அந்தப் படத்தொகுப்பு ஸ்டூடியோவில் அவரைச் சந்தித்தேன்.இளவயது அவருக்கு.. சில நாட்களுக்கு முன்பே அதே இடத்தில்சந்தித்திருந்தாலும், இப்போது தான் பேச வாய்ப்புக் கிடைத்தது.
அவரது பேச்சில் அவர் ஓர் இலங்கைத் தமிழர் என்பதுஎனக்குத் தெரிந்துவிட்டது. உரிமையுடன் தேனீர் அருந்தலாமா?என்று கேட்டு, அவருடன் தேனீர் கடைக்குச் சென்றபோது ஈழத்தில் நடந்து வரும் போர்ச் சூழல் பற்றி பேசினேன்.மூன்று மாதங்களுக்கு முன்பு வரை கொழும்புவில் தங்கியிருந்த அவர்,பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் பணியாற்றியிருப்பதாக தெரிந்தது.
இலங்கையில் உண்மையில் என்னதான் நடக்கிறது? என்பதை அவர்அனுபவத்தில் கேட்க விரும்பினேன். என் மீது அவருக்கு நம்பிக்கைஏற்பட்டிருக்க வேண்டும். மனதிறந்து சில விடயங்களை என்னுடன்பகிர்ந்து கொண்டார்.
கே: கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தமிழர்களுக்கும் சிங்களவர்களும் இடையே பாகுபாடு உள்ளதாக, இங்குள்ளவர்கள் சொல்வது எந்தளவுக்கு உண்மை? என்றேன்.
''இங்குள்ளதைப் போல் கல்வி முறை அங்கில்லை. பல்கலைக் கழகங்களில்சேர அதற்கு முந்தைய நிலையில் குறைந்தது 280 புள்ளிகள் யாழ்ப்பாணத்தில்உள்ளவர்கள் அதாவது தமிழர்கள் பெற்றிருக்க வேண்டும். இதே கொழும்பில் உள்ளவர்கள்,வெறும் 190 புள்ளிகள் பெற்றிருந்தால் போதும். (இந்த இறையாண்மையை பாதுகாக்கத்தான் இலங்கைக்கு ராணுவஉதவி செய்வதாக, மன்மோகன் சிங் நியாயம் கற்பிக்கிறார்.)அதில் கொழும்பில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் படிக்கவோ,விரும்பிய இடத்தில் கல்வி கற்கவோ முடியாத நிலை உள்ளது''. கே: கொழும்பு உள்ளிட்ட சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும், வன்னிப் பகுதியிலும் வாழும் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம்?
''சிங்களவர்களுடன் வாழும் தமிழர்கள் எந்நேரமும் அச்சத்துடன் தான் காலம் தள்ள வேண்டும்.நள்ளிரவில் ராணுவத்தினர் கதவைத் தட்டுவார்கள். திடீரென தமிழர்கள் காணாமல்போவார்கள். யார் மீதாவது சந்தேகம் வந்துவிட்டால் அது உண்மையா? என்றுவிசாரித்து நேரம் செலவளிக்க ராணுவத்தினர் தயாரில்லை. எனவே அடுத்தவிநாடியே அந்த சந்தேகத்துக்கு இடமான நபர் கடத்தப்படுவார்.அதன்பின்பு எப்போதும் அவரைப் பார்க்கவே முடியாது.
வன்னியில் எப்போது குண்டு விழுமோ? என்ற உயிர் அச்சத்தில் வாழ்வதைவிடஇதுமேல் என்று நினைத்துக் கொண்டு, பலரும் தினம் தினம் செத்துக் கொண்டுகொழும்பிலும் பிற சிங்கள ஆதிக்கப் பகுதிகளில் வசித்துவருகிறார்கள்''
கே: தமிழர்களை எல்லாம் அழித்துவிட்ட பிறகு, வெறும் சிங்களவர்கள் மட்டும் வாழும் இலங்கையால் இந்தியாவுக்கு நன்மையா?
சிரித்தார். ''இங்கு வருவதற்கு முன் ஒரு சாப்டவேர் நிறுவனத்தில்இருந்தேன். சமீபத்திய மும்பை தாக்குதல் நடந்தன்று Bar - ல் அமர்ந்துஎன் மேலதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் ஒரு தமிழர். அப்போதுஎங்களுக்கு எதிரே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த எங்களது சக ஊழியர்,'இந்தத் தேவடியா பசங்களுக்கு இதுதேவைதான்' என்று திருவாய் மலர்ந்தார்.அவர் ஒரு சிங்களவர். நாங்கள் இருவரும் தமிழர்கள் என்று ஞாபகம்வந்தவராக அமைதியாகிவிட்டார். சிங்களவர்களைப் பொறுத்தவரையில்தமிழர்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கிறது. அதனால் இந்தியாவை எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் உண்டு. பாகிஸ்தான், சீனா உடனான இந்தியப் போரில் இந்த எண்ணத்தைத்தான்சிங்கள அரசு பிரதிபலித்தது.
பாகிஸ்தான் ஆயுதம் கொடுக்கிறது என்று இந்தியாவும் கொடுக்கிறது. ஆனால் இதனால் இங்குள்ள தமிழர்கள் இந்திய அரசை எதிர்க்கத் தொடங்கியிருப்பதாக அறிகிறேன். தமிழர்களையும், எதிர்த்துக் கொண்டு சிங்களவனுக்கு உதவுவது சரியில்லை.ஏனென்றால் எதிர்காலத்தில் இந்தியப் பாதுகாப்புக்கு சிங்களவனால்நிறைய ஆபத்து இருக்கிறது. இதை இங்குள்ளவர்கள் உணர்வார்களா? என்றுதெரியவில்லை. சில மாதங்களுக்கு முன் சீனாவில் கைதான பாகிஸ்தான்பயங்கரவாதிகளுடன் ஒரு சிங்களவனும் இருந்தான் '' என்றார் அந்த நண்பர்...
