Wednesday, July 8, 2009

இந்த வார ஆனந்த விகடன் பக்கம் எண் 99



இந்த வார ஆனந்த விகடன் பக்கம் எண் 99 உடனே படிக்கவும்.
கருணாநிதிக்கு சொரணை இருந்தால்குற்றஉணர்ச்சியில் எங்காவது ஓடிப் போகத்தான் வேண்டும். நேரம் இல்லாத காரணத்தால் இப்போதைக்கு இவ்வளவே.
அந்தக் கட்டுரை பற்றி பின் விரிவான பதிவை எழுதலாம்.

Sunday, June 28, 2009

நண்பர் லக்கிலுக்கிற்கு வணக்கம்....

எனது முந்திய வணங்கா மண் பதிவுக்கு நண்பர் லக்கி லுக்கின் பின்னூட்டம் எனக்கு வருத்தம் அளிக்கிறது.சுங்கத் துறை ஆணையாளரின் அறிக்கையில் மனிதாபிமானஅடிப்படையில் 200 டன் தண்ணீர் வந்ததாக கூறியிருக்கிறார்.ஆனால் அந்தத் தண்ணீரும் விதிகளின் படி உரிய தொகைபெற்றுக் கொண்ட பின்புதான் வழங்கப்பட்டிருக்கிறது.காசு வாங்கிட்டு கொடுப்பதுதான் மனிதாபிமான உதவியா? கப்பல் சென்னை அருகேவருவது குறித்து உரிய முறையில் தகவல் சொல்லவில்லை என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.திருமணத்துக்குத்தான் அழைப்பிதழ் கொடுப்பார்கள்.சாவுக்கு நாமேதான் போக வேண்டும். அதுவும்சகோதரன் வீட்டு சாவுக்குப் போகஅழைப்பு எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.
அடுத்ததாக ஜோசி அவர்களின் பின்னூட்டத்தில்'யாரையும் குறை சொல்லாதீர்கள். ஆக வேண்டியதைப்பாருங்கள்' என்கிறார். ஆக வேண்டியதை செய்ய வேண்டியவர்கள்சும்மா இருந்தால் எந்த அதிகாரமும் இல்லாத நம்மைப் போன்றவர்கள் கொதிக்காமல் என்ன செய்வது?ஜக்கி வாசுதேவ் போல் நல்லா தப்புக்கும்மக்கள் மீது பழியைப் போட்டு அவர்களுக்குக் குற்றஉணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால் போதுமா?கருணாநிதியால் தான் காவிரி நீரில்நமக்கிருந்த உரிமை பறிபோனது. இந்திராகாந்தியுடன்கூட்டு வைத்ததும் கர்நாடகத்துக்கு எதிரானஉச்சநீதிமன்ற வழக்கை வாபஸ் பெறச்செய்தவர் கருணாதான்.காவிரி பிரச்னையின் ஆரம்பப் புள்ளியே இதுதான். காவிரிக்குகுறுக்கே புதிய அணைகளை கர்நாடக அரசு எழுப்பியது அதன்பிறகுதான்.
1924-ல் வெள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்டஒப்பந்தம் மூலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீர்காவிரியில் இருந்து தரப்பட்டது. கருணாநிதி செய்ததவறை சரி செய்ய, எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதும் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருந்தது.அதில் 1924 ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டஅளவை விட தண்ணீர் பங்கீட்டு அளவு சற்று குறைவாக இருந்தது. ஒரு மலையாளிதமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டான்என்று கருணாநிதி அவதூறு செய்வார்என்று பயந்தே அப் புதிய ஒப்பந்தத்தைத் தவிர்த்துவிட்டார்,எம்.ஜி.ஆர். இப்போது சொல்லுங்கள் கருணாநிதியால்எப்போதும் தமிழனுக்கு நல்லதே நடந்தது கிடையாது.

