Friday, February 20, 2009

தோழர்களே சீமான் கைதல்ல சரணடைந்தார்

தோழர் சீமான் கைதாகி விட்டார் என்று சொல்லாதீர்கள்.காரணம் அவர் கோர்டில் சரண் அடைந்திருக்கிறார்.தினமலரின் ஆசையும் அரங்கேறிவிட்டது. (முடிந்தால்இதுதொடர்பான என்னுடைய முந்தைய பதிவைப் படிக்கவும்)
சீமானுடைய சினிமா பார்வையிலும் இன்னும் பிறஅணுகுமுறையிலும் எனக்கு சில முரண்பாடுகள் உண்டு. அதுபற்றியெல்லாம் வேறு சமயங்களில் பேசிக்கொள்ளலாம். ஆனால்ஈழத் தமிழர்களுக்காக அவர் எழுப்பும் குரல் குறிப்பிடத்தக்கதாகஇருக்கிறது. வைகோ போன்றவர்கள் பேசிப் பேசியே நம்மையும்சேர்த்து சோர்வடையச் செய்துவிடுகிறார்கள். பிரேதப் பரிசோதனைஅறையில் மாவீரன் முத்துக்குமாரின் உடலை பார்த்துவிட்டுவெளியே வந்த வைகோ. சேனல்களின் மைக் முன்பு தொடங்கிய பேட்டியை எங்கே முடிப்பது என்றுதெரியாமல் பேசிக் கொண்டே இருக்க ஜெயா டிவிநிருபர் அவரது பேச்சை நிறுத்தும் படியாக மத்தியஅரசு பற்றி ஒரு கேள்வியை வீசினார்.
அம்மா டிவியின் நிருபர் என்பதால் கோபத்தைஅவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் கேள்விக்குபதிலளித்துவிட்டு அந்த நீண்ட பேச்சை ஸாரி பேட்டியை முடித்துக் கொண்டார்.ஆனால் வளவளவென பேசாமல் ஈழப் பிரச்னையையும் அதில் உள்ளஇந்திய அரசியல் கட்சிகளின் சுயரூபத்தையும் அம்பலப்படுத்துவது சீமானின்வழக்கம். சீமான் தமிழகம் முழுவதும் பரப்புரை செய்தால் நிச்சயம்ஈழம் தொடர்பான உருப்படியான நிலைப்பாடு மக்கள் மத்தியில் ஏற்படலாம்.ஆனால் இந்தக் கேடுகெட்ட காங்கிரஸ் கபோதிகள் கருணாநிதியை மிரட்டி சீமானை அடிக்கடி சிறைக்குள் தள்ளிவிடுகிறார்கள். ஊரில்குடிசைவீட்டில் வசிக்கும் தாயிக்கு ஒரு சொந்த வீடுகட்டித்தர முடியாத நிலையில் இருப்பதாக அவர் வருத்தப்படுவதுதான்வேதனையிலும் வேதனை.
(தொடர்ந்து பதிவுகள் போட போதிய நேரமின்மையும் இன்டர்நெட்கட்டணமும் என்னை அச்சுறுத்துகிறது. பகுதிநேர வேலைகளைத் தொடங்கிசில நாட்கள் ஆகிறது. அதில் ஏதாவது தேறினால் என் பதிவுகள் அதிகரிக்கவாய்ப்பிருக்கிறது. இதுவரை நான் அளித்த எந்தப் பதிவும் எனக்குமுழுத் திருப்தி அளிக்கவில்லை என்பதால் விரைவில்நான் யார் என்பதையும் அறிவித்துவிட்டு சில உருப்படியானபதிவுகளைப் போடப் போடுகிறேன்)
கொசுறு: யாருக்காவது சீமானின் செல்·போன் எண்தேவைப்பட்டால் எனக்கு பின்னூட்டம்இடவும். அடுத்தப் பதிவில் அந்தஎண்ணை வெளியிடுகிறேன்விரைவில் சிறையில் இருந்துவெளிவந்துவிடும் அவரிடம்உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்....ஆனால் இதற்கான அனுமதியை அவரிடம்நான் பெறவில்லலை என்பது வேறு விஷயம்!!!

2 comments:

Unknown said...

can u pls use different color for texts. difficulties in google reader.

உதயதேவன் said...

hi bro, i regularly read ur posts, its realy good... but we cannot change this stupids... we need a non political strong tamil organaisation...otherwise these people go behind sheet sharing and make us pool..
uthaya
singapore

Post a Comment