட்டோம்’ என்று அறிக்கை விடாத குறையாக அறிவித்தது. அதுவும் நேற்றும் இன்றும் கலைஞரை விடுதலைப் புலிகளிள் ஏஜெண்ட் போல சித்தரித்து செய்தி வெளியிட்டதைக் கவனிக்கவும். ‘ரத்தஆறு ஓடும்’ என்ற பேச்சை வாபஸ் பெற மாட்டேன் என்ற வைகோவின் அண்ணாநகர் பிரசார கூட்டப் பேச்சை அடக்கி வாசித்தது. ஜெ.,வும் ஈழ ஆதரவு நிலையில் தானே இருக்கிறார் என்று நீங்களும் நானும் நம்பலாம். தினமலர் நம்பத் தயாராக இல்லை. பாம்பின் கால் பாம்பறியும்.கடந்த நான்கைந்து நாட்களாக அதிமுக பக்கம் சாய்ந்து கொண்டு முதுகைச் சொறியும் வேலையைச் செய்கிறது தினமலர். (அதே சமயம் பாட்டாளி மக்கள் கட்சியும் மதிமுகவும் ஜெயித்துவிடக் கூடாது என்பதில் தினமலர் கவனமாக இருக்கும்.) அடுத்தமுறை எவளையாவது சீண்டினால் ஜெயலலிதா பார்த்துக்கொள்வார் என்கிற தைரியம். அதிலும் ஜெயிக்கும் பக்கம் இருப்பது தானே தினமலர் நிர்வாகத்திற்கு பயன். கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் சமயத்தில் தினமலர் ஊழி யர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில் தினமலர் ஊழியர்கள், குடும்பத்தார் அதிமுகவுக்கு ஓட்டுப் போடவும்; உங்களுக்குத் தெரிந்தவர்களையும் அதிமுகவுக்கு ஓட்டுப்போடச் சொல்லவும் என்று அறிவித்திருந்தனர். (இந்த முறை இதுபோன்ற அறிக்கை வந்தால் அதை குறைந்த பட்சம் செல்போனிலாவது படம் பிடித்துத் தருவதாக தினமலர் நிருபர்களாக உள்ள எனது நண்பர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள்).தங்கள் இனத்தைச் சேர்ந்த ஜெவை ஆதரிக்காமல் சூத்திரன் கலைஞரை ஆதரிப்பது எப்படி சரியாகும் என்று இப்போது தினமலர் சொல்லிக் கொண்டிருக்கிறதாம். தினமலரின் நயவஞ்சகத்தை நம் தமிழர்கள் எப்போதும் புரிந்து கொள்வார்களோ-? நமது சீமான் வெளியே வந்து மைக் பிடித்தால் தான் இது சாத்தியமாகும்.பி.கு: மேற்கண்ட கட்டுரையில் தினமலர் என்று தவறுதலாக அச்சாகிவிட்டது. தினமலர் என்று வரும் இடங்களில் ‘தினமலம்’ என்று திருத்தி வாசிக்க வேண்டும் என்று வாசகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். பி.கு: உங்களுக்குத் தெரிந்த தினமலர் நிருபர்களுக்கு இந்தக் கட்டுரையை முடிந்தால் அனுப்பிவைக்கவும் .

Saturday, April 18, 2009

ஈழத்தமிழனுக்குப் போராடும் பார்வையற்ற தோழர்களில் எழுச்சி


மதிமுக அலுவலகம் தாயகத்தில் ஈழத் தமிழினப்படுகொலையை கண்டிக்கும் பெண்கள் அமைப்பினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஈழ ஆதரவு பேசும் பல அமைப்புகள் ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்று ஏற்கெனவே நான் பதிவிட்டிருந்தேன். அதே நேரம் இப்போது அவர்களின் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் பல்வேறு கட்டங்களில் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இன்று காலையில் இருந்தே பல்வேறு அமைப்பினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். கூட்டம் கூட்டமாக தோழர்கள் வந்திருந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருந்தனர். நமது காவல் துறையினர் முகத்தில் ஈ ஆடவில்லை. கடந்த ஐந்து நாட்களாக இந்தப் போராட்டத்தை கண்டு கொள்ளாதவர்கள் இன்று காலையில் இருந்து அங்கு குவிந்து கொண்டு நாட்டாமை செய்து கொண்டிருந்தனர். ஏற்கெனவே கடந்த மூன்று நாட்களாக அந்தப் பெண்களின் போராட்டத்திற்கு தார்மிக ஆதரவு அளித்து வந்த ஈழப்போரை எதிர்க்கும் பார்வையற்றோர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள¢ தோழர் வீரப்பன் தலைமையில் பார்வையற்றோர் இன்றும் வந்திருந்து போரை நிறுத்த கோஷம் எழுப்பினர். பின்னர் உண்ணாநிலையில் இருந்த பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்களுடன் அவர்களும் இணைந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனே போலீஸார் பார்வையற்றோர் என்கிற குறைந்தபட்ச மனிதநேயமும் இன்றி அவர்களை தரதரவென இழுத்தும் அடித்தும் கைது செய்து வேனில் ஏற்றினர். போராடும் தோழர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதால் அவர்களின் போராட்ட குணம் மட்டுப்பட்டுவிடும் என்று அதிகார மட்டம் நினைக்கிறது. ஆனால் இப்படியெல்லாம் செய்வதால் போராட்டம் வலுவடைந்தே தீரும்.