Saturday, June 27, 2009

வணங்கா மண்ணும் கருணாவும்


இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித்தமிழர்களுக்கு வழங்குவதற்காக உலகத் தமிழர்கள்வழங்கிய சுமா¡ 800 டன் உணவுப் பொருட்களுடன்கிளம்பிய வணங்கா மண் கப்பலை இலங்கைக்குள் நுழையவிடாமல் இலங்கை அரசு தடுத்து விட்டதை உலக நாடுகள்யாரும் தட்டிக் கேட்கவே இல்லை.
நாளொன்றுக்கு 3,720 பவுண்ட் வாடகை கொடுக்கப்பட்டு வரும்அந்தக் கப்பல் (இந்திய மதிப்பில் ஒரு பவுண்ட் என்பது 76 ரூபாய்)கிளம்பி ஐம்பது நாட்களுக்கு மேலாகிறது. (வாடகை மட்டும்பல கோடிகளைத் தாண்டிவிட்டது).
உணவுப் பொருட்கள் வீணாகிவிடக் கூடாது என்பதில் ஏன்யாருக்கும் எந்த அக்கறையும் இல்லாமல் போனது. விடுதலைச்சிறுத்தைகள்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்ஜூவியில் அண்மையில் எழுதியிருக்கும் கட்டுரையில் தமிழக முதல்வர்கருணாநிதி தன்னால் இயன்ற வரை முயன்று இந்தியா வந்திருந்த ராஜபக்சே சகோதர்கள் பசில் மற்றும் கோத்தபயஆகியோரிடம் பேசி, அந்தக் கப்பலை இலங்கைக்குக் கொண்டுசெல்ல அனுமதி வாங்கியிருக்கிறாராம்.
சில நாட்களுக்கு முன்பு கலைஞர், சன், தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட ஊடகச்செய்திகளும் கருணாநிதியின் நடவடிக்கையால் இலங்கைத்தமிழர்களுக்காக புறப்பட்டு சென்னை துறைமுகம் அருகேநிற்கும் அந்தக் கப்பல் இலங்கைக்குச் செல்கிறது என்பதைதிரும்பத் திரும்பச் சொல்லியும், கொட்டை எழுத்துகளில்செய்தி வெளியிட்டும் ராஜவிசுவாசத்தைக் காட்டின. அப்படியான சூழ்நிலையில் அந்த அறிவிப்பு வந்துவெகு நாட்களாகியும் அந்தக் கப்பல் இலங்கைக்குசெல்லவில்லையே ஏன்? அந்தக் கப்பலுக்குள் சென்ற இந்திய கடற்படை அதிகாரிகள்அதில் இருந்தவர்களை கண்டபடி ஏசிவிட்டு வந்ததும் நடந்திருக்கிறது. ஆக, கருணாநிதியின் முயற்சி என்ன ஆனது?மனிதநேயம் பேசும் கனிமொழி என்ன செய்து கொண்டிருக்கிறார்?
இதற்கிடையே கப்பலின் உரிமையாளர், ஏற்பாட்டாளர்களுக்குகுடைச்சல் கொடுக்கத் தொடங்கிவிட்டார். கடல் வர்த்தக நியதிபடிஅதன் வர்த்தகப் பயணம் வெற்றி பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்டகப்பலை அதன் உரிமையாளரே உடைத்து கடலில் மூழ்கடித்து விடுவாராம்.நம்ம ஊரில் பன்றி மீது மோதிய வாகனத்தை விற்று விடுகிறோமே அதுபோல்.தீர்ப்பு எழுதியதும் பேனா முனையை உடைக்கிறார்களே அதுபோல்.
இப்பயணம் தோல்வி அடைந்து அதுபோன்றொரு அசம்பாவிதத்தைகப்பல் உரிமையாளர் செய்தால் அதில் உள்ள உணவுப் பொருட்களின் நிலைஎன்ன ஆகும்? இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லாமல் தான் கதை வசனம்எழுதும் படத் துவக்குவிழாவுக்குச் சென்றிருக்கிறார், முதல்வர்.
இதையெல்லாம் ஜெ., யிடம் உங்களால் கேட்க முடியுமா என்று கேட்பவரா நீங்கள்?அடப் பாவிகளா பதவியில் இருப்பது கருணா(நிதி) தானே? பொண்டாட்டி,வைப்பாட்டிகளின் வாரிசுகளுக்குப் பதவியும் பணமும் சேர்க்கும் கருணாநிதிக்குஈழத்தமிழன் பற்றி அக்கறை இருக்க வாய்ப்பில்லாமலேயே போகட்டும்.அதற்காக இனப்பற்றுடன் ஒன்று சேருங்கள் என்று வீண் பேச்சுகளைபேசவேண்டாம் என்று கருணாவிடம் கேட்டுக் கொள்கிறேன்.
பின் குறிப்பு:இலங்கையில் ராஜபக்சேவுக்கு நேரம்சரியில்லை என்று சொன்ன ஜோதிடரை அந்நாட்டுகாவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது.(கேணப் பையன் இவன் நேரத்தையே இவனுக்குகணிக்கத் தெரியில. எனக்கு ஜோசியம் சொல்லவந்துட்டான் என்று சத்யராஜ் பாணியில் ராஜபக்சேபேசிக் கொண்டிருக்கலாம்.) ஆக, தனக்கு எதிராகசிங்கள ஜோதிடன் கூட பேசக் கூடாது என்கிறநிலையில் ஜனநாயகம் பேசும் ராஜபக்சேவின்தூதர்கள் பசில், கோத்தபயவுக்கு காந்தி தேசத்தில்கிடைத்த வரவேற்பு எப்பூடி?

