Saturday, February 21, 2009

ப்ரணாப் முகர்ஜி சொன்னதுதான் சரி



நாடாளுமன்றத்தில் பேசிய அயலுறவுத்துறை அமைச்சர்ப்ரணாப் முகர்ஜி, 'போரை நிறுத்தச் சொல்லி இலங்கையைஓரளவுக்கு மேல் நம்மால் வற்புறுத்த முடியாது. காரணம், பிறநாட்டுப் பிரச்னையில் ஓரளவுக்கு மேல் தலையிடமுடியாது' என்று திருவாய் மலர்ந்தார்.
இவருடைய இந்தக் கருத்தையும், அப்போது பேசியஒருசில கருத்துகளையும் திரும்பப் பெறச் சொல்லித்தான்பா.ம.க., ம.தி.மு.க., போன்ற கட்சி எம்.பி.,கள் கடும்எதிர்ப்புத் தெரிவித்தனர். இதில், எதிர்ப்புத் தெரிவிக்கஎன்ன இருக்கிறது? உண்மையைத்தானே அவர் சொல்லியிருக்கிறார்.இதே கருத்தைத் தான் கடந்த காலத்திலும். நிகழ்காலத்திலும் பலரும்வற்புறுத்தி வருகிறார்கள். இலங்கை இன்னொரு தேசம்.அந்த தேசத்துடன் ஒப்பந்தம் போட ராஜீவ் காந்தி யார்?அயல் தேசத்தை ஓரளவுக்கு மேல் வற்புறுத்த முடியாது என்று அன்றைக்கு இந்த காங்கிரஸ் ஜமீன்தார்களுக்குத் தெரியவில்லையா?
அதுமட்டுமா? தங்களுடைய ஏகாதிபத்தியத்தை நிரூபிக்கஅமைதிப்படையை வேவொரு தேசமான இலங்கைக்கு அனுப்பியபோது இந்த உண்மை இந்த காங்கிரஸ் கபோதிகளுக்குத்தெரியவில்லையா? அத்துடன், இலங்கை அரசை மிரட்டுவதற்காகபுலிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்து உங்கள் இந்தியாவுக்கு அழைத்துவந்துபயிற்சி கொடுத்தது எந்த நாட்டின் இறையாண்மையைக் காப்பாத்துவதற்காக?
அட ஞானசேரன்களா? இதற்கெல்லாம் உங்களிடம் எந்தப் பதிலும்இல்லை என்று எங்களுக்குத் தெரியுமே. சரி, கடந்த காலத்தில் காங்கிரஸ்மேதாவிகள் செய்த அந்தத் தவறை திருத்திக் கொள்ளும்விதமாகவேஅயல் நாட்டுப் பிரச்னையில் தலையிட மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்,ப்ரணாப் முகர்ஜி என்று வைத்துக் கொண்டாலும்; நான் கேட்கிறேன்,ராடார் அனுப்பியது, ஆயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன்வழங்கியது, படையினரை அனுப்பியது, இப்போதும்கூட, ராணுவ வீரர்களின்காயங்களுக்கு மருந்து அனுப்ப ஆயத்தமாகி வருவதெல்லாம்அயல் தேசப் பிரச்னையில் தலையிடுவது ஆகாதா?
இதேபோரில் காயம் பட்ட புலிகளுக்கு அனுப்ப வேண்டாம்; அப்பாவித்தமிழர்களின் காயங்களுக்கு மருந்து அனுப்ப வக்கில்லாத மனித நேயம் அல்லவா உங்களிடம் இருக்கிறது? அட, மானங்கெட்ட தங்கபாலுகளா?இளங்கோவன்களா? கொஞ்சமாவது உணர்ச்சி என்பது இருந்தால்தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளுங்கள். எதிர்வரும்நாடாளுமன்றத் தேர்தலுக்குள் புலிகளையும், தமிழர்களையும் அழித்துவிடுவதுதானே உங்கள் விருப்பம். சிஙகளவன் தாக்குதலில் ஐம்பது பேர் பலியாவார்கள்;ஐநூறு பேர் புலியாவார்கள் ஜாக்கிரதை

2 comments:

Anonymous said...

GOOD POINTS... THEY SHOULD ANSWER FOR THIS!!!

WHY THERE IS NO COMMENTS SO FOR THIS ARTICLE..

BLOGGERS DON'T LIKE SOME GOOD QUESTIONS TO CONGRESS PARTY???

RENGA

vasu balaji said...

சரியான போடு. புறம்போக்குகளுக்கு புரியப் போறதில்லை. தமிழந்தான் கேனைன்னா தலைவனுங்க அதுக்கு மேல இருக்கிறதால தான் இப்படி.

Post a Comment