Friday, April 17, 2009

ஈழத் தமிழினப் படுகொலையை எதிர்க்கும் பெண்களைகண்டுகொள்ள யாரும் இல்லை......


ஈழத்தமிழினப் படுகொலையை எதிர்க்கும் பெண்கள் என்ற அமைப்பைத்தொடங்கி, சாகும் வரை உண்ணாநிலை அறப்போராட்டத்தைத் தொடங்கிய25 பெண்கள், மாவீரன் முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்தகொளத்தூரில் கடந்த 13ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். 'சோனியாவே ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்துங்கள்' என்ற ஒன்றை வரி கோரிக்கையை வலியுறுத்தி,பேராசிரியர் சரசுவதி தலைமையில், இந்த உண்ணாநிலைபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும்எழுபதுக்கும் மேற்பட்ட பெண்கள்இப் போராட்டத்திற்கு ஆதரவளித்து உண்ணாநிலையில்பங்கெடுத்து வருகின்றனர்.
போலீஸாரின் தொந்தரவு அதிகரிக்க, கிழக்குத் தெரு,கொளத்தூரில் உண்ணாநிலையைத் தொடர்ந்தார்கள். அங்கேயும் பிரச்னை வர, இப்போது எழும்பூரில் நடக்கிறது, இந்த உண்ணாநிலை போராட்டம். எழும்பூரில் ம.தி.மு.க. அலுவலகம்தாயகத்தில் தான் அந்தப் பெண்கள் சாகும்வரை உண்ணாநிலையைத்தொடர்கிறார்கள். திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, சத்தியராஜ், அமீர் போன்றவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்துச் சென்றார்கள்.
அண்மையில், போரை நிறுத்த வலியுறுத்தும், படைப்பாளிகளின் ஒப்பாரிப் போராட்டம் மெரினா கடற்கரையில் நடந்தது.அந்தப் போராட்டத்திற்குப் போன எனக்கு அங்கிருந்தபோராட்டக் குழுவினர் அதில் கலந்து கொள்ளும் படைப்பாளிகளின்பட்டியலை அளித்தனர். உண்மையில் அதைப் பார்த்துகொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின்பெயர்கள் அதில் இருந்தன. அவ்வளவாக இலக்கிய அறிமுகம் இல்லாதஎனக்கு தமிழகத்தில் இத்தனைப் பெண் படைப்பாளிகளா-? என்றுஆச்சரியப்பட்டுப் போனேன். இந்தப் போராட்டத்திற்கு வந்திருந்தகனிமொழி எம்.பி., (நீயும் அவரை அவரை கவிஞர் என்று அழைப்பதுவீண் என்று நினைக்கிறேன்) ஈழத் தமிழனுக்கு ஒப்பாரி பாட்டைப் பாடிச்சென்றார். (அவங்க அப்பா ஏற்கெனவே பாடிவிட்டார்)
அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தில்லியில் இதேகாரணத்துக்காக நடந்த நடந்த ஆர்ப்பாட்டத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள், பெண் படைப்பாளிகள் (அதென்ன பெண் படைப்பாளிகள்? படைப்பாளிகள் என்றுசொல்லுங்கள் என்று பெண்ணியவாதிகள் என்னைக் கோபித்துக் கொள்வார்கள்)ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.அதே போல் இப்போது 25 பெண்கள் சாகும் வரைஉண்ணாவிரதமிருந்து சோனியாவிடம் தமிழன் உயிரைக் காக்கக்கெ(¡)ஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒப்பாரியிலும்டெல்லியிலும் திரளாகக் கலந்துகொண்ட பெண்கள்இவர்களுக்கு ஏன் ஆதரவு தர மறுக்கிறார்கள் என்றுதெரியவில்லை?
ஒரு மரியாதைக்காக மனிதநேயத்துக்காக எத்தனை (பெண்)படைப்பாளிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்? கனிமொழி எம்.பி.,தமிழச்சி தங்கபாண்டின், சல்மா போன்றவர்கள் இந்தப் போராட்டம் நடைபெறும் பக்கமேதலைவைத்துக் கூட படுக்கவில்லை. காரணம் அரசியல்! தமிழன் சாகிறான்;அவனைக் காப்பாற்ற எந்த அரசியல் இவர்களைத் தடுக்கிறது என்று தெரியவில்லை?25 பேரில் ஐந்து பேரில் கவலைக்கிடம் என்கிற தகவல் வந்துள்ளது. அரசு தரப்பில்இருந்தும் இதுவரை யாரும் வரவில்லை. அண்மையில் ராசாத்தி அம்மாள் அப்பல்லோவில்படுத்திருக்க அவரைப் பார்த்து நலம் விசாரிக்கச் சென்றார், முதல்வர் கருணாநிதி..பத்திரிகைகளிலும் அந்தப் போட்டோகள் வந்திருந்தன. மனைவியை நலம் விசாரிக்ககணவன் செல்வதும் அதைப் பத்திரிகையில் செய்தியாகப் போடுவதையும்தமிழகத்தில் மட்டும் தான் அதுவும் கருணாநிதி குடும்பத்தில் மட்டும் தான்பார்க்கமுடியும். தன் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறுஅவருக்கு அவ்வளவு முக்கியம் என்றால், ஈழத்தமிழனுக்காக சாகும்வரைஉண்ணாநிலையில் இருக்கும் பெண்களின் உயிர் என்ன கலைஞருக்கு மயி....?