Tuesday, June 16, 2009

பெரியாரை சாதி சங்கத் தலைவராக்கிய குமுதம்!


குமுதம் அலுவலகம் முன்பு நாளை பெரியார் திராவிட கழகத்தினர் குமுதம் இதழை எரிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். காரணம் குமுதம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும், நான் தமிழன் தொடர்!
அப்படியென்ன அதில் எழுதி விட்டார்கள் என்கிறீர்களா? அந்தத் தொடர் எதைப் பற்றி தெரியுமா? தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சாதிகளைப் பற்றிய வரலாறு. இன்றைய தேதிக்கு நம் நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று இதுதான். வெட்கமாகவே இருக்கிறது-. எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்கிறார்கள்.
அதிலும் கடந்த இரண்டு வாரங்களாக நாயக்கர்_நாயுடு சமூகத்தைப் பற்றி வந்துகொண்டிருக்கிறது. இதில் ‘பெரியாரைப் போன்ற ஒரு தலைவரைத் தந்ததற்காக நாயக்கர் சமூகத்திற்கு இந்த நாடு கடமைப்பட்டிருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார், இரா.மணிகண்டன்.ஆகவே தோழர்களே உங்களுக்குத் தெரிந்த நாயக்கர்கள் யாராவது இருந்தால் அவர்களின் கால்களில் உடனே விழுந்து பெரியாரைத் தந்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். முடிந்தால், ஒவ்வொருமுறையும் அவர்களைப் பார்க்கும் போதும் அவர்கள் கால்களில் விழுங்கள்.
அதுமட்டுமே எழுதியிருக்கிறார். ‘சாதி சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும் ....... போராடியவர்’ என்று என்கிறார் கட்டுரை ஆசிரியர். எனக்குத் தெரிந்து பெரியார் சாதியை சாடினார்; சாதியை அகற்றத்தானே போராடினார். சாதியில் என்ன சீர்திருத்தம் செய்யவேண்டியிருக்கிறது (வெங்காயம்!).
இதற்கெல்லாம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்! பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுகிறோம் என்று ஒருசிலர் என்னைப் போன்றவர்களை எதிர்க்கலாம். பி.எஸ்.ஜி. நாயுடு மூலமாக இப்போது நடந்து கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.
அதே நிறுவனத்தில் இப்போது நடக்கும் தில்லு முல்லுகள் பற்றி ஆசிரியருக்கு எதுமே தெரியாதா? பலமுறை அந்தக் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். (அந்தக் கல்லூரி முதல்வராக நாயுடுவைத் தவிர வேறு சமூகத்தினர் யாரும் வரமுடியாது) எந்த அனுமதியும் இல்லாமல் கல்லூரிக்கு வெளியே அவிநாசி சாலையில் நகரும் படிக்கட்டுகளுடன் பாலம் அமைக்க (அவர்களின் கல்லூரியை இணைக்கிறார்களாம்) கட்டும் போது அது நடு இரவில் இடிந்து விழுந்து , நல்லவேளை யாரும் சாகவில்லை. அந்தப் பணக்கார ர்களை விட்டுத்தள்ளுங்கள். பெரியாரை சாதிக்குள் அடைக்கப் பார்த்த குமுதம், பெதிகவின் குற்றச்சாட்டுக்கு சொல்லும் பதில் என்ன?
அறிஞர் அண்ணா இடத்திற்கு வந்திருக்க வேண்டிய மிகப்பெரிய சமூக சீர்திருத்த வாதியான எம்.ஆர்.ராதாவையும் இந்த சாதி சங்கத்தில் சேர்த்திருக்கிறார், இரா.மணிகண்டன்.அதிலும், நாயக்கர்_நாயுடு இனத்திற்குப் பெருமை சேர்த்ததாக ஈவிகேஎஸ் இளங்கோவனையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். (அடி செருப்பால!) அதுமட்டுமா? மின் வெட்டுத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சாப்பாட்டு அமைச்சர் ஏ.வ.வேலு, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் (அடக் கடவுளே) இவர்களையும் பெரியார் லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறார்கள்.
இந்தத் தொடர் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ தெரியாது. ஆனால் சமூகத்திற்கு பாடுபட்ட தலைவர்கள் எந்த சாதியில் பிறந்தவர்கள் என்பதை மட்டுமே பட்டியலிட்டுக் காட்டும் அட்டவணை யாகவே இத் தொடர் இருக்கிறது. இது தேவையா? இவரு எங்க சாதி சனம் என்று மார்தட்டிக் கொள்ளும் நம் சமூக அமைப்பில் இது தேவையா? அதிலும் சாதி அடையாளம் இல்லாத சில தலைவர்களையும் இப்படி அடையாளம் காட்டுவது சமூகத்திற்கு நல்லதா? சிந்திக்கட்டும் குமுதம்.