இதுதெல்லாம் பேசிவிட்டு ரொம்ப நேரம் கழித்து எடிட்டிங் அறையில் இருந்துகிளம்பிய அவர் என்னிடம் விடைபெறும் போதுதான் அவரது பெயரை இன்னும்நான் கேட்கவே இல்லை என்று தெரிந்தது... அதன்பின்பு எங்கள் செல் எண்கள்பரிமாறப்பட்டன. என் விசிட்டிங் (சரியான தமிழ் வார்த்தை என்ன?) கார்டை அவருக்குக்கொடுத்தேன். அவர் சென்ற பிறகு இறுதிக்கட்ட படத்தொகுப்பில் இருந்தஎன் ஆவணப் படத்திற்கு பதிவு செய்து வைத்திருந்த அவரதுகுரலைச் சேர்த்தோம்...
எனக்கு மனநிறைவாக இருந்தது.....
14 comments:
Very nice Post.... i love it
படித்ததும் எனக்கு மன நிறைவு ஏற்பட்டது
இராவணன் ,
திருச்சி
ravanagopal@gmail.com
வணிக அட்டை என நினைக்கிறேன்,
நன்னன் அய்யாவிடம் கேட்டு தெரிவிக்கிறேன்
இந்தியா கொஞ்சம் சிந்திக்க வேண்டும்!!
//விசிட்டிங் (சரியான தமிழ் வார்த்தை என்ன?) கார்டை
சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை..
"தொடர்பு அட்டை" பொருந்தும் என்று நினைக்கிறன்..
அருமை. உங்களைப்போல் தான் பலரும் உணருகிறோம். வெளிப்படுத்த தான் இந்த இடுகைகளைத் தவிர வேறு வழி இல்லை.
பயனுள்ள ஒரு நேர்காணல். ஈழம் சார்த ஒரு அரசியல்வாதி, மனித உரிமைப் போராளி ஆகியோரிடமிருந்து இது முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சிங்களப் பேரினவாதத்தைப் புரிந்து கொள்வதாய் அமைந்துள்ளது.
நல்ல பதிவு
=====================================
குறைந்தது 280 புள்ளிகள் யாழ்ப்பாணத்தில்உள்ளவர்கள் அதாவது தமிழர்கள் பெற்றிருக்க வேண்டும். இதே கொழும்பில் உள்ளவர்கள்,வெறும் 190 புள்ளிகள் பெற்றிருந்தால் போதும்.
=======================================
The truth:
http://www.ugc.ac.lk/admissions/cutoff/Academic%20year%202007_2008.php
நண்பர் ரூற் எங்கிருந்து வந்தார் என்பதே தொpயவில்லை.. இப்போது யாரையா படித்த தமிழன் இலங்கையில் இருக்கிறான். எங்கையா படிக்க விடுறீங்க.. கொலைகள் கைது... யுத்தன் போதும்டா சாமி.. இப்படி இருக்கும்போது பல்கலைக்கழக அனுமதி குறைத்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?? தமிழன் கூட புள்ளிகள் எடுத்தவுடன் பல்கலைக்கழக அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வு இடம்பெற்ற போது த ரூற் எங்கிருந்தார். டேய் என்டா இப்படி நீங்களே எங்கட அநியாயத்தை மூடி மறைக்கிறீங்க.. உண்மையில் நீ தமிழனாடா?? இந்த சாவு.. இந்த யுத்தம்.. இது ஒன்றுமே உண் கண்களுக்கு தொpயவில்லையா.. பதிவாளளே தயவு செய்து நடுநிலமை என்ற பெயாpல் எத்தகைய பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம். இது தமிழினத்துக்கு செய்யும் துரோகம்... இப்போது பல்கலைக்கழக அனுமதி குறைத்து என்ன பிரயோசனம்.. படிப்பதற்கு ஆட்களே இல்லை பல்கலைக்கழக அனுமதி என்ன கேடா..?? அன்புடன் த ருற் அவர்கட்கு இன்னும் உண்மையைக் கூறி உங்கள் சிங்கள விசுவாசத்தைக் காட்டவும்.. போடாகோ... பாதிக்கப்பட்டிருக்கனும்டா.. எங்களமாதிரி.. அப்பதான் உங்களுக்கு வலி தெரியும்.. போங்கடான.. நீங்களும் உங்கட பதிவும்.. நாங்க செத்தா உங்களுக்கு என்னா? நீங்க ராடர் கொடுங்க.. எங்கள வச்சு அரசியல் பண்ணுங்க.. ஏன் எங்கள கொள்ள ஆயுதம் கூட குடுங்க.. நாங்கள் ஒரு நாள் மீண்டு வருவோம்.. தமிழன்டா...
செய்து த ரூற் அவர்கட்கு நீங்கள் இந்த அநியாயத்தையும் பாருங்கள்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோரு பதம்
http://onlinetamil.blogspot.com/2007/03/blog-post.htmlதயவு
அறிமுக அட்டை..???
ltte and its supporters are making fool of these Tamil Nadu Morons...
இந்தத் தேவடியா பசங்களுக்கு இதுதேவைதான்'
/*சமீபத்திய மும்பை தாக்குதல் நடந்தன்று Bar - ல் அமர்ந்துஎன் மேலதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தேன்.*/
'இந்திய தேவடியா பசங்களுக்கு இதுதேவைதான்'
india is going as a slave to other country
Post a Comment