போரை நிறுத்த வலியுறுத்திசென்னனையில் மேலும் ஒருவர்தற்கொலை முயற்சி முத்துக்குமார்! மன்னிக்கவே மாட்டான்!!

ஈழத்தமிழர்கள் மீதான போரைநிறுத்த வலியுறுத்திமேலும் ஒருவர் சென்னைவடபழனியில் தீக்குளித்துதற்கொலை முயற்சி செய்திருக்கிறார்
இப்போது கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
முத்துக்குமாரின் வீரமரணம்ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது..
அதன்படி நமது உடலை ஆயுதமாக்கி போராடவேண்டுமே ஒழிய இப்படிசெத்து மடிவதால் யாருக்கு என்ன லாபம்?
முத்துக்குமார் இப்படி உயிரை விடும்உங்களை மன்னிக்கவே மாட்டான்!

Wednesday, April 8, 2009

தமிழக நிருபர்கள் யாரை செருப்பில் அடிப்பார்கள்?



சீக்கிய பத்திரிகையாளர் ஜர்னைல் சிங் மத்திய உள்துறைஅமைச்சர் மீது செருப்பை தூக்கிவீசுகிறார்.செருப்பால் அடித்த அந்தக் காட்சி நமதுதேசிய தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பஒளிபரப்பப்பட்டது. நச்சுக்குண்டு வீசிதமிழனை கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கும்கொடூரத்தைக் காண்பிக்க மறுக்கும் அவர்கள்சிதம்பரத்துக்கு விழுந்த செருப்படியைதிரும்பத் திரும்பக் காட்டியது பார்க்கநல்லாத்தான இருந்தது.
விடயத்துக்கு வருகிறேன்.. தன் மீதுசெருப்பால் அடித்த சீக்கியரை அப்போதுமன்னித்துவிட்டார் மத்திய அமைச்சரும் தமிழனுமானசிதம்பரம். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நாட்டின் உள்துறை அமைச்சர் மீதுசெருப்பை தூக்கியெறிந்தவர் மீது எந்த வழக்கும்பதிவாகவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஜர்னைல் சிங்கை சிரோமணி அகாலி தளம்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடஅழைப்புவிடுத்துள்ளது.அதுவும் சீக்கியரின் புனிதநகரமான அமிர்தசரஸில் போட்டியிடவேண்டும் என்கிறது அந்தக்கட்சிடெல்லி மாநில அகாலி தளம் கட்சியின்அவருக்கு இரண்டு லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
இதை இப்படி யோசித்துப் பாருங்கள்...தமிழகத்தில் இது நடந்திருந்து.. ஒரு தமிழினபத்திரிகை நிருபர் யாராவது மத்திய அமைச்சர்மீது செருப்பை எறிந்திருந்தால் என்னாயிருக்கும்?