Thursday, June 11, 2009

கொடி எரிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய பிணை நிபந்தனைகள் சட்டநீதிக்கு புறம்பானவை


இலங்கை அரசு ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுத உதவி, நிதி உதவி மற்றும் பன்னாட்டு அரசியல் உதவி ஆகியவற்றை வழங்கி அந்த இனப்படுகொலையில் பங்கு வகித்தது. இதற்கு சனநாயக வழியில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை கடந்த 25.04.09 அன்று தமிழகமெங்கும் இந்திய அரசுக் கொடியையும் இலங்கை அரசுக் கொடியையும் எரிக்கும் போராட்டம் அறிவித்தது. கோயம்புத்தூரில் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு இயக்கங்களையும் சேர்ந்த 8 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றுடன் 48 நாட்களாக அவர்கள் கோவை நடுவண் சிறையில் உள்ளனர். அவர்களுக்கு பிணை விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. கடந்த 9.06.09 அன்று அப்பிணை மனு மீது ஆணை வழங்கிய நீதிபதி திரு. ஆர். இரகுபதி அவர்கள் மேற்கண்ட 8 பேரும் இந்திய அரசுக் கொடியை எரிக்கவில்லைஇ அதற்கு முன்பாக அவர்களைத் தடுத்துக் காவல்துறையினர் கைது செய்து விட்டார்கள் என்ற போதிலும் அவர்களின் நோக்கம் குறித்து கடுமையாகக் கருத வேண்டியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் ஒரு வாரத்திற்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்திய அரசுக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும், ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் ஒரு வாரத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார். இந்த இரு நிபந்தனைகளும் நீதிநெறிக்கும் சட்டத்திற்கும் புறம்பானவை. பிணை வழங்கும் போது நிபந்தனை விதிப்பதற்கு ஒரு சட்டக் கோட்பாடு உள்ளது. அது அக்குறிப்பிட்ட வழக்கில் புலனாய்வுக்கு உதவியாக அந்நிபந்தனைகள் அமைய வேண்டும் என்பதாகும். இந்தக் கோட்பாட்டிற்கும் மேற்படி நிபந்தனைகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. மாறாக, ஒரு கொள்கைக்கு எதிராக பழிவாங்கும் தன்மையே மேலோங்கியுள்ளது. பிணை வழங்கும் நிலையில் ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது போல் கருதித் தண்டனை வழங்கக் கூடாது என்பது சட்டநெறி. ஆனால், இவ்வழக்கில் பிணை வழங்குவதற்கு இந்திய அரசுக் கொடியை அவரவர் வீட்டு வாசலில் ஒரு வாரம் ஏற்ற வேண்டும் என்பதும், அநாதை இல்லத்தில் சேவை புரிய வேண்டும் என்பதும் தண்டனை வழங்கும் செயலாகும். தேசியச் சின்னங்களை இழிவு படுத்துவதைத் தடுக்கும் சட்டம் - 1971 பிரிவு (2) - இந்திய அரசுக் கொடியை அவமதிக்கக் கூடாது என்பதற்கான விதியாகும். இந்திய அரசுக் கொடியை ஒருவர் மதிக்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்த அந்தச் சட்டத்தில் எந்த விதியும் கிடையாது. எனவே, இந்த ஆணையில் உள்ள நிபந்தனைகள் ஏற்க இயலாதவைகளாக உள்ளன. முறைப்படி உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுச் செய்ய உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் தியாகு ஆகியோர் 11.06.09 அன்று சென்னையில் விடுத்துள்ள கூட்டறிக்கை