சம்பவ இடத்திலேயே அமைச்சரின் கைத்தடிகள்அவரை அடித்து காயப்படுத்தியிருக்க மாட்டார்களா? அந்தநிருபர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா? என்று விசாரணைநடக்கிறது என்று தினமலரில் செய்தி போட்டியிருக்கமாட்டார்களா? உடனடியாக அவரை சிறையில் அடைத்துவிட்டுஅவரது வீட்டை அமைச்சரின் கட்சித் குண்டர்கள் ஸாரிதொண்டர்கள் சூறையாடியிருக்க மாட்டார்களா?பக்கத்து வீட்டில் இருக்கும் சக தமிழன் அல்லதுஅவருடன் பணியாற்றும் சக (தமிழக) நிருபர்கள் அவருக்கு .இரண்டு லட்சம்கொடுப்பது இருக்கட்டும்... நாட்டாமை பட பாணியில்ஊரைவிட்டே பத்திரிகை உலகை விட்டே அவரைஒதுக்கிவைத்திருக்க மாட்டார்களா-?
ஆனால் சீக்கியர் மேல் இருக்கும் பயமும் மரியாதையும்தமிழனுக்கு இல்லை என்பது இதன் மூலம் தெள்ளத் தெளியாகத்தெரிந்துவிட்டதா? சீக்கியனைப் பகைத்துக்கொள்ள காங்கிரஸ்தயாராக இல்லை. ஆனால் தமிழனை? தமிழனுக்கு எதிராகப்பேசலாம். ஈழத்தமிழனைக் கொல்லலாம். கேட்க நாதியில்லை.கலைஞரை தலைவரே என்றும் ஜெயலலிதாவை அம்மா என்றும்அழைக்கும் நிருபர்கள் தான் தமிழகத் தலைநகரில் இருக்கிறார்கள்..வாரம் இருமுறை வரும் துணிச்சலுக்கு ஒரு பத்திரிகை முதல்வர்கலைஞர் என்று தான் எழுதுகிறது. கருணாநிதி என்று பெயர்சொல்லக்கூடாதாம். அடக் கடவுளே சன் டிவியில் கூடகருணாநிதி என்றுதான் சொல்கின்றான்.
பத்திரிகை முதலாளிகள் தங்களுக்குச் சொந்தமானஒரு பத்திரிக்கையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், மற்றொன்றில் கருணாநிதிக்கு ஆதரவாகவும் எழுதுகிறார்கள்(பார்க்க : குமுதம் கருத்துக் கணிப்பு; பார்க்க : குமுதம்ரிப்போர்ட்டர் சோலை கட்டுரைகள்) சோலைக்குதமிழக அரசின் விருதுகள் குவிந்து வருகின்றன என்பதைகவனிக்க. இப்படி பத்திரிகை நடத்தினால் தான்யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன்நம்மை நெருக்கமாக்கிக் கொள்ளலாம் ... என்னவொரு பித்தலாட்டம் இது
ஆனந்த விகடனில் விஜயகாந்திற்கு ஆதரவாக தொடர்ந்துகட்டுரைகள். இந்த வார விஜயகாந்த் உடன் ஊர்சுற்றியநிருபரின் கட்டுரையைப் படிக்கவும். பாவம் விஜயகாந்திற்குமுதுகில் புண் வந்திருக்கும்...இந்த இதழ் ஜூனியர் விகடனில்வைகோவை மட்டம் தட்டிவிட்டு அழகிரியையும், ஜே.கே.ரித்திஷையும்தூக்கிப் பிடித்திருப்பதைப் பாருங்கள். அதிலும் மதுரைதொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர், திமுகவை ஜெயிக்க வைப்பார்என்றும் ஒரு கட்டுரை வந்திருக்கிறது... தமிழகத்தில் எந்தப் பத்திரிகை நிருபராவது அரசியல்வாதிகளை செருப்பில்அடிப்பாரா என்று எதிர்பார்க்காதீர்கள்... ஏனென்றால் செருப்படி வாங்க வேண்டிய பத்திரிகை முதலாளிகளும்,நிருபர்களும் இங்கே நிறையப் பேர் இருக்கிறார்கள்..