Tuesday, June 9, 2009

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது என்கிற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர், கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை. ‘கண்கள் இரண்டால்’ என்று காதல் பேசி இவரது பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஆனால் அவர் எழுதிய இந்தக் கவிதையை பிரசுரிக்க பலரும் தயங்கி நின்றார்கள். இந்த வாரம் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. இப்படியொரு அறம் பாடும் தைரியம் கவிஞருக்கு இருந்த போதும் அதை வெளியிடும் தைரியம் நம் பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டிருக்கிறது. குமுதம் டாட் காமிலும் கவிஞர் தாமரை இந்தக் கவிதையை வாசிக்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. விரையில் அந்த வீடியோவையும் இதில் இணைக்கிறேன்.


இந்தியத் தேர்தல் நேரத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதை அப்போதே பிரசுரமாயிருக்க வேண்டியது. ஆனால் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. பாப்புலர் மீடியாக்களில் வெளிவரட்டும் என்றுதான் நானும் இதை பதிவிடாமல் காத்திருந்தேன். தமிழினத்திற்கு நேர்ந்த கொடுமை கண்டு கொதிக்கும¢ ஒவ்வொவரின் இதயமும் பேசுவதாகவே இந்தக் கவிதையை நான் பார்க்கிறேன். அறம் பாடினால் பாடப்பெற்றவர்கள் என்ன ஆவார்கள் என்பதை நாடறியும். நானும் அறிவேன்.


‘உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்க மாட்டேன்’ என்று வசனம் பேசிவிட்டு தமிழன் தலையில் குண்டுவிழுவதை கண்டும் காணாமல் இருக்கும் திரைப்படத் துறையினருக்கு மத்தியில் இப்படியொருவர் இருக்கிறார் என்பதை உண்மையான தமிழர்கள் என்றென்றைக்கும் நினைத்துப்பார்க்க வேண்டியது அவசியம். சரி பீடிகை போதும் கவிதையை வாசியுங்கள்.




தாமரை


கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்

செய்துவிட்டாய்

எங்கள் தமிழினத்திற்கு...


எத்தனை

வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்

காலில் விழுந்தும் கதறியும்

கொளுத்திக் கொண்டு செத்தும்

தீர்ந்தாயிற்று...


எதுவுமே காதில் விழாத உங்களுக்கு

இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...


பட்டினியால் சுருண்டு மடிந்த

பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து

அழுது வீங்கிய கண்களோடும்

அரற்றிய துக்கத்தோடும்

களைந்த கூந்தலோடும்

வயிரெரிந்து இதோ விடுகிறேன்..


கண்ணகி மண்ணில் இருந்து

ஒரு கருஞ்சாபம்!


குறள் நெறியில் வளர்ந்து

அறநெறியில் வாழ்ந்தவள்

அறம் பாடுகிறேன்!


தாயே என்றழைத்த வாயால்

பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்

இனி நீ வேறு, நான் வேறு!


ஏ இந்தியாவே!

ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி

குண்டுகளைக் குறிபார்த்துத்

தலையில் போடவைத்த உன்தலை

சுக்குநூறாய் சிதறட்டும்!


ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த

எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய

இனி ஒரு நூற்றாண்டுக்கு

உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!


மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு

மளமளவென்று கலையட்டும்!


ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்

இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!


தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்

அறுவடையாகட்டும்!


மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்

உங்கள் மலைகள் எல்லாம்

எரிமலைக் குழம்புகளைக்

கக்கி சாம்பல் மேடாகட்டும்!


இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...

உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!


உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!

எதிரிகள் சூழ்ந்து

உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!


தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து

சிதறிய உடல்களோடு

சுடுகாடு மேடாகட்டும்!


போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று

கூசாமல் பொய் சொன்ன வாய்களில்

புற்றுவைக்கட்டும்!


வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!

எங்கள் எலும்புக் கூடுகள் மீது

ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...


உங்கள் சிம்மாசனம் வெடித்துத்

தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......


பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!


நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...

உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து

ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!


எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி

சித்திரவதையில் சாகடித்தீர்களே...

உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!


எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த

சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...

உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!


உங்கள் பெண்களெல்லாம்

படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!


நரமாமிசம் புசித்தவர்களே...

உங்கள் நாடி நரம்பெல்லாம்

நசுங்கி வெளிவரட்டும்!


இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு

புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...


ஆழிப்பேரலை

பொங்கியெழுந்து

அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!


நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!


நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!

நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!

..........

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!


குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே...

அவர்கள் நீடுழி வாழட்டும்!


எம் குழந்தைகள் அழுதாலும்

உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!






Tuesday, May 12, 2009

வெற்றி யாருக்கு?; என்ன சொல்கிறது ஜூவி-?


திருவள்ளூர், தென்சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, ஆரணி, விழுப்புரம், சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், தேனி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம். திமுகவுக்கு மத்திய சென்னை, நாமக்கல், கரூர், பெரம்பலூர், நாகை, மதுரை, கன்னியாகுமரி, நீலகிரியில் வெற்றி வாய்ப்பாம். காங்கிரஸ§க்கு காஞ்சிபுரம், திருச்சி, மயிலாடுதுரை, சிவகங்கை, நெல்லை, பாண்டிச்சேரி ஆகிய தொகுகளிலும், ஸ்ரீபெரும்புத்தூர், அரக்கோணம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பட்டாளி மக்கள் கட்சியும் வெற்றி பெறுமாம்.மதிமுகவைப் பொறுத்தவரையில் ஈரோடு, தஞ்சை, விருதுநகர் என நான்கில் மூன்றைக் கைப்பற்றுகிறதாம். பிஜேபி ராமநாதபுரத்திலும், கம்யூனிஸ்ட்கள் வடசென்னை, கோயமுத்தூர், தென்காசியிலும் வெற்றி பெறலாம்; விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரத்தில் கொடி நாட்டுவதும் உறுதியாகிவிட்டதாம். இதுதான் ஜூவியின் கணிப்பாக உள்ளது.இது ஏறத்தாழ சரியாக இருக்கிறது என்கின்றது, என் நண்பர்கள் வட்டாரம். அதே சமயத்தில் மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் மண்ணைக் கவ்வுவாராம். நீலகிரியிலும் மதிமுக வெல்லும் என்கின்றனர் பெரும்பாலான நண்பர்கள். மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெறுவார் என்று உறுதியாகக் கூறுவது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் ராஜீவ்காந்தியை நேற்றும் கூட மூன்று மணிநேரம் காவல் நிலையத்தில் உட்கார வைத்து மனஉளைச்சல் கொடுத்திருக்கிறது, காவல்துறை. கருத்துரிமைக்காக கருத்து டாட் காம் நடத்திய கார்த்திக் சிதம்பரமும், கனிமொழியும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.ஜூவி கருத்துக் கணிப்பில் சாரம்சம் இதுதான்;
திமுக- 8, காங்கிரஸ் 6, விசி ஒன்று; மொத்தம் 15.அதிமுக 13, பாமக 5, மதிமுக 3, கம்யூனிஸ்ட்கள் மூன்று; மொத்தம் 24.பிஜேபி ஒன்று.
இது எப்படி இருக்கு-?